Labels
TRB,TNTET,TNPSC online coching
Search This Blog
NEWS
https://trb-tntet-tnpsc.blogspot.in/வழங்கும் இலவச இணையதள பயிற்சிக்கு உங்களை வரவேற்கிறோம்.தன்னம்பிக்கை, விடா முயற்சி , கடின உழைப்பு. எந்த சோதனைகள் வந்தாலும் உங்கள் இலட்சியத்தை விட்டு விடாதீர்கள். "சரியான முயற்சியும் பயிற்சியும் இருந்தால் உங்களால் முடியாத ஒன்றுமே இல்லை" என்ற நம்பிக்கை உங்கள் ஒவ்வொருவரின் மனதிலும் நிறைந்திருக்க வேண்டும். அதற்காக எங்கள் இணைய தளத்தின் மூலம் எங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வோம்.பயிற்சி நிறுவனங்களுக்கு சென்று பயிற்சி பெற இயலாத வேலைதேடும் இளைஞர்கள், பணிபுரிபவர்கள், இல்லத்தரசிகள் தங்களது அரசு வேலை கனவுகளை நனவாக்குவதற்காகவே இந்த இணையதளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. TET ன் புதிய பாடத்திட்டத்திற்கேற்ப ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட பாடப்பகுதிகளில் வாரத்தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த வாரத்தேர்வின் முடிவுகள் உங்கள் பெயருடன் இந்த இணையதளத்தில் வெளியிடவும் முடிவு செய்துள்ளோம்.
Saturday, May 30, 2015
Monday, May 25, 2015
மதுபழக்கத்தை மறக்க கொய்யா சாப்பிடுங்க!
பழங்களில் மிகுந்த வாசமும், ருசியும் உள்ள பழம் கொய்யா. இப்பழம் விலை குறைவானது. அனைவராலும் எளிதில் வாங்கி உண்ணக் கூடிய பழம். கொய்யாப் பழத்தில் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. கனி மட்டுமல்லாது, இலை, பட்டை என அனைத்துமே மருத்துவ குணம் கொண்டுள்ளது.
கொய்யாமரத்தின் இலைகள் திசுக்களை சுருக்கும். குருதிப்போக்கினைத் தடுக்கும் திறன் உடையவை. மலச்சிக்கலைப் போக்கும். ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டால் இலையை கொதிக்க காய்ச்சி, அந்த நீரில் கொப்பளிக்கலாம். கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம், இருமல், தொண்டை மற்றும் இதயம் சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகிறது.
கொய்யாமரத்தின் இலைகள் திசுக்களை சுருக்கும். குருதிப்போக்கினைத் தடுக்கும் திறன் உடையவை. மலச்சிக்கலைப் போக்கும். ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டால் இலையை கொதிக்க காய்ச்சி, அந்த நீரில் கொப்பளிக்கலாம். கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம், இருமல், தொண்டை மற்றும் இதயம் சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகிறது.
கொய்யா மரத்தின் இளம் கிளைகளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் கஷாயம், காய்ச்சலைக் கட்டுப்படுத்தும். கொய்யா இலைகள் அல்சரை குணமாக்கும். கொய்யாப்பழத்தை கழுவிய பிறகு, பற்களால் கடித்து மென்று தின்பதே நல்லது. இதனால் பற்களும், ஈறுகளும் பலப்படும்.
வேறு எந்தப் பழத்திலும் இல்லாத, வைட்டமின் சி உயிர்ச்சத்து இதில் அதிகம் உள்ளது. அதனால், வளரும் குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் ஒரு வரப்பிரசாதமாகும். உடல் நன்கு வளரவும், எலும்புகள் பலம் பெறவும் இப்பழம் உதவும். கொய்யாவின் தோலில் தான் அதிக சத்துக்கள் உள்ளன. இதனால் தோலுடன் சாப்பிடுவது நல்லது. முகத்திற்கு பொலிவையும், அழகையும் தரும். தோல் வறட்சியை நீக்கும். முதுமை தோற்றத்தை குறைத்து இளமை தரும்.
மது போதைக்கு அடிமையானவர்கள், அப்பழக்கத்தில் இருந்து விடுபட கொய்யாவை அதிகம் சாப்பிடலாம். இதை தொடர்ந்து சாப்பிட்டால் மது அருந்தும் ஆசை போய் விடும். மிக எளிதில் மது போதை பழக்கத்தில் இருந்து விடுதலை பெறலாம். உணவு சாப்பிடும் முன், இப்பழத்தை சாப்பிடுவது நல்லதல்ல. சாப்பிட்ட பின்போ, அல்லது சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்போ, சாப்பிடலாம். நோயால் அவதியுற்று மருந்து சாப்பிட்டு வருபவர்கள், இப்பழத்தை சாப்பிட்டால் மருந்து முறிவு ஏற்படும்.
இருமல் இருக்கும் போது இப்பழத்தை சாப்பிட்டால் இருமல் அதிகமாகும். தோல் தொடர்பான வியாதி உள்ளவர்கள் இப்பழத்தை உண்டால் நோய் அதிகரிக்கும்.
கொய்யாப்பழத்திற்கு மருந்தை முறிக்கும் ஆற்றல் உண்டு. ஒரு சிலருக்கு மயக்கத்தை ஏற்படுத்தும்.
வாதநோய், ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிடக்கூடாது. கொய்யாப்பழத்தை இரவில் சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால் வயிறு வலி உண்டாகும். கொய்யாவை அளவுடன் சாப்பிட வேண்டும். அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் பித்தம் அதிகரித்து, வாந்தி, மயக்கம் ஏற்படும்.
வேறு எந்தப் பழத்திலும் இல்லாத, வைட்டமின் சி உயிர்ச்சத்து இதில் அதிகம் உள்ளது. அதனால், வளரும் குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் ஒரு வரப்பிரசாதமாகும். உடல் நன்கு வளரவும், எலும்புகள் பலம் பெறவும் இப்பழம் உதவும். கொய்யாவின் தோலில் தான் அதிக சத்துக்கள் உள்ளன. இதனால் தோலுடன் சாப்பிடுவது நல்லது. முகத்திற்கு பொலிவையும், அழகையும் தரும். தோல் வறட்சியை நீக்கும். முதுமை தோற்றத்தை குறைத்து இளமை தரும்.
மது போதைக்கு அடிமையானவர்கள், அப்பழக்கத்தில் இருந்து விடுபட கொய்யாவை அதிகம் சாப்பிடலாம். இதை தொடர்ந்து சாப்பிட்டால் மது அருந்தும் ஆசை போய் விடும். மிக எளிதில் மது போதை பழக்கத்தில் இருந்து விடுதலை பெறலாம். உணவு சாப்பிடும் முன், இப்பழத்தை சாப்பிடுவது நல்லதல்ல. சாப்பிட்ட பின்போ, அல்லது சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்போ, சாப்பிடலாம். நோயால் அவதியுற்று மருந்து சாப்பிட்டு வருபவர்கள், இப்பழத்தை சாப்பிட்டால் மருந்து முறிவு ஏற்படும்.
இருமல் இருக்கும் போது இப்பழத்தை சாப்பிட்டால் இருமல் அதிகமாகும். தோல் தொடர்பான வியாதி உள்ளவர்கள் இப்பழத்தை உண்டால் நோய் அதிகரிக்கும்.
கொய்யாப்பழத்திற்கு மருந்தை முறிக்கும் ஆற்றல் உண்டு. ஒரு சிலருக்கு மயக்கத்தை ஏற்படுத்தும்.
வாதநோய், ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிடக்கூடாது. கொய்யாப்பழத்தை இரவில் சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால் வயிறு வலி உண்டாகும். கொய்யாவை அளவுடன் சாப்பிட வேண்டும். அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் பித்தம் அதிகரித்து, வாந்தி, மயக்கம் ஏற்படும்.
தென் கிழக்கு இரயில்வே அப்ரண்டீஸ் பயிற்சி
தென் கிழக்கு இரயில்வேயில் அளிக்கப்பட 663 அப்ரண்டீஸ் பயிற்சிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவம்: South Eastern Railway (SER)
பணியிடம்: மேற்கு வங்காளம்
காலியிடங்கள்: 663
துறைவாரியான காலியிடங்கள்:
1. Fitter - 200
2. Turner - 12
3. Electrician - 162
4. Welder - 77
5. Mechanic(dsl) - 47
6. Machinist - 22
7. Painter(G) - 14
8. Ref. & AC. Mech. - 18
9. Electronics & Mechanic - 56
10. Cable jointer/ Crane Operator - 04
11. Wireman - 20
12. Winder (Armature) - 06
13. Lineman - 20
14. MMTM - 08
15. Forger & Heat Treater - 01
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 50 சதவிகித தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.01.2015 தேதியின்படி 24க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: மருத்துவச் சோதனை மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.ser.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 08.06.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://www.ser.indianrailways.gov.in/cris//uploads/files/1431327068308-NOTIFICATION%20OF%20ACT%20APPRENTICE%20%20SERAILWAY.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
Wednesday, May 20, 2015
ஒருங்கிணைந்த பட்டதாரி தேர்வு: எஸ்.எஸ்.சி அறிவிப்பு
2015 ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பட்டதாரி தேர்வுக்கான அறிவிப்பை பணியாளர்கள் தேர்வு ஆணையம் (எஸ்.எஸ்.சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விளம்பர எண்: F.No.3/12/2015-P and P-I
தேதி: 02.05.2015
பணி: குரூப் "பி"
தேர்வுக் கோடு: CGL 2015
1. Assistant
2 . Inspector of Income Tax
3 . Inspector
4 . Asst.Enforcement Officer
5 . Sub-Inspector
6 . Inspector of Posts
7 . Divisional Accountant
8. Statistical Investigator
9 .Sub-Inspector
சம்பளம்: மாதம் ரூ.9300 - 34,800
பணி: குரூப் "சி"
10. Auditor
11. Accountant
12. UDC
13. Tax Assistant
14. Compiler
15. Sub-Inspector
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
கல்வித்தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100 (எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.05.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ssconline.nic.in/tpform1.php?exam_code=CGL&year=2015¬ice_no=F.No.3/12/2015-P%20and%20P-I¬ice_date=02-05-2015 என்ற இணையதளத்தை பார்க்கவும்.
இந்திய பெட்ரோலிய நிறுவனத்தில் திட்ட உதவியாளர் பணிகள்
உத்தரகாண்ட் மாநிலம் டெஹராடூனில் உள்ள CSIR-Indian Institute of Petroleum நிறுவனத்தில் நடைபெறவுள்ள திட்ட பணிகளில் பணியாற்ற தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வருகின்ற 29 மற்றும் 30 தேதிகளில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.
விளம்பர எண்: 03/2015
Project Code: CSC/GAP/SSP/CNP
Post Code: 1
பணி: Project Fellow/Project Assistant
காலியிடங்கள்: 25
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
உதவித்தொகை: மாதம் ரூ.16,000
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 29.05.2015 காலை 9 மணிக்கு
தகுதி: வேதியியல் பிரிவில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.
Project Code: CSC GAP CLP
Post Code: 2
பணி: Project Fellow/Project Assistant
காலியிடங்கள்: 04
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
உதவித்தொகை: மாதம் ரூ.16,000
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 30.05.2015 காலை 9 மணிக்கு
தகுதி: பொறியியல் துறையில் கெமிக்கல் பிரிவில் துறையில் 5 மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
Project Code: GAP ESC
Post Code: 3
பணி: Project Fellow/Project Assistant
காலியிடங்கள்: 02
உதவித்தொகை: மாதம் ரூ.16,000
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 30.05.2015 காலை 9 மணிக்கு
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:
CSIR - Indian Institute of Petroleum,
P.O: I.I.P., Mohkampur,
Haridwar Road, Dehradun - 248005,
Uttarakhand.
மேலம் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.iip.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
மனம் இருந்தால் மறக்கலாம்! புகைக்கு மாற்று சிகிச்சை முறைகள்
இந்தியாவில் நிமிடத்துக்கு ஒருமுறை சிகரெட்டுக்கு எதிரான விளம்பரங்கள் டி.வியில் திரையரங்குகளில் ஒளிபரப்பாகின்றன. ஆனால், நிமிடத்துக்கு ஒருவர் சிகரெட்டால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைக்குள் நுழைகிறார். தொற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கையைவிட சிகரெட்டால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம். ‘‘விடணும்னு நினைக்கிறேன், ஆனா முடியலை’’ என்பதுதான், தெரிந்தே விஷத்தை சுவாசிப்பவர்களின் ஸ்டேட்மென்ட். ஆனால், இது உண்மை இல்லை. மனம் இருந்தால் சிகரெட்டை மறந்துவிடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
சிகரெட் ஆபத்துகள்
சிகரெட் புகைக்கும்போது, 4000-த்துக்கும் மேற்பட்ட ரசாயனங்கள் வெளிப்படுகின்றன. இவற்றில், 60-க்கும் மேற்பட்ட ரசாயனங்கள் புற்றுநோயை வரவழைக்கக்கூடியவை. பூச்சிகளை அழிக்கும் நிக்கோட்டின், கழிப்பறையை சுத்தம் செய்யும் அமோனியா, வீட்டுக்குப் பூசப்படும் பெயின்ட், பேட்டரியில் உள்ள கேட்மியம், வினிகரில் உள்ள அசிடிக் அமிலம், மீத்தேன் வாயு, மெழுகில் உள்ள ஸ்டீரிக் அமிலம், அர்சினிக் என்கிற விஷம், தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் டொலியூன், பியுடேன், கார்பன் மோனாக்சைடு போன்ற ஆபத்தான ரசாயனங்கள் சிகரெட்டில் உள்ளன. சிகரெட்டை ஒருமுறை பிடித்தவுடன், மீண்டும் மீண்டும் பிடிக்கத் தூண்டும் போதைக்குக் காரணம், அதில் உள்ள நிக்கோட்டின்தான். இது புகைப்பவர்களை அடிமையாக்கும். தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு மேல் புகைப்பிடிப்பவர்களுக்கு, இதய நோய்கள், சுவாசக் குழாய், நுரையீரல் பிரச்னைகள், மூளை பாதிப்புகள், பக்கவாதம், நிமோனியா, காசநோய், குழந்தையின்மை, உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வரலாம். ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, தலை முதல் பாதம்வரை எந்த உறுப்புவேண்டுமானாலும் பாதிக்கலாம்.
உலர்ந்த புகையிலையைச் சுற்றிவைத்துத் தயாரிக்கப்படும் பீடியில், சிகரெட்டைக் காட்டிலும் நிக்கோட்டினின் அளவு அதிகம். பீனால், ஹைட்ரஜன் சியானைட், பென்சோபைரீன், அமோனியா போன்றவையும் மிக மிக அதிகம். சிகரெட்டைவிட, பீடி புகைப்பதால் வெளிவரும் கார்பன் மோனாக்சைட்டின் அளவும் அதிகம். இதனால், நுரையீரல் சீக்கிரத்திலேயே பாதிப்புக்கு உள்ளாகும். மேலும், மாரடைப்பு, இதய நோய், வாய், நுரையீரல், வயிறு போன்ற இடங்களில் புற்றுநோய் வர வாய்ப்புகள் அதிகம். இந்தப் பாதிப்புகளிலிருந்தும் நிக்கோட்டின் போதையிலிருந்தும் மீள நினைப்பவர்கள், மருத்துவரின் வழிகாட்டுதலுடன் மாற்று முறைகளைப் பின்பற்றலாம்.
இ-சிகரெட்
புகைப்பதற்கு அடிமையாகி இருப்பவர்களுக்கு, அதை நிறுத்த தற்போது இ-சிகரெட் பரிந்துரைக்கப்படுகிறது. இதில் இருப்பது செயற்கை நிக்கோட்டின். இது புகையிலையில் இருந்து தயாரிக்கப்பட்டது இல்லை. சிகரெட்டை நிறுத்த விரும்புகிறவர்கள், டாக்டரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே தற்காலிகமாக இ-சிகரெட் பயன்படுத்தலாம். இதில், வீரியம் உள்ள ரசாயனங்கள் இல்லை. சிகரெட் அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது. மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு, ஒரு நாளைக்கு எத்தனை இ-சிகரெட் பிடிக்கலாம் என்பதை, மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.
நிக்கோட்டின் சூயிங்கம்
இதிலும் இருப்பது செயற்கை நிக்கோட்டின்தான். இந்த சூயிங்கம்மை சாப்பிடுவதால், நிக்கோட்டினின் தேவை பூர்த்தியாகும். மருத்துவர் ஆலோசைனைப்படி, ஒரு நாளைக்கு ஆறு முதல் 10 முறை சூயிங்கம்மைச் சுவைக்கலாம்.
நிக்கோட்டின் ஸ்டிரிப்
சருமத்தில் ஒட்டிக் கொள்ளும் பேட்ச் (Skin patch). உள் வாயின் மேல் பகுதியில் ஒட்டியதும், அந்த ஸ்டிரிப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக கெமிக்கல்கள் வெளியேறும். இதனால், புகைக்கும் எண்ணம் தோன்றாது. தினமும், இந்த ஸ்கின் பேட்சை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். மருத்துவர் ஆலோசனை பெற்று பேட்ச்சை ஒட்டிக்கொள்ளலாம்.
நிக்கோட்டின் ஸ்ப்ரே
மூக்கு மற்றும் வாய் மூலமாக அடிக்கும் ஸ்ப்ரேகள் கிடைக்கின்றன. புகைப்பவர் எந்த நிலையில் இருக்கிறார் என்று மருத்துவரே கண்டுபிடித்து ஆலோசனை வழங்குவார். அவர்களின் நிலையைப் பொறுத்து தினமும் ஒன்றிரண்டு முறை ஸ்ப்ரே செய்துகொள்ளலாம். இதனால், வெகு சீக்கிரம் நிக்கோட்டின் போதையிலிருந்து வெளிவர முடியும். இந்த முறையால், ரத்தத்தில் கலந்திருக்கும் நிக்கோட்டின் அளவைக்கூட குறைக்க முடியும்.
நிக்கோட்டின் மாத்திரைகள்
மேற்சொன்ன அனைத்து முறைகளிலும் சிறந்த முறையாக, நிக்கோட்டின் மாத்திரைகள் உள்ளன. சீக்கிரத்திலேயே நல்ல பலன்களைத் தரும். தற்போது, பரவலாக இந்த மாத்திரைகள் கிடைப்பதால், சிகரெட் பிடிப்பதை நிறுத்த நினைப்பவர்கள் மருத்துவர் உதவியுடன் மாத்திரைகளைப் பயன்படுத்தி, புகைப்பதை நிறுத்தலாம். காலை, இரவு என இரண்டு வேளையும் இந்த மாத்திரைகளைச் சாப்பிடலாம்.
பக்கவிளைவுகள் வருமா?
செயற்கை நிக்கோட்டின் சிகிச்சை முறைகளால் சிகரெட் பழக்கத்திலிருந்து வெளிவரமுடியும் என்பது உறுதி. ஆனால், சிலருக்கு குமட்டல், வாந்தி, மயக்கம், பதற்றம், அரிப்பு, வாயுத் தொல்லை போன்ற பக்கவிளைவுகள் ஏற்படலாம். சிகரெட்டால் வரும் கொடிய விளைவுகளைவிட, இந்த மாற்று சிகிச்சை முறைகளால் ஏற்படும் பாதிப்புகள் குறைவுதான். இவை அனைத்துமே சிகரெட் போதையில் இருந்து மீண்டு வருவதற்கான மாற்று முறைகள் மட்டுமே. போதைக்காக மாற்று முறைகளைத் தொடர்ந்து பயன்படுத்தக் கூடாது. மருத்துவரை கலந்து ஆலோசிக்காமல், மாற்று சிகரெட்டுகளைப் பயன்படுத்துவதும் தவறு.
வழிகள் எளிதாக இருப்பதால், சிகரெட், பீடிக்கு நோ சொல்வதைக் கொஞ்சம் யோசிக்கலாமே!
வழிகள் எளிதாக இருப்பதால், சிகரெட், பீடிக்கு நோ சொல்வதைக் கொஞ்சம் யோசிக்கலாமே!
புகைப்பதை நிறுத்துவதற்கான டிப்ஸ்:
உயிரைப் பறிக்கும் புகையிலை!
புகையிலை தயாரிக்கப்படுவதில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. பான், வெற்றிலையுடன் புகையிலை என, புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் உருவாகும் பல நோய்களினால், ஆண்டுக்கு ஒன்பது லட்சம் பேர் இறக்கின்றனர். உயிர் இழப்பும் புற்றுநோயும் இந்தியாவில் பெருகியதற்கு முக்கியக் காரணம் புகையிலைதான். புகையிலையை, ஆண்கள் 57 சதவிகிதமும் பெண்கள் 11 சதவிகிதமும் பயன்படுத்துகின்றனர். இதில், பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 37 சதவிகிதம் என்பது வருத்தமான செய்தி.
Tuesday, May 19, 2015
25 ஆயிரம் ஆசிரியர்களுக்கு கல்வித்துறை கெடு
அனைத்து ஆசிரியர்களும் இன்னும் ஓர் ஆண்டில் ஆசிரியர்களின் 'டெட்' தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் வேலை பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. 'மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்' என மத்திய அரசின் தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
இதை எதிர்த்து ஆசிரியர்கள் பலர் நீதிமன்றத்துக்கு சென்றனர். 'அரசின் உத்தரவு செல்லும்' என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.இந்நிலையில் பள்ளிக் கல்வித் துறை செயலர் சபிதா சமீபத்தில் அனுப்பிய கடிதம் குறித்து அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வி இயக்குனர் மெட்ரிக் இயக்குனர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர் ஆகியோர் புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.'கடந்த 2011 நவம்பர் முதல் கட்டாயக் கல்விச் சட்டப்படி வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி அரசு அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் அனைவரும் 2016 நவம்பருக்குள் 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றே ஆக வேண்டும். இல்லையென்றால் அவர்கள் ஆசிரியராக பணியாற்ற முடியாது' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் ஆசிரியர்களிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 'டெட்' தேர்ச்சி பெறாமல் அரசு பள்ளிகளில் சில நூற்றுக்கணக்கானோர் மட்டுமே உள்ளனர்.
ஆனால் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 25 ஆயிரம் ஆசிரியர்கள் பட்டப் படிப்பு மட்டும் படித்து விட்டு 2011க்குப் பின் பணியில் சேர்ந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் ஆசிரியராகத் தொடர முடியாத சிக்கல் எழுந்துள்ளது. இதனால் விரைவில் 'டெட்' தேர்வை அரசு அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து இடைநிலைப் பதிவு மூப்பு ஆசிரியர் இயக்க பொதுச் செயலர் ராபர்ட் கூறியதாவது:
மத்திய அரசின் அறிவிப்பு படி 'டெட்' தேர்வுக்கு 10 வாய்ப்புகள் தர வேண்டும் அல்லது ஐந்து
ஆண்டுகளில் முடிக்க வேண்டும்.ஆனால் அரசு இதுவரை ஒரே ஒரு 'டெட்' தேர்வை நடத்தி விட்டு மவுனமாக இருக்கிறது. எனவே இனி வரும் காலங்களில் ஆண்டுக்கு இரு முறையாவது 'டெட்' தேர்வு நடத்த வேண்டும் என்றார்.
தேர்வு நடைமுறையில் குழப்பம்: ஆய்வக உதவியாளர் பணிக்கான அறிவிப்பை ரத்து செய்யக்கோரி வழக்கு பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பதில் அளிக்க, ஐகோர்ட்டு உத்தரவு
தேர்வு நடைமுறையில் குழப்பம் இருப்பதாக கூறி ஆய்வக உதவியாளர் பணிக்கான அறிவிப்பை ரத்து செய்யக்கோரி தொடர்ந்த வழக்கில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஆய்வக உதவியாளர் பணி
நெல்லை பாளையங்கோட்டை காமராஜர்நகரை சேர்ந்தவர் ஆறுமுகராஜா. இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-
நான், 1976-ம் ஆண்டு மேல்நிலைக்கல்வி படிப்பை முடித்தேன். அதன்பின்பு, பட்டப்படிப்பை முடித்தேன். 1989-ம் ஆண்டு நெல்லை வேலைவாய்ப்பு
அலுவலகத்தில் பதிவு செய்துள்ளேன். தமிழகம் முழுவதும் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு முடிவு செய்தது. அதன்படி, நெல்லை மாவட்டத்தில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி 21.4.2015 அன்று அறிவிப்பு வெளியிட்டார்.
எழுத்துத்தேர்வு
இந்த பணிக்கான எழுத்துத்தேர்வு வருகிற 31-ந் தேதி நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் 130 கேள்விகள் எஸ்.எஸ்.எல்.சி. பாடத்திட்டத்தில் இருந்தும், மீதமுள்ள 30 கேள்விகள் பொது அறிவு கேள்விகளாகவும் கேட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், எஸ்.எஸ்.எல்.சி. பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்படுவதாக கூறப்படும் கேள்விகளை பொறுத்தமட்டில் தற்போதைய எஸ்.எஸ்.எல்.சி. பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்படுமா அல்லது பழைய எஸ்.எஸ்.எல்.சி. பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்படுமா என்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
37 ஆண்டுகளாக காத்திருப்பு
புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்பட்டால் பழைய எஸ்.எஸ்.எல்.சி. பாடத்திட்டத்தின் கீழ் படித்தவர்கள், தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது. நான், கடந்த 37 ஆண்டுகளாக அரசு வேலை கிடைக்காமல் காத்திருக்கிறேன். புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேர்வு நடத்தப்பட்டால் என்னை போன்று பழைய பாடத்திட்டத்தின் கீழ் எஸ்.எஸ்.எல்.சி. முடித்தவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும்.
எனவே, நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப 21.4.2015 அன்று நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். பழைய எஸ்.எஸ்.எல்.சி., புதிய எஸ்.எஸ்.எல்.சி. பாடத்திட்டத்தின் அடிப்படையில் தனித்தனியாக கேள்வித்தாள் தயாரித்து எழுத்துத்தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
நோட்டீசு
இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் நெல்லை வக்கீல் வி.கண்ணன் ஆஜராகி வாதாடினார்.
மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு சம்பந்தமாக தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை செயலாளர், நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆகியோர் பதில் அளிக்க நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.
Sunday, May 17, 2015
வரலாற்றுப் பக்கங்கள் மே(17)
மே 17 1884: அமெரிக்காவுடன் இணைந்தது அலாஸ்கா
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதக் குடியேற்றங்களைக் கண்ட அலாஸ்கா, அமெரிக்காவின் பிராந்தியமாக இணைந்தது 1884-ம் ஆண்டு இதே நாளில்தான். ரஷ்ய எல்லையில் இருந்து சில கிலோ மீட்டர் கடலைக் கடந்தால், அலாஸ்காவை அடைந்துவிட முடியும் என்பதால், 17-ஆம் நூற்றாண்டிலே இந்தப் பிராந்தியத்தில் ரஷ்யர்கள் குடியேறியிருந்தனர்.
அவர்களிடமிருந்து 1867-ஆம் ஆண்டில் சுமார் சுமார் 72 லட்சம் டாலர்களுக்கு அலாஸ்காவை விலைக்கு வாங்கியது அமெரிக்கா. 1884-ம் ஆண்டு மே 17-ஆம் தேதி முதல் அமெரிக்காவின் மாவட்டமாகச் செயல்பட்டது அலாஸ்கா.
மே 17 1969: வெள்ளியை அடைந்தது சோவியத் விண்கலம்
சோவியத் ஒன்றியம் அனுப்பிய VENERA 6 விண்கலம் 1969-ஆம் ஆண்டு இதே நாளில்தான் சூரிய குடும்பத்தின் இரண்டாவது கோளான வெள்ளியின் தரைப்பகுதியை அடைந்தது.
ஏற்கெனவே வெனிரா என்ற பெயரில் சோவியத் ஒன்றியம் அனுப்பிய விண்கலங்கள் ஓரளவு வெற்றிபெற்றிருந்த நிலையில், வெனிரா 6 விண்கலம், சுமார் 51 நிமிடங்கள் வெள்ளியின் வளிமண்டலத்தில் மிதந்தபடி பூமிக்குத் தகவல்களை அனுப்பியது. சோவியத் ஒன்றிய ராணுவத்தின் முத்திரையையும், விளாதிமிர் லெனினின் அச்சையும் எடுத்துச் சென்ற இந்த விண்கலம் பூமியுடனான தொடர்பைத் துண்டித்துக் கொண்டதும், 1969-ம் ஆம் ஆண்டு இதே நாளில்தான்.
திருச்சியில் பிச்சையெடுக்க விடப்படும் வாடகை குழந்தைகள்: 7 பேர் கைது
திருச்சியில், குழந்தைகளை வாடகைக்கு எடுத்து பிச்சையெடுக்க பயன்படுத்திய 7 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில், வாடகைக் குழந்தைகள் மூலம் சிலர் பிச்சையெடுத்து வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவு பெண் காவலர்கள், சாதாரண உடையில் பேருந்து நிலையத்தை கண்காணித்தனர்.
இதில், நாகமங்கலம் பகுதியைச் சேர்ந்த 7 பெண்கள், வாடகைக்கு எடுத்து வரப்பட்ட 4 பச்சிளம் குழந்தைகளை கொண்டு பிச்சையெடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் 7 பேரையும் கைது செய்த காவல்துறையினர், திருச்சி கண்டோன்மெண்ட் காவல்நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
நாகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பெற்றோர்களே, பணத்துக்காக தங்களது குழந்தைகளை பிச்சையெடுக்க வாடகைக்கு விடுவது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
செல்போன் கதிர்வீச்சு குறித்து நாடாளுமன்றக் குழு கவலை
செல்போன் கோபுரங்களிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சின் அளவு குறித்து நாடாளுமன்றக் குழு கவலை தெரிவித்துள்ளது.சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கான இந்தக்குழு, செல்போன் கோபுரங்களில் இருந்து அதிகளவு மின்காந்த கதிர்வீச்சு வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில், நீதிமன்றங்கள் பிறப்பித்துள்ள உத்தரவுகளை நடைமுறைப்படுத்த சுற்றுச்சூழல் அமைச்சகம் நடவடிக்கை வேண்டும் என்றும் நாடாளுமன்றக் குழு வலியுறுத்தியுள்ளது.
பொதுத் தமிழ் மாதிரித் தேர்வு - 10
- 'தாயுமானவர் நினைவு இல்லம்' அமைந்துள்ள மாவட்டம் ?
- கன்னியாகுமரி
- நாகப்பட்டினம்
- ராமநாதபுரம்
- தூத்துக்குடி
- திருக்குறளை இலத்தீன் மொழியில்மொழிபெயர்த்தவர் யார் ?
- ஜி.யு.போப்
- போப் வெல்லஸ்லி
- கால்டுவெல்
- வீரமாமுனிவர்
- ஜி.யு.போப் திருவாசத்தை மொழி பெயர்த்த ஆண்டு ?
- 1900
- 1986
- 1886
- 1800
- "நாகியாது" இலக்கண குறிப்பு என்ன ?
- மயங்கொலிப் பிழை
- உருவகம்
- குற்றியலுகரம்
- குற்றியலிகரம்
- இளைஞர் இலக்கியம் - என்றநூலில் ஆசிரியர் யார் ?
- வாலி
- பா.விஜய்
- கண்ணதாசன்
- பாரதிதாசன்
- "தமிழுக்கு அமுதென்றுபேர் - அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்குநேர் " - எனப்பாடியவர் ?
- பாரதியார்
- பாரதிதாசன்
- கண்ணதாசன்
- வாணிதாசன்
- "கழறும் அவையஞ்சான் கல்வி இனிதே " - கழறும் என்ற சொல்லின் பொருள் என்ன ?
- பதட்டப்படும்
- அஞ்சும்
- பேசும்
- இடறும்
- நிகண்டுகளில் பழமையானது ?
- அஞ்சா நிகண்டு
- சதுரகாதி
- சூடாமணி நிகண்டு
- சேந்தன் திவாகரம்
- தமிழில் முதல் அகராதியை தொகுத்தவர் ?
- ஜி.யு.போப்
- கால்டுவெல்
- வீரமாமுனிவர்
- பாவாணர்
- திருவள்ளுவ மாலை நூலில் காணப்படும் பாடல்களின் எண்ணிக்கை ?
- 133
- 78
- 65
- 53
விடை- label நம் குடும்பம் NEWS ல் காணலாம்
பொதுத்தமிழ் மாதிரித் தேர்வு - 9 | ஏழாம் வகுப்பு
- கணித மேதை ராமானுஜம் பிறந்த மாவட்டம் ?
- திருநெல்வேலி
- கோயம்பத்தூர்
- ஈரோடு
- சென்னை
- 'ஆய்லர்' என்ற கணிதமேதை எந்தநாட்டைச் சார்ந்தவர் ?
- இங்கிலாந்து
- அமெரிக்கா
- ஜெர்மனி
- சுவிட்சர்லாந்து
- இராமானுஜம் எழுத்தராக பணியில் சேர்ந்தது
- துறைமுகத்தில்
- நீதிமன்றத்தில்
- பள்ளியில்
- பத்திரிக்கையில்
- "மாநகர்" - எவ்வகைச் சொல் ?
- வினைச்சொல்
- பெயர்ச்சொல்
- இடைச்சொல்
- உரிச்சொல்
- "கற்றது கைம் மண்ணளவு கல்லாது உலகளவென்று " - இந்த வரிகளுக்குச் சொந்தமானவர்யார் ?
- திருவள்ளுவர்
- கபிலர்
- புகழேந்தி
- ஒளவையார்
- "காடு" என்பது ஒரு
- காரணப்பெயர்
- இடுகுறிப்பெயர்
- மேற்கண்ட எதுவும் இல்லை
- திருவாரூர் நான்மணிமாலை - எழுதியவர் யார் ?
- சண்முக சிகாமணி
- பாரதியார்
- குமரகுருபரர்
- திரு.வி.க
- 'தென்னிந்தியாவின் ஏதென்ஸ்' - எனப் பெயர்பெற்ற தமிழக நகரம் எது ?
- சென்னை
- திருநெல்வேலி
- காஞ்சிபுரம்
- மதுரை
- மதுரையில் காணப்பட்ட ' அறுவை வீதி' என்பது _______
- தானியங்கள் விற்கும் வீதி
- இறைச்சி விற்கும் வீதி
- ஆடைகள் விற்கும்வீதி
- அந்தணர் வசிக்கும் வீதி
- மதுரை - என்ற சொல்லின் பொருள் என்ன ?
- தெய்வ
- பழமை
- பெருமை
- இனிமை
விடை- label நம் குடும்பம் NEWS ல் காணலாம்
பொதுத் தமிழ் மாதிரித் தேர்வு - 8 | ஏழாம் வகுப்பு
- திரு.வி.க பணியாற்றியது ?
- அரசு அலுவலராக
- கல்லூரி பேராசிரியராக
- தமிழ் ஆசிரியராக
- கணித ஆசிரியராக
- திரு.வி.க வின் பொதுமை வேட்டல் நூலின் மொத்தபாடல்களின் எண்ணிக்கை ?
- 1250
- 230
- 335
- 430
- "பொய்யாமை அன்ன புகழ் இல்லை எய்யாமை எல்லா அறமும் தரும்" இக்குறளில் 'எய்யாமை' என்பதன் பொருள் என்ன ?
- வருந்தாமல்
- இகழாமல்
- பழிக்காமல்
- பொய் கூறாமல்
- திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது ?
- 520
- 123
- 203
- 107
- "தமிழ்மொழி ஒரு வெள்ளித்தட்டு , திருக்குறள் அதில்வைக்கப்பட்டுள்ள தங்க ஆப்பிள் " என புகழ்ந்தவர் ?
- ஜி.யு.போப்
- கால்டுவெல்
- லேம்டன்
- கிரெளல்
- "கோவில் பட்டி" என்றஊர்பெயர் எந்த வகை நிலத்தைச்சார்ந்தது ?
- குறிஞ்சி
- முல்லை
- மருதம்
- நெய்தல்
- மதுரை -ஊரின் பெயர் கல்வெட்டுகளில் எவ்வாறு உள்ளது ?
- மதுரா
- மதிலரை
- மதிரை
- மாமதுரப்பட்டினம்
- புறநானூறு -சார்ந்துள்ள நூல்தொகுப்பு ?
- புறநூறு
- பதினெண் கீழ்கணக்கு
- பத்துப்பாட்டு
- எட்டுத்தொகை
- 'நோய்க்கு மருந்து இலக்கியம்' - எனக் கூறியவர்யார்?
- பாரதியார்
- கண்ணதாசன்
- மீனாட்சி சுந்தரம் பிள்ளை
- உ.வே.சாமிநாதய்யர்
- 'திரிகடுகம்' என்ற நூலின் ஆசிரியர் யார் ?
- ஒட்டக்கூத்தர்
- நக்கீரர்
- நச்சினார்க்கினியர்
- நல்லாதனார்
விடை- label நம் குடும்பம் NEWS ல் காணலாம்
பொதுத் தமிழ் மாதிரித் தேர்வு - 7 | ஆறாம் வகுப்பு
- ஜீவ காருண்ய ஒழுக்கம் - நூலின் ஆசிரியர் யார் ?
- திரு.வி.க
- சங்கராச்சாரியார்
- இராமலிங்க அடிகளார்
- மேற்கண்ட எவருமில்லை
- திருக்குறளில் "ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்" என்ற அடியில் குறிப்பிடப்பட்டுள்ள 'ஆர்வலர்' என்றவார்த்தையின் பொருள் என்ன ?
- ஆர்வமுடையவர்
- தோழர்
- உறவினர்
- அன்புடையவர்
- 2013 - ஆங்கில வருடத்திற்கு சமமான திருவள்ளுவர் ஆண்டு எது ?
- 2044
- 2041
- 2034
- 2013
- "என் சரிதம்" - யாருடைய வாழ்க்கை வரலாறு ?
- கண்ணதாசன்
- ஜி.யு.போப்
- தேவநேய பாவாணர்
- உ.வே.சாமிநாதய்யர்
- நாலடியார் - எவ்வகை நூல்தொகுப்பைசார்ந்தது ?
- பத்துப் பாட்டு
- எட்டுத்தொகை
- பதினெண் மேல்கணக்கு
- பதினெண் கீழ்கணக்கு
- "சாதி இரண்டொழிய வேறில்லை" - எனப்பாடியவர் ?
- திரு.வி.க
- பாரதியார்
- பாரதிதாசன்
- கண்ணதாசன்
- உதயமார்த்தாண்டம் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளமாவட்டம் எது ?
- கன்னியாகுமரி
- திருநெல்வேலி
- திருவாரூர்
- தஞ்சாவூர்
- நான்மணிக்கடிகை நூலின்ஆசிரியர் யார் ?
- ஒளவையார்
- கபிலர்
- சீத்தலை சாத்தனார்
- விளம்பி நாகனார்
- "தகைசால்" என்பதன் பொருள் என்ன ?
- கொடைகளில் சிறந்த
- ஈகையில் சிறந்த
- பண்பில் சிறந்த
- பொறுமையுடைய
- "நாடாகு ஒன்றோ, காடாகு ஒன்றோ" - என்கிற புறநானூற்று பாடலைப் பாடியவர் யார்?
- மாங்குடி மருதனார்
- கபிலர்
- பிசிராந்தையார்
- ஒளவையார்
விடை- label நம் குடும்பம் NEWS ல் காணலாம்
TNPSC பொதுத் தமிழ் மாதிரித் தேர்வு-6
- திருமுருகாற்றுப்படை-யின் வேறு பெயர் என்ன ?
- பெரும்பாணாற்றுப்படை
- பெருங்குறிச்சி
- புலவராற்றுப் படை
- கூத்தராற்றுப்படை
- பத்துப்பாட்டுநூல்களில் புறநூல்கள் எத்தனை ?
- 3
- 4
- 5
- 6
- பத்துப்பாட்டு நூல்களில் அகமா, புறமா என்ற கருத்து வேறுபாடு தோற்றுவித்த நூல் எது ?
- நெடுநல்வாடை
- மதுரைக்காஞ்சி
- சிறுபாணாற்றுப்படை
- மலைபடுகடாம்
- ஏழின்கிழவன் - என சங்க இலக்கியத்தில் அழைக்கப்படுபவர் யார் ?
- ஏழுஊர்களின் தலைவன்
- குடும்பத்தில் வயதான தந்தை
- ஏழு குழந்தைகளின் தகப்பன்
- இசைக்கலைஞர்களின் தலைவன்
- சிறுபாணாற்றுப்படை நூலின் ஆசிரியர் யார் ?
- கபிலர்
- முடத்துக்கண்ணியார்
- சீத்தலை சாத்தனார்
- நல்லூர் நத்தத்தனார்
- சிறுபாணாற்றுப்படையில் 'ஓய்மாநாடு' என அழைக்கப்படுவது ?
- விழுப்புரம்
- திண்டிவனம்
- திருவள்ளூர்
- வேலூர்
- மயிலுக்கு போர்வை தந்த மன்னன் யார் ?
- பாரி
- அதியமான்
- பேகன்
- ஓரி
- ஈர நன்மொழி இரவலர்க்கு ஈத்துக் காத்தவன் -யார்?
- பாரி
- ஓரி
- பேகன்
- காரி
- நாகம் கொடுத்தஆடையை சிவனுக்கு கொடுத்தவன்யார்?
- காரி
- ஓரி
- ஆய்
- நள்ளி
- நடைப்பரிகாரம் முட்டாது கொடுத்தவன் யார்?
- பாரி
- காரி
- ஆய்
- நள்ளி
விடை- label நம் குடும்பம் NEWS ல் காணலாம்
TNPSC பொதுத் தமிழ் மாதிரித் தேர்வு 04/05/2015 - 1,2,3,4,5 விடை
TNPSC பொதுத் தமிழ் மாதிரித் தேர்வு-1
- c
- d
- a
- d
- d
- b
- c
- d
- c
- d
- c
- d
- a
- d
- d
- b
- c
- d
- c
- d
- c
- d
- a
- d
- d
- b
- c
- d
- c
- d
TNPSC பொதுத் தமிழ் மாதிரித் தேர்வு-4
- c
- d
- a
- d
- d
- b
- c
- d
- c
- d
- c
- d
- a
- d
- d
- b
- c
- d
- c
- d
இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்காவில் MTTS பணிகள்
இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்கா நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 15 Member Technical Support Staff (MTTS) ES-VI மற்றும் ES-V பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 15
1. Member Technical Support Staff (ES-VI) - 01
2. Member Technical Support Staff (ES-V) - 14
தகுதி: கணினியில், ஐடி, எலக்ட்ரானிக்ஸ் போன்ற ஏதாவதொரு துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. Software Technology Parks of India" Noida என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.
எஸ்சி., எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Senior Administrative Officer,
Software Technology Parks of India,
Ganga Software Technology Complex,
Sector-29, Noida 201303
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 15.06.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://recruitment.stpi.in/noida/Notice.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
இந்திய ஏற்றுமதி நிறுவனத்தில் 49 பணியிடங்கள்
இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களை தரம் நிர்ணயம் செய்து சான்றிதழ் அளிக்க 1963-ஆம் ஆண்டு புதுதில்லியை தலைமையிடமாகக் கொண்டு, இந்திய ஏற்றுமதி ஆய்வு கவுன்சில் அமைக்கப்பட்டது. இந்த மையத்தின் மும்பை, கொச்சி, சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட 30 கிளை அலுவலகங்கள் மற்றும் பரிசோதனை மையங்களில் காலியாக உள்ள பல்வேறு இடங்களை நிரப்ப தகுதியும் விரப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: உதவி இயக்குநர் (தொழில்நுட்பம்):
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400.
பணி: டெக்னிக்கல் ஆபீசர்
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
பணி: ஜூனியர் சயின்டிபிக் அசிஸ்டென்ட்
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
பணி: லேபரட்டரி அசிஸ்டென்ட்: (கிரேடு – 1)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400.
பணி: லேபரட்டரி அசிஸ்டென்ட்: (கிரேடு – 2)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900.
பணி: உதவி இயக்குநர்
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400.
பணி: பிரிவு அலுவலர்
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600.
பணி: அக்கவுன்ட்ஸ் ஆபீசர்
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 -34,800 + தர ஊதியம் ரூ.4,600.
பணி: ஆபீஸ் அசிஸ்டென்ட்
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
பணி: அக்கவுன்டென்ட்
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
பணி: கிளார்க் கிரேடு – 1
காலியிடங்கள்: 06
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400.
பணி: ஜூனியர் இந்தி டிரான்ஸ் லேட்டர்
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400.
பணி: ஸ்டெனோகிராபர் கிரேடு – 1
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
பணி: ஸ்டெனோகிராபர் கிரேடு – 2
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400.
பணி: கேர் டேக்கர் கிரேடு – 1
காலியிடங்கள் 02
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
பணி: ஸ்டோர் கீப்பர் கிரேடு – 2
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400.
பணி: கிளார்க் கிரேடு – 2
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900.
பணி: சீனியர் லேப் அட்டெண்டென்ட்
காலியிடங்கள் 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900.
பணி: லேபரட்டரி அட்டெண்டென்ட்
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை நெட்பேங்கிங் முறையில் செலுத்தவும். பெண்கள், எஸ்சி., எஸ்டி., மாற்றுத்திறனாளிகள், பெண்கள் கட்டணம் செலுத்த வேண்டாம்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.eicindia.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.05.2015.
பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 25.05.2015.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Export Inspection
Council of India,
3rd Floor, NewDelhi YMCA Cultural Centre Building,
1, Jai Singh Road,
NEWDELHI- 110001.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.eicindia.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
Subscribe to:
Posts (Atom)