TRB,TNTET,TNPSC online coching

Search This Blog

NEWS

https://trb-tntet-tnpsc.blogspot.in/வழங்கும் இலவச இணையதள பயிற்சிக்கு உங்களை வரவேற்கிறோம்.தன்னம்பிக்கை, விடா முயற்சி , கடின உழைப்பு. எந்த சோதனைகள் வந்தாலும் உங்கள் இலட்சியத்தை விட்டு விடாதீர்கள். "சரியான முயற்சியும் பயிற்சியும் இருந்தால் உங்களால் முடியாத ஒன்றுமே இல்லை" என்ற நம்பிக்கை உங்கள் ஒவ்வொருவரின் மனதிலும் நிறைந்திருக்க வேண்டும். அதற்காக எங்கள் இணைய தளத்தின் மூலம் எங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வோம்.பயிற்சி நிறுவனங்களுக்கு சென்று பயிற்சி பெற இயலாத வேலைதேடும் இளைஞர்கள், பணிபுரிபவர்கள், இல்லத்தரசிகள் தங்களது அரசு வேலை கனவுகளை நனவாக்குவதற்காகவே இந்த இணையதளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. TET ன் புதிய பாடத்திட்டத்திற்கேற்ப ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட பாடப்பகுதிகளில் வாரத்தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த வாரத்தேர்வின் முடிவுகள் உங்கள் பெயருடன் இந்த இணையதளத்தில் வெளியிடவும் முடிவு செய்துள்ளோம்.

Sunday, December 3, 2017

TNPSC GROUP 4 VAO

1. பள்ளிப் பாடப்புத்தகங்கள் : 
i) பொதுத்தமிழ் - 6-10 வரையிலான தமிழ் பாடப்புத்தகங்கள்
ii) வரலாறு, புவியியல் - 6-10 வரையிலான சமூக அறிவியல் பாடப்புத்தகங்கள்
iii) அறிவியல் - 6-10 வரையிலான பாடப்புத்தகங்கள்
iv) கணிதம் - 7-10 வகுப்பிலுள்ள அளவியல் பாடப்பகுதிகள்
vi) பொருளாதாரம் -6,7,8,9,10 மற்றும் 11 ஆம் வகுப்புகள்
vii) அரசியல் அறிவியல் - 6-10 வரையிலான குடிமையியல் பகுதிகள், 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் புத்தகம்

குறிப்பு : உங்களிடம் மேற்கூறிய அனைத்து பள்ளிப்பாடப் புத்தகங்களும் இல்லையென்றாலும் கவலைப்படத் தேவையில்லை,  http://www.textbooksonline.tn.nic.in/Default.htmஎன்ற தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்தின் இணைய தளத்திலிருந்து அனைத்து புத்தகங்களையும் உங்கள் மொபைல் , டேப்ளட் அல்லது கணிணியில் டவுண்லோடு செய்து கொண்டு, படித்து குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். 

2. நடப்பு நிகழ்வு குறிப்புகள் :  நடப்பு நிகழ்வுக் குறிப்புகள்

3. அறிவுக்கூர்மை  :  R.S.Agarwal - Quantitative Aptitude Book (ஆங்கிலம் புரிந்து கொள்ள இயலுமென்றால்), இல்லையெனில் தமிழில் வெளிவந்திருக்கும் கணியன், சக்தி போன்றவற்றில் ஏதேனும் புத்தகங்களைப் படிக்கலாம். முடிந்த வரை டி.என்.பி.எஸ்.சி முந்தைய தேர்வுகளில் கேட்கப்ப்ட்டிருக்கும் திறனறிவு தொடர்பான வினாக்களை பயிற்சி செய்வது அவசியம்.

4. பொது அறிவுப் பகுதி :  Arihant General Knowledge Book குறிப்பாக கடைசி 80 பக்கங்களிலுள்ள தகவல்கள் பொது அறிவு சம்பந்தமான கேள்விகளுக்கு தயாராக உதவியாக இருக்கும். ஆங்கிலம் புரிந்து கொள்ள இயலவில்லையெனில்,  விகடன் பொது அறிவு களஞ்சியம் அல்லது மனோரமா இயர்புக்  ஏதேனும் ஒரு புத்தகத்தைப் படிக்கலாம். மேலும் பொருளாதாரம், அரசியல் அறிவியல் மற்றும் புவியியல் பகுதிகளையும் இப்புத்தகங்களிலிருந்து படிக்கலாம். 

5. TNPSC முந்தைய தேர்வு வினாத்தாள்கள் - உங்களால் இயன்ற வரையில் முந்தைய VAO, Group IV போன்ற எஸ்.எஸ்.எல்.சி தரத் தேர்வுகளின் வினாத்தாள்களைப் பயிற்சி செய்யுங்கள்.

No comments: