TRB,TNTET,TNPSC online coching

Search This Blog

NEWS

https://trb-tntet-tnpsc.blogspot.in/வழங்கும் இலவச இணையதள பயிற்சிக்கு உங்களை வரவேற்கிறோம்.தன்னம்பிக்கை, விடா முயற்சி , கடின உழைப்பு. எந்த சோதனைகள் வந்தாலும் உங்கள் இலட்சியத்தை விட்டு விடாதீர்கள். "சரியான முயற்சியும் பயிற்சியும் இருந்தால் உங்களால் முடியாத ஒன்றுமே இல்லை" என்ற நம்பிக்கை உங்கள் ஒவ்வொருவரின் மனதிலும் நிறைந்திருக்க வேண்டும். அதற்காக எங்கள் இணைய தளத்தின் மூலம் எங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வோம்.பயிற்சி நிறுவனங்களுக்கு சென்று பயிற்சி பெற இயலாத வேலைதேடும் இளைஞர்கள், பணிபுரிபவர்கள், இல்லத்தரசிகள் தங்களது அரசு வேலை கனவுகளை நனவாக்குவதற்காகவே இந்த இணையதளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. TET ன் புதிய பாடத்திட்டத்திற்கேற்ப ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட பாடப்பகுதிகளில் வாரத்தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த வாரத்தேர்வின் முடிவுகள் உங்கள் பெயருடன் இந்த இணையதளத்தில் வெளியிடவும் முடிவு செய்துள்ளோம்.

Tuesday, January 20, 2015

இணையத்தின் மூலம் வில்லங்கச் சான்றிதழை இலவசமாகப் பெறும் வசதியை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது


பொதுவாக வீடு, நிலம் போன்ற சொத்துகளை வாங்குவோர் அந்த சொத்து குறித்தும், முந்தைய உரிமையாளர்களின் விவரங்களை அறிந்துகொள்ளவும், அதில் வில்லங்கங்கள் ஏதேனும் உள்ளதா எனத் தெரிந்துகொள்ளவும் வில்லங்கச் சான்று பெறுவர். அதற்காக சார்பதிவாளர் அலுவலகத்தில் முறையாக விண்ணப்பித்து, உரிய கட்டணமும் செலுத்தி, அதிகபட்சமாக 10 நாட்களுக்குள் வில்லங்கச் சான்றினைப் பெற்று வந்தனர். வில்லங்கச் சான்று பெற காலதாமதமாவதால் அதனை துரிதப்படுத்தும் விதமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இணையத்தின் மூலம் விண்ணப்பித்து, வில்லங்கச் சான்றை விரைவாகப் பெறும் சேவையை துவக்கியது பதிவுத் துறை. இணையத்தின் மூலம் வில்லங்கச் சான்று பெற விரும்புவோர் உரிய கட்டணத்தை இணையத்தில் செலுத்தி தபால் மூலமாகவோ அல்லது சார்பதிவாளர் அலுவலகத்திலிருந்தோ இரண்டு நாட்களுக்குள் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் இடைத்தரகர்களின் குறுக்கீடு அதிகளவில் இருந்தமையாலும், மக்களிடம் உரிய வரவேற்பு இல்லாததாலும் இச்சேவை வெற்றி பெறவில்லை. இவை அனைத்திற்கும் தீர்வு காணும் விதமாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர், வீட்டிலிருந்தபடியே இணையத்தின் மூலம் வில்லங்கச் சான்றிதழை இலவசமாகப் பெறும் வசதியை துவக்கியுள்ளது தமிழக அரசின் பதிவுத்துறை. இதனால் பொதுமக்கள் வில்லங்கச் சான்று பெறுவதற்காக பத்திரப் பதிவு அலுவலகத்திற்குச் செல்லத் தேவையில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இணையத்தின் மூலம் வில்லங்கச் சான்றிதழை இலவசமாகப் பெறுவது எப்படி? தமிழகப் பதிவுத்துறையின் www.tnreginet.net என்ற இணையதளத்தில் வில்லங்கச் சான்றைப் பார்ப்பதற்கும், பதிவிறக்கம் செய்வதற்கும் தனி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் To view Encumbrance Certificate என்ற லிங்க்கினை க்ளிக் செய்வதன் மூலம் வில்லங்கச் சான்றிதழை இலவசமாகப் பார்க்கும் அல்லது பெறும் வலைத்தளத்திற்குள் செல்லலாம். மேலும் http://ecview.tnreginet.net/ என்ற இணைய முகவரியின் மூலமாகவும் நேரடியாக வில்லங்கச் சான்றிதழைப் பெறும் வலைத்தளத்திற்குள் செல்லலாம். 


No comments: