மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள 100 ஸ்மார்ட் நகரங்கள் பட்டியலில் உத்தரப் பிரதேசத்தை அடுத்து அதிகபட்ச ஸ்மார்ட் நகரங்கள் தமிழகம் பெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசு இறுதி செய்துள்ள பட்டியலில் 13 நகரங்களுடன் உத்தரப் பிரதேசம் முதலிடம் வகிப்பதாக டெல்லியில் தகவல்கள் தெரிவிக்கின்றன. 12 நகரங்களுடன் தமிழகம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ள நிலையில், 10 ஸ்மார்ட் நகரங்கள் மஹாராஷ்ட்ராவில் அமைய உள்ளதாக கூறப்படுகிறது.
மக்கள்தொகை, நகர வளர்ச்சி வாய்ப்புகள் அடிப்படையில் இந்நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment