இந்தியப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த காணாமல் போன 74 வீரர்கள் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருப்பதாக நம்பப்படுவதாக மத்திய அரசு தெரிவித்தது.
இதுகுறித்து மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே. சிங் எழுத்துப்பூர்வமாக வியாழக்கிழமை அளித்த பதில்: அரசுக்கு கிடைத்த தகவலின்படி, பாதுகாப்புப் படையைச் சேர்ந்த காணாமல் போன 74 இந்திய வீரர்கள், பாகிஸ்தான் சிறையில் உள்ளனர். ஆனால் அவர்கள் அங்குதான் இருக்கிறார்கள் என்பதை பாகிஸ்தான் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
காணாமல் போன வீரர்களின் உறவினர்கள் பாகிஸ்தானில் உள்ள சிறைகளுக்கு கடந்த 2007-ஆம் ஆண்டு சென்று பார்வையிட்டுள்ளனர். எனினும் அங்கு அவர்கள் இருப்பதற்கான எந்த வித ஆதாரமும் கிடைக்கவில்லை.
ஆயினும், இந்த விவகாரத்தை பாகிஸ்தான் அரசிடம் மத்திய அரசு எண்ணற்ற முறை எழுப்பியுள்ளது. பாகிஸ்தான் சிறைகளில் இந்தியர்கள், இந்தியர்கள் என நம்பப்படும் 208 பேர் இருக்கின்றனர். அவர்களுள் 61 பேர் குற்றச்செயல்களைப் புரிந்தோர், 147 பேர் மீனவர்களாவர் என்று தனது பதிலில் வி.கே.சிங் குறிப்பிட்டுள்ளார்

No comments:
Post a Comment