TRB,TNTET,TNPSC online coching

Search This Blog

NEWS

https://trb-tntet-tnpsc.blogspot.in/வழங்கும் இலவச இணையதள பயிற்சிக்கு உங்களை வரவேற்கிறோம்.தன்னம்பிக்கை, விடா முயற்சி , கடின உழைப்பு. எந்த சோதனைகள் வந்தாலும் உங்கள் இலட்சியத்தை விட்டு விடாதீர்கள். "சரியான முயற்சியும் பயிற்சியும் இருந்தால் உங்களால் முடியாத ஒன்றுமே இல்லை" என்ற நம்பிக்கை உங்கள் ஒவ்வொருவரின் மனதிலும் நிறைந்திருக்க வேண்டும். அதற்காக எங்கள் இணைய தளத்தின் மூலம் எங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வோம்.பயிற்சி நிறுவனங்களுக்கு சென்று பயிற்சி பெற இயலாத வேலைதேடும் இளைஞர்கள், பணிபுரிபவர்கள், இல்லத்தரசிகள் தங்களது அரசு வேலை கனவுகளை நனவாக்குவதற்காகவே இந்த இணையதளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. TET ன் புதிய பாடத்திட்டத்திற்கேற்ப ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட பாடப்பகுதிகளில் வாரத்தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த வாரத்தேர்வின் முடிவுகள் உங்கள் பெயருடன் இந்த இணையதளத்தில் வெளியிடவும் முடிவு செய்துள்ளோம்.

Sunday, May 17, 2015

பிரச்னையும் நாமே! நிரந்தர தீர்வும் நாமே!

வாழ்க்கையில், அனேக விஷயங்களை நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை. அப்படிப்பட்ட ஒரு விஷயம் தான், இப்போது நம் அனைவரின் வாயிலும், வாழ்க்கையிலும் வெகு இயல்பாக வரும் வார்த்தையான, ‘டென்ஷன்!’ இது, ஆங்கில வார்த்தையாகத் தெரியவில்லை; தமிழ் வார்த்தையாக மாறி, பல காலம் ஆகிவிட்டது போல் தோன்றுகிறது!
ஒரு குட்டி பெண், எங்கள் வீட்டை தாண்டி பள்ளிக்கு போகும் போதெல்லாம், எனக்கு,
‘வாழ்க வளமுடன்’ என்று சொல்லி விட்டு தான் போவாள். சென்ற வாரம் ஒரு நாள், ‘சாப்பிட்டியாமா?’ என்று நான் கேட்டதற்கு, ‘இல்லை ஆன்ட்டி…
காலையிலேயே ஒரே டென்ஷன்…’ எனச் சொன்னாள். அப்போது தான், குழந்தைகளை நினைத்து, எனக்கு டென்ஷன் ஏறிற்று! அசாதாரணமான சூழ்நிலை
இதை உணராதவர்கள் யாரும் இருக்க முடியாது. சில பேர் இதை, தன் உடன்பிறந்த சொத்தாகவே வைத்துக் கொள்வர்; அவர்களை இது, ஆட்டிப் படைக்கும். எதுவொன்றும் தன்னுடையது
மட்டுமே என்று சொந்தம் கொண்டாடும்போது தான், டென்ஷன் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
ஒரு அசாதாரணமான சூழ்நிலை… அதிலிருந்து தப்பிக்க வேண்டும். உடனே டென்ஷன் ஆகி, அதற்கான வழியை கண்டுபிடித்து, அதிலிருந்து வெளியில் வந்த பின்பும், அந்த டென்ஷனை தூக்கி வீசாமல், கூடவே வைத்திருப்பதில் தான் ஆரம்பிக்கிறது,
நம்முடைய சொர்ணாக்கா குணம்.
சில சிறப்பு குணம் படைத்தவர்கள் இருக்கின்றனர். தன் டென்ஷனை, அடுத்தவர்களுக்கு பிரித்துக் கொடுத்து விடுவர்; தன்னுடைய டென்ஷன் தான் அது என்ற ஒரு சின்ன அடையாளத்தைக் கூட வைத்துக் கொள்ள மாட்டார்கள்.
பிரச்னைகளை சரியாக கையாளத் தெரியாத போது தான், அது டென்ஷனாக மாறுகிறது.
டென்ஷன் ஏற்பட்டால் மனம் கெடும், புத்தி தெளிவாக இருக்காது, ஒரு தீர்வும் ஏற்படாது, உடலில் ஏற்படும் பல வியாதிகளுக்கு மூலக் காரணமே இது தான். தன்னம்பிக்கை இருக்காது,
நம் தனித்தன்மையை அழித்து விடும்.நம்பிக்கை பிறக்கும் பிறரை எதிர்மறையாக பேசுவது, செயல்படுவது, அவர்களுக்கு டென்ஷன் ஏற்படுத்துவது என செய்தால் அந்த பிரச்னை, டென்ஷன், எதிர்மறையான விளைவு போன்றவற்றின் பலன் நமக்கே திரும்ப வரும். சொந்தங்களையும், உறவுகளையும், நட்புகளையும் யார் சிறப்பாக கையாளுகின்றனரோ, அவர்களிடம் டென்ஷனோ, மன அழுத்தமோ இருப்பதில்லை என, படித்திருக்கிறேன்.
எனவே, எதிர்மறையான சிந்தனைகளிலிருந்து கொஞ்சம் விலகி, நீங்களாகவே உள்ளர்த்தம் கற்பித்துக் கொள்ளாமல், உள்ளது உள்ளபடி சிந்தித்துச் செயல்படும்போது, டென்ஷனைக் குறைக்கலாம். எதிர்கால பயத்தை விட்டொழித்து, நிகழ்காலத்தின் ஒவ்வொரு நொடியையும் அனுபவிக்கத் துவங்கினாலே, பிரச்னைகள் பாதி தீரும். இது புரிந்து விட்டால், எதிர்காலம் நம்மை பயமுறுத்தாது.எந்நேரமும் நமக்குப் பிடித்தமான வேலைகளைச் செய்வது, எதிர்மறை சிந்தனையே மனதிற்குள் ஓடாதபடி, வேலையில் மூழ்குவது ஆகியவை, மனதின் எண்ண ஓட்டத்தையே மாற்றும்; நமக்குள் நம்பிக்கை பிறக்கும்.

No comments: