TRB,TNTET,TNPSC online coching

Search This Blog

NEWS

https://trb-tntet-tnpsc.blogspot.in/வழங்கும் இலவச இணையதள பயிற்சிக்கு உங்களை வரவேற்கிறோம்.தன்னம்பிக்கை, விடா முயற்சி , கடின உழைப்பு. எந்த சோதனைகள் வந்தாலும் உங்கள் இலட்சியத்தை விட்டு விடாதீர்கள். "சரியான முயற்சியும் பயிற்சியும் இருந்தால் உங்களால் முடியாத ஒன்றுமே இல்லை" என்ற நம்பிக்கை உங்கள் ஒவ்வொருவரின் மனதிலும் நிறைந்திருக்க வேண்டும். அதற்காக எங்கள் இணைய தளத்தின் மூலம் எங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வோம்.பயிற்சி நிறுவனங்களுக்கு சென்று பயிற்சி பெற இயலாத வேலைதேடும் இளைஞர்கள், பணிபுரிபவர்கள், இல்லத்தரசிகள் தங்களது அரசு வேலை கனவுகளை நனவாக்குவதற்காகவே இந்த இணையதளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. TET ன் புதிய பாடத்திட்டத்திற்கேற்ப ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட பாடப்பகுதிகளில் வாரத்தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த வாரத்தேர்வின் முடிவுகள் உங்கள் பெயருடன் இந்த இணையதளத்தில் வெளியிடவும் முடிவு செய்துள்ளோம்.

Wednesday, September 16, 2015

நீங்கள் எந்த அளவு அதிர்ஷடசாலி..??

நீங்கள் எந்த அளவு அதிர்ஷடசாலி..??
இதை படிங்க..??


இதைப் படிப்பதால்.. உங்கள் வாழ்க்கை முறை.. கவலைகள் பழக்க வழக்கங்களில் கூட மாற்றம் ஏற்படலாம்..!!

* உண்ண உணவும்.. உடுத்த உடையும்.. வசிக்க இடமும் உனக்கு இருந்தால்.. உலகில் உள்ள 75% மக்களை விட.. நீ வசதி பெற்றிருக்கிறாய்..!!

* வங்கியில் பணமிருந்தால்.. அவ்வாறு உள்ள 8% பணக்காரர்களுள்.. நீயும் ஒருவன்..!! உலகில் உள்ள 80% மக்களுக்கு வங்கி கணக்கே இல்லை..!!

* உன்னிடம் கணிப்பொறி இருந்தால்.. நீ அவ்வாறு வாய்ப்பு பெற்ற.. 1% மனிதர்களுள் ஒருவன்..!!
நினைத்த நேரத்தில்.. நினைத்த நபருடன் மொபைலில் உன்னால் பேச முடிந்தால்.. அவ்வாறு வாய்ப்பே இல்லாமல் இந்த உலகில் இருக்கும்.. 175 கோடி மக்களை விட நீ மேலானவன்..!!

*நோயின்றி காலையில்.. புத்துணர்வுடன் நீ எழுந்தால்.. அந்த வாய்ப்பற்று இரவு படுக்கையிலையே.. உயிர் துறந்த பலரை விட.. நீ பாக்கியசாலி..!!

* பார்வையும்,, செவித் திறன்,, வாய் பேசாமை.. உள்ளிட்ட எந்த குறைபாடுகளும்.. இல்லாது நீ இருந்தால்.. அவ்வாறு உள்ள உலகில் உள்ள 20 கோடி மக்களை விட நீ நல்ல நிலையில் இருக்கிறாய்..!!

* போர்,, பட்டினி,, சிறைத்தண்டனை போன்ற சித்ரவதையில் நீ சிக்காமல் இருந்தால்.. உலகில் உள்ள 70 கோடி மக்களுக்கு கிடைக்காத நல்ல வாழ்க்கை அமைந்துள்ளது என அறிந்து கொள்..!!

*கொடுமைகளுக்கு உள்ளாகாமல்.. நீ விரும்பும் தெய்வத்தை தொழ முடிந்தால்.. உலகில் உள்ள 300 கோடி மக்களுக்கு கிடைக்காத சலுகையை நீ பெற்றுள்ளாய்..!!

* உன் பெற்றோரை பிரியாமல் அவர்களுடன் இருந்தால்.. நீ துன்பத்தை அறியாதவன் என்பதை புரிந்து கொள்..!!

* தாகம் எடுத்தால் குடிப்பதற்கு.. உங்களுக்கு தண்ணீர் கிடைக்கிறதா..?
அப்படியெனில் நீங்கள் கொடுத்து வைத்தவர் தான்..!!
ஏனெனில் உலகம் முழுதும்.. சுமார் 100 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு.. பாதுகாப்பான தண்ணீர் குடிப்பதற்கு இல்லை..!!

* கல்வி அறிவு பெற்று.. இந்த செய்தியை உன்னால் படிக்க முடிந்தால்.. அவ்வாறு செய்ய இயலாத 80 கோடி பேர்களுக்கு கிடைக்காத கல்வியை நீ பெற்றுள்ளாய்..!!
உலக அளவில் எழுத படிக்க தெரியாத.. மக்களின் எண்ணிக்கை மட்டுமே 80 கோடிக்கும் மேல்..!!

* இணையத்தில் இந்த செய்தியை.. உன்னால் படிக்க முடிந்தால்.. அது கிடைக்காத 300 கோடி மக்களை விட நீ மேலானவன்..!!

* உன்னால் தலை நிமிர்ந்து நின்று சிரிக்க முடியுமானால்.. அவ்வாறு செய்ய இயலாத அளவுக்கு தைரியமும்.. நம்பிக்கையும் இல்லாதவர்களை விட.. நீ கொடுத்து வைத்தவன்..!!

* நீங்கள் அனுபவித்து வரும்.. வசதிகளையும்.. தொழில்நுட்பத்தையும் அனுபவிக்க இயலாமல்.. ஏன் அது பற்றிய அறிவு கூட இல்லாமல்.. கோடிக்கணக்கானோர் இவ்வுலகில் இருக்க.. ஆண்டவன் இவ்வளவு விசயம் உங்களுக்கு.. கொடுத்திருக்கும் போது.. நீங்கள் அதிர்ஷடசாலி இல்லையா பின்ன..??

* நீங்கள் அதிர்ஷடசாலி தான்..!!
வீண் கவலைகளை விட்டு.. அந்த கவலைகளை காரணம் காட்டி குடும்பத்தில் குழப்பங்கள்.. போதை பொருட்கள்.. என்பவற்றை விட்டு.. விட்டு
நான் அதிர்ஷடசாலி என்ற தைரியத்தோடு.. இயன்றவரை மற்றவர்களுக்கு உங்களால் முடிந்த வரை உதவுங்கள்..!!
உங்கள் வாழ்க்கை மேலும் அழகாகும்..!!

No comments: