உணவுக்கு அதிகம் பயன்படும் கீரைகளில், முளைக்கீரை முக்கியமானதாகும். அதிக மருத்துவ குணம் கொண்டது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தாராளமாக இக்கீரை கிடைக்கும்.
முளைக்கீரையை விதைத்த, 45 நாட்களில் அறுவடை செய்து விட வேண்டும். முளைக்கீரை உணவுக்கு நல்லது. அதற்கு மேல் வளர்ந்தால் கீரை முதிர்ந்து தண்டு, நார் பாய்ந்துவிடும்.

முளைக்கீரையில் வைட்டமின்கள், தாது உப்புக்கள் அதிகம் உள்ளன. குறிப்பாக, சுண்ணாம்புச்சத்து நிறைய இருக்கிறது. மலச்சிக்கல் உள்ளவர்கள் இக்கீரையை தொடர்ந்து பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். முளைக்கீரையை பருப்புடன் நன்கு வேக வைத்து, மசித்து, குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
முளைக்கீரை உணவுக்குச் சுவையூட்டுவதுடன், பசியையும் தூண்டும். முளைக்கீரையை நன்கு கழுவி சிறிது வெங்காயம், புளி, பச்சை மிளகாய், உப்பு ஆகியவை சேர்த்து வேக வைத்து, கடைந்து, உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் உடல் சூடு, ரத்தக்கொதிப்பு, பித்த எரிச்சல் ஆகிய நோய்கள் குணமாகும். அதோடு கண்ணும் குளிர்ச்சியடையும்.
முளைக் கீரையைத் தொடர்ந்து சாப்பிடுவதால், சொறி, சிரங்கு முதலிய குணமாகும். இந்த கீரை வெப்ப சுரத்தைத் தணிக்கும்.

No comments:
Post a Comment