TRB,TNTET,TNPSC online coching

Search This Blog

NEWS

https://trb-tntet-tnpsc.blogspot.in/வழங்கும் இலவச இணையதள பயிற்சிக்கு உங்களை வரவேற்கிறோம்.தன்னம்பிக்கை, விடா முயற்சி , கடின உழைப்பு. எந்த சோதனைகள் வந்தாலும் உங்கள் இலட்சியத்தை விட்டு விடாதீர்கள். "சரியான முயற்சியும் பயிற்சியும் இருந்தால் உங்களால் முடியாத ஒன்றுமே இல்லை" என்ற நம்பிக்கை உங்கள் ஒவ்வொருவரின் மனதிலும் நிறைந்திருக்க வேண்டும். அதற்காக எங்கள் இணைய தளத்தின் மூலம் எங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வோம்.பயிற்சி நிறுவனங்களுக்கு சென்று பயிற்சி பெற இயலாத வேலைதேடும் இளைஞர்கள், பணிபுரிபவர்கள், இல்லத்தரசிகள் தங்களது அரசு வேலை கனவுகளை நனவாக்குவதற்காகவே இந்த இணையதளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. TET ன் புதிய பாடத்திட்டத்திற்கேற்ப ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட பாடப்பகுதிகளில் வாரத்தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த வாரத்தேர்வின் முடிவுகள் உங்கள் பெயருடன் இந்த இணையதளத்தில் வெளியிடவும் முடிவு செய்துள்ளோம்.

Saturday, July 7, 2018

இந்த 8 உணவு பழக்க வழக்கங்களை கடைபிடிப்பதால் உங்களது உடல் எப்பவும் ஆரோக்கியமாக இருக்கும்

இந்த 8 உணவு பழக்க வழக்கங்களை கடைபிடிப்பதால் உங்களது உடல் எப்பவும் ஆரோக்கியமாக இருக்கும்.
1. பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்… கண் நோய்கள் நெருங்காது.
2. தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது… உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.
3. மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.
4. ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்பர்ட்.
5. பூண்டு சாப்பிட்டீர்களென்றால்… உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.
6. சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம், கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
7. பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.
8. சுண்டைக்காயை உணவில் சேர்த்தால் நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.

Saturday, May 12, 2018

உலகப் பார்வை: செவ்வாய் கிரகத்துக்கு ஹெலிகாப்டர் அனுப்பும் நாசா

செவ்வாய் கிரகத்துக்கு ஹெலிகாப்டர் அனுப்பும் நாசா
செவ்வாய் கிரகத்துக்கு ஹெலிகாப்டர் அனுப்பும் நாசாபடத்தின் காப்புரிமைNASA/JPL
அமெரிக்க விண்வெளி மையமான நாசா, முதல் கனரக விமான சோதனையாக ஹெலிகாப்டரை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்புகிறது.
ஹெலிகாப்டரை சிறிய அளவில் வடிவமைத்து, அதன் எடையை 1.8 கிலோவாக குறைக்க வடிவமைப்பாளர்கள் குழு 4 ஆண்டுகள் உழைத்தது.
பூமியை விட 100 மடங்கு மெலிதான செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தில் பறக்க உகந்ததாக இந்த ஹெலிகாப்டரை அவர்கள் வடிவமைத்துள்ளனர்.
நமது எதிர்கால அறிவியல், கண்டுபிடிப்பு மற்றும் செவ்வாய் கிரக ஆராய்ச்சிகளை உறுதி செய்ய இந்த ஹெலிகாப்டர் உதவ போகிறது என்று நாசா நிர்வாகி ஜிம் கூறியுள்ளார்.
ட்ரோனுக்கு பதிலாக பறக்கவிருக்கும் சிறிய ஹெலிகாப்டருக்கு விமானி கிடையாது.

Thursday, March 8, 2018

கைவினைஞர்களின் உற்பத்தி மேம்படுத்தப்படும்.. கலைவாணர் அரங்கங்கத்தில் முதல்வர் பழனிச்சாமி பேச்சு

சென்னை: தமிழகத்தில் கைவினைஞர்களின் உற்பத்தி மேம்படுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து இருக்கிறார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் கைவினைஞர்கள் தின விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கைவினைஞர்கள் குறித்து பேசினார். அதில் ''கைவினைப்பொருள்களின் உற்பத்தி மேம்படுத்தப்படும். அதேபோல் தமிழகத்தில் இருக்கும் கைவினைஞர்களின் திறன் பயிற்சிகளின் மூலம் மேம்படுத்தப்படும்'' என்று குறிப்பிட்டார். மேலும் ''சிங்கப்பூர், மலேசியா, ஆஸி.க்கு தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும். பூம்புகாரில் இருக்கும் உற்பத்தி மையங்களில் இருந்து இந்த ஏற்றுமதி நடைபெறும்'' என்றார். மேலும் ''தமிழகத்தில் வருடா வருடம் 247 கைவினைஞர்களில் 7 பேருக்கு சிறந்த விருது வழங்கபடுகிறது. இதில் எப்போதும் தமிழகம் முதல் இடம் வகித்து வருகிறது'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

கர்ப்பிணி பெண் உஷா உயிரிழப்பு சம்பவத்திற்கு, ஐகோர்ட் தலைமை நீதிபதி கடும் கண்டனம்

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள சூலமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா என்ற தர்மராஜ் (வயது 40). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணம்  வசூலிப்பவராக  வேலை பார்த்து  வருகிறார்.  இவரது மனைவி உஷா (36). கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். கடந்த  3  மாதங்களுக்கு முன்னர்தான் உஷா கர்ப்பம் அடைந்தார்.  நேற்று  இரவு பணி முடிந்து வீடு திரும்பிய ராஜா  தனது  மனைவியை திருச்சியில் உள்ள ஒரு தனி யார்  மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.

அவர்கள் இரவு 7 மணியளவில் திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள துவாக்குடி  சுங்கச்சாவடி அருகே வந்தனர். அப்போது அங்கு பணியில் இருந்த  போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்  காமராஜ் ராஜாவின் வாகனத்தை மறித்து ஏன் ஹெல்மெட் அணியவில்லை என்று கேட்டார். ஆஸ்பத்திரிக்கு செல்லும் அவசரத்தில் ஹெல்மெட் அணியவில்லை என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

ஆனால் அவரை மற்றொரு போலீஸ்காரருடன் துரத்தி சென்ற இன்ஸ்பெக்டர் காமராஜ், பெல் கணேசா ரவுண்டானா அருகே ராஜாவின் மோட்டார் சைக்கிளை எட்டி உதைத்தார். இதில் நிலை தடுமாறிய ராஜா நடுரோட்டில் மனைவியுடன் கீழே விழுந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த வேன் உஷா மீது மோதியது.  இதில் உஷாவுக்கு வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டது. அத்துடன் ரத்தப்போக்கும் அதிகமாகி   நடுரோட்டில் உயிருக்கு போராடினார். காதிலிருந்தும் ரத்தம் வழிந்தது. உடனடியாக ராஜா மற்றும் உஷாவை  108  ஆம்புலன்சு மூலம் துவாக்குடியில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே உஷா பரிதாபமாக இறந்தார்.

அனைவரையும் அதிர்ச்சியடைய செய்த இந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் காட்டுத்தீ  போல பரவியது. இதனால் ஆயிரகணக்கானவர்கள் கூடி சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களை அப்புறப்படுத்த முயன்றும் முடியவில்லை.

எனவே போலீசார் பொதுமக்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கானோர் நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த தடியடியில் 50-க்கும் மேற்பட்டோர்  மண்டை உடைந்து காயம் அடைந்தனர். மேலும்  போலீஸ்  ஜீப் உள்பட 30-க்கும் மேற்பட்ட வாகனங்கள் உடைத்து சேதப்படுத்தப்பட்டன. வாகனங்களை சேதப்படுத்தியதாக  சிலரை  போலீசார் பிடித்து சென்றனர். 15 பேர் மீது வழக்குப்பதிவும் செய்துள்ளனர்.   

நள்ளிரவு 12 மணி வரை நீடித்த  இந்த  போராட்டம் பின்னர் சிறிது சிறிதாக விலக்கி கொள்ளப்பட்டது. 

இதற்கிடையே கர்ப்பிணி பெண்  உஷாவின் சாவுக்கு காரணமான இன்ஸ்பெக்டர் காமராஜ் கைது செய்யப்பட்டு  திருச்சி  மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

திருவெறும்பூரில் பெண் உஷா உயிரிழப்பு சம்பவம் பற்றி நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் அஷ்வதாமன், டிராபிக் ராமசாமி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர்.

அப்போது  கர்ப்பிணி பெண் உஷா உயிரிழப்பு சம்பவத்திற்கு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். போலீஸாரின் நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது, சட்டவிரோதமான செயல். திருவெறும்பூர் சம்பவம் கிரிமினல் குற்றத்துக்கு சமமானது என கூறி உள்ளார்

9.5 டன் எடை.. 2 வாரத்தில் பூமியை தாக்கும்.. மிரள வைக்கும் சீனாவின் ஸ்பேஸ் ஸ்டேஷன்!

பெய்ஜிங்: சீனாவின் ஸ்பேஸ் ஸ்டேஷனான டியாங்கோங்-1 பூமியின் மீது இன்னும் இரண்டு வாரங்களில் மோத இருக்கிறது என அந்நாட்டு விண்வெளித் துறை தெரிவித்துள்ளது. சீனா அனுப்பிய முதல் ஸ்பேஸ் ஸ்டேஷன் இதுதான் என்று கூறப்பட்டு இருக்கிறது. இது விண்வெளியில் நிரந்தரமாக ஆராய்ச்சி செய்ய அனுப்பப்பட்டது. ஆனால் இந்த ஸ்பேஸ் ஸ்டேஷன் சில மாதங்களுக்கு முன் சீனாவின் தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டது. இதற்கான காரணமோ, ஏன் வேலை செய்யவில்லை என்றோ இன்னும் கண்டுபிக்கப்படவில்லை. பெரிது ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு சவால் விடும் வகையில் பெரிய அளவில் இந்த ஆராய்ச்சி நிலையம் இருந்தது. இதன் பெயரின் அர்த்தம் ''சொர்கத்தில் ஒரு பேலஸ்'' என்பதாகும். தனது கட்டுப்பாட்டை இழந்துள்ள இந்த விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை எவ்வளவு முயன்றும் நிறுத்த முடியவில்லை. இதன் எடை 9.5 டன் ஆகும். எப்போது சில மாதங்களுக்கு முன்பு இது மார்ச், இல்லை ஏப்ரல் மாதங்களில் விழும் என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது சரியான தேதி கூறப்பட்டுள்ளது. அதன்படி மார்ச் 23ல் இருந்து ஏப்ரல் 9ம் தேதிக்குள் எதோ ஒரு நாளில் கண்டிப்பாக இது பூமியை தாக்கும் என்று கூறப்பட்டு இருக்கிறது. எந்த பகுதி இந்த ஸ்பேஸ் ஸ்டேஷன் பிரான்ஸ், கிரிஸ், ஸ்பெயின், போர்ச்சுகல், அமெரிக்கா, சீனாவில் சில பகுதி ஆகிய இடங்களில் மாறி மாறி விழ வாய்ப்பு இருக்கிறது. அப்போதைய காலநிலையும், ஸ்பேஸ் ஸ்டேஷன் விழும் வேகத்தையும் பொறுத்தும் இது மாறுபடுகிறது. எவ்வளவு இதன் எடை 9.5 டன் ஆக இருந்தாலும் , மொத்தமாக அப்படியே பூமியில் விழுவது சந்தேகம்தான். ஏனென்றால் பூமியின் சுற்றுசுழலுக்குள் நுழைந்ததும் பாதி பகுதி சாம்பலாகிவிடும். இதனால் 500 பவுண்ட் வரை கண்டிப்பாக பூமியில் விழும், ஆனால் அதுவும் மனிதர்களை தாக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு இருக்கிறது

Tuesday, January 9, 2018

ஆங்கிலத்தில் எழுத உதவிக் குறிப்புகள்

நான் அனைவருமே, ஆங்கிலத்தில் பேச, எழுத விரும்புகிறோம். அயல் மொழியாக இல்லாமல், ஆங்கிலம் இரண்டாவது மொழியாக நம்முடன் கலந்து விட்டது. இருப்பினும் ஆங்கில மொழியைப் பிழை இன்றி எழுத நமக்குக் கல்லூரி படிப்பு முழுமையாகக் கை கொடுப்பதில்லை. மொழியைத் தொடர்ந்து பயன்படுத்தினால் மட்டுமே, தெளிவாக
அதனைக் கையாள முடியும். இந்த வகையில், நாம் பயன்படுத்தும் போது, குறிப்பாக எழுதும்போது, நமக்குப் பல சந்தேகங்கள் எழுதுவது இயற்கையே. இணையத்தில் ஆங்கில மொழிப் பயன்பாடு குறித்து குறிப்புகள் தருவதற்குப் பல தளங்கள் உள்ளன. சில தளங்கள் குறித்து, கம்ப்யூட்டர் மலரில் ஏற்கனவே தகவல்கள் தரப்பட்டுள்ளன. அண்மையில் இத்தகைய தளம் ஒன்றினைப் பார்க்க நேரிட்டது. அந்த தளம் குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அத்தளத்தின் பெயர் Daily Writing Tips. தளம் கிடைக்கும் முகவரி http://www.dailywritingtips.com/ ஆங்கில மொழி இலக்கணம், டெக்ஸ்ட்டில் நிறுத்தற்குறிகள், சரியான எழுத்து பயன்படுத்தல், கதை எழுதுதல் மற்றும் குறிப்பிட்ட வகை ஆவணங்களைத் தயாரித்தல் ஆகியவை குறித்து இந்த தளம் குறிப்புகளைத் தருகிறது.
இந்த தளத்தில் நுழைந்தவுடன், இதன் இடது பக்கத்தில், எழுதுவது குறித்த குறிப்புகள் கிடைக்கின்றன. வலது பக்கத்தில், உதவிக் குறிப்புகள் வகைகள் வாரியாகத் தரப்படுகின்றன. அவை Business Writing, Mistakes, Expressions, Fiction Writing, Freelance Writing, General, Grammar, Grammar 101, Misused Words, Punctuation, Spelling, Style, Vocabulary, Word of the Day, Writing Basics, மற்றும் Usage Review என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வகைப் பிரிவுக்கு மேலாக, தேடல் மெனு தரப்பட்டுள்ளது. இதில் நாம் நமக்குத் தேவைப்படும் பிரிவினை உள்ளீடு செய்து தேடி குறிப்புகளைப் பெறலாம். எடுத்துக் காட்டாக, Participles எனக் கொடுத்து, அவற்றைப் பயன்படுத்துவதில் ஏற்படும் சந்தேகங்களுக்குத் தீர்வுகளைப் பெறலாம்.
வகைப் பிரிவிற்குக் கீழாக, ஆங்கில மொழிப் பயன்பாடு குறித்த கட்டுரைகள் தரப்படுகின்றன. எடுத்துக்காட்டாக சில: 10 rules for writing numbers, Passed Vs Past, Creative Writing 101, 44 Resume writing tips, Among Vs Amongst என இந்தப் பட்டியல் நீள்கிறது.
மொத்தத்தில் நமக்கு ஆங்கில மொழிப் பயன்பாட்டில் ஏற்படும் அனைத்து சந்தேகங்களுக்கும் இந்த தளம் ஒரு தீர்வினைத் தருகிறது. சந்தேகம் இல்லை என்றாலும், ஆங்கில மொழிப் பயன்பாடு குறித்து கற்றுக் கொள்ளவும் இந்த இணைய தளம் பயனுள்ள ஒன்று. இன்றே பார்த்து, வீட்டில் உள்ள சிறுவர்களுக்கும், மாணவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்

எதிர்காலத் தொழில் நுட்பம்

எதிர்காலம் இன்றைக்கு நம்மால் நம்ப இயலாத சிலவற்றால் இயங்க இருக்கிறது. இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியும், அதன் வேகமும், அது தரும் வசதிகளும் நமக்குப் பிரமிப்பை உண்டு பண்ணுகின்றன. இவற்றின் அடிப்படையில், இன்னும் சில ஆண்டுகளில் நாம் எவை எல்லாம் எதிர்பார்க்கலாம் என்று பலரும் கருத்து தெரிவிக்கத்
தொடங்கியுள்ளனர். கணிப்பவர்கள் அறிவிக்கும் அனைத்தும் உறுதியாக நடக்கும் என்றே நாம் நம்பலாம். ஏனென்றால், இன்றைய அறிவியல் உலகில் இதுவரை ஏற்பட்ட வளர்ச்சி, வருங்கால வளர்ச்சியின் அடித்தளமாக அமைந்து, நம்மை சிந்திக்க வைக்கின்றன. அத்தகைய புதிய உலகம் எத்தகைய சாதனங்களால் நம்மைச் சூழ்ந்து கொண்டிருக்கும் என இங்கு பார்க்கலாம்.
இன்றைக்கு அதிகம் பேசப்படும், ஓட்டுநர் இல்லாமல், சென்சார்கள் காட்டும் வழியில் இயங்கக் கூடிய கார்கள், நமக்கான வேலைகள், நாம் இறங்கி செயல் ஆற்ற முடியாத தளங்களில் செயலாற்றும் இயந்திர மனிதர்கள் எனப் பல இலக்குகளை இன்றைய அறிவியல் நம் முன்னே வைத்துள்ளது. இந்தப் பிரிவுகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, இவை எல்லாம் சாத்தியமே என்று உறுதியாக நம்ப வைக்கிறது. அதே அடிப்படையில் வேறு சிலவற்றையும் சாத்தியமாகும் என எண்ண வைக்கிறது. உலக அளவில் செயல்படும் பொருளதார மையத்தின், அறிவியலின் எதிர்காலம் மற்றும் சமுதாய வளர்ச்சிக்கான பிரிவு, வருங்காலத்தில் ஏற்பட இருக்கும் அறிவியல் கண்டுபிடிப்புகள் குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இது குறித்து தொழில் நுட்ப உலகில் செயலாற்றும் பல முன்னணி ஆய்வாளர்களைப் பேட்டி கண்டு, அவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில், அறிக்கையினை வெளியிட்டுள்ளது. அதில், 2030 ஆம் ஆண்டுக்குள் நிறைவேறக் கூடிய, சாத்தியப்படக் கூடிய கண்டுபிடிப்புகளைப் பட்டியலிட்டுள்ளது. அவற்றை இங்கு காணலாம்.
உலக மக்களில் 90% பேர், அளவற்ற டேட்டாவினை இலவசமாகச் சேமித்துப் பதிந்து வைக்கும் வசதியினை வரும் 2018 ஆம் ஆண்டுக்குள் பெறுவார்கள். சேமித்து வைப்பதற்கான இடம் அபரிதமாக அனைவருக்கும் கிடைக்கும். இதில் காட்டப்படும் விளம்பரங்கள், இந்த இடத்தைப் பராமரிக்கும் செலவினை ஈடு செய்திடும். இப்போதே, கூகுள் தன் நிறுவன மொபைல் போனில் எடுக்கும் போட்டோக்களை, அவை எந்த எண்ணிக்கையில் இருந்தாலும், தன் க்ளவ்ட் சேவையில் பதிந்து வைத்துக் கொள்ளலாம் என்று அறிவித்து இயக்கி வருகிறது. இதே போல, பல நிறுவனங்கள், இந்த டிஜிட்டல் தேக்ககம் என்ற ஒன்றை இலவசமாகத் தந்து, வாடிக்கையாளர்களைப் பெற முயற்சிக்கலாம். இதற்கு இன்னொரு முக்கிய காரணமும் உண்டு. ஹார்ட் ட்ரைவ் விலை மிக வேகமாகக் குறைந்து வருகிறது. இதனால், அதிக அளவில் டேட்டாவினை உருவாக்கவும் மக்கள் முயற்சிக்கிறார்கள். தற்போது சேமிக்கப்பட்டு இருக்கும் டேட்டாவில், 90% கடந்த இரண்டு ஆண்டுகளில் உருவாக்கப்பட்டவையாக உள்ளன என்பது இதனை உறுதிப்படுத்துகிறது.
இனி பூமியில் வாழும் ஒவ்வொரு மனிதர் மட்டுமல்ல, விலங்கு மட்டுமல்ல, பயன்படுத்தப்படும் பொருட்களும் இணையத்தோடு இணைக்கப்படும். இதற்கு சென்சார்கள் பொருத்தப்படும். சென்சார்களின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. கம்ப்யூட்டரின் செயல் திறன் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால், 2022க்குள், இப்புவியில், ஒரு லட்சம் கோடி சென்சார்கள் பயன்பாட்டில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாம் அணியும் ஆடைகளிலிருந்து, நாம் மிதித்து நடக்கும் பூமி வரை அனைத்து இடங்களிலும் சென்சார்கள் பொருத்தப்பட்டு, அவை இணையத்துடன் இணைக்கப்படும். அவற்றின் இயக்கங்களை இணையம் மூலம் கண்காணித்து நெறிப்படுத்தலாம்.
தற்போது கார்கள் மற்றும் நாம் பயன்படுத்தும் சாதனங்களில் சென்சார்கள் பயன்படுத்தப் படுகின்றன. 2022ஆம் ஆண்டுக்குள், 10% மக்களின் ஆடைகளில் சென்சார்கள் பொருத்தப்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
முப்பரிமாணத்தில் அச்சிடுவது பெருகி வருகிறது. இதன் மூலம் புதியதாக வடிவமைக்கப்பட இருக்கும் ஒரு சாதனத்தின் அனைத்து பரிமாணங்களையும் துல்லியமாக படத்தில் கொண்டு வர இயலும், 2022 ஆம் ஆண்டில் இவ்வாறு அச்சிட்டு வைத்துக் கொண்டு அதே போல கார் ஒன்று உருவாக்கப்படும். ஏற்கனவே, கார் தயாரிக்கும் ‘ஆடி’ நிறுவனம், ஒரு சிறிய மாடல் கார் ஒன்றை இவ்வகையில் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. நுகர்வோர் பயன்படுத்தும் சாதனங்கள் இனி முப்பரிமாணப் படங்கள் கொண்டு விளக்கப்படும்.
“அவன் எப்போதும் ஸ்மார்ட் போனையே தொங்கிக் கொண்டு திரிகிறான்” என்று கூறுவது வேறு ஒரு வகையில் உண்மையாகும். உடலின் உள்ளாக வைத்து இயக்கும் மொபைல் போன் வர இருக்கிறது. 2023ல் இது வெளியாகி, வர்த்தக ரீதியாக, 2025ல் இது கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. ஏற்கனவே, இதயத் துடிப்பு குறையும்போது, அதனைச் சீராக இயக்க, பேஸ்மேக்கர் என்னும் சாதனத்தை உடலுக்குள்ளாக வைத்திடும் பழக்கம் கடந்த 25 ஆண்டுகளாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
கண் கண்ணாடி போல அணிந்து, உலகில் உள்ள அனைத்து மக்களுடனும் உடனடியாகத் தொடர்பு கொள்ளக் கூடிய டிஜிட்டல் கண்ணாடி 2023 ஆம் ஆண்டில் கிடைக்கும்.
மக்களின் வாழ்வு அவர்களின் “டிஜிட்டல் நிலையைக்” கொண்டு கணக்கிடப்படும். மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முறை, வழக்கமான முறையிலிருந்து மாற்றப்பட்டு, டிஜிட்டல் டேட்டா முறைக்கு வந்துவிடும். கனடா நாட்டில் அரசு இதைச் சோதனை முயற்சியாக மேற்கொண்டுள்ளது.
தற்போது கம்ப்யூட்டர்களின் இடத்தில் ஸ்மார்ட் போன்கள் “பாக்கெட் கம்ப்யூட்டர்களாகப்” பயன்படுத்தப்படுகின்றன. இந்த வேகத்தில் சென்றால், 2023 ஆம் ஆண்டில், 90% மக்கள் சூப்பர் கம்ப்யூட்டர்களைத் தங்கள் சட்டைப் பைகளில் வைத்துப் பயன்படுத்துவார்கள். 2017ல், உலக மக்களில் 50% பேர் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவார்கள். இது 2023ல், 90% ஆக உயரும்.
இணையம் பயன்படுத்துவது மக்களின் அடிப்படை உரிமை என பெரும்பாலான உலக நாடுகள் ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்தும். இது 2024ல் நடைமுறைக்கு வரும். தற்போது இணைய இணைப்பு இல்லாத 400 கோடி மக்களுக்குப் பல வழிகளில் இணைய இணைப்பினைத் தர கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
2024ல் மேற்கொள்ளப்படும் இணையப் போக்குவரத்தில், 50% தொடர்புகள், நாம் பயன்படுத்தும் சாதனங்களுடன் அமையும். டிவியை இயக்கிக் கட்டுப்படுத்தல், சலவை இயந்திரங்கள், தூய்மைப் படுத்தும் சாதனங்கள், வீட்டுக் கதவுகள், விளக்குகள் என அனைத்துடனும் நாம் இணையம் வழி தொடர்பு கொண்டு கட்டுப்படுத்த இயலும்.
செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்டு உலகில் அனைத்து பணிகளையும் மேற்கொள்ள எடுக்கப்படும் முயற்சிகள் வெற்றி அடையும். மக்கள் மேற்கொள்ளும் பணிகளில், 50% பணிகளை, செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பம் மூலம் இயக்கப்படும் சாதனங்கள் மேற்கொள்ளும்.
சாதாரண பணிகள் மட்டுமின்றி, நிதி நிர்வாகம், மருத்துவப் பணி, உயர்நிலை சமுதாய நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளவும் செயற்கை நுண்ணறிவுத் திறன் அடிப்படையில் இயக்கப்படும் சாதனங்கள் உருவாகும். நிறுவனங்களின் இயக்குநர் குழுவில், இனி இது போன்ற ஒரு சாதனமும் இடம் பெற்று தன் கருத்தைத் தெரிவிக்கும் காலம் விரைவில் வரும்.
தனிப்பட்டவர்கள் கார்களை வைத்துக் கொண்டு இயங்குவது குறையும். இணையம் வழி தொடர்பு கொண்டு ஷேர் டாக்ஸி போன்ற வாகனங்களே இனி அதிகமாகப் பயன்படுத்தப்படும். தற்போது வெளிநாடுகளில் ‘ஊபர்’ மற்றும் சென்னையில் ‘ஓலா’ டாக்ஸிகள் இந்த வழிகளில் தான் இயக்கப்பட்டு வருகின்றன.
விளக்குகளைக் கொண்டு, கார்கள் மற்றும் மக்களின் போக்குவரத்தினைக் கட்டுப்படுத்தும் பழக்கம் மறையும். ஸ்மார்ட் ஹோம் என இருப்பது போல, ஸ்மார்ட் நகரம் உருவாகும். இணையம் மூலமே, தானாக இயங்கும் சாதனங்கள் மூலம் போக்கு வரத்து ஒழுங்கு படுத்தப்படும். 2026 ஆம் ஆண்டில், முழுவதும் இணையத்தில் இயங்கும் சாதனங்களால் நிர்வகிப்படும், 50 ஆயிரம் மக்கள் வசிக்கும் முதல் ஸ்மார்ட் நகரம் செயல்பாட்டிற்கு வரும்.
பணப்புழக்கம் முற்றிலுமாக இணைய வழியில் மட்டுமே இருக்கும். ‘பிட்காய்ன்’ போன்ற கட்டமைப்பு விரிவு படுத்தப்பட்டு, பொதுவான பணப் பரிவர்த்தனை டிஜிட்டல் பேரேடு உருவாகும். ஒவ்வொருவருக்கும் அதில் கணக்கு இருக்கும். அதனை உரியவருக்கான அனுமதி பெற்று யாரும் இயக்கலாம்.
மேலே கூறப்பட்டவை அனைத்தும் கற்பனை அல்ல என்பதை உணர்ந்திருப்பீர்கள். அறிவியல் பிரிவில் செயல்படும் முன்னணி விஞ்ஞானிகளின் கருத்தினைக் கேட்டே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. நிச்சயம் இவை நிறைவேறும் என எதிர்பார்க்கலாம்.