TRB,TNTET,TNPSC online coching

Search This Blog

NEWS

https://trb-tntet-tnpsc.blogspot.in/வழங்கும் இலவச இணையதள பயிற்சிக்கு உங்களை வரவேற்கிறோம்.தன்னம்பிக்கை, விடா முயற்சி , கடின உழைப்பு. எந்த சோதனைகள் வந்தாலும் உங்கள் இலட்சியத்தை விட்டு விடாதீர்கள். "சரியான முயற்சியும் பயிற்சியும் இருந்தால் உங்களால் முடியாத ஒன்றுமே இல்லை" என்ற நம்பிக்கை உங்கள் ஒவ்வொருவரின் மனதிலும் நிறைந்திருக்க வேண்டும். அதற்காக எங்கள் இணைய தளத்தின் மூலம் எங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வோம்.பயிற்சி நிறுவனங்களுக்கு சென்று பயிற்சி பெற இயலாத வேலைதேடும் இளைஞர்கள், பணிபுரிபவர்கள், இல்லத்தரசிகள் தங்களது அரசு வேலை கனவுகளை நனவாக்குவதற்காகவே இந்த இணையதளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. TET ன் புதிய பாடத்திட்டத்திற்கேற்ப ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட பாடப்பகுதிகளில் வாரத்தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த வாரத்தேர்வின் முடிவுகள் உங்கள் பெயருடன் இந்த இணையதளத்தில் வெளியிடவும் முடிவு செய்துள்ளோம்.

Sunday, May 3, 2015

ஐடிஐ & டிப்ளமோ தகுதிக்கு ரிசர்வ் வங்கியின் துணை நிறுவனங்களில் பணி


மைசூர் மற்று மேற்கு வங்க மாநிலம், சல்போனி போன்ற இடங்களில் செயல்பட்டு வரும் பாரதிய ரிசர்வ் வங்கி நோட் நிறுவனத்தில் Industrial Workman பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 15/2015
பணி: Industrial Workman Grade-I (Trainee)
காலியிடங்கள்: 90
சம்பளம்: ரூ.7,000 - 24,240
வயதுவரம்பு: 01.04.2015 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Printing Technology, Mechanical, Tool & Die, Electrical, Electronics, Instrumentation, Chemical Engineering போன்ற ஏதாவதொரு துறையில் டிப்ளமோ பொறியியல் முடித்திருக்க வேண்டும். அல்லது Letter Press, Offset, Platemaking, Graphic Arts, Retoucher, Tool & Die Making, Machanic Machine Tool Maintenance, Machinist, Machinisit Grinder, Turner, Fitter, Instrument Mechanic, Electrician, Electronic Mechanic போன்ற ஏதாவதொரு தொழிற்பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.brpnmpl.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதில் தேவையான இடத்தில் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி கையெழுத்திட்டு கைவசம் வைத்துக்கொள்ளவேண்டும். இவற்றுடன் தேவையான சான்றிதழ்களில் சுயசான்று செய்து வைத்துக்கொண்டு நேர்முகத் தேர்விற்கு வருகைதரும்போதும் அசல் சான்றிகழ்களுடன் கொண்டுவர வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் முறையிலான எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 06.06.2015
எழுத்துத் தேர்வு மையம்: சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, திருவனந்தபுரம்
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.05.2015

மேலும் விண்ணப்பதாரர்களின் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறியwww.brpnmpl.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments: