அந்தமான் தீவுகள் பகுதியில் இன்று மதியம் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. மதியம் 2:45 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை தகவல் எதுவும் பெறப்படவில்லை. நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு ஒரு வாரத்திற்குள்ளாக தற்போது அந்தமானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. எனினும் இந்த இரண்டுக்கும் தொடர்பு இல்லை என நில அதிர்வியல்துறை இயக்குநர் கவுதம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே , பபுவா நியுகினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7 புள்ளி 1 ஆகப் பதிவாகியது.
No comments:
Post a Comment