உலகம் முழுவதும் மே தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் தமிழகத்தில் தொழிற்சங்கம் வளர்ச்சியும் அதன் தற்போதைய நிலை பற்றிய செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
சிகாகோ நகரில் தொழிலாளர்களுக்கு 8 மணி நேரம் கேட்டு நடத்திய எழுச்சி நாளை தொழிலாளர்களுக்கு நினைவுபடுத்தும் நாளான இன்று மே தினம் கொண்டாடப்படுகிறது. உலகளவில் தொழிலாளர்கள் உரிமைக்காகவும், நாட்டின் சுதந்திரத்துக்காக போராடிய போதே தமிழகத்தில் எழுச்சிமிகு போராட்டம் நடைபெற்றதாக தெரிவிக்கின்றனர்.
இந்தியாவிலேயே மே தினம் 1923 ஆம் ஆண்டு சென்னையில் செங்கொடி ஏற்றப்பட்டது. ஏராளமான போராட்டங்களை தமிழக தொழிலாளர்கள் முன்னெடுத்ததும் இதில் ரயில்வே தொழிலாளர்கள் போராட்டங்கள், பஞ்சாலை தொழிலாளர்கள் போராட்டம் போன்றவை தொழிற்சங்கம் வலுப்பெற்றதாக தெரிவிக்கிறார் சுதந்திரப்போராட்ட வீரரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு.
தொழிலாளர்கள் உரிமைக்காக போராடிய தொழிற்சங்கங்கள் தற்போது தமிழகத்தில் அரசியல் கட்சி பின்னனியில் இருப்பதால் ஒற்றுமை இல்லாமல் இருக்கிறது. முன்பு நாட்டின் சுதந்திரம், தொழிலாளர்களின் உரிமை மட்டுமே இலக்காக இருந்த சூழ்நிலையில் தற்போது கட்சியின் பின்னனியில் இருப்பதால் ஒரு குடையின் கீழ் அணிதிரள பல சிரமங்கள் ஏற்படுவதாக கூறுகின்றனர் தொழிற்சங்கத்தினர்.
கட்சி பின்னனி இல்லாமல் தொழிற்சங்கம் செயல்படும் போது தொழிலாளர்கள் கோரிக்கைகள் முன்னெடுக்க முடியாமலும், இவர்களுக்கான அங்கிகாரம் மறுக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
வலுவான போராட்டம், பல உயிர்த் தியாகம் செய்து வளர்ந்த தொழிற்சங்கம் இன்று கட்சிப் பின்னனியில் இருப்பதால் தொழிலாளர்கள் உரிமை போராட்டத்தில் உடனடியாக ஒன்று திரள சுணக்கம் ஏற்படுகிறது. இன்னும் தொழிலாளர்களின் உரிமை, அவர்களுக்கான பாதுகாப்பு போன்றவற்றை வென்றிட கட்சி வேறுபாடுகள் களைந்து தொழிலாளர்கள் என்ற ஓர் அணியில் திரளுவது காலத்தின் கட்டாயமாக உள்ளது
No comments:
Post a Comment