கொடைக்கானலில் வரும் மே மாதம்16 ம் தேதியன்று மலர்க் கண்காட்சியுடன் கோடைவிழா தொடங்க உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடைவிழா நடைபெறுவது வழக்கம். இதன் தொடக்க நிகழ்ச்சியாக மலர்க் கண்காட்சியும், பின்னர் படகு போட்டி, குதிரை பந்தையம், நாய் கண்காட்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இதுதொடர்பாக கோட்டாட்சியர் தலைமையில், அனைத்துத்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வரும் 16-ல் இருந்து 25 ஆம் தேதி வரை கோடை விழாவை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.
மேலும் வெள்ளி நீர்வீழ்ச்சி, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதியில் தொடர்ந்து 10 நாட்களுக்கு கலை நிகழ்ச்சிகள் நடத்தவும், தோட்டக்கலைத்துறை சார்பாக முதன்முறையாக காய்கறிக் கண்காட்சி நடத்துவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment