TRB,TNTET,TNPSC online coching

Search This Blog

NEWS

https://trb-tntet-tnpsc.blogspot.in/வழங்கும் இலவச இணையதள பயிற்சிக்கு உங்களை வரவேற்கிறோம்.தன்னம்பிக்கை, விடா முயற்சி , கடின உழைப்பு. எந்த சோதனைகள் வந்தாலும் உங்கள் இலட்சியத்தை விட்டு விடாதீர்கள். "சரியான முயற்சியும் பயிற்சியும் இருந்தால் உங்களால் முடியாத ஒன்றுமே இல்லை" என்ற நம்பிக்கை உங்கள் ஒவ்வொருவரின் மனதிலும் நிறைந்திருக்க வேண்டும். அதற்காக எங்கள் இணைய தளத்தின் மூலம் எங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வோம்.பயிற்சி நிறுவனங்களுக்கு சென்று பயிற்சி பெற இயலாத வேலைதேடும் இளைஞர்கள், பணிபுரிபவர்கள், இல்லத்தரசிகள் தங்களது அரசு வேலை கனவுகளை நனவாக்குவதற்காகவே இந்த இணையதளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. TET ன் புதிய பாடத்திட்டத்திற்கேற்ப ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட பாடப்பகுதிகளில் வாரத்தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த வாரத்தேர்வின் முடிவுகள் உங்கள் பெயருடன் இந்த இணையதளத்தில் வெளியிடவும் முடிவு செய்துள்ளோம்.

Sunday, October 30, 2016

ஒரே ஒரு முறை உங்கள் கடைசி காலத்தை நினைத்துபாருங்கள்!

உறவு முறைகள்* *பற்றி* 👈

*மிகவும் சிந்திக்கவேண்டிய*
*one of the BEST பதிவு*

~~~~~~~~~~~~~~~~~~~

*அண்ணன், தம்பி, அக்கா,* *தங்கை, சின்ன அண்ணன்,* *பெரிய அண்ணன், சின்ன அக்கா,* *பெரிய அக்கா,*
*சித்தப்பா, பெரியப்பா, அத்தை, மாமா, மச்சான்,* *மச்சினி, அண்ணி, கொழுந்தனார், நாத்தனார்,* *தாய்மாமன், சித்தப்பா பையன், சித்தப்பா பொண்ணு,*
*பெரியப்பா பையன்,*
*பெரியப்பா பொண்ணு,*
*அத்தை பையன்,*
*அத்தை பொண்ணு,* *மாமன்* *பொண்ணு,*
*மாமன் பையன்,*

இது போன்ற வார்த்தைகள் எல்லாம் 2050 மேல் யாருடைய காதிலும் விழாது,

யாரும் கூப்பிடவும் மாட்டார்கள்,

அகராதியில் இருந்து கூட கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவிடும்

👉 *காரணம், . . .*

ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு என்று ஒரே ஒரு குழந்தை மட்டும் போதும் என்று முடிவெடுக்க ஆரம்பித்ததுதான்!

அப்படி இருக்கும் போது இந்த உறவுகள் எல்லாம் எப்படி வரும்?

பெண்கள் வயதுக்கு வந்ததும் சீர்வரிசை செய்யவோ, பந்தல் போடவோ, முதல் புடவை எடுத்துத்தரவோ, எந்த தாய்மாமனும் இருக்கப்போவது இல்லை!

திருமணத்தின் போது அரசாணைக்கால் நட
எந்த அண்ணனும் இருக்கப்போவதில்லை,

மாப்பிள்ளைக்கு மோதிரம் போட எந்த தம்பியும் இருக்கப்போவதில்லை,

குழந்தைக்கு மோட்டை போட யார் மடியில் உட்கார வைப்பார்கள்?

கட்டிக்கொடுத்த பெண்ணுக்கு எதாவது பிரச்சனை என்றால் அண்ணனும் தம்பியும் பறந்து செல்வார்கள்,

👉 *இனி யார் போவார்?*

ஒவ்வொரு பெண்ணும், சொந்தபந்தம் ஏதுமின்றி
ஆறுதலுக்கு ஆள் இன்றி தவிக்க போகிறார்கள்

ஒவ்வொரு ஆணும்
தன் கஷ்டநஷ்டங்களில் பங்குகொள்ள அண்ணன் தம்பி யாருமின்றி அவதிப்பட போகிறார்கள்.

அப்பா அம்மாவை தவிர எந்த உறவுகளும் இருக்கப்போவதில்லை,

அந்த ஒரு குழந்தையும்
வெளியூருக்கோ
இல்லை தனிக்குடித்தனமோ சென்றுவிட்டால், . . .
ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று வளர்த்தவர்கள் எல்லாம் வயதான காலத்தில், ஏனென்று கேட்க நாதியற்று முதியோர் இல்லத்திலோ இல்லை அந்த ஒரு குழந்தைக்காக கட்டிய வசதியான வீட்டிலோ அனாதையாக கிடந்து சாவார்கள்!

உறவுகளின் உன்னத மதிப்பை உணராமல் பொருளாதார முன்னேற்றத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு
ஒரு குழந்தைக்கு மேல் வேண்டாம் என சோம்பேறித்தனப்பட்டு
எந்திர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கும் அத்தனைபேருக்கும்
இதே நிலைதான் !

உடல்நிலை சரியில்லாமல் ஆஸ்பிடலில் சேர்க்கப்பட்டால் ஓடோடி வந்து பார்க்க உறவுகள் வேண்டாமா?!

சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம்
எனக்கு உனக்கு என்று சண்டைபோடும் அதே குழந்தைகள் தான், . . .

வயதான காலத்தில் அப்பா அம்மாவுக்கு எதாவது ஒன்று என்றால் நான் நீ என்று ஓடிவருவார்கள்!

கணவன் குடும்பம் குழந்தை என்று உயிரைவிட்ட பெண்கள் கூட பெற்றோருக்கு
ஒன்று என்றால் அத்தனையும் தூக்கியெறிந்துவிட்டு முதலில் வந்து நிற்பார்கள்!

ஒரே ஒரு முறை உங்கள் கடைசி காலத்தை நினைத்துபாருங்கள்!

பணமில்லாத ஒருவனை அனாதை என்று யாரும் சொல்வதில்லை!

*ஆனால் உறவுகள் இல்லாத ஒருவன் எத்தனை கோடி வைத்திருந்தாலும் அனாதைதான் என்பதை மறந்துவிடக்கூடது!*

கார் பங்களா வசதி வாய்ப்புகளுடன்
ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்ற பெயரில் உறவுகளற்ற ஒரு அனாதையை வளர்ப்பதற்கும்,

*வயதான காலத்தில் நாதியற்று சாவதற்குமா இவ்வளவு பாடுபட்டு, . . .*

               😳👇😟

*ஓடி ஓடி சம்பாதிக்கிறீர்கள்?*

Thursday, March 3, 2016

Syllabus for the Target TNTET 2016- Free Online Coaching Test - 1


Test Date : 13-03-2016 ( Sunday ),End test  19-03-2016





Syllabus  

  1. 6th Std Science   -முதல் பருவம்,2,3 பருவம் -full Syllabus

Thursday, February 4, 2016

ஜிகா வைரஸ் - புதிய அபாயம்!



 உலக நாடுகளைத் திகிலடைய வைத்திருக்கிற ஜிகா வைரஸ் மருத்துவத் துறைக்குப் பெரும் சவால் மக்களின் ஆரோக்கியத்தைக் காப்பதற்கு நாளொரு மருந்தும் பொழுதொரு கருவியும் நடைமுறைக்கு வருகிறது என்றாலும், மருத்துவத் துறைக்குச் சவால் விடுவதைப் போல, அவ்வப்போது புதிய நோய்கள் ஏற்படுவதையும் உலக அளவில் தடுக்க முடியவில்லை. 
 
         கடந்த ஆண்டில் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலாவும் மெர்ஸ் நோயும் பரவி, உலக நாடுகளை ரொம்பவே அச்சுறுத்தியது. இந்த ஆண்டில் தென்அமெரிக்கா, வடஅமெரிக்கா, கரீபியன் பகுதிகளில் பரவி வரும் ‘ஜிகா’ எனும் புதிய வைரஸ் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்திலும் பரவிவிடுமோ என்கிற அச்சத்தை உண்டுபண்ணியுள்ளது. காட்டில் பிறந்த வைரஸ் டெங்கு வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது ஜிகா வைரஸ். இது ஏற்படுத்துகிற நோய்க்கு ஜிகா வைரஸ் நோய் (Zika virus disease) என்று பெயர். முதன்முதலில் உகாண்டா நாட்டில் ஜிகா காடுகளில் வாழ்ந்த ‘ரீசஸ் மக்காக்’ (Rhesus macaque) எனும் குரங்குகளிடம் இந்த நோய் காணப்பட்டதை 1947-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ‘மஞ்சள் காய்ச்சல் ஆராய்ச்சி நிறுவன’த்தின் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். அப்போது அவர்களுக்கு இந்த நோய்க்கான காரணம் தெரியவில்லை. 1952-ம் ஆண்டில் இந்த நோயால் பாதிக்கப்பட்ட குரங்குகளின் ரத்த மாதிரியிலிருந்து ஜிகா வைரஸைப் பிரித்தெடுத்து, நோய்க்கான காரணத்தை உறுதி செய்தனர். ஜிகா காடுகளில் இந்த வைரஸ்கள் காணப்பட்டதால், இவற்றுக்கு ‘ஜிகா வைரஸ்’ என்று பெயரிட்டனர். ஆரம்பத்தில் இது ஒரு விலங்கின நோய் என்றுதான் கருதப்பட்டது. ஆனால், இது குரங்குகளிடமிருந்து மனிதர் களுக்கும் பரவக்கூடியது என்பதை 1968-ல் நைஜீரியாவில் வாழ்ந்த ஒரு நோயாளியிடம் கண்டுபிடித்தனர். 1951-க்கும் 1981-க்கும் இடைப்பட்ட காலத்தில் உகாண்டா, கேபான், சியாரா லியோன், மத்திய ஆப்பிரிக்கா, தான் சானியா, காங்கோ உள்ளிட்ட பல ஆப்பிரிக்க நாடுகளில் அவ்வப்போது இந்த நோய் பரவுவதும், இடையிடையே பதுங்குவதுமாக இருந்தது. சமீபத்தில் இது ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமல்லாமல், அமெரிக்காவில் பிரேசில் உள்ளிட்ட பல பகுதிகளில் இது வேகமாகப் பரவிவருவதால், ஊடகங்களின் தலைப்புச் செய்தியாகிவிட்டது. டெங்கு, சிக்குன்குனியா கிருமிகளைப் பரப்புகிற ‘ஏடஸ் எஜிப்தி’ (Aedes Aegypti) எனும் கொசுக்கள்தான் ஜியா கிருமிகளையும் மக்களுக்குப் பரப்பிவருகின்றன. இந்தக் கொசுக்கள் கடித்த ஒரு வாரத்தில் நோய் தொடங்கிவிடுவது வழக்கம். இது தவிர, கர்ப்பிணியிடமிருந்து குழந்தைக்கும் பரவுகிறது. இந்தக் கிருமி உள்ளவர்கள் ரத்ததானம் செய்தால் அதன் மூலமும் மற்றவர்களுக்குப் பரவ வாய்ப் புள்ளது. தாம்பத்திய உறவு மூலமும் இது பரவக்கூடியது. அறிகுறிகள் என்ன? ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டவருக்கு முதலில் மிதமான காய்ச்சல் வரும். மூட்டுவலி கடுமையாக இருக்கும். தலைவலி தொல்லை தரும். கண்களில் எரிச்சல் ஏற்படும். ஒவ்வாமை ஏற்படும்போது சொறிந்தால் தோல் சிவப்பதைப் போல உடலெங்கும் சிவப்பு நிறத் தடிப்புகள் உண்டாகும். கண்கள் இரண்டும் ஆப்பிள் பழம்போல் சிவந்துவிடும். இதுதான் இந்த நோயை இனங்காட்டும் முக்கிய அறிகுறி. இதுவரை சொன்ன அறிகுறிகளில் கண்கள் சிவப்பது தவிர, மற்றவை எல்லாமே சாதாரண வைரஸ் காய்ச்சலிலும் தோன்றும் என்பதால் பலரும் இந்த நோயை அலட்சியப்படுத்திவிடுகிறார்கள். ஆபத்து எப்போது? இந்த நோய் ஏற்பட்டவர்களில் ஐந்தில் ஒருவருக்கு மூளை பாதிக்கப்படுகிறது. ‘கில்லன் பாரி நோய்’ (Guillain - Barre Syndrome) என்று அழைக்கப்படுகிற நரம்புவாதம் ஏற்பட்டு, உடல் முழுவதும் செயலிழந்து முடமாகிவிடுகின்றனர். சமயங்களில் இது இறப்புக் கும் வழிவகுக்கும். இது கர்ப்பிணிகளைத் தாக்கி னால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் பல குறைபாடுகளுடன் பிறக்கின்றன. அவற்றில் முக்கிய மானது சிறிய தலையுடன் (Microcephaly) பிறக்கிற குழந்தைகள். இவர்களுக்கு மூளை வளர்ச்சி தடுக்கப்படுகிறது; மத்திய நரம்பு மண்டலம் வேலை செய்வதில்லை; இந்தக் குழந்தைகள் அறிவு வளர்ச்சி இல்லாமலேயே வாழ வேண்டிய நிலைமைதான் இந்த நோயின் உச்சகட்டக் கொடூரம். என்ன பரிசோதனை? என்ன சிகிச்சை? டெங்கு காய்ச்சலைக் கண்டறிய உதவுகிற ஐ.ஜி.எம். (IgM), ஐ.ஜி.ஜி. (IgG), எலிசா (Elisa), பிசிஆர் (PCR) ஆகிய நவீன ரத்தப் பரிசோதனைகளில் ஜிகா பாதிப்பு இருப்பது தெரிய வரும். எனவே, இந்த நோயை எளிதில் கண்டுபிடித்துவிடலாம். ஆனால், இதற்குச் சிகிச்சை தர மருந்துகளோ, வருமுன் காப்பதற்குத் தடுப்பு ஊசிகளோ, தடுப்பு மருந்துகளோ இப்போதைக்கு இல்லை என்பதுதான் சோகம். உலக நிலவரம் இப்போது அமெரிக்கக் கண்டத்தில் மட்டும் 23 நாடுகளில் சுமார் 40 லட்சம் பேருக்கு இந்த நோய் பரவியுள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் தொற்றுநோய்க் குழு வல்லுநர் மார்கஸ் எஸ்பினால் தெரிவித்துள்ளார். ‘‘பிரேசிலில் மட்டும் இந்த ஆண்டில் 3,893 குழந்தைகள் சிறிய தலையுடன் பிறந்துள்ளனர். கடந்த 5 வருடங்களில் இந்த எண்ணிக்கை 30 மடங்கு அதிகரித்துள்ளது என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. இது மருத்துவத் துறைக்குப் பெரும் அதிர்ச்சியளிக்கிற புள்ளிவிவரம்’’ என்கிறார் அவர். இந்தியாவில் என்ன நிலவரம்? தென்அமெரிக்க நாடுகளில் இருந்து தாய்லாந்து, மாலத்தீவு உள்ளிட்ட பல நாடுகளுக்கு ஜிகா வைரஸ் பரவியுள்ளதை அண்மையில் கண்டுபிடித்துள்ளனர். இந்த நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து செல்பவர்கள் அதிகம். அதுபோல் அங்கிருந்து இந்தியாவுக்கு வருகிறவர்களும் அதிகம். அப்போது அவர்கள் ரத்தத்தில் ஜிகா வைரஸைச் சுமந்து வரக்கூடும். இந்த நோயைப் பரப்புகிற ‘ஏடஸ் எஜிப்தி’ கொசுக்கள் இந்தியாவில் நீக்கமற நிறைந்துள்ளன. குறிப்பாக, தமிழகத்தில் இந்தக் கொசுக்கள் இல்லாத ஊரே இல்லை என்று சொல்லலாம். இவை டெங்குவைப் பரப்புகிற வேகத்தில் ஜிகாவையும் பரப்பினால் பெரிய ஆபத்து நேரும் என்று உலக சுகாதார நிறுவனமே எச்சரித்துள்ளது. இதைத் தொடர்ந்து மத்திய சுகாதாரத் துறை இந்தி யாவில் ஜிகா பாதிப்பு குறித்து கண்காணிக்க மருத்துவக் குழுவை நியமித்துள்ளது. இந்த நோய்க் கான பரிசோதனை வசதிகளை பூனாவில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜியில் ஏற்பாடு செய்துள்ளது. தற்போதைக்கு வெளிநாட்டுப் பயனாளிகள், குறிப்பாக கர்ப்பிணிகள் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என்று எச்சரித்துள்ளது. கொசுக்களை ஒழிப்பதுதான் இந்த நோயைத் தடுக்கும் ஒரே வழி என்பதால், சுத்தமான தண்ணீரில் வளரக்கூடிய ஏடஸ் கொசுக்களை அழிக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு செய்துவருகிறது. உலக நாடுகளைத் திகிலடைய வைத்திருக்கும் ஜிகா வைரஸின் கோர முகத்தைத் தெரிந்துகொண்டு, அதன் பிடியிலிருந்து மக்களைப் பாதுகாக்க தமிழக அரசும் தகுந்த தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதுதான் நம் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

5 நிமிடத்தில் ஆதார் கார்டில் உள்ள பிழைகளை திருத்த எளிய முறை!



5 நிமிடத்தில் ஆதார் கார்டில் உள்ள பிழைகளை திருத்த எளிய முறை!
ஆதார் கார்டில் பிழைகளை திருத்த எளிய முறை..!
ஆதார் கார்டில் பிழைகள் உள்ளதா?
நீங்களே ஆன்லைனில் Edit செய்திடுங்கள்!
5 நிமிடத்தில் மாற்றி கொள்ள வழி இதோ


இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், அந்த மாற்றத்தை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும்.

அதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கும் குறிப்புகளை ஆன்லைனில் அப்டேட் செய்யலாம். அல்லது அந்த குறிப்புகளை தபால் மூலம் அனுப்பலாம்.
ஆதார் கார்டில் உள்ள குறிப்புகளை ஆன்லைன் மூலம் எவ்வாறு மாற்றம் செய்வது?


1. ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் சென்று லாகின் செய்ய வேண்டும்.


2. மாற்றம் செய்ய வேண்டிய குறிப்புகளை அந்த வெப்சைட்டில் அப்டேட் செய்ய வேண்டும்.


3. டாக்குமென்டுகளை அப்லோட் செய்ய வேண்டும்.

ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் செல்வதற்கு முன் உங்களிடம் கண்டிப்பாக மொபைல் எண் இருக்க வேண்டும்.

ஏனெனில் வெப்சைட்டில் ரிஜிஸ்டர் செய்யும் போது அதற்கான பாஸ்வேர்ட் உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்திய குடிமக்கள் தங்களுடைய பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி மற்றும் மொபைல் எண்கள் ஆகியவற்றை இந்த வெப்சைட்டில் அப்டேட் செய்யலாம்.



ஆன்லைனில் ஆதார் கார்டை அப்டேட் செய்ய தேவையான குறிப்புகள்:
1. ஆதார் கார்டு வெப்சைட்டைப் பயன்படுத்த வேண்டும் என்றால் கண்டிப்பாக நீங்கள் மொபைல் வைத்திருக்க வேண்டும்.


2. ஆதார் கார்டு வெப்சைட்டில் சேரும் போது, அந்த வெப்சைட்டில் உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். பின் உங்கள் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். உடனே உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒன் டைம் பாஸ்வேர்ட் (ஒடிபி) அனுப்பி வைக்கப்படும்.


ஒருவேளை நீங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்யவில்லை என்றால், அந்த வெப்சைட்டில் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்யவும். தற்போது மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.


அப்போதுதான் நீங்கள் ஒடிபி பெற முடியும். ஒருவேளை மொபைல் எண்ணைத் தவறவிட்டிருந்தால், உங்கள் அப்டேட்டைத் தபால் மூலம் தான் அனுப்பி வைக்க முடியும்.


3. ஒடிபி கிடைத்தவுடன் அதை வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும்.


4. எந்தந்த குறிப்புகளையெல்லாம் அப்டேட் செய்ய விரும்புகிறீர்களோ, அவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

5. தேர்ந்தெடுத்த குறிப்புகளை, ஆங்கிலம் மற்றும் தாய்மொழியில் அப்டேட் செய்யவும்.


அ. அப்டேட் செய்யப்படும் குறிப்புகளுக்கு தேவையான உறுதிச் சான்றிதழ்களை இணைக்க வேண்டும் என்று வெப்சைட்டில் குறிக்கப்பட்டிருந்தால், அதற்கான சான்றிதழ்களை அப்லோட் செய்ய வேண்டும்.

ஆ. பெயர் மாற்றத்தை அப்டேட் செய்தால், பெயர் மற்றும் உங்கள் தோற்றம் ஆகியவற்றிற்கான உறுதிச் சான்றதழ் மற்றும் உங்கள் புகைப்படம் ஆகியவற்றை அப்லோட் செய்ய வேண்டும்.


இ. பிறந்த தேதியை அப்டேட் செய்யும் போது அதற்கான உறுதிச் சான்றிதழையும் அப்லேட் செய்ய வேண்டும்.


6. முகவரியை அப்டேட் செய்யும் போது, புதிய முகவரிக்கான உறுதிச் சான்றிதழை அப்லோட் செய்ய வேண்டும்.


7. தேவையான உறுதிச் சான்றிதழ்களை ஆன்லைனில் அப்லோட் செய்ய முடியவில்லை என்றால் தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்
நீங்களே ஆன்லைனில் Edit செய்திடுங்கள் – 

http://uidai.gov.in/update-your-aadhaar-data.html

காப்பீடு ஒழுங்குமுறை ஆணையத்தில் அதிகாரி பதவி

ஆயுள் மற்றும் பொதுக் காப்பீட்டு நிறுவனங்களை கட்டுப்படுத்தும் அமைப்பான காப்பீடு ஒழுங்குமுறை ஆணையமான இன்சூரன்ஸ் ரெகுலேட்டரி அதாரிடி ஆப் இந்தியா(ஐ.ஆர்.டி.ஏ) காலியாக உள்ள இளநிலை அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த ஆணையம் ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
மொத்த காலியிடங்கள்: 24
பணி: Junior Officer
வயதுவரம்பு: 21 - 35க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பட்டம் மற்றும் ஏ.சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ., ஏ.சி.எஸ்., எல்.எல்.பி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விரிவான விரங்களுக்கு இணையதளத்தை பார்க்கவும்.
தேர்வு செய்யப்படும் முறை:  ஆன்லைன் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500.
எழுத்துத் தேர்வு மையங்கள்: ஐ.ஆர்.டி.ஏ.,வின் இளநிலை அதிகாரி பதவிக்கான தேர்வை தமிழ்நாட்டில் சென்னையிலும், புதுச்சேரியிலும், நாட்டின் பல்வேறு இதர மையங்கள் எழுதலாம்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.irdai.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttps://www.irdai.gov.in/ADMINCMS/cms/frmGeneral_Layout.aspx?page=PageNo2730&flag=1 என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்

யுரேனிய கழகத்தில் மேலாண்மை டிரெய்னி பணி

இந்திய யுரேனியக் கழகத்தில் (Uranium Corporation of India Limited (UCIL)) மேலாண்மை டிரெய்னிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 06/2015
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Deputy General Manager (Accounts) - 01
சம்பளம்: மாதம் ரூ.36,600 - 62,000.
வயது வரம்பு: 31.12.2015 தேதியின்படி 45க்குள் இருக்க வேண்டும்.

பணி: Chief Manager (Accounts) - 01
சம்பளம்: மாதம் ரூ.32,900 - 58,000.
வயது வரம்பு: 31.12.2015 தேதியின்படி 41க்குள் இருக்க வேண்டும்.

பணி: Manager (Accounts) - 01
சம்பளம்: மாதம் ரூ.29,100 - 54,500.
வயது வரம்பு: 31.12.2015 தேதியின்படி 37க்குள் இருக்க வேண்டும்.

பணி: Assistant Manager (Accounts) - 01
சம்பளம்: ரூ.16,400 - 40,500.
வயது வரம்பு: 31.12.2015 தேதியின் 30க்குள் இருக்க வேண்டும்.

பணி: Assistant Manager (EDP) - 02
சம்பளம்: ரூ.16,400 - 40,500.
வயது வரம்பு: 31.12.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

பணி: Management Trainee (CRD) - 01
சம்பளம்: மாதம் ரூ.16,400.
வயது வரம்பு: 31.12.2015 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.

பணி: Management Trainee (Personnel) - 01
சம்பளம்: மாதம் ரூ.16,400.
வயது வரம்பு: 31.12.2015 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.

பணி: Management Trainee (Accounts) - 01
சம்பளம்: மாதம் ரூ.16,400.
வயது வரம்பு: 31.12.2015 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.

பணி: Management Trainee (Environment Engineering) - 01
சம்பளம்: மாதம் ரூ.16,400.
வயது வரம்பு: 31.12.2015 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.

பணி: Management Trainee (Control Research & Development) - 01
சம்பளம்: மாதம் ரூ.16,400.
வயது வரம்பு: 31.12.2015 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.50 இதனை ‘Uranium Corporation of India Limited என்ற பெயருக்கு Jaduguda-ல் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்துச் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.ucil.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ் நகல்களில் அட்டெஸ்ட் பெற்று கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
General Manager(Pers./IRs.)
Uranium Corporation of India Limited,
(A Government of India Enterprise)
P.O. Jaduguda Mines, Distt.- Singhbhum East,
JHARKHAND-832102
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.2.2016.
மேலும் கல்வித்தகுதி, பணி அனுபவம், தேர்ந்தெடுக்கப்படும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.ucil.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Tuesday, January 26, 2016

நம் குடும்பம் TNTET online free coching

http://trb-tntet-tnpsc.blogspot.in வழங்கும் இலவச இணையதள பயிற்சிக்கு உங்களை வரவேற்கிறோம்.தன்னம்பிக்கை, விடா முயற்சி , கடின உழைப்பு. எந்த சோதனைகள் வந்தாலும் உங்கள் இலட்சியத்தை விட்டு விடாதீர்கள். "சரியான முயற்சியும் பயிற்சியும் இருந்தால் உங்களால் முடியாத ஒன்றுமே இல்லை"  என்ற நம்பிக்கை  உங்கள் ஒவ்வொருவரின் மனதிலும் நிறைந்திருக்க வேண்டும்.  அதற்காக  எங்கள் இணைய தளத்தின் மூலம் எங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வோம்.பயிற்சி நிறுவனங்களுக்கு சென்று பயிற்சி பெற இயலாத  வேலைதேடும் இளைஞர்கள், பணிபுரிபவர்கள், இல்லத்தரசிகள் தங்களது அரசு வேலை கனவுகளை நனவாக்குவதற்காகவே இந்த இணையதளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. TET ன் புதிய பாடத்திட்டத்திற்கேற்ப ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட பாடப்பகுதிகளில் வாரத்தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த வாரத்தேர்வின் முடிவுகள் உங்கள் பெயருடன் இந்த இணையதளத்தில் வெளியிடவும் முடிவு செய்துள்ளோம்.

1/03/2016 TET online coaching on ...........Click here