மே 17 1884: அமெரிக்காவுடன் இணைந்தது அலாஸ்கா
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதக் குடியேற்றங்களைக் கண்ட அலாஸ்கா, அமெரிக்காவின் பிராந்தியமாக இணைந்தது 1884-ம் ஆண்டு இதே நாளில்தான். ரஷ்ய எல்லையில் இருந்து சில கிலோ மீட்டர் கடலைக் கடந்தால், அலாஸ்காவை அடைந்துவிட முடியும் என்பதால், 17-ஆம் நூற்றாண்டிலே இந்தப் பிராந்தியத்தில் ரஷ்யர்கள் குடியேறியிருந்தனர்.
அவர்களிடமிருந்து 1867-ஆம் ஆண்டில் சுமார் சுமார் 72 லட்சம் டாலர்களுக்கு அலாஸ்காவை விலைக்கு வாங்கியது அமெரிக்கா. 1884-ம் ஆண்டு மே 17-ஆம் தேதி முதல் அமெரிக்காவின் மாவட்டமாகச் செயல்பட்டது அலாஸ்கா.
மே 17 1969: வெள்ளியை அடைந்தது சோவியத் விண்கலம்
சோவியத் ஒன்றியம் அனுப்பிய VENERA 6 விண்கலம் 1969-ஆம் ஆண்டு இதே நாளில்தான் சூரிய குடும்பத்தின் இரண்டாவது கோளான வெள்ளியின் தரைப்பகுதியை அடைந்தது.
ஏற்கெனவே வெனிரா என்ற பெயரில் சோவியத் ஒன்றியம் அனுப்பிய விண்கலங்கள் ஓரளவு வெற்றிபெற்றிருந்த நிலையில், வெனிரா 6 விண்கலம், சுமார் 51 நிமிடங்கள் வெள்ளியின் வளிமண்டலத்தில் மிதந்தபடி பூமிக்குத் தகவல்களை அனுப்பியது. சோவியத் ஒன்றிய ராணுவத்தின் முத்திரையையும், விளாதிமிர் லெனினின் அச்சையும் எடுத்துச் சென்ற இந்த விண்கலம் பூமியுடனான தொடர்பைத் துண்டித்துக் கொண்டதும், 1969-ம் ஆம் ஆண்டு இதே நாளில்தான்.
No comments:
Post a Comment