லண்டன்: ‘இந்தியாவில், பல மருத்துவர்கள் மனசாட்சியை அடகு வைத்து விட்டு, நோயாளிகளிடம் பணம் பறிக்கின்றனர்’ என, உலகப் புகழ் பெற்ற, பி.எம்.ஜே., மருத்துவ இதழ், வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி மற்றும் பயிற்சி மருத்துவர்கள், தனியார் மருத்துவமனை நிர்வாகிகள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் வெளியாகி உள்ள அந்த ஆய்வறிக்கையின் விவரம்:பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் முதலீடு செய்வோருக்கு, லாபம் தான் குறிக்கோள். அதனால், அத்தகைய தனியார் மருத்துவமனைகள், மருத்துவர்களுக்கு, குறிப்பிட்ட தொகையை வசூலிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கின்றன. அந்த இலக்கை எட்டாவிட்டால், தங்கள் வேலை பறிபோகும் என்று மருத்துவர்கள் அஞ்சுகின்றனர்; மேலும், குறிப்பிட்ட காலத்திற்கு பயிற்சி பெற வேண்டிய கட்டாயமும் அவர்களுக்கு உள்ளது.அதனால், நிர்வாகத்தின் நிர்ப்பந்தத்தை அம்பலப்படுத்த முடியாத நெருக்கடிக்கு மருத்துவர்கள் ஆளாகின்றனர். இத்தகைய மருத்துவர்கள், மனசாட்சியின்றி, தேவையற்ற பரிசோதனைகளையும், அறுவை சிகிச்சைகளையும் மேற்கொள்ளுமாறு, நோயாளிகளை அறிவுறுத்துகின்றனர்.
சாதாரணமாக, துவக்க நிலையில் உள்ள, தொண்டை சதை வளர்ச்சி அல்லது குடல் வால் அழற்சி நோய்களுக்கு கூட, நோய் தடுப்பு மாத்திரைகளால் குணப்படுத்த விரும்பாமல், அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கின்றனர். இதன் மூலம், நோயாளிகளிடம் பெருந்தொகையை கறந்து விடுகின்றனர்.நாட்டின் மருத்துவ சேவைகளையும், நிர்வாகத்தையும் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு, இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு உள்ளது. ஆனால், இதில் மருத்துவர்களே உறுப்பினராக உள்ளதால், தவறு செய்யும் மருத்துவர்களையோ அல்லது அவர்களை துாண்டும் மருத்துவமனைகளையோ, சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க முடியாத நிலை உள்ளது.ஆகவே, உடனடியாக, இந்திய மருத்துவ கவுன்சில் சீரமைக்கப்ட வேண்டும். இந்திய மருத்துவ துறை சீர்பட, இத்தகைய நடவடிக்கை அவசியம்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

175 ஆண்டுகளாக…:
இங்கிலாந்தில், 1840ல், முதன் முதலாக, ‘புரோவின்சியல் மெடிக்கல் அண்டு சர்ஜிகல் ஜர்னல்’ என்ற மருத்துவ இதழ் வெளியானது. பின்னர், இது,’பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல்’ ஆக, மாறியது. 1988ல், சுருக்கமாக, பி.எம்.ஜே., என்று மாறி, 2014ல், ‘தி பி.எம்.ஜே.,’ என்ற பெயருடன், சர்வதேச முன்னணி மருத்துவ இதழ்களில் ஒன்றாக விளங்குகிறது
No comments:
Post a Comment