TRB,TNTET,TNPSC online coching

Search This Blog

NEWS

https://trb-tntet-tnpsc.blogspot.in/வழங்கும் இலவச இணையதள பயிற்சிக்கு உங்களை வரவேற்கிறோம்.தன்னம்பிக்கை, விடா முயற்சி , கடின உழைப்பு. எந்த சோதனைகள் வந்தாலும் உங்கள் இலட்சியத்தை விட்டு விடாதீர்கள். "சரியான முயற்சியும் பயிற்சியும் இருந்தால் உங்களால் முடியாத ஒன்றுமே இல்லை" என்ற நம்பிக்கை உங்கள் ஒவ்வொருவரின் மனதிலும் நிறைந்திருக்க வேண்டும். அதற்காக எங்கள் இணைய தளத்தின் மூலம் எங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வோம்.பயிற்சி நிறுவனங்களுக்கு சென்று பயிற்சி பெற இயலாத வேலைதேடும் இளைஞர்கள், பணிபுரிபவர்கள், இல்லத்தரசிகள் தங்களது அரசு வேலை கனவுகளை நனவாக்குவதற்காகவே இந்த இணையதளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. TET ன் புதிய பாடத்திட்டத்திற்கேற்ப ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட பாடப்பகுதிகளில் வாரத்தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த வாரத்தேர்வின் முடிவுகள் உங்கள் பெயருடன் இந்த இணையதளத்தில் வெளியிடவும் முடிவு செய்துள்ளோம்.

Wednesday, September 16, 2015

விவசாயத்தினைத் துறந்த நாடும், விவசாயியை மறந்த நாடும் உருப்படவே முடியாது

நிலங்கள் வீடு ஆயின !
களங்கள் காடு ஆயின !!

விவசாயி விண்ணோடு போகிறான் !
விவசாயம் மண்ணோடு போகிறது.....!!

உரிமைக்காக பிச்சை எடுத்தோம்,
இருநூறு ஆண்டு !
இனி, உணவிற்காக பிச்சை எடுக்கப்போகிறோம் !! எத்தனை ஆண்டுகளுக்கோ ?.....

பல கிராமங்களில் பலரைக் காணோம் !  
பல இடங்களில் கிராமங்களைக் காணோம் !! ����
பூமி, யாரையும் கைவிடாதத் தாயானவள், இன்று
யாவராலும் கைவிடப்பட்ட சேயானாள்.....

சிற்பங்கள் அழிந்துவிட்டால்,
கோயிலுக்கு சிறப்பில்லை !
சிற்பிகளே அழிந்துவிட்டால்,
கோயிலுக்கே பிறப்பில்லை.....!!

விவசாயி அழிந்துவிட்டால்,
உண்ணக்கூட வழியில்லை !
விவசாயம் அழிந்துவிட்டால்,
வருந்தியப் பின் பயனில்லை.....!!

நிதிநிலை அறிக்கையில்,
அரசின் அறிவின்மை !
எதிரி அழிய எண்பதாயிரம் கோடி !!
நாம் வாழ நாலாயிரம் கோடி.....!!!

கரும் மேகங்கள் காணவில்லை !
கால் நடைகள் பேனப்படவில்லை !!
நாளை வரும் பசி போக்க,
நாகரிகம் உதவவில்லை.....!!!

ஏறு போன நிலங்கள் !
இன்று கூறு போன மனைகள் !!
பருப்பு கொடுத்த சோலைகள், இன்று !
செருப்புத் தொழிற்சாலைகள்.....!!  ��

நிலத்தை விற்ற பணத்தை போட்டால்,
வங்கி பணம் வட்டி தரும் !
வாய்ப் பசிக்கு ரொட்டி தருமா ?.....
பணத்தை மட்டும் அறுவடை
பண்ண முடிந்தால், அம்பானியும்
அரசியல் வாதியும் ஆடு மாடு
மேய்த்து விவசாயிகளாகி இருப்பார்கள்.....

iPod ஐயும் Android ஐயும் தின்னமுடியாது !
Windows ஐயும் Vista வையும் உண்ண முடியாது !
மதுவை மட்டும் தாகத்திற்கு குடிக்க முடியாது !
பசிக்காதது போல் பல நாட்கள் நடிக்க முடியாது.....
விஞ்ஞான வளர்ச்சியில, வசதிகள் வரும்.
வயிறு நிரம்புமா.....?

விவசாயத்தினைத் துறந்த நாடும்,
விவசாயியை மறந்த நாடும்
உருப்படவே முடியாது -
- உண்மை இன்று புரியாது.

விவசாயத்தினை நேசித்தால் பகிருங்கள்......�

No comments: