Labels
TRB,TNTET,TNPSC online coching
Search This Blog
NEWS
https://trb-tntet-tnpsc.blogspot.in/வழங்கும் இலவச இணையதள பயிற்சிக்கு உங்களை வரவேற்கிறோம்.தன்னம்பிக்கை, விடா முயற்சி , கடின உழைப்பு. எந்த சோதனைகள் வந்தாலும் உங்கள் இலட்சியத்தை விட்டு விடாதீர்கள். "சரியான முயற்சியும் பயிற்சியும் இருந்தால் உங்களால் முடியாத ஒன்றுமே இல்லை" என்ற நம்பிக்கை உங்கள் ஒவ்வொருவரின் மனதிலும் நிறைந்திருக்க வேண்டும். அதற்காக எங்கள் இணைய தளத்தின் மூலம் எங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வோம்.பயிற்சி நிறுவனங்களுக்கு சென்று பயிற்சி பெற இயலாத வேலைதேடும் இளைஞர்கள், பணிபுரிபவர்கள், இல்லத்தரசிகள் தங்களது அரசு வேலை கனவுகளை நனவாக்குவதற்காகவே இந்த இணையதளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. TET ன் புதிய பாடத்திட்டத்திற்கேற்ப ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட பாடப்பகுதிகளில் வாரத்தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த வாரத்தேர்வின் முடிவுகள் உங்கள் பெயருடன் இந்த இணையதளத்தில் வெளியிடவும் முடிவு செய்துள்ளோம்.
Thursday, April 30, 2015
இந்தியாவில் உள்ள நீதிமன்றங்கள்
உயர் நீதி மன்றம் நிலைநாட்டப்பெற்ற ஆண்டு,சட்டம், அதிகார வரம்பு ,அமர்வுகள், நீதிபதிகள்
அலகாபாத் உயர் நீதிமன்றம் 1866-06-11 உயர் நீதிமன்ற சட்டம், 1861 உத்தரப்பிரதேசம் அலகாபாத் லக்னோ 95
ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் 1954-07-05 ஆந்திர மாநில சட்டம், 1953 ஆந்திர பிரதேசம் ஐதராபாத் 39
பம்பாய் உயர் நீதிமன்றம் 1862-08-14 உயர் நீதிமன்ற சட்டம், 1861 மகாராஷ்டிரா, கோவா, தாத்ரா மற்றும் நாகர் அவேலி, தமன் மற்றும் தியூ மும்பை நாக்பூர், பனாஜி, அவுரங்காபாத் 60
கல்கத்தா உயர் நீதிமன்றம் 1862-07-02 உயர் நீதிமன்ற சட்டம், 1861 மேற்கு வங்காளம், அந்தமான் மற்றும் நிக்கோபார்த் தீவுகள் கொல்கத்தா போர்ட் பிளேர் (சுற்று அமர்வு) 63
சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் 2000-01-11 மத்தியப் பிரதேசம் மறு சீரமைப்பு சட்டம், 2000 சத்தீஸ்கர் பிலாஸ்பூர் 08
தில்லி உயர் நீதிமன்றம்[2] 1966-10-31 தில்லி உயர் நீதிமன்ற சட்டம், 1966 தில்லி பிரதேச தேசிய தலைமையகம் புது தில்லி 36
கௌகாத்தி உயர் நீதிமன்றம்[3] 1948-03-01 இந்திய அரசு சட்டம், 1935 அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா, மிசோரம் கௌகாத்தி கோகிமா, அஸ்வல் & இம்பால். சுற்று அமர்வு அகர்தலா & சில்லாங் 27
குஜராத் உயர் நீதிமன்றம் 1960-05-01 பம்பாய் மறு சீரமைப்பு சட்டம், 1960 குஜராத் அகமதாபாத் 42
இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றம் 1971 மாநில H.P. சட்டம், 1970 இமாச்சலப் பிரதேசம் சிம்லா 09
ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றம் 1943-08-28 காஷ்மீர் மகாராஜாவால் வழங்கப்பட்டகாப்புரிமைப் பத்திரம் ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகர் & ஜம்மு[4] 14
ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் 2000 பீகார் மறு சீரமைப்பு சட்டம், 2000 ஜார்க்கண்ட் ராஞ்சி 12
கர்நாடகா உயர் நீதிமன்றம்[5] 1884 மைசூர் உயர் நீதிமன்ற சட்டம், 1884 கர்நாடகா பெங்களூர் சுற்று அமர்வுகள்- ஹூப்லி-தர்வாத் மற்றும் குல்பர்கா 40
கேரளா உயர் நீதிமன்றம்[6] 1956 மாநில மறு சீரமைப்பு சட்டம், 1956 கேரளா, இலட்சதீபம் கொச்சி 40
மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம்[7] 1936-01-02 இந்திய அரசு சட்டம், 1935 மத்தியப் பிரதேசம் ஜபல்பூர் குவாலியர், இந்தூர் 42
மதராஸ் உயர் நீதிமன்றம் 1862-08-15 உயர் நீதிமன்ற சட்டம், 1861 தமிழ் நாடு, புதுவை சென்னை மதுரை 47
ஒரிசா உயர் நீதிமன்றம் 1948-04-03 ஒரிசா உயர் நீதிமன்ற ஆணை, 1948 ஒரிசா கட்டாக் 27
பாட்னா உயர் நீதிமன்றம் 1916-09-02 இந்திய அரசு சட்டம், 1915 பீகார் பாட்னா 43
பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம்[8] 1947-11-08 உயர் நீதிமன்றம் (பஞ்சாப்) ஆணை, 1947 பஞ்சாப், அரியானா, சண்டிகார் சண்டிகார் 53
இராஜஸ்தான் உயர் நீதிமன்றம் 1949-06-21 இராஜஸ்தான் உயர் நீதிமன்றம் அவசர சட்டம், 1949 இராஜஸ்தான் ஜோத்பூர் ஜெய்பூர் 40
சிக்கிம் உயர் நீதிமன்றம் 1975 இந்திய அரசியல் சட்டத்தின் 38 வது திருத்தம் சிக்கிம் காங்டக் 03
உத்தர்காண்ட் உயர் நீதிமன்றம் 2000 உ.பி. மறு சீரமைப்பு சட்டம், 2000 உத்தர்கண்ட் நைனிடால் 09
IMPORTANT INFORMATION'S:
1] 1937 முதல் 1950 வரை செயல்பட்டு வந்த பெடரல் நீதிமன்றத்துக்கு மாற்றாக உச்ச நீதிமன்றம் 1950 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் தேதி செயல்பட துவங்கியது
2] உச்சநீதிமன்றத்தில் ஒரு தலைமை நீதிபதி உள்பட 30 நீதிபதிகள் உள்ளனர் .
3] உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒய்வு பெறும் வயது 65 ஆகும் .
4] இந்தியாவில் உள்ள உயர் நீதி மன்றங்கள் எண்ணிக்கை 24.
5] இந்தியாவில் உள்ள பழமையான உயர் நீதிமன்றம் கல்கத்தா உயர் நீதி மன்றம் , இது 1862-ஜூலை 1 - ல் துவங்கப்பட்டது .
6] உயர் நீதிமன்ற நீதிபதியின் ஒய்வு பெறும் வயது 62 ஆகும்
அலகாபாத் உயர் நீதிமன்றம் 1866-06-11 உயர் நீதிமன்ற சட்டம், 1861 உத்தரப்பிரதேசம் அலகாபாத் லக்னோ 95
ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் 1954-07-05 ஆந்திர மாநில சட்டம், 1953 ஆந்திர பிரதேசம் ஐதராபாத் 39
பம்பாய் உயர் நீதிமன்றம் 1862-08-14 உயர் நீதிமன்ற சட்டம், 1861 மகாராஷ்டிரா, கோவா, தாத்ரா மற்றும் நாகர் அவேலி, தமன் மற்றும் தியூ மும்பை நாக்பூர், பனாஜி, அவுரங்காபாத் 60
கல்கத்தா உயர் நீதிமன்றம் 1862-07-02 உயர் நீதிமன்ற சட்டம், 1861 மேற்கு வங்காளம், அந்தமான் மற்றும் நிக்கோபார்த் தீவுகள் கொல்கத்தா போர்ட் பிளேர் (சுற்று அமர்வு) 63
சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் 2000-01-11 மத்தியப் பிரதேசம் மறு சீரமைப்பு சட்டம், 2000 சத்தீஸ்கர் பிலாஸ்பூர் 08
தில்லி உயர் நீதிமன்றம்[2] 1966-10-31 தில்லி உயர் நீதிமன்ற சட்டம், 1966 தில்லி பிரதேச தேசிய தலைமையகம் புது தில்லி 36
கௌகாத்தி உயர் நீதிமன்றம்[3] 1948-03-01 இந்திய அரசு சட்டம், 1935 அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா, மிசோரம் கௌகாத்தி கோகிமா, அஸ்வல் & இம்பால். சுற்று அமர்வு அகர்தலா & சில்லாங் 27
குஜராத் உயர் நீதிமன்றம் 1960-05-01 பம்பாய் மறு சீரமைப்பு சட்டம், 1960 குஜராத் அகமதாபாத் 42
இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றம் 1971 மாநில H.P. சட்டம், 1970 இமாச்சலப் பிரதேசம் சிம்லா 09
ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றம் 1943-08-28 காஷ்மீர் மகாராஜாவால் வழங்கப்பட்டகாப்புரிமைப் பத்திரம் ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகர் & ஜம்மு[4] 14
ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் 2000 பீகார் மறு சீரமைப்பு சட்டம், 2000 ஜார்க்கண்ட் ராஞ்சி 12
கர்நாடகா உயர் நீதிமன்றம்[5] 1884 மைசூர் உயர் நீதிமன்ற சட்டம், 1884 கர்நாடகா பெங்களூர் சுற்று அமர்வுகள்- ஹூப்லி-தர்வாத் மற்றும் குல்பர்கா 40
கேரளா உயர் நீதிமன்றம்[6] 1956 மாநில மறு சீரமைப்பு சட்டம், 1956 கேரளா, இலட்சதீபம் கொச்சி 40
மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம்[7] 1936-01-02 இந்திய அரசு சட்டம், 1935 மத்தியப் பிரதேசம் ஜபல்பூர் குவாலியர், இந்தூர் 42
மதராஸ் உயர் நீதிமன்றம் 1862-08-15 உயர் நீதிமன்ற சட்டம், 1861 தமிழ் நாடு, புதுவை சென்னை மதுரை 47
ஒரிசா உயர் நீதிமன்றம் 1948-04-03 ஒரிசா உயர் நீதிமன்ற ஆணை, 1948 ஒரிசா கட்டாக் 27
பாட்னா உயர் நீதிமன்றம் 1916-09-02 இந்திய அரசு சட்டம், 1915 பீகார் பாட்னா 43
பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம்[8] 1947-11-08 உயர் நீதிமன்றம் (பஞ்சாப்) ஆணை, 1947 பஞ்சாப், அரியானா, சண்டிகார் சண்டிகார் 53
இராஜஸ்தான் உயர் நீதிமன்றம் 1949-06-21 இராஜஸ்தான் உயர் நீதிமன்றம் அவசர சட்டம், 1949 இராஜஸ்தான் ஜோத்பூர் ஜெய்பூர் 40
சிக்கிம் உயர் நீதிமன்றம் 1975 இந்திய அரசியல் சட்டத்தின் 38 வது திருத்தம் சிக்கிம் காங்டக் 03
உத்தர்காண்ட் உயர் நீதிமன்றம் 2000 உ.பி. மறு சீரமைப்பு சட்டம், 2000 உத்தர்கண்ட் நைனிடால் 09
IMPORTANT INFORMATION'S:
1] 1937 முதல் 1950 வரை செயல்பட்டு வந்த பெடரல் நீதிமன்றத்துக்கு மாற்றாக உச்ச நீதிமன்றம் 1950 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் தேதி செயல்பட துவங்கியது
2] உச்சநீதிமன்றத்தில் ஒரு தலைமை நீதிபதி உள்பட 30 நீதிபதிகள் உள்ளனர் .
3] உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒய்வு பெறும் வயது 65 ஆகும் .
4] இந்தியாவில் உள்ள உயர் நீதி மன்றங்கள் எண்ணிக்கை 24.
5] இந்தியாவில் உள்ள பழமையான உயர் நீதிமன்றம் கல்கத்தா உயர் நீதி மன்றம் , இது 1862-ஜூலை 1 - ல் துவங்கப்பட்டது .
6] உயர் நீதிமன்ற நீதிபதியின் ஒய்வு பெறும் வயது 62 ஆகும்
Wednesday, April 29, 2015
வெளிநாடு செல்லும் மாணவர்களே உசார் !!
வெளி நாட்டிற்கு படிக்க செல்லும் மாணவர்கள் நிறைய செய்திகளை தெரிந்துகொண்டு செல்ல வேண்டும்.
பல நாடுகளில் மாணவர் விசா என்பது, ஒரு குறிப்பிட்ட பல்கலையில், குறிப்பிட்ட படிப்பிற்காக வழங்கப்படுகிறது. உங்களது பாஸ்போர்ட்டில் ஒட்டப்பட்ட மாணவர் விசாவில், நீங்கள் அந்த நாட்டில் நுழையும் தேதி குறிப்பிடப்படும்.விசாவைப் பெற்றவுடன், அதில் ஏதேனும் பிழை இருக்கிறதா என்பதை சரிபார்க்கவும். பதிவுக்காக, அதை ஸ்கேன் செய்து நகலெடுக்கவும்.
நீங்கள் பல்கலையை மாற்ற விரும்பினால், தூதரகத்திடம் அது தொடர்பாக தெரிவித்து, முறையான மாற்றங்களை செய்து கொள்ள வேண்டும். பல நாடுகள் மல்டிபல்- என்ட்ரி ஸ்டூடண்ட் விசாவை வழங்குகின்றன. இதன்மூலம், ஒரு மாணவர், தான் படிக்கும் காலத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் அந்த நாட்டிற்குள் சென்று வரலாம். ஆனால், சில நாடுகள், சிங்கிள் என்ட்ரி விசாவை வழங்குகின்றன. எனவே, தேவைப்படும் போது அதை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
விசா விண்ணப்பத்திற்கு தேவையானவை -
1.பல்கலையில் இருந்து பொருத்தமான அசல் சேர்க்கை ஆவணங்கள்.
2.அசல் கல்விச் சான்றிதழ்கள்( ஆங்கிலத்தில் இல்லையெனில் மொழிபெயர்ப்பு தேவை)
3.அசல் தேர்வு முடிவுகள்.
4.அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் இருந்து பெறப்பட்ட நிதி ஆவணங்கள்.
5.வங்கிக்கடன்
6.தங்குமிடம்
7.அட்வான்ஸ் ட்யூஷன் டெபாசிட் சான்று
8.உதவித்தொகை கடிதம்
9.புகைப்படங்கள்
10.விசா கட்டணங்கள்
2.அசல் கல்விச் சான்றிதழ்கள்( ஆங்கிலத்தில் இல்லையெனில் மொழிபெயர்ப்பு தேவை)
3.அசல் தேர்வு முடிவுகள்.
4.அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் இருந்து பெறப்பட்ட நிதி ஆவணங்கள்.
5.வங்கிக்கடன்
6.தங்குமிடம்
7.அட்வான்ஸ் ட்யூஷன் டெபாசிட் சான்று
8.உதவித்தொகை கடிதம்
9.புகைப்படங்கள்
10.விசா கட்டணங்கள்
பல மாணவர்கள், தங்களின் பாஸ்போர்ட் என்ன நிலையில் இருக்கிறது. அதன் செல்லத்தக்க காலம் எவ்வளவு என்பன போன்ற விஷயங்களை கவனிக்க தவறி விடுகின்றனர்.செல்லத்தக்க காலம்முடிந்து போதல், பாஸ்போர்ட் மோசமாக சேதமடைந்திருத்தல் உள்ளிட்ட பல காரணங்களால் அவர்களுக்கு கிடைக்கும் பல அரிய வாய்ப்புகள் நழுவி விடுகின்றன.
வெளிநாட்டுக்கு படிக்க செல்லும் மாணவர்கள் பலரும், கடைசி நேர நெருக்கடிகளுக்கு உள்ளாகி, வாய்ப்பை கோட்டை விடும் நிலை வரை செல்வது பாஸ்போர்ட் விஷயத்தில் தான்.
பாஸ்போர்ட் விஷயத்தில் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கிய விஷயம், புகைப்படம். பல வருடங்களுக்கு முன்பாக அது எடுக்கப்பட்டிருந்தால் கட்டாயம் மாறுதல் தேவை. ஏனெனில், அதில் நீங்கள் சிறுவனாகவோ அல்லது சிறுமியாகவோ இருப்பீர்கள். இப்போது உங்களின் தோற்றம் மிகவும் மாறுபட்டிருக்கும்.
பாஸ்போர்ட் மற்றும் விசா விஷயத்தில் கவனிக்க வேண்டியவை முக்யமானவை -
நீங்கள் விசாவிற்கு விண்ணப்பிக்கும் போது, உங்களின் பாஸ்போர்ட் குறைந்த பட்சம் 6 மாதங்கள் செல்லத்தக்கதாக இருக்க வேண்டும். பல நாடுகளில் இதுதான் நடைமுறை.தேர்வு முடிவுகள் வெளியாகி, சேர்க்கை கிடைப்பது 100% உறுதியான பிறகு தான் விசா நடைமுறைப் பணிகளை துவங்க வேண்டும் என பல மாணவர்கள் நினைக்கிறார்கள்.
ஆனால், அது தவறு. பல நாடுகள், மாணவர் விசாவுக்காக விண்ணப்பித்தலை குறைந்த பட்சம் படிப்பு தொடங்குவதற்கு 3 மாதங்களுக்கு முன்னதாக அனுமதிக்கின்றன. வெளிநாட்டு பயணத்திற்கான ஏற்பாடுகளை குறைந்தது 6 மாதங்களுக்கு முன்பாகவே துவங்க வேண்டும்.
அதன் மூலம், உங்களின் விசாவுக்கான ஏற்பாடுகளை முறையாக மேற்கொள்ள முடியும்.மாணவர்கள் விசா விண்ணப்பத்திற்கு தேவையான ஆவணங்களை சரியான முறையில் சேகரித்து வைத்து கொள்ள வேண்டும். விசா விதிமுறை அவ்வப்போது மாறிக் கொண்டிருக்கும்.
எனவே, சில வருடங்களுக்கு முன்பாக அல்லது 1 வருடத்திற்கு முன்பாக வெளிநாட்டிற்கு படிக்க சென்ற உங்களின் நண்பர்கள் கூறுவதை அப்படியே நம்பிவிட வேண்டாம். ஏனென்றால், அவர்கள், அவ்வப்போது மாறிக் கொண்டிருக்கும் விதிமுறை பற்றி முழுமையாக அறிந்திருப்பார்கள் என்பதற்கு உத்தரவாதமில்லை.
எனவே, ஒரு சிறந்த வழிமுறை என்னவெனில், நீங்கள் எந்த நாட்டிற்கு கல்வி கற்பதற்காக செல்ல விரும்புகிறீர்களோ, அந்த நாட்டின் குடியேற்றம் மற்றும் கல்வி தொடர்பான இணையதளத்திற்கு சென்று விதிமுறைகள், தேவைப்படும் ஆவணங்கள் மற்றும் சமீபத்திய மாற்றங்களை பற்றி அறிந்து கொள்ளவும்.
மாணவரின் இதயம் காக்க நிதி திரட்டும் ஆசிரியர்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஒடுகம்பட்டியில் சஞ்சீவி, 11, என்ற மாணவரின் இருதய சிகிச்சைக்கு பள்ளி ஆசிரியர் கணேசன் நிதி திரட்டி வருகிறார்.நத்தம் அருகே ஒடுகம்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா. மனைவி சின்னம்மாள். இருவரும் கூலி தொழிலாளிகள். இவர்களது மகன் சஞ்சீவி. அங்குள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கிறார். ஓராண்டுக்கு முன் உடல்நலம்பாதிக்கப்பட்டது. மருத்துவ பரிசோதனையில் இதய வால்வில் அடைப்பு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.
மாணவனின் குடும்பச்சூழலை அறிந்து, அப்பள்ளி ஆசிரியர் கணேசன், மருத்துவ சிகிச்சைக்காக நிதி திரட்டி வருகிறார்.அவர் கூறியதாவது:- சிறுவயது முதல் வறுமையில் வாழ்ந்து தற்போது ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். அதனால் மருத்துவ சிகிச்சை, படிப்பு, வறுமையில் வாடும் மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறேன். தற்போது வறுமையில் வாடும் சஞ்சீவியின் மருத்துவ சிகிச்சைக்காக நண்பர்களிடம் நிதி திரட்டி வருகிறேன் என்றார்.
Tuesday, April 28, 2015
இமய மலைப் பகுதியில் நிலநடுக்கம் முன்கூட்டியே கணிக்கப்பட்டுள்ளது: தொடர்ந்து ஏற்படலாம் என ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்கள்
இமய மலைப் பகுதிகளில் பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்படும் என்று 2 ஆண்டுகளுக்கு முன்பே ஆய்வாளர்கள் கணக்கிட்டுள்ளனர். தற்போது நேபாளத்தில் 7.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதைப் பார்க்கும் போது, அந்த ஆய்வில் கூறப்பட்ட தகவல்கள் துல்லியமாக இருப்பது தெரிய வந்துள்ளது.
நேபாளத்தில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.9 என்று பதிவானது. நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியா, திபெத் போன்ற இடங்களிலும் உணரப்பட்டது. இந்தியாவின் உத்தரப் பிரதேசம், பிஹார், மேற்கு வங்கம் போன்ற வட மாநிலங்களில் நிலநடுக்கத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. கர்நாடக மாநிலம் பெங்களூர், சென்னை உட்பட சில தென் மாநிலங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
நேபாளத்தில் இமாலயப் பகுதியில் நிலநடுக்கம் மையம் கொண்டதால் கட்டிடங்கள், புராதன சின்னங்கள் தரைமட்டமாகி உள்ளன. இடிபாடுகளில் சிக்கி உயரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. இந்நிலையில், இமயமலைப் பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்படும் என்று கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே கணிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக பூமிக்கடியில் உள்ள ‘டெக்டானிக் பிளேட்ஸ்’ என்றழைக்கப்படும் கண்டத் தட்டு கள் நகர்வதாலும், ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்வதாலும் நிலநடுக் கம் ஏற்படுகிறது. இந்தியா - யுரேசியா கண்டத் தட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்வ தற்கு காரணமாகும் ஒரு முக்கிய ‘ஃபால்ட்’ நேபாளத்தில் இருக் கிறது. இந்த ஃபால்ட்டில் பெரிய அளவில் நிலநடுக்கங்கள் ஏற்படு வதற்கான சாத்திய கூறுகள் இருப்ப தாக கண்டறியப்பட்டுள்ளன.
கடந்த 2013-ம் ஆண்டு மே மாதம் ‘தி இந்து’ (ஆங்கிலம்) நாளிதழுக்கு, ‘சென்டர் பார் மேத்தமெட்டிக்கல் மாடலிங் அண்ட் கம்ப்யூட்டர் சிமுலேஷன்’ என்ற ஆராய்ச்சி மையத்தின், நிலநடுக்கவியல் ஆய்வாளர் வினோத் குமார் கவுர் என்பவர் பேட்டி அளித்துள்ளார். அதில், ‘‘இந்த ஃபால்ட்டில் அதிகமான ஆற்றல் சேர்ந்துள்ளதற்கான ஆதாரங்களை கணக்கீடுகள் காட்டுகின்றன. 8 புள்ளி அளவுக்கு ரிக்டர் அளவுகோலில் பயங்கர நிலநடுக்கம் பதிவாவதற்கான வாய்ப்பு இந்த ஃபால்ட்டில் உள்ளது.
ஆனால் நிலநடுக்கம் எப்போது ஏற்படும் என்று துல்லியமாகக் கூற முடியாது. நாளையே இது ஏற்படும் என்று கூற முடியாது, ஆனால் இந்த நூற்றாண்டில் ஏற்படும். அல்லது மேலும் சில காலம் காத்திருந்து மிகப்பெரிய அளவில் நிலநடுக்கத்தை வெளிப்படுத்தலாம்’’ என்று அப்போதே கூறியிருந்தார்.
அதற்கு ஓராண்டு முன்பே, கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பரில், ‘நேச்சர் ஜியோ சயின்ஸ்’ இதழில் நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வு குறித்து வெளியான தகவலில் மத்திய இமய மலைப் பகுதிகளில் 8 முதல் 8.5 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டதற்கான பூமி வெடிப்புகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இமய மலைப் பகுதிகளில் உணர முடியாத நிலநடுக்கங்கள் தொடர்ந்து ஏற்பட்ட வண்ணம் உள்ளன. இமய மலைப் பகுதிகள் கடினமான பாறைகளை கொண்டிருப்பதாலும், வளைந்து வளைந்து மலைகள் இருப்பதாலும், பல நேரங்களில் வெளி உலகம் அறியாத, அறிய முடியாத பல நில நடுக்கங்கள் நிகழ்வதுண்டு. இந்த நிலநடுக்கங்கள் எந்த கருவியிலும் பதிவாவதில்லை. மேலும், இமய மலையின் பூமிக்குள் ஏற்படும் நிலநடுக்கங்களால் பூமி பிளவுபடுவதும் இல்லை. இதை ‘பிளைண்ட் த்ரஸ்ட்’ என்கின்றனர்.
ஆனால், உயர் தொழில்நுட்ப உத்திகள் கொண்ட ஆய்வில், 1255 மற்றும் 1934-ம் ஆண்டுகளில் இமாலயத்தில் இரண்டு மிகப்பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டதில் பூமியின் மேற்பகுதியில் பெரும் வெடிப்புகளை ஏற்படுத்தியிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
1934-ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால், பூமியில் சுமார் 150 கி.மீ. தூரம் பிளவு ஏற்பட்டது. பூமி பிளவுப்படும் வகையில் ஏற்படும் நிலநடுக்கத்தை ‘மெயின் பிரான்ட்டல் த்ரஸ்ட்’ என்றழைக்கின்றனர். இதுபோன்ற நிலநடுக்கங்கள் எதிர்காலத்தில் தொடர்ந்து நிகழலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையில், இமாலயப் பகுதிகளில் பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்படும் என்று கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே கணிக்கப்பட்டது போல், இப்போது நேபாளத்தில் நிகழ்ந்ததா என்று ஆய்வுகள் மேற்கொண்டுள்ளனர்
அழகை கெடுக்கும் டென்ஷன்!
சிலரைப் பார்த்தால் ப்ரிஜ்ஜில் வைத்த ஆப்பிள் பழம் மாதிரி எப்போதும் `ப்ரெஷ்’ ஆக இருப்பார்கள். இன்னும் சிலர் இருக்கிறார்கள்… எப்போதும் தூங்கி வழியும் மூஞ்சாக இருப்பார்கள். சுறுசுறுப்பும் அவர்களிடம் `மிஸ்’ ஆகி இருக்கும். அதனால், அவர்களது அழகும் காணாமல் போய் இருக்கும்.
இதையொட்டி அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வை மேற்கொண்டார்கள். அதாவது, இயற்கையான அழகு யாருக்கு கிடைக்கும்? என்கிற கோணத்தில் அந்த ஆய்வு அமைந்திருந்தது.
500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களிடம், அவர்கள் தினமும் மேற்கொள்ளும் செயல்களில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டன.
ஆய்வின் முடிவில் அடிக்கடி டென்ஷன் ஆகுபவர்களைக் காட்டிலும் டென்ஷன் ஆகாமல் எதையும் டேக் இட் ஈஸியாக எடுத்துக்கொள்பவர்கள் `ப்ரெஷ்’ ஆகவும், அழகாகவும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுபற்றி ஆய்வாளர்கள் கூறும்போது, `அழகுக்கும் மனதிற்கும் நிறையவே தொடர்பு இருக்கிறது. அந்த மனதை இயற்கையாக அதாவது, டென்ஷன் இன்றி வைத்துக்கொண்டால் முகமும் அழகாக இருக்கும்; உடலும் ஆரோக்கியமாக இருக்கும்’ என்று தெரிவித்தனர்.
என்ன… நீங்களும் டென்ஷன் பார்ட்டி என்றால் இப்போதே அதை தூக்கி எறிந்துவிடுங்கள். இல்லையென்றால், அழகு உங்களிடம் இருந்து `எஸ்கேப்’ ஆகிவிடும்.
N.M.D.C. Limited – National Mineral Development Corporation Limited
N.M.D.C. Limited – National Mineral Development Corporation Limited is inviting applications for the recruitment of Maintenance Assistant job vacancies Chhattisgarh. It released employment news in www.nmdc.co.in. The recruitment Employment Notification No. 02/2015 is also published in Employment News and Rojgar Samachar. Part of this notification is given here in “Employment News Today” for our valuable readers. Total jobs currently vacant in NMDC are 138 and the last date of reaching of applications to NMDC office is 12th May, 2015.
கையளவு நீர்-கதை
ஸ்ஸ்ஸ்ஸ்... அப்பாடா! கொளுத்தும் வெயிலில் வெளியில் அலைந்துவிட்டு வீட்டில் நுழைந்து நாற்காலியை இழுத்துப்போட்டு அதில் அமர்ந்தேன். முன்னாடி மேஜையில் அன்றைய நாளிதழ் கிடந்தது. எடுத்து வழக்கம்போல் தலைப்புச்செய்தியாக வாசித்தேன். வழக்கமான செய்திகள்தான். மேஜையில் சின்ன டம்ளரில் நீர் இருந்தது. யாரும் அருந்திவிட்டு மீதம் வைத்திருந்தார்களா எனத் தெரியவில்லை. எடுத்து அருந்தலாமா என யோசித்தேன்.
அப்போது மெலிதாக சிரிப்பு சத்தம் கேட்டது. யாரென்று சுற்றும் முற்றும் பார்த்தேன். டம்ளரில் உள்ள நீர்தான் சிரித்தது. எனக்கு பயமாகிவிட்டது. பேய் ஏதாவது பிடித்திருக்குமோ என்று. சின்ன வயதில் அம்மா வெளி அறையிலிருந்து உள்ளே போய் கொஞ்சம் சொம்பில் தண்ணீர் கொண்டு வாடா என்றால்... முடியாது என்று மறுத்துவிடுவேன். உள் அறைக்குத் தனியாக சென்றால் பேய் பிடித்துக்கொள்ளும் என்ற பயம். நான்காம் வகுப்பு படிக்கும்போது யாருமில்லா ஒரு மதியப்பொழுதில் டவுசர் மாத்துவதற்காக கொடியில் கிடந்த டவுசரை எட்டி எடுத்தேன். அப்போது கிரீச் என்ற சத்தம். எங்கிருந்து வந்தது எனத்தெரியவில்லை. அலறியடித்து வாசலில் வந்து நின்றுகொண்டேன். பக்கத்துவீட்டு மாமா என்னடா.. அம்மணமா நிக்குற என்ற விசாரிப்பில் எனக்கு சின்னதாக ஒரு அவமானம்தான். இல்ல மாமா டவுசர் கொடியில் கிடக்குது... எனக்கு எட்டல என்றேன். அவர் வந்து எடுத்துக்கொடுத்தார். உடனே டவுசரை மாட்டிக்கொண்டு வெளியில் ஓடிவந்துவிட்டேன். அந்த சத்தம் எனக்குள் இன்னும் ஒலிக்கிறது . பேயை நினைத்து பயந்ததுதான் காரணம்.
அப்புறம் சூரியன் மறையும் ஒரு மாலைப்பொழுதில் மக்காச்சோளத்துக்காக காவல் காக்கும்போது ஏதோ சத்தம் கேட்டதற்காக பயந்து நடுங்கியிருக்கிறேன். பேயை நினைத்து பயந்துகொண்டிருக்கும் காலம் மாறவே இல்லை.
நண்பனின் அம்மா இறந்த அன்று நல்லமழை. மயானத்தில் சடலம் எரிந்துவிட்டதா என்று பார்ப்பதற்காக நாலைந்துபேர் சென்றார்கள். அவர்களுடன் நானும் மயானத்திற்கு சென்று அரைகுறையாக எரிந்த சடலத்தைப்பார்த்து பயப்படாத மாதிரி காட்டிக்கொண்டேன். உள்ளூர நடுங்கியது வேறுவிசயம். மயானத்திற்கு சென்றுவந்த வீரக்கதையை நீண்டநாட்களாக நண்பர்களிடம் சொல்லி நானும் வீரமானவன்தான் பேய்க்கு பயப்படாதவன் எனக்காட்டிக்கொண்டேன்.
இப்போதுவரை பேயை பார்த்தது இல்லை. ஆனால் பேயை நினைத்து மனதில் ஏற்படும் பயம் இன்றுவரை மாறவில்லை. இது இப்படி இருக்க திடீரென யாருமற்ற அறையில் சிரிப்பு சத்தம் கேட்டால் பயப்படாமல் இருக்க முடியுமா! டம்ளரில் இருக்கும் நீர் நான்தான் சிரித்தேன் என்றவுடன் பயத்தைவிட ஆச்சரியம்தான் அதிகமாகியது. நானில்லாமல் நீங்கள் இருக்கமுடியாது என்று தலைக்கனத்துடன் பேச ஆரம்பித்தது. நான் பூமியில் ஏறத்தாழ 2/3 மடங்கு இருக்கிறேன் என்று இருமாப்பு காட்டியது. எல்லோரும் என்னை நீர் என்று மரியாதையுடன் அழைப்பார்கள் என்று இன்னும் அகம்பாவத்துடன் கூறியது.
நானும் பொறுமையாக கேட்டுக்கொண்டு ஆமாம்! நீர் இல்லாமல் எங்களால் இருக்கமுடியாது என்பது உண்மைதான். ஆனால் உன்னை பயன்படுத்தத்தான் எங்களைப்போன்ற உயிர்களை கடவுள் படைத்தார் என்றேன். அது வாய்விட்டு சிரித்தது. நாங்கள் இல்லாத இடமே இல்லை. ஆறு, குளம், ஏரி, கிணறு, கடல் என்று எங்கும் வியாபித்திருப்போம். மழை பெய்யவில்லையென்றால் விவசாயம் பொய்த்து மனிதர்கள் இறக்கவேண்டிவரும் என்று அகம்பாவம் குறையாமல் கூறியது.
இவ்வளவு அகம்பாவத்துடன் பேசுகிறாயே.. நீ நல்லவர்களுடன் மட்டும் சேராமல் கெட்டவர்களுடனும் சேருகிறாய். யாருடனும் எளிதில் கலந்துவிடுகிறாய் என்றேன். அது என்னுடைய இயல்பு என்று நீர் கூறியது. எனக்கு எல்லோரும் ஒன்றுதான். எல்லோரும் எனக்கு கீழ்தான். நான்தான் உயர்ந்தவன் என்றது. நான் பொறுமையில்லாமல் அதன் கர்வத்தை அடக்க படக்கென்று டம்ளரை எடுத்து நீரை அருந்திவிட்டேன்.
இப்போது டம்ளர் சிரித்தது. நீ எதற்கு சிரிக்கிறாய் என்று வெறுப்புடன் கேட்டேன். மனித மனத்தை நினைத்து சிரித்தேன் என்றது. எல்லோரையும் அடக்கி ஆள நினைக்கும் மனம் மனிதனுக்கு மட்டுமே உண்டு என்றது. எந்த ஒரு உயிரினமும் பாத்திரத்திற்குள் நீரை அடக்குவதில்லை. மனிதன்தான்
நீரை மட்டுமல்ல எல்லாவற்றையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து அடக்குபவன். எல்லோரையும் அடக்கி ஆள நினைக்கும் நீங்கள்தான் அகம்பாவம் பிடித்தவர்கள் என்றது. அமைதியாக நான் தலை கவிழ்ந்து கொண்டேன்.
பொறியியல் பட்டதாரிகளுக்கு சிஎஸ்ஐஆர் மெட்ராஸ் காம்ப்ளக்ஸில் பணி
சென்னை தரமணியில் செயல்பட்டு வரும் சிஎஸ்ஐஆர் மெட்ராஸ் காம்ப்ளக்ஸில் நிரப்பப்பட உள்ள Research Intern (Under CSIR Diamond Jubilee Research Intern Scheme) பணிக்கு 29 ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் தகுதியானவர்கள் கலந்து கொள்ளலாம்.
விளம்பர எண்: IN/03/2015
பணி: Research Intern (Under CSIR Diamond Jubilee Research Intern Scheme)
காலியிடங்கள்: 01
தகுதி: EEE, E&I, Computer Science போன்ற ஏதாவதொரு துறையில் முதல் வகுப்பில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
ஊக்கத்தொகை: மாதம் ரூ.15,000
கால அளவு: அதிகபட்சமாக 2 வருடங்கள் ஆராய்ச்சி பணி வழங்கப்படும்.
வயதுவரம்பு: 29.04.2015 தேதியின்படி 25க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 29.04.2015 அன்று காலை 9.30 மணிக்கு
நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ளுபவர்கள் www.csircms.res.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவ மாதிரியை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டி, அதனுடன் கல்வித்தகுதி, அனுபவம், சாதி சான்றிதழ்கள் அசல் மற்றும் அட்டெஸ்ட் பெறப்பட்ட நகல்களை விண்ணப்பத்துடன் இணைத்து கொண்டு வர வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு www.csircms.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
Subscribe to:
Posts (Atom)