ரெகுநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 8,9,10 வகுப்புகளுக்கு தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருபவர் முத்துசாமி, 33. சத்திரக்குடி அருகே செவ்வூர் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர். குடும்பத்தில் யாரும் பள்ளிப்படிப்பை முழுமையாக தாண்டாத நிலையில், பார்வையற்றோருக்கான சிறப்பு பள்ளியில் பயின்று இன்று எம்.ஏ., பி.எட்., எம்.பில்., தேர்ச்சிபெற்று முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரிய ராக மாணவர்களுக்கு கல்வி போதித்து வருகிறார்.
மேலும் தமிழ் சங்கம் சார்பில் நடைபெறும் பட்டிமன்றம், சொற் பொழிவு உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். படிப்பதற்காக ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களுக்கு உதவிவருகிறார்.பார்வை இழந்தாலும் பாதை மாறாமல் பயணிக்கும் ஆசிரியர் முத்துசாமி, ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு விதமான திறமைகள் குடிகொண்டுள்ளது. அதை வெளிக்கொண்டுவருவது கல்வி மட்டுமே. குறைகளை எண்ணி தளர்ந்துவிடாமல் தன்னம்பிக்கையுடன் முயற்சித்தால் வெற்றி எப்போதும் நம் அருகில் தான் என்கிறார் புன்னகையுடன்...
இவரை வாழ்த்த: 97863 26166.
No comments:
Post a Comment