திருச்சியில், குழந்தைகளை வாடகைக்கு எடுத்து பிச்சையெடுக்க பயன்படுத்திய 7 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில், வாடகைக் குழந்தைகள் மூலம் சிலர் பிச்சையெடுத்து வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவு பெண் காவலர்கள், சாதாரண உடையில் பேருந்து நிலையத்தை கண்காணித்தனர்.
இதில், நாகமங்கலம் பகுதியைச் சேர்ந்த 7 பெண்கள், வாடகைக்கு எடுத்து வரப்பட்ட 4 பச்சிளம் குழந்தைகளை கொண்டு பிச்சையெடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் 7 பேரையும் கைது செய்த காவல்துறையினர், திருச்சி கண்டோன்மெண்ட் காவல்நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
நாகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பெற்றோர்களே, பணத்துக்காக தங்களது குழந்தைகளை பிச்சையெடுக்க வாடகைக்கு விடுவது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment