பள்ளிப் படிப்பு என்பது எட்டாக் கனியாக இருந்த, ஏழை குடுப்பத்தில் பிறந்த எம் ஜி முத்துவின் வளர்ச்சி இன்று மிகப் பெரியது எனலாம். எப்படி ஒருவர் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்பதற்கு மிகப் பெரிய எடுத்துக்காட்டாக இருக்கும் இவரது கதை இருக்கும். படிப்பு இல்லை என்றாலும் இவரது வணிகத்தில் இவர் தான் கிங். துறைமுகத்தில் கப்பலில் இருந்து மூட்டைகளை இறக்கி ஏற்றும் கூலியாகத் தனது வாழ்க்கையினைத் துவங்கியுள்ளார். தனது கனவை நோக்கி மிகவும் கடினமாக உழைத்து இன்று கோடி கணக்கில் சொத்துக்கள் இவர் வசம் உள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? கிராமம் தமிழகத்தின் ஒரு சிறிய கிராமத்தில் கூலி தொழிலாளியின் மகனாகப் பிறந்த பிறந்த முத்த இந்திய நிறுவனங்கள் இடையில் மிகவும் பிரபலமான எம்ஜிஎம் குழுமத்தின் தலைவர் ஆவார். நம்பிக்கை தினமும் ஒரு வேலை உணவு கூடக் கிடைக்காத நிலையில் இவரது குடும்பம் இருந்த போது என்றாவது ஒரு நாள் இதனை நான் மாற்றுவேன் என்ற நம்பிக்கையுடன் இருந்துள்ளார். பள்ளி முத்துவிற்கு 10 வயது ஆகும் போது தனது கிராமத்தில் உள்ள சிறுவர்கள் பள்ளிக்குச் செல்வதைப் பார்த்து தானும் பள்ளியில் சேர்ந்தார். ஆனால் இவரது பசியில் பாடத்தினை எப்படிக் கவனிப்பது என்று தெரியாமல் சில நாட்களில் படிப்பிற்கு முழுக்கு போட்டார். கூலி வேலை அந்தச் சிறு வயதில் தனது தந்தையுடன் ஒரு விவசாயத் தின கூலியாக வேலைக்குச் சேர்ந்து சில ஆண்டுகள் பணிப்புறிந்துள்ளார். மெட்ராஸ் துறைமுகம் 1957-ம் ஆண்டு மெட்ராஸ் துறைமுகத்தில் வேலைக்குச் சேர்ந்த முத்து 10 வருடக் கடின உழைப்பிற்குப் பின்பு பணத்தினைச் சேமிக்கும் அளவிற்குச் சம்பாதிக்கத் துவங்கியுள்ளார். தன்னுடன் பணிபுரியும் ஊழியர்களுடன் நன்றாகப் பழகி வந்த முத்து தனது சேமிப்பை வைத்துச் சிறியதாகத் தளவாடங்கள் (லாஜிஸ்டிக்ஸ்) சேவை அளிக்கும் நிறுவனத்தினைத் துவங்கினார். லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் தற்போது அந்த லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் இவரை இந்தியாவின் முக்கிய வணிகராக மாற்றியுள்ளது. நிறுவனத்தினைத் துவங்கிய போது சிறு நிறுவனங்களுக்குப் பொருட்களை ஏற்றுவது மற்றும் இறக்குவது போன்ற பணிகள் இவருக்குக் கிடைத்து. மிஷன் தனக்குப் பொருட்கள் ஏற்ற இறக்கு ஆடர்கள் கிடைக்கத் துவங்கிய உடன் இவர் முதலில் திட்டமிட்டது எக்காரணத்தினைக் கொண்டு வாடிக்கையாளர்கள் புகார் அளிக்காத படி சேவை அளிக்க வேண்டும் என்பது ஆகும். அதே போன்று சேவையினை இவர் வாடிக்கையாளர்களுக்கு அளித்ததால் அதிக வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளார். எம்ஜிஎம் பின்னர் எம்ஜிஎம் என்ற நிறுவனத்தினைத் துவக்கிய முத்து மிகப்பெரிய சாம்ராஜியத்தினை இன்றை வர்த்தக உலகில் நிறுவியுள்ளார். இவரது வாடிக்கையாளர்களின் அறிந்து பெரிய நிறுவனங்களும் ஆர்டர்கள் அளிக்க ஆரம்பித்துள்ளன. இன்று இந்தியாவின் மிகப் பெரிய லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமாக எம்ஜிஎம் உள்ளது பிற தொழில் லாஜிஸ்டிக்ஸ் பிரிவில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற எம்ஜிஎம் குழுமம் நிலக்கரி, கனிம சுரங்கம், உணவு நிறுவனங்கள், சர்வதேச ஹோட்டல்கள் போன்றவற்றை நிறுவி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றார். மது பானம் அன்மையில் எம்ஜிஎம் குழுமம் தமிழ் நாடு மற்றும் ஆந்திர பிரதேசத்தினைச் சேர்ந்த மதுபான நிறுவனத்தினைக் கைப்பற்றியுள்ளது. இந்த நிறுவனம் வோட்கா மற்றும் விஸ்கி போன்றவையினைத் தயாரித்து வருகிறது. விரைவில் கர்நாடகாவில் மதுபான ஆலையினைத் துவங்கும் எண்ணத்தில் எம்ஜிஎம் உள்ளது. மேரி பிரவுன் ஒரு நேரத்தில் கூலியாக இருந்த இவர் தற்போது மலேசிய துரித உணவகமான மேரி பிரவுனின் இந்திய பிராஞ்சிஸ்களையும் நிர்வகித்து வருகிறார். பழமொழி மனம் இருந்தால் மார்க்கமுண்டு என்ற பழமொழியைப் போன்று ஒவ்வொரு நாளும் தனது இலக்கினை நோக்கி கடின உழைப்புடன் செயல்பட்ட முத்து பள்ளி படிப்பு கூட முறையாக இல்லாமல் மிகப் பெரிய வெற்றியை பெற்று இருக்கிறார். முடிவுரை எம் ஜி முத்துவின் கதை உங்களைக் கண்டிப்பாகக் கவர்ந்து இருக்கும் மற்றும் பாடங்களைக் கற்பித்து இருக்கும் என்று நம்புகிறேன். இதேப்போன்று மேலும் பல வெற்றிக் கதைகளைப் படிக்கத் தொடர்ந்து தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்கு வருகை தரவும். தோல்வியில் இருந்துதான் வெற்றி பிறக்கும் தோல்வியில் இருந்துதான் வெற்றி பிறக்கும் என்பதற்கு இவரை விட பெரிய உதாரணம் இருக்கமுடியாது.. சவுந்தரராஜனின் ரூ.5,000 கோடி சொத்து.. 11ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த சவுந்தரராஜனின் ரூ.5,000 கோடி சொத்து.. விஸ்வரூப வளர்ச்சி..! 25 ரூபாயுடன் துவங்கிய பயணத்தின் விஸ்வரூப வளர்ச்சி..!
Labels
TRB,TNTET,TNPSC online coching
Search This Blog
NEWS
https://trb-tntet-tnpsc.blogspot.in/வழங்கும் இலவச இணையதள பயிற்சிக்கு உங்களை வரவேற்கிறோம்.தன்னம்பிக்கை, விடா முயற்சி , கடின உழைப்பு. எந்த சோதனைகள் வந்தாலும் உங்கள் இலட்சியத்தை விட்டு விடாதீர்கள். "சரியான முயற்சியும் பயிற்சியும் இருந்தால் உங்களால் முடியாத ஒன்றுமே இல்லை" என்ற நம்பிக்கை உங்கள் ஒவ்வொருவரின் மனதிலும் நிறைந்திருக்க வேண்டும். அதற்காக எங்கள் இணைய தளத்தின் மூலம் எங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வோம்.பயிற்சி நிறுவனங்களுக்கு சென்று பயிற்சி பெற இயலாத வேலைதேடும் இளைஞர்கள், பணிபுரிபவர்கள், இல்லத்தரசிகள் தங்களது அரசு வேலை கனவுகளை நனவாக்குவதற்காகவே இந்த இணையதளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. TET ன் புதிய பாடத்திட்டத்திற்கேற்ப ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட பாடப்பகுதிகளில் வாரத்தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த வாரத்தேர்வின் முடிவுகள் உங்கள் பெயருடன் இந்த இணையதளத்தில் வெளியிடவும் முடிவு செய்துள்ளோம்.
Sunday, December 31, 2017
இந்த 6 பேர் மட்டும் இன்று 16 முறை நியூ இயர் கொண்டாடுவார்கள்.. ஏன்? எப்படி?
நியூயார்க்: விண்வெளியில் இருக்கும் 6 விண்வெளி வீரர்கள் மட்டும் இன்று 16 முறை புது வருடத்தை கொண்டாடுவார்கள் என்று கூறப்படுகிறது. நாசா செய்யும் ஒரு சோதனை முயற்சியின் காரணமாக அவர்களுக்கு இந்த அரிய வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. வேறு ஒரு முக்கிய பணிக்காக விண்வெளிக்கு சென்றவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. நாசா வீரர்கள் மட்டும் இல்லாமல் ரஷ்யா மற்றும் ஜப்பான் வீரர்களும் இதில் இருக்கிறார்கள். உலகத்திலேயே இவர்களுக்கு மட்டுமே இந்த அரிய வாய்ப்பு அமைந்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
நாசா விண்வெளியில் சர்வதேச ஸ்பேஸ் ஸ்டேஷன் இருக்கிறது. இந்த ஸ்பேஸ் ஸ்டேஷனில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் வேலை செய்கின்றனர். இந்த ஸ்பேஸ் ஸ்டேஷனுக்கு ரஷ்யா, அமெரிக்கா மற்றும் ஜப்பானை சேர்ந்த 6 வீரர்கள் இரண்டு வாரங்களுக்கு முன்பு சென்றார்கள். ஆராய்ச்சி இந்த 6 பேருக்கும் வித்தியாசமான வேலைகள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அவர்கள் ஆறு பேரின் உடலில் இரண்டு வார விண்வெளி பயணத்திற்கு பின்பு எப்படி எல்லாம் மாறுகிறது என்பதை கண்டுபிடிக்கவே இந்த ஆராய்ச்சி மேற்கொள்ள படுகிறது. அதன்படி அவர்கள் விண்வெளியில் உடற்பயிற்சி செய்வார்கள். அதன்முலம் விண்வெளியில் எப்படி எல்லாம் உடல் மாற்றம் ஏற்படுகிறது என்பது கண்டுபிடிக்க முடியும். சுற்றுவார்கள் அதேபோல் இந்த ஆறு பேரும் இன்று காலையில் இருந்து பூமியை முன்னும் பின்னுமாக 90 நிமிடத்திற்கு ஒருமுறை சுற்றுவார்கள். இதன் காரணமாக இன்றில் இருந்து நாளை வரை மட்டும் இவர்களுக்கு 16 முறை சூரிய உதயம் ஏற்படும். எனவே இவர்களுக்கு கணக்குப்படி 16 முறை புதிய வருடம் பிறக்கும்.
சாதனை உலகிலேயே இதுபோன்ற சாதனையை இதுவரை யாருமே செய்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 6 பேர் மட்டுமே ஒரே நாளில் 16 சூரிய உதயத்தை பார்ப்பார்கள். அதேபோல் இவர்கள் மட்டுமே 16 முறை ஒரே நாளில் புது வருடம் கொண்டாடுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாசா விண்வெளியில் சர்வதேச ஸ்பேஸ் ஸ்டேஷன் இருக்கிறது. இந்த ஸ்பேஸ் ஸ்டேஷனில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் வேலை செய்கின்றனர். இந்த ஸ்பேஸ் ஸ்டேஷனுக்கு ரஷ்யா, அமெரிக்கா மற்றும் ஜப்பானை சேர்ந்த 6 வீரர்கள் இரண்டு வாரங்களுக்கு முன்பு சென்றார்கள். ஆராய்ச்சி இந்த 6 பேருக்கும் வித்தியாசமான வேலைகள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அவர்கள் ஆறு பேரின் உடலில் இரண்டு வார விண்வெளி பயணத்திற்கு பின்பு எப்படி எல்லாம் மாறுகிறது என்பதை கண்டுபிடிக்கவே இந்த ஆராய்ச்சி மேற்கொள்ள படுகிறது. அதன்படி அவர்கள் விண்வெளியில் உடற்பயிற்சி செய்வார்கள். அதன்முலம் விண்வெளியில் எப்படி எல்லாம் உடல் மாற்றம் ஏற்படுகிறது என்பது கண்டுபிடிக்க முடியும். சுற்றுவார்கள் அதேபோல் இந்த ஆறு பேரும் இன்று காலையில் இருந்து பூமியை முன்னும் பின்னுமாக 90 நிமிடத்திற்கு ஒருமுறை சுற்றுவார்கள். இதன் காரணமாக இன்றில் இருந்து நாளை வரை மட்டும் இவர்களுக்கு 16 முறை சூரிய உதயம் ஏற்படும். எனவே இவர்களுக்கு கணக்குப்படி 16 முறை புதிய வருடம் பிறக்கும்.

சாதனை உலகிலேயே இதுபோன்ற சாதனையை இதுவரை யாருமே செய்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 6 பேர் மட்டுமே ஒரே நாளில் 16 சூரிய உதயத்தை பார்ப்பார்கள். அதேபோல் இவர்கள் மட்டுமே 16 முறை ஒரே நாளில் புது வருடம் கொண்டாடுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புத்தாண்டு ராசி பலன் 2018 - பலன்கள் மற்றும் பரிகாரங்கள்
கிரஹங்களின் கோச்சாரம் அன்றாடம் நடக்கும் ஒரு நிகழ்ச்சி. இவர்களது சஞ்சாரம் நமது வாழ்க்கையில் எந்த விதமான திருப்பங்கள் மற்றும் மாற்றங்கள் கொண்டு வரும் என்பதை இந்த 2018 ராசி பலன் மூலம் நாங்கள் உங்களுக்கு தெரிவிக்கிறோம். இந்த ராசி பலன் தொகுப்பு ஜனவரி முதல் டிசம்பர் 2018 வரை உள்ளது.
உங்கள் வாழ்க்கையின் முக்கிய சமாசாரங்களான படிப்பு, பணம், ஆரோக்கியம், வேலை, கல்யாணம், உறவு, நட்பு, குடும்பம், கேளிக்கை மற்றும் ஆன்மீக விஷயங்களை அலசி ஆராய்ச்சி செய்திருக்குகிறோம். மேலும் உங்களுக்கு வருகிற பிரச்சனைகள் மற்றும் அதனை சமாளிக்கும் பரிகார முறைகளை பற்றியும் தெரிவித்திருக்கிறோம். மேஷம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும் என்பதை இந்த தொகுப்பில் நீங்கள் காணலாம்.
இந்த 2018 ராசி பலன் கிரஹ கோச்சாரத்தின் முக்கிய விஷயங்களை உங்கள் ஜாதக பலன்கள், அம்சங்கள் மற்றும் தசா-புக்தி விவரத்துடன் கலந்து கொடுத்துள்ளோம். இந்த தொகுப்பை உங்கள் ஜாதக பலன்களுடன் ஒருங்கிணைத்து ஆராயவும், ஏற்கவும்.
மேஷம் (Mesham)

வருடத்தை உற்சாகத்துடனும் ஆரம்பிப்பீர்கள். சாகசமாகவும், தைர்யமாகவும் எல்லா முடிவுகளையும் எடுப்பீர்கள். பதவி உயர்வு, ஊதிய உயர்வு நிச்சயம் உண்டு. வெளிநாட்டு வ்யாபாரிகளுடன் கூட்டு ஒத்துழைப்பு பெருமளவில் நன்மை தரும். கார்ய சம்பந்த தூர பிரயாணங்கள் பயனுள்ளதாக இருக்கும். வாழ்க்கை துணையுடன் நெருக்கம் இருந்தாலும், வீட்டில் நிம்மதியும் சந்தோஷமும் குறைவாக இருக்க காண்பீர்கள். தாய் தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனக்குறைவு பெரிய பிரச்னையாகலாம்.
வில்வ மரத்திற்கு பூஜை செய்யவும். வில்வத்தின் வேர்களை அணிந்து பயன் பெறவும்.
அதிகாலையில் சூர்ய பகவானை வணங்கி, தாம்பிர செம்பில் ஜலம் அர்பணிக்கவும். நன்மை உண்டாகும்.
ரிஷபம் (Rishabam)

ரிஷபம் சுக்கிர கிரஹத்தை ராசிநாதன் ஆக கொண்டிருக்கும் ரிஷப ராசிக்காரர்களே, இந்த வருடம் முழுவதும் பல்வேறு பிரச்னைகள் தலை தூக்கும். சனி 8ஆம் வீடு தனுசில், குரு 6ஆம் வீடு துலாவில், ராகு 3ஆம் கடகத்தில் மற்றும் கேது 9ஆம் மகரத்தில் சஞ்சாரம் செய்கின்றனர்.
அஷ்டம சனியின் பிடியில் வருடம் முழுவதும் இருக்கிறீர்கள். குரு வருட இறுதியில் 6ஆம் வீட்டிலிருந்து 7ஆம் வீடு வ்ருச்சிகத்திற்கு வரும் உங்கள் நிலைமை பெரிதளவில் சரியாகும். ராகுவின் வலுவான ஸ்திதியினால் எந்த வித பிரச்னைகளையும் துணிவுடன் சந்திப்பீர்கள். அரும்பாடுபட்டு எடுத்த கார்யங்களை முடிப்பீர்கள். இருந்தாலும் செய்யும் வேலையில் அடிக்கடி தடங்கல்கள் வந்து கொண்டு இருக்கும்.
வீண் அலைச்சல் மற்றும் வேண்டாத பிரச்னைகள் இருக்கும். உங்கள் எதிர்பார்ப்பிற்கு மாறாக விளைவுகள் இருக்கும். வியாபாரிகள் பண சம்பந்தமான எந்த விஷயமும் பல முறை யோசித்து செய்தால் நல்லது. புதிய கூட்டோ அல்லது முதலீடோ வருட இறுதியில் உங்களுக்கு சாதகமாக இருக்கும். தந்தையுடன் மனஸ்தாபம் வரலாம்; அல்லது தந்தைக்கு அசௌகரியம் ஏற்படலாம்.
ஆஞ்சநேயருக்கு தினமும் பூஜை, ஆராதனை செய்யுங்கள். செவாய்க்கிழமை, சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயருக்கு கோவிலில் விளக்கு ஏற்றவும்.
சனிக்கிழமை தோறும் நவகிரஹ சன்னதியில் சனீஸ்வரனுக்கு எண்ணெய் தீபம் ஏற்றுங்கள்.
மிதுனம் (Midhunam)
மிதுனம் புதன் கிரஹத்தை ராசிநாதன் ஆக கொண்டிருக்கும் மிதுன ராசிக்காரர்களே, பல்வேறு பிரச்னைகள் தலை தூக்கினாலும் சமயோஜித அறிவையும் நேர்மறை சிந்தனையையும் பிரயோகித்து வாழ்க்கையில் முன்னேறுவீர்கள். சனி 7ஆம் வீட்டில், குரு 5ஆம் வீட்டில், ராகு 2ஆம் வீட்டில் மற்றும் கேது 8ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார்கள்.
உங்கள் வாய் வார்த்தைகளினால் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் சிற்சில விஷயங்களில் சண்டை சச்சரவுகள் வரலாம். கவனமாக கையாளுங்கள். உங்கள் ஆரோக்கிய விஷயத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும்; திடீர் நோய் வர வாய்ப்பும் இருக்கிறது, அதிகமாக கவனம் தேவை. சிலர் தங்களுக்கு பிடித்தவர்களுடன் மண வாழ்க்கையில் இணைவார்கள்.
முதலில் மண-வாழ்க்கை பிரமாதமாக இருந்தாலும், வருட இறுதியில் சிறு வேறுபாடுகள் தலைதூக்கலாம். ஒருத்தரை ஒருவர் விட்டு கொடுக்காமல் நிலைமையை கையாளுங்கள். வேலை விஷயமாக சிலர் குடும்பத்தை விட்டு வெகு தூரம் செல்லலாம்; வெளிநாட்டு பயணம் கூட மேற்கொள்ளலாம். பாடுபட்டு உழைத்த பணம் விரயமாகும்; இந்த விஷயத்தில் சற்று கவனமாக இருக்கவும். வருட பிற்பகுதியில் உத்யோகஸ்தர்கள் கடினமாக உழைத்து முன்னேறுவார்கள்.
தினந்தோறும் விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம் சொல்லுங்கள். பைரவ பூஜை நன்மை செய்யும்.
அரவாணிகளுக்கு, திருநங்கைகளுக்கு உங்களால் முடிந்த உதவி செய்யவும்.
கடகம் (Kadagam)

ஆனால் வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடுகள் இருக்கும். சிறிய பிரச்னையானாலும் உடனே தீர்வு காண முயலுங்கள். இந்த வருடம் முழுவதும் ஒரு புது விதமான உணர்வு பாய்வதை உடலிலும் உள்ளத்திலும் பாய்வதை உணர்வீர்கள். உங்கள் புரட்சிகரமான படைப்பாற்றலை மற்றவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள் அல்லது தப்பாக புரிந்து கொள்வார்கள். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும்.
வேலை செய்யும் இடத்தில் விடா முயற்சியுடன் கார்யங்களை செய்து முடிப்பீர்கள். உங்கள் உடல் ஆரோக்கியமாக இருந்தாலும், உண்ணும் உணவில் கட்டுப்பாடு இருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். சின்ன பிரச்னை விஸ்வரூபம் எடுக்க வாய்ப்பிருக்கிறது.
மஹாதேவரை தினமும் வணங்குங்கள். ருத்ர காயத்ரி, மஹா ம்ருத்யுஞ்சய மந்திரம் ஜெபியுங்கள். எல்லா விதத்திலும் நன்மை உண்டாகும்.
பசு-பக்ஷிகள், நாய்களுக்கு தீனி கொடுங்கள். சனிக்கிழமை அன்ன தானம் மற்றும் ஏழை-எளியோர்களுக்கு தேவையான பொருள்கள் கொடுக்கவும்.
சிம்மம் (Simmam)
சிம்மம் சூர்யனை ராசிநாதன் ஆக கொண்டிருக்கும் சிம்ம ராசிக்காரர்களே, மொத்தத்தில் ஒரு பிரமாதமான வருடம். குரு 3ஆம் வீட்டில், சனி 5இல், கேது 6இல் மற்றும் ராகு 12இல் கோச்சாரம் செய்கின்றன. மனம் சமயம், மதம் சம்பந்தமான அல்லது நல்ல செயல்கள் செய்வதிலும் லயிக்கும். புனித யாத்திரையும் மேற்கொள்ளலாம். கூட பிறந்தோர் மற்றும் நண்பர்களின் உதவி, ஆதரவு மற்றும் சஹயோகம் உங்களுக்கு கட்டாயம் கிடைக்கும்.
காதல் சம்பந்தங்களில் சில இன்பமான அனுபவங்களுடன் சிற்சில சிக்கல்களும் வரலாம். ஜாக்கிரதையாகவும் கவனமாகவும் இருக்கவும். வாழ்க்கை துணையுடன் சந்தோஷத்துடன் இருப்பீர்கள், இருந்தாலும் வருட மத்தியில் அனாவசிய பிரச்னைகளை பெரிது படுத்தாமல் தீர்வு காண முயலுங்கள்.
தந்தையின் அந்தஸ்து சமூகத்தில் உயரும், ஆனால் உடல் அசௌகர்யப்படலாம். செய்யும் வேலையில் கடுமையாக போட்டி இருந்தாலும், அயரா உழைப்புடன் காரியத்தில் இறங்கி, வேலையை செய்து முடிப்பீர்கள். வீடு, மனை வாங்கும் யோகம் வருடத்தின் இறுதியில் இருக்கிறது. அதற்குமுன் முயற்சி எடுக்காதீர்கள், வீண் அலைச்சலும் பண விரயமும் தான் மிஞ்சும்.
சூர்ய பூஜை செய்யுங்கள். தந்தைக்கும், தந்தை சமான பெரியவர்களுக்கும் மரியாதையுடன் அன்பு சேவை செய்யுங்கள்.
தார்மீக ஸ்தலத்தில் தர்மம், சேவை செய்யுங்கள். வறுமையில் இருக்கும் ஊனமுற்றோர், நோயாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள்.
கன்னி (Kanni)

வாய்ப்புகள் ஏராளமாக வரும், சாதனையும் நிறைய செய்வீர்கள். இந்த வருடம் தன லாபத்தை குறிக்கிறது. உங்கள் புத்தி கூர்மையும், வாக்கு சாதுர்யமும் உங்களுக்கு பல்வேறு வெற்றிகளை தேடித்தரும். செய்யும் வேலையில் வேகமாக முன்னேறுவீர்கள். சமுகத்தில் அந்தஸ்து அதிகரிக்கும் மற்றும் உங்கள் வாழ்க்கையில் புதிய நண்பர்கள் வருவார்கள், மற்றும் புதிய தொடர்புகள் உண்டாகும்.
வீடு புதுப்பித்தல், அலங்கரித்தல், சீரமைப்பு போன்றவற்றில் உங்கள் தியானம் செல்லும். புது வீடு, மனை வாங்கும் முயற்சியில் முழு மூச்சுடன் சிலர் இறங்குவார்கள். இந்த மாதிரி விஷயங்களுக்கு இது உகந்த சமயம். குழந்தைகள், குறிப்பாக அவர்கள் படிப்பு மற்றும் ஆரோக்கியம் சம்பந்த விஷயங்களில், ரொம்பவே ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய சமயம். வாழ்க்கை துணை மூலம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நல்லது நடக்கும்.
விஷ்ணு காயத்ரி, சஹஸ்ரநாமம் மற்றும் விஷ்ணு பூஜை நன்மை தரும்.
ராகு-கேது பரிகாரம் நல்லது. பல வண்ண விரிப்புகள் ஏழை-எளியோர்களுக்கு தானம் செய்யவும்.
துலாம் (Thulaam)

வருடத்தை ஒரு புத்துணர்ச்சியுடன் ஆரம்பிப்பீர்கள். ஆனால் கூடவே ஒரு ஆக்ரோஷமும் கலந்து இருக்கும். உங்கள் வற்புறுத்தலும், வலியுறுத்தலும் சில சமயங்களில் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். மற்றபடி உங்கள் குடும்பத்தில் இதனால் வீண் பிரச்னைகள் உருவெடுக்கும். தக்க சமயத்தில் நிலைமை கெடாமல் பார்த்துக்கொள்வீர்கள்.
இருந்தாலும், உங்கள் அந்தரங்க வாழ்க்கையில் உங்கள் மனம் லயிக்காது. மனதில் இருக்கும் கோவம் வாய் வார்த்தை மூலம் வெளியே வரும் பொழுது மிகவும் கவனமாக நிலைமையை கையாளவும். செய்யும் வேலையில் மாற்றங்கள் திடீரென வரும், நீங்களும் உங்கள் படைப்பாற்றல், உத்வேகம் மூலம் பல விதமான சவால்களை கையாள்வீர்கள். குழந்தைகள் தங்கள் படிப்பிலோ, வேலையிலோ பிரமாதமாக பிரகாசிப்பார்கள். மாணவர்களுக்கு மிகவும் சிறப்பான காலம் இது. சிறிய பயணம் மேற்கொள்வீர்கள். பண சேகரிப்பதில் மும்முரமாக இருப்பீர்கள்.
வியாழக்கிழமை தோறும் அரச மரத்திற்கு ஜலம் அர்ப்பணம் செய்யுங்கள். மரத்தை தொடாமல் சுற்றி வருதல் பயன் தரும்.
உங்களால் முடிந்த அளவு கோ சேவை செய்யுங்கள்.
விருச்சிகம் (Viruchigam)

பண தட்டுப்பாடு, வீண் விரையம், தன நாசம் போன்ற பிரச்னைகள் அடிக்கடி தலைதூக்கும். ராசிநாதன் வருடத்தின் பாதிக்கு மேல் சமயம் ராகு-கேதுவிற்கு மத்தியில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியம் கெடும் மற்றும் மன உளைச்சல் அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்தபடி வாழ்க்கை நிகழ்வுகள் நடக்காதலால் ஏமாற்றம் கலந்த கோவம் உங்களுக்குள் நிறைய இருக்கும். எந்த விஷயத்திலும் நிதானம் உங்களுக்கு நன்மை தரும். வெளிநாட்டு கல்வி விரும்புகிற மாணவர்களுக்கு இது ஒரு அனுகூலமான நேரம்.
படிப்பில் கவனம் சிதறாமல் பார்த்துக்கொள்ளவும். தாம்பத்திய உறவில் கவனம் செலுத்துங்கள். தந்தையுடனும், வீட்டில் இருக்கும் பெரியவர்களுடனும் உறவு கெடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். உத்யோகத்தில் இருப்பவர்கள் தங்கள் வேலையில் வரும் சவால்களை தைர்யமாக சந்தித்து முன்னேற வழி தீருவார்கள்.
சிவனுக்கு ஸ்ரத்தையுடன் பூஜை, ஆராதனை செய்யுங்கள். ருத்ராபிஷேகம் சுபம் தரும்.
ஆலமரத்தின் வேர்களின் மேல் பால் கலந்த ஜலம் ஊற்றுங்கள்
தனுசு (Dhanusu)
தனுசு குரு கிரஹத்தை ராசிநாதன் ஆக கொண்டிருக்கும் தனுசு ராசிக்காரர்களே, சில விஷயங்களை தவிர்த்து இந்த வருடம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். ஜென்மத்தில் சனி, 2இல் கேது, 8இல் ராகு மற்றும் 11ஆம் வீட்டில் குரு சஞ்சரிக்கிறார்கள். வாழ்க்கையில் மேலும் மேலும் வளருவதற்கு நிறைய வாய்ப்புகள் வரும். பண வரவு இருந்து கொண்டே இருக்கும்.
இரண்டுக்கும் மேற்பட்ட வருவாய் ஆதாரங்கள் உள்ளன. கடினமாக உழைக்கவும் செய்வீர்கள். அளவுக்கு அதிகமாக எதுவும் நல்லதில்லை. ஆதலால் அதிகமாக வேலைப்பளு எடுத்துக்கொண்டு வாழ்க்கையில் மற்ற முக்கிய விஷயங்களை புறக்கணிக்காதீர்கள். உங்கள் அணுகுமுறை மற்றும் பேசும் தோரணையினால் குடும்பத்திலும், வேலை செய்யும் இடத்திலும் பிரச்னைகள் உருவாகலாம்.
வேலை செய்யும் பரபரப்பில் உங்கள் உடல் நலத்தின் மேல் கவனக்குறைவாக இருக்காதீர்கள். வருட முடிவில் இது உங்களுக்கு ஒரு பெரிய பிரச்னையாக உருவெடுக்கும். தொழில்-நுட்ப-ரீதியாக படிக்கும் மாணவர்களுக்கு நல்ல காலம். அவ்வப்போது வரும் இடையூறுகளை கவனித்து கொண்டீர்களானால், உங்கள் குடும்ப வாழ்க்கை அமைதியாக இருக்கும்.
சனிக்கிழமை தோறும், சாயங்கால சமயம், அரச மரத்தின் அருகில் எண்ணெய் விளக்கு ஏற்றி வழிபடவும்.
உங்கள் எடைக்கு சரிசமமான சப்த-தான்யங்கள் தானம் செய்யவும்.
மகரம் (Magaram)

உடல் ஆரோக்கியக்குறைவும், பண தட்டுப்பாடும் எதிர்பாராத விதமாய் உங்களுக்கு தொல்லை கொடுக்கலாம். வெளிநாடு மூலம் உங்களுக்கு பல விதத்தில் ஆதாயம் கிடைக்க இருக்கிறது. இருந்தாலும் சாமான்ய வாழ்க்கை விட ஆன்மீகத்திலும் தார்மீகத்திலும் உங்கள் சாய்வு அதிகம் இருக்க காண்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் உங்கள் அதிகாரம் ஓங்கும், ஆனால் அது உங்களை சர்சையிலோ, விவாதத்திலோ கொண்டு போகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
மேல் அதிகாரிகளின் ஆதரவும், சஹாயோகமும் உங்களுக்கு நிச்சயம் உண்டு. குடும்ப வாழ்க்கையில் சில பிரச்னைகள் திடீரென கிளம்பினால் கூட, நிம்மதி காண்பீர்கள். தாம்பத்திய உறவில் சற்று நிதானமாக விவரங்களை கவனிக்கவும். சண்டை-சச்சரவுக்கு இடம் தராதீர்கள். வருட இறுதியில் கணவன்-மனைவி உறவில் நெருக்கம் அதிகமாகும். சுய முன்னேற்றத்திற்கு ரொம்பவே நல்ல வருடம் இது.
தினமும் கணபதி அதர்வஸீர்ஷ ஸ்தோத்ர பாராயணம் செய்யவும். கணேஷ் பூஜை உகந்தது.
அன்ன தானம், பக்ஷிகளுக்கு தான்யம் போடுவது, தெரு நாய்களுக்கு ரொட்டி-பிஸ்கெட் துண்டங்கள் போடுவது உங்களுக்கு நன்மை தரும்.
கும்பம் (Kumbam)

பணம் சம்பாதிப்பதிலும், சேகரிப்பதிலும் உங்கள் கவனம் முழுவதும் செலுத்துவீர்கள். வெகு தூர பிரயாணம் உங்களுக்கு சாதகமாக முடியும். வாழ்க்கையை நன்றாக அனுபவிப்பீர்கள். ஆன்மீகம் உட்பட, எல்லா விஷயத்திலும் ஆர்வம் காண்பிப்பீர்கள். தார்மீக காரியங்களில் ஈடுபாடு பெருகும். மேல் அதிகாரிகள் இடமிருந்து பாராட்டும் புகழும் பெறுவீர்கள்.
தாம்பத்திய உறவில் அன்பும், ஒருதொருக்கு ஒருவர் புரிந்து கொள்ளுதலும், கேளிக்கை விஷயங்களில் ஜோடியாக சேர்ந்து கொண்டு இன்பம் அனுபவிக்கிறதுமாய் இந்த வருடம் கழியும். குழந்தைகள் அவர்கள் வாழ்க்கையில் சந்தோஷமாய் முன்னேறுவார்கள். காதலர்கள் ஆரம்பத்தில் சிரமங்களை சந்தித்தாலும், புரிந்து கொண்டு சந்தோஷமாக இருப்பார்கள். எதிர்ப்புகளும், தடைகளும் உங்களை அசைக்க முடியாது. சகல சுகத்தையும் பெற்று ஆடம்பரமாக வாழ்வீர்கள்.
தான தர்மம் செய்யுங்கள். வாழ்க்கையில் அவதி படுகிறவர்களுக்கு உங்களால் முடிந்த உதவி செய்யவும்.
லட்சுமி-நாராயண பூஜை செய்யுங்கள்.
மீனம் (Meenam)

வருடம் முழுவதும் உங்கள் உடல் நலனிலும், ஆரோகியத்திலும் கவனம் செலுத்தவேண்டியது மிகவும் அவசியம். செய்யும் வேலையில் உங்கள் கவனம் முழுவதும் இருக்கும், ஒரு வெறியில் கார்யம் செய்வீர்கள். இதன் விளைவு, உங்கள் உடல் அசௌகர்யப்படலாம் மற்றும் அந்தரங்க வாழ்க்கை குலையலாம். வேலை செய்யும் இடத்தில் அதிகாரிகள் கடுமையான உழைப்பை எதிர்பார்க்கலாம்.
சக ஊழியர்கள் ஆதரவு, சஹயோகம் உங்களுக்கு கிட்டாமல் இருந்தாலும், பொறுமையாய் இருங்கள். அலை பாயும் மனதை ஒரு நிலையில் வைத்து கார்யம் செய்யவும். குழந்தைகளுக்கு உங்கள் அன்பும், அதைவிட முக்கியம், உங்கள் வழிகாட்டலும் அவசியம். வருட இறுதியில் உங்கள் வாழ்க்கையில் சிறப்பான திருப்பங்கள் வரும். அதுவரைக்கும் நிலமையையம், பிரச்னைகளையும் சமாளியுங்கள். பண வரவு சீராக இருக்கும். வேண்டாத அலைச்சலை தவிர்க்கவும்.
மஹா விஷ்ணுவிற்கு சந்தன அபிசேகம் அல்லது சந்தன திலகமிட்டு பூஜை செய்யவும்.
வியாழக்கிழமை விரதம் நன்மை தரும். அன்று மட்டும் வாழைப்பழத்தை உட்கொள்ளாமல், நெய்வேத்தியமாக பகவானுக்கு அர்ப்பணித்து, ப்ரசாதமாய் உட்கொள்ளவும்.
Saturday, December 30, 2017
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2018
https://trb-tntet-tnpsc.blogspot.in
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2018
இந்த புத்தாண்டு அனைத்து
செல்வ வளங்களும் நிறைந்த
வருடமாய் அமைய
வாழ்த்துக்கள் தோழமைகளே .....
இன்பமும் இன்னல்களும்
இல்லா வாழ்க்கை இல்லை நமக்கு .....
கடந்து சென்ற நாட்களில்
துக்கம் அனைத்தும்
கதிரவனை கண்ட
பனித்துளிகளாய் மறைய வாழ்த்துக்கள் .....
தினம் தினம்
முகத்தில் புன்னகை
என்னும் மலர்கள் மலரட்டும் .....
அனைத்து உறவுகளுக்கும்
அனைத்து வளங்களும் கிடைக்க
வாழ்த்துக்கள் தோழமைகளே .....
By R.MURUGAN.Msc.B.ed
Dhirumapuri
Wednesday, December 13, 2017
2018-ம் ஆண்டு நடைபெற உள்ள 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
2018-ம் ஆண்டு நடைபெற உள்ள 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் மன அழுத்தம் இல்லாமல் தேர்வு எழுதவே முன்கூட்டியே தேதி அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
12ம் வகுப்பு தேர்வு விவரம்
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 2018 மார்ச் 1-இல் தொடங்கி ஏப்ரல் 6 வரை நடைபெறும். தேர்வு முடிவுகள் மே 16ம் தேதி வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மார்ச் 1 - தமிழ் முதல்தாள்
மார்ச் 2 - தமிழ் 2ம் தாள்
மார்ச் 5 - ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் 6 - ஆங்கிலம் 2ம் தாள்
மார்ச் 9 - வணிகவியல், மனை அறிவியல், புவியியல்
மார்ச் 12 - கணிதம், விலங்கியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து, உணவியல்
மார்ச் 15 - அரசியல் அறிவியல், நர்சிங், புள்ளியியல், தொழிற்பிரிவு
மார்ச் 19 - இயற்பியல் மற்றும் பொருளியல்
மார்ச் 26 - வேதியியல், கணக்கு பதிவியல்
ஏப்ரல் 2 - உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம்
ஏப்ரல் 6 - இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், உயிரிவேதியியல், தமிழ்சிறப்பு பாடம்
11ம் வகுப்பு தேர்வு விவரம்
11ம் வகுப்பு பொதுத்தேர்வு 2018 மார்ச் 7ல் தொடங்கி ஏப்ரல் 16ல் முடிவடையும். தேர்வு முடிவுகள் மே 30ம் தேதி வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மார்ச் 7 - தமிழ் முதல்தாள்
மார்ச் 8 - தமிழ் 2ம் தாள்
மார்ச் 13 - ஆங்கிலம் முதல்தாள்
மார்ச் 14 - ஆங்கிலம் 2ம் தாள்
மார்ச் 20 - கணிதம், விலங்கியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து, உணவியல்
மார்ச் 23 - வணிகவியல், மனை அறிவியல், புவியியல்
மார்ச் 27 - இயற்பியல் மற்றும் பொருளியல்
ஏப்ரல் 3 - வேதியியல், கணக்கு பதிவியல்
ஏப்ரல் 9 - உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம்
ஏப்ரல் 13 - இந்திய கலாச்சாரம், தகவல் தொடர்பு ஆங்கிலம், கணினி அறிவியல், உயிரிவேதியியல், தமிழ்சிறப்பு பாடம்
ஏப்ரல் 16 - அரசியல் அறிவியல், நர்சிங், புள்ளியியல், தொழிற்பிரிவு
10ம் வகுப்பு தேர்வு விவரம்
10ம் வகுப்பு பொதுத்தேர்வு 2018ம் மார்ச் 16ல் தொடங்கி ஏப்ரல் 20ம் தேதி முடிவடையும்.தேர்வு முடிவுகள் மே 23ம் தேதி வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மார்ச் 16 - தமிழ் முதல்தாள்
மார்ச் 21 - தமிழ் முதல்தாள்
மார்ச் 28 - ஆங்கிலம் முதல்தாள்
ஏப்ரல் 4 - ஆங்கிலம் இரண்டாம் தாள்
ஏப்ரல் 10 - கணிதம்
ஏப்ரல் 12 - விருப்பமொழிப் பாடம்
ஏப்ரல் 17 - அறிவியல்
ஏப்ரல் 20 - சமூக அறிவியல் .
TNSET-2018 | TNSET-2018 தேர்வுக்கான அறிவிப்பினை அன்னை தெரேசா மகளிர் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
TNSET-2018 | TNSET-2018 தேர்வுக்கான அறிவிப்பினை அன்னை தெரேசா மகளிர் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.விண்ணப்பிக்க கடைசி நாள் : 09.02.2018. தேர்வு நாள் : 04.03.2017
TNSET-2018 NOTIFICATION | TNSET-2018 தேர்வுக்கான அறிவிப்பினை அன்னை தெரேசா மகளிர் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.விண்ணப்பிக்க கடைசி நாள் : 09.02.2018. தேர்வு நாள் : 04.03.2017 | TAMILNADU STATE ELIGIBILITY TEST (TNSET 2018) | Nodal Agency - Mother Teresa Women's University-Kodaikanal The Candidates applying Online for TNSET-2018 EXAM should have the following readily available for Entering/Uploading to submit Application. 1. The Mobile No. that will be provided for registering - Ensure you have it in hand to receive OTP. Once the Mobile No. given is registered, it can not be changed. Please do not use any other's Mobile No. 2. Valid Email ID must be provided mandatorily. 3. Scanned image of Passport size photograph in JPG format of minimum 4kb to 40 kb. The dimension of the photograph should be 3.5 cm (width) x 4.5 cm (height). 4. Scanned image of Signature in JPG format of minimum 4kb to 30 kb. The dimension of the signature should be 3.5 cm (width) x 1.5 cm (height). 5. Aadhaar Card No. (optional) if available
Sunday, December 3, 2017
TNPSC GROUP 4 VAO
1. பள்ளிப் பாடப்புத்தகங்கள் :
i) பொதுத்தமிழ் - 6-10 வரையிலான தமிழ் பாடப்புத்தகங்கள்
ii) வரலாறு, புவியியல் - 6-10 வரையிலான சமூக அறிவியல் பாடப்புத்தகங்கள்
iii) அறிவியல் - 6-10 வரையிலான பாடப்புத்தகங்கள்
iv) கணிதம் - 7-10 வகுப்பிலுள்ள அளவியல் பாடப்பகுதிகள்
vi) பொருளாதாரம் -6,7,8,9,10 மற்றும் 11 ஆம் வகுப்புகள்
vii) அரசியல் அறிவியல் - 6-10 வரையிலான குடிமையியல் பகுதிகள், 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் புத்தகம்
குறிப்பு : உங்களிடம் மேற்கூறிய அனைத்து பள்ளிப்பாடப் புத்தகங்களும் இல்லையென்றாலும் கவலைப்படத் தேவையில்லை, http://www.textbooksonline.tn.nic.in/Default.htmஎன்ற தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்தின் இணைய தளத்திலிருந்து அனைத்து புத்தகங்களையும் உங்கள் மொபைல் , டேப்ளட் அல்லது கணிணியில் டவுண்லோடு செய்து கொண்டு, படித்து குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.
2. நடப்பு நிகழ்வு குறிப்புகள் : நடப்பு நிகழ்வுக் குறிப்புகள்
3. அறிவுக்கூர்மை : R.S.Agarwal - Quantitative Aptitude Book (ஆங்கிலம் புரிந்து கொள்ள இயலுமென்றால்), இல்லையெனில் தமிழில் வெளிவந்திருக்கும் கணியன், சக்தி போன்றவற்றில் ஏதேனும் புத்தகங்களைப் படிக்கலாம். முடிந்த வரை டி.என்.பி.எஸ்.சி முந்தைய தேர்வுகளில் கேட்கப்ப்ட்டிருக்கும் திறனறிவு தொடர்பான வினாக்களை பயிற்சி செய்வது அவசியம்.
4. பொது அறிவுப் பகுதி : Arihant General Knowledge Book குறிப்பாக கடைசி 80 பக்கங்களிலுள்ள தகவல்கள் பொது அறிவு சம்பந்தமான கேள்விகளுக்கு தயாராக உதவியாக இருக்கும். ஆங்கிலம் புரிந்து கொள்ள இயலவில்லையெனில், விகடன் பொது அறிவு களஞ்சியம் அல்லது மனோரமா இயர்புக் ஏதேனும் ஒரு புத்தகத்தைப் படிக்கலாம். மேலும் பொருளாதாரம், அரசியல் அறிவியல் மற்றும் புவியியல் பகுதிகளையும் இப்புத்தகங்களிலிருந்து படிக்கலாம்.
5. TNPSC முந்தைய தேர்வு வினாத்தாள்கள் - உங்களால் இயன்ற வரையில் முந்தைய VAO, Group IV போன்ற எஸ்.எஸ்.எல்.சி தரத் தேர்வுகளின் வினாத்தாள்களைப் பயிற்சி செய்யுங்கள்.
Subscribe to:
Posts (Atom)