TRB,TNTET,TNPSC online coching

Search This Blog

NEWS

https://trb-tntet-tnpsc.blogspot.in/வழங்கும் இலவச இணையதள பயிற்சிக்கு உங்களை வரவேற்கிறோம்.தன்னம்பிக்கை, விடா முயற்சி , கடின உழைப்பு. எந்த சோதனைகள் வந்தாலும் உங்கள் இலட்சியத்தை விட்டு விடாதீர்கள். "சரியான முயற்சியும் பயிற்சியும் இருந்தால் உங்களால் முடியாத ஒன்றுமே இல்லை" என்ற நம்பிக்கை உங்கள் ஒவ்வொருவரின் மனதிலும் நிறைந்திருக்க வேண்டும். அதற்காக எங்கள் இணைய தளத்தின் மூலம் எங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வோம்.பயிற்சி நிறுவனங்களுக்கு சென்று பயிற்சி பெற இயலாத வேலைதேடும் இளைஞர்கள், பணிபுரிபவர்கள், இல்லத்தரசிகள் தங்களது அரசு வேலை கனவுகளை நனவாக்குவதற்காகவே இந்த இணையதளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. TET ன் புதிய பாடத்திட்டத்திற்கேற்ப ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட பாடப்பகுதிகளில் வாரத்தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த வாரத்தேர்வின் முடிவுகள் உங்கள் பெயருடன் இந்த இணையதளத்தில் வெளியிடவும் முடிவு செய்துள்ளோம்.

Wednesday, November 18, 2015

அதிகரிக்கும் நொறுக்குத்தீனி மோகம்

ரு நாளைக்கு மூன்று வேளை உணவைத் தவிர நாம் என்னென்ன சாப்பிடுகிறோம்?  இந்தக் கேள்விக்கு டீ, காபி, பிஸ்கட், வடை, பஜ்ஜி, முறுக்கு, பானி பூரி, குளிர்பானம்… என நீள்கிறது பதில் பட்டியல். ஒருவேளை அல்லது இரண்டு வேளை உணவை மட்டுமே உட்கொண்டு, காட்டிலும் மேட்டிலும் வேலை செய்தனர் நம் முன்னோர். இன்றோ, கம்ப்யூட்டர் முன்னால் அமர்ந்து வேலை பார்த்தாலுமேகூட, ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை நொறுக்குத் தீனி இல்லாமல் இருக்க முடிவது இல்லை.  இதனால், உடல்பருமன், ரத்தத்தில் கொழுப்பு அளவு அதிகரிப்பு என ஏராளமான பிரச்னைகள். காலை 9 மணிக்கு வயிறு நிரம்ப டிஃபன் சாப்பிடுபவருக்கு, 11 மணி அளவில் வயிறு சிறிது காலியாகிறது. அவர் ஏதேனும் சாப்பிட வேண்டும் என நினைத்து, ஆரோக்கியமான ஆப்பிள் ஜூஸ் அருந்தினாலுமே அதையும் நொறுக்குத்தீனி என்றுதான் கருத முடியும். ஓர் உணவு
வேளைக்கும் இன்னொரு உணவு வேளைக்கும் இடைப்பட்ட நேரத்தில், உடலுக்குக் கட்டாயம் உணவு தேவைப்படும்போது சத்தான ஸ்நாக்ஸ் எதையாவது சாப்பிடுவதில் தவறு இல்லை. ஆனால், வலுக்கட்டாயமாக பிஸ்கட்டையோ, பஜ்ஜியையோ சாப்பிடுவது தவறு. நொறுக்குத்தீனி என்றால் வெறும் முறுக்கு, பஜ்ஜி என்று சுருக்கிவிட முடியாது. நொறுக்குத்தீனிகளில் கலோரிகள் அதிகம். கொழுப்புச் சத்து, மாவுச்சத்து இரண்டும் அதிக அளவில் இருக்கும். தேவை இல்லாத நேரத்தில் சாப்பிடும் எந்த ஓர் உணவையுமே நொறுக்குத்தீனியாகத்தான் கருத முடியும்.
வீட்டில் தயாரிக்கப்படும் நொறுக்குத்தீனிகள்
நாம் சமைக்கும் ஒவ்வோர் உணவுக்கும்  குறிப்பிட்ட ஆயுட்காலம்தான் உண்டு. வீட்டில் தயாரித்து ஒரு வாரமோ, ஒரு மாதமோ பத்திரப்படுத்திச் சாப்பிடும் உணவுகள் அனைத்தும் இந்த வகை நொறுக்குத் தீனிகளே. வீட்டில் செய்த அதிரசம், லட்டு, ஜாங்கிரி, முறுக்கு, காராசேவு முதலானவை இந்த வகையைச் சேர்ந்தவை. இவற்றைத் தேவையற்ற  நேரங்களில் சாப்பிடும்போது, கார்போஹைட்ரேட்   அதிகரிக்கும். இவை கொழுப்பாக மாற்றப்பட்டு சேகரிக்கப்படும். இதனால், உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும்.
பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட நொறுக்குத்தீனிகள்
இவற்றில், செயற்கை நிறமூட்டிகளும் சுவையூட்டிகளும் சேர்க்கப்பட்டிக்கும். இதனால்தான் ஒரு முறை வாங்கிச் சாப்பிட்டால்,   மீண்டும் மீண்டும் வாங்கிச் சாப்பிடத் தூண்டுகின்றன.  இவை நீண்ட காலம் கெட்டுப்போகாமல் இருக்க, பதப்படுத்திகளைச் சேர்க்கின்றனர். மேலும், உடலுக்குக் கெடுதலை ஏற்படுத்தும் பாலிதீன் போன்றவற்றால் பாதுகாக்கப்படுகிறது.
பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளின் ஆபத்துகள் குறித்து, பல ஆய்வுகள் உலகம் முழுவதும் நடந்துகொண்டிருக்கின்றன. பாக்கெட் உணவுகளில் வேதியல் பொருட்கள், உப்புகள், பதப்படுத்திகள், நிறமூட்டிகள் போன்றவை கலக்கப்பட்டிருப்பதால், இவற்றை உண்ணும்போது பல வகையான ஹார்மோன் பிரச்னைகள் வருகின்றன. அதில் மிக முக்கியமானது சர்க்கரை நோய். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் எனப் பலருக்கும் ஹார்மோன் சமச்சீரின்மைப் பிரச்னை  சமீபகாலங்களில் அதிகரிக்க, இந்த உணவுகள் முக்கியக் காரணி.
ஜங் ஃபுட்
பீட்சாவும் பர்கரும் மட்டும் அல்ல, சமோசாவும் பஜ்ஜிகளும் ஜங்க் ஃபுட் தான். பலர் ‘பீட்சா சாப்பிடுவது தவறு’ எனச் சொல்லிக்கொண்டே,  டீக்கடையில் சமோசா, பஜ்ஜிகளை வெளுத்துக் கட்டுவார்கள். பேக்கரிகளில் விற்கப்படும் உணவுகள், ஐஸ்க்ரீம், கேக் என கிட்டத்தட்ட அனைத்து நொறுக்குத்தீனிகளும் ‘ஜங் ஃபுட்’ என்ற வரையறைக்குள் அடங்கிவிடுபவை. அதிக சர்க்கரை, அதிக உப்பு, அதிகக் கொழுப்பு உள்ள உணவுகள் அனைத்துமே ஜங்க் ஃபுட்தான். இதனால்உடல்பருமன்  வருவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. கூடவே, சர்க்கரை நோய் முதல் புற்றுநோய் வரை பல நோய்களும் வருவதற்கான  வாய்ப்புகள்  அதிகரிக்கின்றன.

எண்ணெய் பாதிப்பு
எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள் அனைத்துமே உடலுக்குக் கேடுவிளைவிக்கக்கூடியவைதான். அப்பளம், உளுந்தவடையில் ஆரம்பித்து சிக்கன் ரைஸ், நூடுல்ஸ், காலிஃபிளவர் வறுவல், காளான் ஃபிரை என எல்லாமே பாதிப்பைத் தருபவை. எண்ணெயில் பொரித்த உணவுகள், கெட்ட கொழுப்பை அதிகரிக்கின்றன. ஒரு முறை சூடுபடுத்தப்பட்ட, சமைக்கப் பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் சமையலுக்குப் பயன்படுத்துவதால், புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. எண்ணெயில் பொரித்த சிக்கன், ஃப்ரெஞ்ச் ஃபிரைஸ் போன்றவற்றை அதிகமாகச் சாப்பிடுவதன் காரணமாக, மேலை நாடுகளில் உணவுக்குழாய் பகுதியில் புற்றுநோய் ஏற்படுவது  சர்வசாதாரணம். இந்தியாவிலும் அது போன்ற நிலைமை ஏற்படுவதைத் தடுக்க எண்ணெயில் பொரித்த நொறுக்குதீனிகள் அனைத்தையும் தவிர்ப்பதுதான் நல்லது.
நொறுக்குத்தீனிகள் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வருமா?
நொறுக்குத்தீனிகள் சாப்பிடும் எல்லோருக்கும் சர்க்கரை நோய் வருவது இல்லை. சர்க்கரை நோய் வருவதற்கு உடல் உழைப்பு, உணவுப் பழக்கம் எனப் பல காரணிகள் உள்ளன. அதிக அளவு மாவுச்சத்துள்ள நொறுக்குத்தீனிகளை உண்ணும்போது, இன்சுலின் தேவை அதிகமாகிவிடுகிறது. கெட்ட கொழுப்பு நிறைந்த உணவுகளைச் சாப்பிடும்போது, உடல்பருமன் ஏற்படுகிறது. இந்தக் காரணங்களால் சிலருக்குச் சர்க்கரை நோய் வரக்கூடும். உடற்பயிற்சி இல்லாமல் நொறுக்குத்தீனி சாப்பிடுபவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு இரட்டிப்பாகிறது.
பாரம்பர்ய உணவுமுறை பெஸ்ட்
நொறுக்குத்தீனிகளைக் கண்டிப்பாகச் சாப்பிடவே கூடாது  என முடிவு செய்துவிட வேண்டாம். நம் முன்னோர்கள் ஒவ்வொரு காலத்துக்கும் ஏற்ற மாதிரி உணவு வகைகளைத் தயார்செய்து  சாப்பிட்டார்கள். மழைக்காலத்தில் உடலுக்கு வெப்பம் அதிகம் தேவைப்படும் என்பதால், அதிக கலோரி தேவைப்படும். மேலும், அந்த நேரத்தில், வெளியே போக முடியாது என்பதால், பலகாரங்கள் முதலான தின்பண்டங்களைச் செய்துவைத்துச் சாப்பிட்டனர். பனிக்காலம் முடியும் தருவாயில் பொங்கல் போன்ற அரிசி உணவுகளைச் சாப்பிடுவார்கள். வெயில் காலத்தில் நீர் மோர், பானகம் ஆகியவற்றைப் பருகினார்கள். ஆனால், இன்று எல்லா உணவுப் பொருட்களும் எல்லா நாட்களிலும் கிடைக்கின்றன. வெயில் காலத்தில் ஜாங்கிரியும், மழைக்காலத்தில் தர்பூசணியும் சாப்பிடும் சூழ்நிலைக்கு வந்துவிட்டோம்.
ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஏற்றார்போல உணவு சாப்பிடும் முறையைத் தவிர்த்தது, வழக்கத்தை மாற்றியதுதான் தற்போது பல உடல்நலக் கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கியக் காரணம். எனவே, இனிப்போ, காரமோ எந்த வகை நொறுக்குத்தீனியாக இருந்தாலும் வீட்டில் செய்து எப்போதாவது சாப்பிடுவதில் தவறு இல்லை. தினமும் டீ குடிக்கும்போது பஜ்ஜி சாப்பிட்டே ஆக வேண்டும், தியேட்டருக்குப் போனால் பாப்கார்ன் சாப்பிட்டே ஆக வேண்டும் என நினைத்து, நொறுக்குத்தீனி எதையாவது கொறிப்பதுதான்  தவறு.
மனதைக் கட்டுப்படுத்த முடியாதது ஏன்?
சிலர் ‘நொறுக்குத்தீனி சாப்பிடுவது தவறு எனத்தெரிகிறது. ஆனால், மனதைக் கட்டுப்படுத்த முடியவில்லை’ என்பார்கள். அது உண்மைதான். ஏனெனில், காலம்காலமாக நமது முன்னோர்கள் சிறுதானியங்கள், கம்பு, சோளம் போன்றவற்றையே சாப்பிட்டுவந்தார்கள். அந்தக் காலத்தில் இனிப்புகள், அரிசி உணவுகள் போன்றவை கிடைப்பது அரிது என்பதால், அந்த உணவுகளை சாப்பிட ஏக்கம் இருக்கும். இனிப்பு, கார வகை முதலான நொறுக்குத்தீனிகளைப் பார்த்தாலே ஏன் நினைத்தாலேகூட எச்சில் ஊற ஆரம்பிக்கும். பரம்பரை பரம்பரையாக ஜீன்கள் வழியாக நமக்கும் அந்தப் பழக்கம் தொடர்கிறது. நொறுக்குத்தீனிகளைப் பார்த்தாலோ, முகர்ந்தாலோகூட உடனடியாக மூளையில் எண்டார்பின் எனும் ஹார்மோன் சுரக்க ஆரம்பித்துவிடும். இந்த ஹார்மோன் சுரக்கும் நேரங்களில் மகிழ்ச்சியான உணர்வு பெருகும். எனவேதான் இனிப்பு போன்ற நொறுக்குத்தீனிகளைச் சாப்பிடும்போது, மன நிறைவு கிடைக்கிறது.
மன அழுத்தம் உள்ளவர்கள் ஒரு குலோப்ஜாமூனையோ, ஐஸ்க்ரீமையோ சாப்பிட்டால்கூட நார்மலுக்குத் திரும்பிவிடுவார்கள். அதன் ரகசியம் இதுதான். எனவே, உணவைப் பார்த்தால் உடனே சுவைக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படுவதைத் தவறு எனக் கருத வேண்டாம், ஆனால், அந்த உணர்வைக் கட்டுப்படுத்த முயல வேண்டும். கூடுமானவரை, ஸ்நாக்ஸ், பேக்கரி இருக்கும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும். நொறுக்குத்தீனிகளின் விளைவை கருத்தில் கொண்டு அவற்றைப் புறக்கணிக்க வேண்டும் என்கிற மனநிலையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். யோகா மூலம் மனம் கட்டுப்பாடு அடைகிறது எனக் கருதுபவர்கள், யோகா போன்றவற்றை செய்து, மனதைக் கட்டுக்குள் வைக்கலாம்.
நொறுக்குத்தீனிக்கு மாற்று என்ன?
ஆரோக்கியமான சரிவிகித உணவு கலந்த உணவுப்பழக்கம், காலை உணவைக் கட்டாயம் சாப்பிடுவது, நேரத்துக்கு உணவை உண்பது போன்றவை நொறுக்குத்தீனிகளின் தேவையைக் குறைக்கும்.
வாயில் எதையாவது அரைத்துகொண்டே இருக்க வேண்டும் என விரும்புகிறவர்கள், பொட்டுக்கடலை, பொரி, பாதாம், முந்திரி போன்ற நட்ஸ் வகைகளைச் சாப்பிடலாம்.
பொதுவாக, ஒரு நாளைக்கு 95 சதவிகிதம் உணவை உட்கொள்ள வேண்டும்; 5 சதவிகிதம் மட்டுமே நொறுக்குத்தீனிகளை எடுத்துக்கொள்ளலாம்.
ஓர் உணவு வேளைக்கும், இன்னோர் உணவு வேளைக்கும் இடையில் பழச்சாறு அருந்தலாம். பழச்சாறு அருந்துவதன் மூலம் நொறுக்குத்தீனி சாப்பிடும் உணர்வைக் குறைக்கலாம்.  
 
மாலை வேளைகளில் சுண்டல், பயறு வகைகள், முளைகட்டிய பயறுகள் போன்றவற்றைச் சாப்பிடலாம்.
தியேட்டர், பள்ளி வளாகங்கள், டீக்கடைகள் போன்றவற்றில் பாப்கார்ன், கோலா பானங்கள், பிரெஞ்ச் ஃபிரைஸ், சிப்ஸ்  போன்றவற்றை விற்பதைத் தவிர்த்து, பொரி உருண்டை, வேர்க்கடலை, பொரி போன்றவற்றை விற்பதையும், அவற்றை வாங்கிச் சாப்பிடவும்  ஊக்கப்படுத்தலாம்.
கடலை மிட்டாய், எள்ளு மிட்டாய்  போன்றவை நல்லவையே. எனினும், வெல்லம், எண்ணெய், கடலை, எள் போன்றவை ஒன்று சேரும்போது கலோரி அதிமாகிவிடும். எனவே, இவற்றையும் எப்போதாவது சாப்பிடுவதே சிறந்தது.
பேரீச்சம்பழம், திராட்சை, வாழைப்பழம் போன்றவற்றைச் சாப்பிடலாம்.
நொறுக்குத்தீனிக்குப் பதில் ஃபுரூட் சாலட் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
நொறுக்குத்தீனி கலோரி!
‘ஒரு நாளைக்கு 2,000 கலோரி வரை எடுத்துக்கொள்வது போதுமானது’ என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். காலை, மதியம், இரவு நாம் உட்கொள்ளும் உணவில் இருந்தே 2,000-க்கும் அதிகமான கலோரி கிடைத்துவிடுகிறது. இதற்கிடையே நொறுக்குத்தீனி உட்கொள்ளும்போது, கூடுதலாக எவ்வளவு கலோரிகளைச் சேர்க்கிறோம் எனத் தெரிந்துகொள்ள கலோரி சார்ட் இதோ…
தமிழர் வாழ்வில் புகுத்தப்பட்ட நொறுக்குத்தீனி!

இன்று விற்கபடும் பெருமளவு நொறுக்குத்தீனிகளை வணிக சந்தையின் கண்டுபிடிப்பாகவே கருதுகிறேன். இந்த நொறுக்கு தீனிகளை சாப்பிடுவதன் காரணமாக உடற்பருமனும் பற்சிதைவும், பல்வேறு வயிற்று உபாதைகளும், இதயநோய்களுமே உருவாகின்றன.
நொறுக்கு தீனிகள் வயது சார்ந்து வேறுபடுகின்றன. சிறார்கள், அலுவலக வேலை செல்பவர்கள், தொழிலாளர்கள் பெரும்பாலும் நொறுக்குதீனிகளை விரும்பி சாப்பிடுகிறார்கள். காரணம் போதுமான மதிய உணவு எடுத்துக் கொள்ளவில்லை என்பதே காரணம். ஊருக்கு ஊர் பெருகிப் போன பார்களே நொறுக்குதீனிகள் அதிகம் விற்கபடும் இடம். குடிக்கு முக்கிய துணையே இந்த நொறுக்குதீனிகள்தான். தமிழர்களின் பாரம்பரியத்தில் நொறுக்குதீனிகள் என்று தனி வகைகள் இல்லை. அவலும் பொறியும், பால் திரட்டும், எள் உருண்டைகளும், மாவு உருண்டைகளும், கும்மாயமும் முந்தைய காலங்களில் விரும்பி சாப்பிட்டிருக்கிறார்கள்.
விஜயநகர பேரரசு வந்ததற்கு பிறகுதான் எண்ணெயில் போட்டு பொறித்து சாப்பிடும் இனிப்பு, காரம் முதலான நொறுக்கு தீனிகள் நமக்கு அறிமுகமாகின. இன்று பலர் டீயும் பிஸ்கட்டும் சாப்பிடுகிறார்கள், இந்த பழக்கமும் நம் முன்னோர்களிடையே இல்லை. பிரிட்டீஷ்காரர்களால் அறிமுகம் செய்யப்பட்ட பழக்கம். குளிர் தேசத்தில் தங்களது உடலை வெப்பபடுத்திகொள்ள டீயும், பிஸ்கட்டும் சாப்பிடுவார்கள். ஆனால் வெப்ப தேசமான நமக்கு அடிக்கடி டீ குடிக்க வேண்டிய அவசியமே கிடையாது.
பன்னாட்டு நிறுவனங்களின் சந்தைபடுத்துதல் மூலமாக உடலுக்கு ஒவ்வாத சிப்ஸ், ப்ரைம்ஸ் என பல்வேறு நொறுக்குதீனிகள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. நொறுக்குதீனிகளை வாங்கி சாப்பிடும் முன்பு இரண்டு விஷயங்களை யோசித்து வாங்க வேண்டும். ஒன்று, அதில் என்ன ரசாயனங்கள், சுவையூட்டிகள் சேர்க்கபட்டுள்ளது. மற்றொன்று, தயாரிக்கபடும் முறை மற்றும் தரம் எப்படி உள்ளது. இதை விடுத்து வெறும் விளம்பரத்தை மட்டும் நம்பி வாங்கி சாப்பிட்டால் நோயை விலை கொடுத்து வாங்கியதாகவே அர்த்தம்.
இந்தியாவில் நொறுக்கு தீனிகள் குறைவாக பயன்படுத்துவது கேரளா தான். காரணம் கேரளாவில் வாழைப்பழமும், கிழங்கு வகைகளும் மீன்களும் அதிகமாக சாப்பிடுவார்கள். எனவே சந்தையில் விற்கபடும் நொறுக்கு தீனிகளின் தேவை குறைவாக இருக்கின்றன.
ஜப்பானில் அரிசியில் இருந்து விதவிதமான நொறுக்குதீனிகள் செய்கிறார்கள். கேப்பை, கம்பு, ராகு, சோளம் போன்ற பல்வேறு தானியங்களை பயன்படுத்தி நாம் விதவிதமாக நொறுக்குதீனிகள் செய்து சாப்பிடலாம். அவித்த வேர்கடலை, பொரி, சுண்டல், முளைவிட்ட பட்டாணி, பயிறு வகைகளைச் சாப்பிடலாம். எந்த நொறுக்குத்தீனி சாப்பிடுவதாக இருந்தாலும், அதில் இனிப்பு, உப்பு, கொழுப்பு சத்துகள் குறைவாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். போதுமான உணவை தவிர்ப்பதால் தான் நொறுக்குத் தீனிகளின் தேவை அதிகமாகிறது. எனவே ஆரோக்கியம் தரும சரிவிகித உணவு அவசியமானது. நொறுக்குதீனிகளை கட்டுபடுத்துவதே ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான முதற்படி.

இங்கேயும் ஒழுகுது பாத்திரம் எடுத்துட்டு வா

பள்ளியில் பாடத்தில் ஏமாற்றலாம் கடைசி பக்கம் விடையை பார்த்து.... ஆனால்.,

வாழ்க்கையை ஏமாற்ற முடியாது. இறுதி பக்கமே தெரியாது. !

கும்பிடும் வரை கடவுள்;
திருட்டுப் போனால் சிலை !


அப்பா 50 ரூபா மிச்சப்படுத்த 30 நிமிஷம் நடந்ததுக்கும், நான் 30 நிமிஷம் மிச்சப்படுத்த 50 ரூபா ஆட்டோக்கு தர்றதுக்கும் பேரு தான் ஜெனரேஷன் கேப்!

பெரிய துணிக்கடையின் வாசலில் தன் துணிகளை விற்க நம்பிக்கையுடன் நிற்கும் பெரியவரை விட தன்னம்பிக்கை மிக்கோர் உலகில் எவரும் இல்லை!

படிப்பு முடிஞ்சதும் பொண்ணுங்க கல்யாணம் பண்ணிட்டு ராணி மாதிரி ஊர்ஊரா சுத்துறாங்க
பசங்கதான் வேலைதேடி தெருத்தெருவா சுத்துறாங்க
என்னடா டிசைன்!!

எந்த பூச்சிகள் இறந்தாலும் எறும்புகளே அதை இறுதி ஊர்வலமாய் எடுத்து செல்கிறது..!!!

விவசாய நிலத்தையெல்லாம் பிளாட் போட்டு வித்து காசு பாத்தோம்.
இப்போ விலைவாசி ஏறிப்போச்சு.
இனி பிளாட்டை விற்று பருப்பு வாங்கும் நிலைகூட வரும்.!


பென்சில் ஷார்ப்பனரை எல்லாம் ஆயுதமாக்கிய பெருமை இந்த சரஸ்வதி பூஜையைத்தான் சேரும் !!


எழுத்திடம் பிடித்ததே, அது கண்ணைப் பார்த்து மட்டும் தான் பேசும்.


ஜெயிக்கிறதுங்கிறது
வாழ்க்கையில்
ஏழைமக்களுக்கு ஒரு வேளை சாப்பாடாகவும்,
பணக்காரனுக்கு பல கோடி
சொத்தாகவும் உள்ளது.


பணக்கார குழந்தையா இருந்தாலும் வீடு வரையச்சொன்னா குடிசை வீடோ அல்லது ஓட்டு வீடோ தான் வரையிது :-))


தெருவை கடந்தேன்
ஜாதியைகேட்டான்
மாவட்டத்தை
கடந்தேன்
ஊரை கேட்டான்
மாநிலம்கடந்தேன்
இனமொழியை கேட்டான்
நாட்டை கடந்தபிறகே
இந்தியன் ஆனேன்!


குழந்தைகள் டம்ளரில் பால் குடித்து முடிந்ததும் மீசை வளர்ந்து விடுகிறது


காலையில வாக்கிங் போரதல கெடச்ச ஒரே நன்மை தெருநாய் எல்லாம் தோஸ்த்ஆனது தான்.. இப்பெல்லாம் நைட் லேட்டா வந்தாலும் நம்மள பாத்து குலைக்கிறதில்ல


கூகுளில் எதை தேடினாலும் கிடைக்கும்...!
உண்மைதான்...!
ஆனால் 2G யில் தேடாதீர்கள்...!
கூகுளே கிடைக்காது.!


உலகினில் எவருமில்லை-சைவமென!
தாய்ப்பாலென்ன தாவரத்திலிருந்தா கிடைக்கிறது ?


தெருவில் குப்பை போடுகிறவனை மரியாதையாகவும் அதை பொறுக்கி சுத்தம் செய்பவனை கேவலமாக பார்க்கும் சமுதாயம் உள்ளவரை என் நாடு சுத்தம் ஆகாது!!!

சிறகுகள் இல்லாமலேயே, பெண்களை தேவதைகளாக்கும் வல்லமை புடவைகளுக்கு உண்டு!


விலைவாசி - பெயர் சரியாத்தான் வச்சிருக்காங்க , சில இடங்களில் விலை வாசிக்க மட்டுமே முடியும். !


'ஒரு மெழுகுவர்த்தியின் தியாகத்திற்கு சற்றும் குறைவில்லாதது ஒரு தீகுச்சியின் மரணம் !!


விமரசனத்துக்கு பயந்தவன் வாழத்தகுதியற்றவன்.!


உன் இறுதிவரை நீ இழப்பதற்கு ஏதாவது ஒன்று மிச்சமிருக்கும் கவலைகொள்ளாதே!!


இந்த படிப்ப கண்டுபுடிச்சது எவன்டா" என ஆரம்பித்து...
"இந்த பணத்த கண்டுபுடிச்சது எவன்டா" என விடையில்லா கேள்விகளோடு முடிகிறது வாழ்க்கை.. !


வேலைக்குப் போகிறவர்களின் திங்கட் கிழமையை விட வேலை கிடைக்காதவர்களின் திங்கட் கிழமைகள் கொடூரமானவை. !


என் தந்தையை யாரோ நாலு பேர் ஏளனம் செய்யகூடாது என்ற பயத்தில் படித்து முடித்ததும் கிடைத்த வேலையை செய்ய தொடங்கினேன். ..! (ஆணின் முதல் தியாகம்)


ஒரு முதலாளியை ''வேலையை விட்டுட்டு போயிடுவேன்''னு மிரட்ரளவுக்கு வேலை செய்யனும் அதான் திறமை! !

தந்தையிடம் வாக்குவாதம் பண்ணுவதில் பெண்பிள்ளைகளுக்கு இருக்கும் சுதந்திரம் ஆண்பிள்ளைகளுக்கு இல்லை !!


அடுத்த வாக்கியம் பொய்.
முந்தய வாக்கியம் உண்மை.
இதுல எது உண்மை?எது பொய்?...அதுதான் கடவுள்.


இன்றைய தலைமுறை இளைஞர்கள் அப்பாவிடம் அதிகம் பேசலனாலும் அவரின் ஒவ்வொரு அசைவுக்கும் அர்த்தம் தெரிந்து வைத்துள்ளனர்.!

500 ரூபாயை எண்ணினாலும் ,50000 ரூபாயை எண்ணினாலும் ஒரே மாதிரி சத்தத்தோடு நடந்து கொள்ளும் ஏடி எம் மெசின் .,..ஏன்னா அது மெசின்,மனிதமனமில்லை

அவசரத்துக்கு ஒரு கொத்தனார தேடுனா ஊர்ல ஒரு பய இல்ல,
தெருவுக்கு நாலு இஞ்சினியர் மட்டும் இருக்கானுங்க !!

சொகுசு பேருந்து என்பது பெரிய சைஸ்
"ஷேர் ஆட்டோ"!

என்னதான் பெரிய மனுஷனா இருந்தாலும் ஐஸ்கிரீம் மேல இருக்கற அட்டைய ஒரு தடவ நக்கிட்டு தான் தூக்கி போட்றாங்க!

இவன் என்ன நினைப்பான் அவன் என்ன நினைப்பான்னு நினைச்சே வாழ்றோம்.ஆனா உண்மையில ஒருத்தனும் நம்மளைப் பத்தி நினைக்கிறதேயில்ல!....நிதர்சனம்

சத்தம் போட்டு அழ எல்லோருக்கும் ஒரு காரணம் நிச்சயம் இருக்கும், ஆனால் வாய்ப்பு நிச்சயம் இருக்காது !

இந்த டாக்டர்கள் வசதி இல்லாதவன பாத்து அது சாப்புடு இது சாப்புடுனு சொல்லுவான். வசதி இருக்கவன பாத்து எதையும் சாப்புடகூடாதுனு சொல்லுவான்.!��

வாட்ஸாப்ல "Hey there iam using watsapp"ன்னு ஸ்டேட்டஸ் வச்சிருக்குறவன் தான் உண்மையில யூஸ் பண்ணாதவன்.

சிலர் நம் பெயரை அழகா வித்தியாசமா கூப்பிடுவதால் அவர்களை அதிகம் பிடிக்கிறது.

வெளிநாட்டில் வேலையில் இருக்கும் மகனுக்கு தன் பெற்றோர் கூட தூரத்து சொந்தம் தான் ��

இறுதி வரை வாழ்க்கை இப்படியே இருக்க வேண்டுமே என்ற கவலை சிலருக்கு, இப்படியே இருந்துவிடுமோ என்ற கவலை சிலருக்கு!!

250 ரூபாய்க்கு பளிச்சென்றும் 100 ரூபாய்க்கு சுமாராகவும் இலவச தரிசனத்திற்கு படுமங்கலாகவும் காட்சி தருகின்றார் கடவுள்...!!

மொபைல் போனை முதலில் வைத்திருந்தவர்கள் ஆச்சர்யப்படுத்தினார்கள். இப்போது வைத்திருக்காதவர்கள் ஆச்சர்யப்படுத்துகிறார்கள்...!!!

தூக்கம் வராமல்
முதலாளி...
தூங்கி வழியும்
வாட்ச்மேன.........முரண்.

கோடிகளில் சம்பாதித்து நடிகன் செய்யும் உதவிகள்,டீக்கடையில் பிச்சைக்காரனுக்கும் சேர்த்து டீ சொல்லும் தினக்கூலியின் வள்ளல்தனத்துக்கு கீழேதான்.!

கடவுளுக்கு நீங்களாகவே ஒரு உருவம் கொடுத்து விட்ட படியால்..கடவுள் உங்கள் எதிரில் இருந்தாலும் தெரிவதில்லை!

ஒரு ஆண் 25 வயதுக்கு மேல் எடுக்க போற ஒவ்வொரு முடிவும் தீப்பெட்டியில் உரசும் கடைசி தீக்குச்சியை போல அதீத கவனம் செலுத்த வேண்டியுள்ளது.!!

கிலோ கணக்குல புத்தகம் தூக்கிட்டு குழந்தைங்க போறதாலதான் அதுக்கு L"KG".... U"KG"...னு பேருபோல...��

நீண்ட நேர தேடுதலுக்கு பின் கிடைக்கும் ஒவ்வொன்றுமே, என் முந்தைய தேடுதலில் கிடைத்திருக்க வேண்டியவைகளாகவே இருக்கின்றன!

கொட்டும் "மழையில்" இரண்டு விதமான பிள்ளைகள்
மாம்.!
இட்ஸ் ரைனிங்..ஏசியை கம்மி பண்ணுங்க��
அம்மா.!
இங்கேயும் ஒழுகுது பாத்திரம் எடுத்துட்டு வா����

Tuesday, November 10, 2015

TNPSC ONLINE TEST Group -2A



நம் குடும்பம் 

வாசகர்கள் அனைவருக்கும்

 பயன் அடையுகள் .........

நம் குடும்பம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தீபத்திருநாள் வாழ்த்துகள்.

 நம் குடும்பம்   வாசகர்கள் அனைவருக்கும் இனிய தீபத்திருநாள் வாழ்த்துகள். 

Saturday, November 7, 2015

இந்தியாவை ஆட்டிப்படைக்கும் ஆடம்பர மோகம்…

 ஐந்து மாதத்தில் 25 பெராரி கார்கள் விற்றிருக்கின்றன. ஒரு காரின் விலை இரண்டரைக் கோடி ரூபாய்.
* ஓராண்டில் 300 போர்ஷே கார்களை இந்தியர்கள் வாங்கியிருக்கிறார்கள். இந்த வகை கார் ஒன்றின் விலை ரூ. 2.80 கோடி.
* அவுரங்காபாத்தைச் சேர்ந்த ஒருவர், தனக்கும், தனது நண்பர்களுக்கும் 151 மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களை வாங்கியுள்ளார். ஒன்றின் விலை ரூ. 1 கோடி.
இதெல்லாம், பஸ் கட்டண உயர்வுக்கு பலத்த எதிர்ப்புக் கிளம்பும் நமது இந்தியாவில்தான்.
ஆடம்பர மோக அலை இந்தியா முழுவதையும் மூழ்கடித்து வருகிறது என்கிறார்கள் வர்த்தக நிபுணர்கள். இந்த `ஆடம்பர வெறி’, கார்களில் மட்டும் அல்ல.
தனிநபர்களுக்குச் சொந்தமான ஜெட் விமானங்கள் இந்திய வானில் சீறுகின்றன. பெரும் மாளிகைகளும், ஆடம்பர அடுக்ககங்களும் எழுந்து வருகின்றன. சொகுசான ஆடம் பரத்தை அளிக்கும் உல்லாசக் கப்பல்களில் இந்தியர்கள் அதிகம் குதூகலிக்கிறார்கள். குறிப்பிட்ட ஆடம்பர `பிராண்ட்’தான் வேண்டும் என்று அடம்பிடிக்கும் இளம் பணக்காரர்கள் இந்தியாவில் அதிகரித்து வருகிறார்கள். அதனால்தான், ஆடம்பரப் பொருட்களுக்கான இந்தியச் சந்தை ஆண்டுக்கு 20 சதவிகிதம் அளவுக்கு வளர்ந்து வருகிறது. தற்போது 800 கோடி டாலர்களுக்கு மேல் இருக்கும் இந்தச் சந்தை மதிப்பு, 2015-ல் ஆயிரத்து 400 கோடி டாலர்களுக்கு மேல் எகிறும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்தியர்களின் ஆடம்பர மோகத்தை பயன்படுத்திக்கொள்ள சர்வதேச ஆடம்பர `பிராண்ட்கள்’ இந்தியாவை குறிவைக்கின்றன. கையில் தாராளமாகப் பணம் புரளும் இளந்தலைமுறையினர், சிறுநகரப் பெரும் பணக்காரர்கள், ஆறிலக்க சம்பள உயர் நிர்வாகிகள் ஆகியோரே மேற் குறிப்பிட்ட பிராண்ட்களின் இலக்கு. பணத்தை தண்ணீ யாய்… இல்லையில்லை, காற்றாய் செலவழிக்க இவர்கள் தயாராயிருக்கிறார்களாம்.
சர்வதேச ஆடம்பரப் பொருள் விற்பனை நிறுவனமான பர்பெரியின் தலைமைச் செயல் அலுவலர் ஏஞ்சலா அஹ்ரண்ட்ஸ், “எங்களுக்கு இந்தியா விரைவாக வளர்ந்து வரும் சந்தை” என்கிறார். இவர்களுக்கு இந்தியாவில் 7 கடைகள் இருக்கின்றன.
“ஆடம்பரத் தொழில்துறைக்கு இந்தியாவில் அடுத்த இரண்டு ஆண்டுகள் ஆர்வமூட்டு வதாக இருக்கப் போகின்றன” என்கிறார் இவர்.
ஐந்தாண்டுகளுக்கு முன்பு வரை ஆடம்பரப் பொருள் விற்பனை நிறுவனங்களின் கவன மெல்லாம் டெல்லியிலும், மும்பையிலும்தான் இருந்தது. தற்போதோ சிறுநகரப் பெரும் புள்ளிகளும் `மெட்ரோ’ நகர வசதி பார்ட்டிகளின் சந்தோஷங்களைத் தேடுவதால், ஆடம்பர விற்பனையாளர்களின் பார்வை அவர்கள் மீதும் பதிகிறது. எனவே இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில் கூட ஆடம்பர வசதிகளும், பொருட்களும் குவிகின்றன.
போர்ஷே, பெராரி போன்ற காஸ்ட்லி கார்களின் விற்பனை முகவரான ஆஷிஷ் சோர்டியா, கடந்த ஆண்டு கான்பூரில் மட்டும் 10 போர்ஷேக்களை விற்றிருப்பதாகக் கூறுகிறார். இந்த ஆண்டும் இன்னும் அதிகமான கார்களை விற்க முடியும் என்று நம்புகிறார்.
இன்னும் சிலர் ஆடம்பர வசதிகள் நிறைந்த கார்களை உலக அளவில் தேடிப்பிடித்து ஆர்டர் செய்கிறார்களாம். “அத்தகைய வாடிக்கையாளர்களுக்கு 3 முதல் 6 மாத காலத்துக்குப் பின்புதான் கார் கிடைக்கும். ஆனால் அவர்கள் காத்திருப்பதற்கு ஏற்றபடி அவை சிறந்த கார்களாகத்தான் இருக்கும்” என்கிறார் இவர். கடந்த ஆண்டு 312 வாடிக்கையாளர்களுக்கு போர்ஷே கார் டெலிவரி செய்யப்பட்டிருக்கிறது. மே முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் 20 பெராரிகளுக்கு ஆர்டர் வந்திருக்கிறது.
இந்தியாவில் ஆடம்பரப் பொருட்களை வாங்குபவர்களில் 50 சதவீதம் பேர் சிறுநகரங்கள், ஊர்களைச் சேர்ந்தவர்கள் என்கிறது ஒரு சமீபத்திய புள்ளிவிவரம். புதிய ஆடம்பர விற்பனையகங்களில் 25 சதவீதம், டெல்லி, மும்பை நகரங்களுக்கு வெளியே திறக்கப் படுகின்றனவாம்.
புதிய நகரங்களில் ஆடம்பரப் பொருட்களை நாடுவோரில் பெரும்பாலானவர்கள் வெளி நாடுகளில் படித்த இளந்தலைமுறையினர். அவர்கள் ஆடம்பர பிராண்ட்கள், சுகபோக வாழ்க்கை வசதிகள் பற்றி நன்கு அறிந்தவர்கள்.
இன்டர்குளோப் எஸ்டாபிளிஸ்ட் என்ற விமான நிறுவனம், இந்தியாவில் 45 சிறிய ரக விமானங்களைத் தனியாருக்கு விற்றுள்ளது. கார்கள், விமானங்கள் மட்டுமின்றி, ஆடை, அணிகலன்கள், நட்சத்திர உணவகங்களில் சாப்பாடு, நகைகள், கடிகாரங்கள் என்று கணக்குப் பார்க்காமல் இந்தியர்கள் பணத்தைக் கொட்டுகிறார்கள்.
நட்சத்திர உணவகமான `லெபுவா ஓட்டல்ஸ்’, இந்தியா முழுவதும் கிளைகளைத் திறக்கத் திட்டமிட்டுள்ளது. தாய்லாந்து போன்ற நாடுகளில் உள்ள இந்த உணவகங்களில் இந்தியர்கள் பெருமளவு உணவு உண்பதுதான் இதற்கான காரணம்.
“தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள எங்களது உணவகத்துக்கு வருகை தருவோரில் 60 சதவீதம் பேர் இந்தியர்கள். அவர்கள் ஒருவேளை உணவுக்கு 20 ஆயிரம் ரூபாய் செலவு செய்கிறார்கள். அப்படிப்பட்டவர்களைத் தேடி நாங்கள் இந்தியாவிற்கே வருகிறோம்” என்று கூறித் திகைக்க வைக்கிறார், லெபுவா ஓட்டல்ஸின் சி.இ.ஓ. தீபக் ஓரி.
இந்தியாவில் தலா 25 கோடி ரூபாய் சொத்துள்ள கோடீசுவரர்களின் எண்ணிக்கை 2016-ம் ஆண்டளவில், இன்றிருப்பதைவிட மூன்று மடங்கு அதிகரிக்குமாம்! அப்போது 2 லட்சத்து 19 ஆயிரம் பேர் அந்த கோடீஸ்வர பட்டியலில் இணைந்திருப்பார்கள். இவர்கள் பர்ஸை திறக்க தயங்கமாட்டார்கள் என்பதால், `ஆடம்பர’ நிறுவனங்கள் அதிகுதூகலத்தில் இருக்கின்றன.
மொத்தத்தில், இனியும் இந்தியாவை ஏழைகளின் நாடு என்று சொல்லிக் கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லைதான்!

Wednesday, November 4, 2015

நினைவிருக்கிறதா..? 1984-டிசம்பர் 3-ம் தேதி...!!!

நினைவிருக்கிறதா..?
1984-டிசம்பர் 3-ம் தேதி...!!!


போபால் ரயில்வே ஸ்டேஷனில் 'துருவே' என்ற ஸ்டேஷன் மாஸ்டருக்கு இரவு நேரப் பணி.

போபால் ஸ்டேஷன் வழியாக லக்னோ வில் இருந்து மும்பை செல்லும் ரயிலுக்கு சிக்னல்
கிளியரன்ஸ் கொடுத்துவிட்டு
வெளியே வந்தார்.
அவரால் காற்றில் ஏதோ வித்தியாசத்தை உணர முடிந்தது. அவசர அவசரமாக சிக்னல்
அறைக்கு ஓடினார்.

எப்படியாவது லக்னோ டு
மும்பை ரயிலைத் தடுத்து விடுவதுதான் அவரது
நோக்கம்.

ஆனால், அந்த ரயில்
ஏற்கெனவே கிளம்பிவிட்டது. துருவேயால் ஒன்றும் செய்ய முடியவில்லை. லக்னோ-மும்பை
ரயில் வந்தது.

அதில் இருந்து இறங்கிய
பயணிகள் எல்லாம் விஷ வாயுவைத் தாங்க முடியாமல் சுருண்டு விழுந்தார்கள்.
ஓடியவர்கள் இன்னும் சீக்கிரம்
இறந்தார்கள்.

கொஞ்ச நேரத்தில் போபால் ரயில்
நிலையத்தில் 191 பிணங்கள் கிடந்தன. அந்தக்
காட்சி துருவேயை நிலை குலைய வைத்தது.

பதற்றத்தோடு சிக்னல் அறைக்கு ஓடினார். அங்கு அவருக்குக்
கீழ் பணிபுரியும் சிக்னல் மேன் வாயில் ரத்தம் வழிய செத்துக் கிடந்தார். அவரை
ஓரமாக நகர்த்திப்போட்டுவிட்டு, எந்த ரயிலும்
போபால் வழியே வந்துவிட வேண்டாம்' என்று
தகவல் அனுப்பத் தொடங்கினார்.

அதையும் மீறி வரும் ரயில்கள் ஜன்னலை மூடிக் கொண்டு போபால் ஸ்டேஷனில் நிற்காமல் வேகமாகப் போய் விடுமாறு
அறிவுறுத்தினார்.

மூக்கிலும் வாயிலும் வழிந்த ரத்தத்தைத் துடைத்துக் கொண்டு, இரவு முழுவதும்
விழித்திருந்து வேலை பார்த்தார். அந்த இரவு விடிந்தது.

அடுத்த நாள் சிக்னல் அறையைத்
திறந்தபோது, ஸ்டேஷன் மாஸ்டர் துருவே வாயில்
ரத்தம் வழிந்த நிலையில் சிக்னல் அனுப்பும் கருவியை ஒரு கையால் பிடித்தபடி செத்துக் கிடந்தார்.

துருவே மட்டும் இல்லை எனில், போபால் விஷ வாயுக் கசிவின் மரண எண்ணிக்கை இன்னும்
சில ஆயிரங்கள் கூடியிருக்கும்.

ஆனால்,
போபால் நகரத்தில் விஷவாயு கசிந்த அந்த இரவில் மாநில முதல்வர் அர்ஜுன் சிங்,
நகரில் இருந்து 14 கி.மீ ஓடோடிச் சென்று தப்பித்தார்.

’துருவே’ போன்ற தேச வீரர்களின் தியாகம் ஏனோ அங்கீகரிக்கப் படுவதும் இல்லை.

மக்களுக்கு ஞாபகம் இருப்பதும
் இல்லை.

பகிரவாவது செய்வோம்

மருந்தாகும் பாகற்காய்!

பரபரப்பான வாழ்வில், உடல் ஆரோக்கியம் என்பது ஒவ்வொருவருக்கும் முக்கியமான ஒன்றாகும். காய்கறிகள், பழங்கள், தானியங்கள் சாப்பிடும் போது, உடல் ஆரோக்கியம் நிலையாக இருக்கும். இதில், பாகற்காய், உடலுக்கு சிறந்த மருந்தாக செயல்படுகிறது.
சிலர் இதனை கசப்பு காய் என்று ஒதுக்கி வைப்பது வழக்கம். குழந்தைகளும் தயக்கம் இல்லாமல் பாகற்காயை சாப்பிட வேண்டும். கசப்பு சுவை மிகுந்த இந்த பாகற்காயை, குழந்தைகளும் விரும்பி உண்ணும் வகையில், துவையல், வத்தல் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இதில், வைட்டமின் ஏ, பி, சி, பீட்டா-
கரோட்டின் போன்ற ப்ளேவோனாய்டுகள், லூடின், இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாதுக்கள் ஆகியவை நிறைந்துள்ளன.
சுவாசக்கோளாறுகள் நீங்கும்: பசுமையான பாகற்காய்கள், ஆஸ்துமா, சளிப் பிடித்தல், இருமல் போன்றவற்றைத் தீர்ப்பதில், மிகச்சிறந்த
நிவாரணியாகப் பயன்படுகிறது.
கல்லீரலை வலுப்படுத்துதல்: தினந்தோறும் ஒரு டம்ளர் பாகற்காய் சாற்றை அருந்தி வந்தால், ஈரல் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் நீங்கும்.
அதிலும் ஒரு வாரம் தொடர்ந்து குடித்து வந்தால், இதன் பலனைக் காணலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி: பாற்காயையோ, அதன் இலைகளையோ வெந்நீரில் வேக வைத்து தினந்தோறும் சாப்பிட்டு வந்தால், நோய்த்தொற்றுகள் அண்டாமல், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.
 
பருக்கள்: பாகற்காயை உண்டு வந்தால், சருமத்தில் உள்ள பருக்கள், கருப்பு தழும்புகள், ஆழமான சருமத் தொற்றுகள் ஆகியவை நீங்கும். பாகற்காயை சாறு எடுத்து, அதனுடன் எலுமிச்சைச் சாற்றைக் கலந்து, தினந்தோறும் வெறும் வயிற்றில், 6 மாதம் அருந்தி வந்தால், பலனை கண்கூடாக காணலாம்.
நீரிழிவு நோய்: டைப் 2 நீரிழிவு நோயை எதிர்கொள்ள, சிறந்த மருந்தாக பாகற்காய் சாறு பயன்படுகிறது. பாகற்காயில் உள்ள ஒருவகை வேதிப் பொருள், இன்சுலின் போல செயல்பட்டு, ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.
மலச்சிக்கல்: பாகற்காயில் நார்ச்சத்து மிகுந்துள்ளதால், செரிமானத்துக்கு மிகவும் உதவுகிறது. இதன் காரணமாக உணவு நன்றாக செரிக்கப்பட்டு, கழிவுகள் எளிதாக வெளியே தள்ளப்படுகிறது. இதன் மூலம் மலச்சிக்கல் நீங்குகிறது. சிரமமின்றி மலம் கழிக்க முடிகிறது. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியம் பெருகும்.