மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உலக சாம்பியன்ஷிப் வெல்டர்வெயிட் குத்துச்சண்டை போட்டியில் அமெரிக்க வீரர் ஃப்ளோயிட் மேவெதர் சாம்பியன் பட்டம் வென்றார்.
இந்த நூற்றாண்டின் சிறந்த போட்டி என வர்ணிக்கப்பட்ட, பிலிப்பைன்ஸ் வீரர் மேனி பேகியோ-வுடனான விறுவிறுப்பு நிறைந்த போட்டியில் மேவெதர் வெற்றியை வசமாக்கினார். அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற சவால் நிறைந்த பத்து சுற்றுகளின் முடிவில் மேவெதர் வெற்றி பெற்றதாக நடுவர்கள் அறிவித்தனர்.
இதன் மூலம் , 38 வயதாகும் மேவெதர் வர்த்தக ரீதியிலான குத்துச்சண்டை போட்டியில் தொடர்ந்து 48-ஆவது வெற்றியை ஈட்டினார். வர்த்தக ரீதியிலான போட்டிகளில் இதுவரை தோல்வியே சந்திக்காதவர் என்ற பெருமையை தக்க வைத்துக் கொண்ட மேவெதருக்கு இந்திய மதிப்பில், ஏறக்குறைய ஆயிரத்து 200 கோடி ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. மேனி பேகியோ-வுக்கு சுமார் 700 கோடி ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment