TRB,TNTET,TNPSC online coching

Search This Blog

NEWS

https://trb-tntet-tnpsc.blogspot.in/வழங்கும் இலவச இணையதள பயிற்சிக்கு உங்களை வரவேற்கிறோம்.தன்னம்பிக்கை, விடா முயற்சி , கடின உழைப்பு. எந்த சோதனைகள் வந்தாலும் உங்கள் இலட்சியத்தை விட்டு விடாதீர்கள். "சரியான முயற்சியும் பயிற்சியும் இருந்தால் உங்களால் முடியாத ஒன்றுமே இல்லை" என்ற நம்பிக்கை உங்கள் ஒவ்வொருவரின் மனதிலும் நிறைந்திருக்க வேண்டும். அதற்காக எங்கள் இணைய தளத்தின் மூலம் எங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வோம்.பயிற்சி நிறுவனங்களுக்கு சென்று பயிற்சி பெற இயலாத வேலைதேடும் இளைஞர்கள், பணிபுரிபவர்கள், இல்லத்தரசிகள் தங்களது அரசு வேலை கனவுகளை நனவாக்குவதற்காகவே இந்த இணையதளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. TET ன் புதிய பாடத்திட்டத்திற்கேற்ப ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட பாடப்பகுதிகளில் வாரத்தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த வாரத்தேர்வின் முடிவுகள் உங்கள் பெயருடன் இந்த இணையதளத்தில் வெளியிடவும் முடிவு செய்துள்ளோம்.

Sunday, December 7, 2014

மூலிகை முழுதாவரம்.

நரிமிரட்டி.

மூலிகையின் பெயfர் –: நரிமிரட்டி.

தாவரவியல் பெயர் –: CROTALARIA VERRUCOSA.

தாவரவியல் குடும்பம் –: PAPILIONACEAE, FABACEAE.

பயன்தரும் பாகங்கள் –: முழுதாவரம்.

வேறு பெயர்கள் -: கிலுகிலுப்பை, நரிவிரட்டி, சோணபுஷ்பி மற்றும் சங்குநிதி.

வளரியல்பு –: நரிமிரட்டி காடு மலைகள்ளில் தானே வளரக்கூடியது. மணற்பாங்கான இடத்தில் நன்கு வளரும். இது 50 செ.மீ. முதல் 100 செ.மீ. உயரம் வரை வளரக்கூடியது. இதன் இலைகள் எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். இலைகள் முக்கோண வடிவத்தில் சுமார் 5 செ.மீ. முதல் 15 செ.மீ. வரை நீளம் இருக்கும் இதன் காம்பு 2 – 4 எம்.எம். நீளமிருக்கும். பூக்கள் நவம்பர் மாத த்தில் பூக்கும். நுனியில் சுமார் 10 பூக்கள் வரை பூக்கும். இதன் நீளம் 9 எம்.எம். இருக்கும். இதழ் 1.5 செ.மீ.. இருக்கும். பூ ஊதா நிறமும் வெள்ளையும் கலந்திருக்கும். கருநீல வரிகள் இருக்கும். காய் 5 – 10 எம்.எம். நீளத்தில் இருக்கும். காயினுள் 28 முதல் 32 விதைகள் இருக்கும். அவை முற்றிக் காய்ந்தால் உள்ளிருக்கும் விதைகள் காற்றில் ஆடும் போது ஒரு வித சத்தத்தை உண்டாக்கும் வெப்ப சீதோஸ்ணமான இடம் இதற்கு ஏற்றது. இது ஒரு வராடாந்திர புதர் செடி, இதை வேலிக்காகவும் அழகுக்காகவும் வளர்ப்பார்கள். இதன் விதையிலிருந்து எண்ணெய் எடுத்து வியாபார நோக்கில் விற்பார்கள். இந்த நரிமிரட்டிக்கு ஆங்கிலத்தில்  BLUE RATTLESNAKE, RATTLEPOD, BLUEFLOWER என்ற பெயர்களும் உண்டு.இந்தபுதர்செடி பங்களாதேஸ்,  சீனா, கம்போடியா, இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, மாயின்மர், நேபால், பிலிப்பைன், இலங்கை, தாய்லந்து, வியட்னாம், ஆஸ்திரேலியா மற்றும் அமரிக்காவில் அதிகமாகக் காணப்படும். நரிமிரட்டி விதை மூலம் இன விருத்தி செய்யப்படுகிறது.

நரிமிரட்டியின் மருத்துவப் பயன்கள் –: இதன் செய்கைகள் கசப்பு, துவர்ப்புச் சுவைகள், வாந்தியாகச் செய்தல், இது அஜீரணம், கபம், காய்ச்சல், தொண்டைநோய், இதய நோய், பித்தம், பென்னி பாதம் செயல் உடையது.  இதன் இலையிலிருந்து டீ பானம் தயாரித்துக் குடித்தால் தலைவலி, குளிர் காய்ச்சல், தோல் வியாதிகள், வயிற்றுவலி, சொறி சிறங்கு, ஆகியவை குணமாகும், கிட்னி, லிவர், காமாலை, நோய்கள் குணமாகும். மேலும் பாம்புக்கடி, குடல்புண், மூத்திரக் கோளாறு, குடல் புழு, வயிற்றுப் போக்கும் குணமாகும். இது கால்நடைகளுக்கு ஏற்படும் பலவிதமான நோய்களை பக்க விளைவுகள் இன்றி குணப்படுத்த வல்லது.. இதைப் பற்றி போகர் எழுதியதை கீழே காணலாம்.

No comments: