TRB,TNTET,TNPSC online coching

Search This Blog

NEWS

https://trb-tntet-tnpsc.blogspot.in/வழங்கும் இலவச இணையதள பயிற்சிக்கு உங்களை வரவேற்கிறோம்.தன்னம்பிக்கை, விடா முயற்சி , கடின உழைப்பு. எந்த சோதனைகள் வந்தாலும் உங்கள் இலட்சியத்தை விட்டு விடாதீர்கள். "சரியான முயற்சியும் பயிற்சியும் இருந்தால் உங்களால் முடியாத ஒன்றுமே இல்லை" என்ற நம்பிக்கை உங்கள் ஒவ்வொருவரின் மனதிலும் நிறைந்திருக்க வேண்டும். அதற்காக எங்கள் இணைய தளத்தின் மூலம் எங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வோம்.பயிற்சி நிறுவனங்களுக்கு சென்று பயிற்சி பெற இயலாத வேலைதேடும் இளைஞர்கள், பணிபுரிபவர்கள், இல்லத்தரசிகள் தங்களது அரசு வேலை கனவுகளை நனவாக்குவதற்காகவே இந்த இணையதளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. TET ன் புதிய பாடத்திட்டத்திற்கேற்ப ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட பாடப்பகுதிகளில் வாரத்தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த வாரத்தேர்வின் முடிவுகள் உங்கள் பெயருடன் இந்த இணையதளத்தில் வெளியிடவும் முடிவு செய்துள்ளோம்.

Sunday, August 23, 2015

புதுவை பாரதியார் கிராம வங்கியில் அதிகாரி & அலுவலக உதவியாளர் பணி

புதுவை பாரதியார் கிராம வங்கியில் நிரப்பப்பட உள்ள அதிகாரி மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
புதுவை பாரதியார் கிராம வங்கி காலியிடங்கள் விவரம்
1. Officer Scale-I -  07
2. Office Assistant (Multipurpose) - 08
வயது வரம்பு: 18 - 28க்குள் இருக்க வேண்டும். அதாவது 03.06.1986 - 31.05.1996க்குள் பிறந்திருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிறுவனங்களில் இருந்து ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: IBPS நடத்திய செப்டம்பர்/ அக்டோபர் 2014 வங்கி தகுதித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் செயல்திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. SC, ST, PWD, EXSM பிரிவினருக்கு ரூ.20. இதனை செலானை பயன்படுத்தி புதுவை பாரதியார் கிராம வங்கி கிளைகளில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.puduvaibharathiargramabank.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.08.2015.
ஆன்லைன் விண்ணப்ப் பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 12.09.2015.
மேலும் விண்ணப்பத்தாரர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய http://www.puduvaibharathiargramabank.in:81/pdfs/pud_rec_13082015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

VKGB - விதர்பா கொங்கன் கிராமிய வங்கி

விதர்பா கொங்கன் கிராமிய வங்கியில் நிரப்பப்பட உள்ள 116 அதிகாரி மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 116
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1.  Officer Scale-I - 89
2.  Office Assistant (Multipurpose) - 27
வயது வரம்பு: 01.06.2014 தேதியின்படி 18 - 28க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனங்களில் ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: செப்டம்பர் / அக்டோபர் 2014 இல் IBPS  நடத்திய வங்கி தகுதித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள்  www.vkgb.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.08.2015
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் சென்று சேர கடைசி தேதி: 09.09.2015.
மேலும் வயதுவரம்பு சலுகை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.vkgb.co.in/downloads/Recruitment_Advertisement2014-15_1.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

பிரச்னைகளில் விலகி நின்று யோசியுங்கள். தீரும்!

இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அது ஒப்ப நில்!
இந்த குறளுக்கு நமக்கு கண்டிப்பாய் விளக்கம் தெரிந்திருக்கும். நமக்கு துன்பம் வரும் போது சிரிக்க வேண்டும், மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்; அந்த மகிழ்ச்சியே, அந்த துன்பத்தை தூர காணாமல் போக்கிவிடும். அந்த துன்பத்திற்கு நிகர், அந்த நேர மகிழ்ச்சி தான்.

சமீபத்தில் ஒரு வாழ்வியல் பயிற்சி முகாமில் கலந்து கொண்டேன். இதற்கான ஒரு புது விளக்கம், நாம் ஒத்துக் கொள்கிற மாதிரி, வேறு விதமாக கூறப்பட்டது ஆச்சரியமாக இருந்தது.
‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்றால், – துன்பம் வரும்போது நகர்ந்து விடுங்கள் என அர்த்தம்.
அதற்காக, ‘துன்பத்தை பார்த்து பயந்து ஓடி விடுங்கள்’ என்று நேர் அர்த்தம் கொள்ளக் கூடாது; அந்த துன்ப மனநிலையிலிருந்து நகர்ந்து, தள்ளி நின்று, அந்த பிரச்னையை – துன்பத்தை கவனியுங்கள்; தீர்வு கிடைக்கும் என்பதாக விளக்கம் கூறினர்.
இது எவ்வளவு தூரத்திற்கு உண்மை, 
ஒத்துக் கொள்ளக் கூடியதா என்று சில திருக்குறள் ஆர்வலர்களிடம் கேட்டேன்.’இதுவரை திருக்குறளுக்கு என்று திருவள்ளுவரால் இயற்றப்பட்ட பொழிப்புரை ஒன்று தனியாக கிடையாது. படித்தவர்கள் அவரவர் வசதிக்கேற்ப, புரிந்து கொள்ளும் திறனுக்கு ஏற்ப இயற்றிய பொழிப்புரை தான் வழக்கத்தில் இருந்து வருகிறது. அதனால், இதையும் ஒரு விளக்கமாக எடுத்துக் கொள்ளலாம்; தவறொன்றுமில்லை’ எனக் கூறினர்.
‘நகுக’ என்றால் என்ன?
யோசித்து பார்த்தால், இந்த, ‘நகுக’ என்பதற்கு இப்படி நகர்ந்து போவது என்றே வைத்துக் கொண்டால் கூட நன்றாகத் தான் இருக்கும் என்றே தோணுகிறது. நீங்கள் மிகவும் துன்பத்தில் இருக்கும் போது, ‘அய்யய்யோ… நான் படும் துன்பத்தை சுற்றியே என் சிந்தனை சுழல்கிறதே…’ என்று வெறுப்படைந்து விடாமல், ‘இல்லை! நான் மகிழ்ச்சியோடு தான் இருக்கிறேன்’ என்று நேர்மறையாக சிந்திக்கும் சித்தாந்தத்தின் படி, மாற்றுச் சிந்தனையைத் திணிக்க நீங்கள் முயற்சி செய்தால், மனதுக்குள் ஒரு போராட்டம் தான் உருவாகும்.
அதற்கு பதிலாக உங்களின் சிந்தனையை நீங்களே சற்றுத் தள்ளி நின்று, கவனிக்க ஆரம்பியுங்கள்.
துன்பமான சிந்தனையோ, மகிழ்ச்சியான சிந்தனையோ, சபலமான சிந்தனையோ…
அதை நீங்களே விலகி நின்று பார்க்கும்போது,
உங்களுக்குள்ளே, ‘புரிந்து கொள்ளல்’ நடக்கும்.இதுபோன்ற மனநிலை வந்து விட்டால் துன்பம், மகிழ்ச்சி இந்த இரண்டுமே ஒன்று தான்! மகிழ்ச்சி
எப்படி ஓர் அனுபவமோ, அதே போல் துயரமும் ஓர் அனுபவமே! ஆனால் மனதில் அமைதியும், தெளிவும் இல்லாத மனிதர்களுக்கு, மகிழ்ச்சி கூட சோகமானதாய் போய்விடும். ஆனால் மனதுக்குப் பிடித்து விட்டால், இனிப்பு என்பது எப்படி ஒரு சுவையோ, அதேபோல், கசப்பும் ரசிக்கக் கூடிய ஒரு சுவைதான் என்பதை உணர்ந்து கொண்டால், ‘பிரச்னையா… அய்யோ, இதென்ன எனக்கு மட்டும் இப்படி கசக்கிறதே!’ என்ற
புலம்பலோ இருக்காது!: சிறுபிள்ளையாக இருக்கும்போது, இனிப்பு ஒன்று தான் சுவை. கசப்பு, துவர்ப்பு, புளிப்பு எல்லாம் சுவை இல்லை என்று, நமக்கு நாமே முடிவெடுத்து, மற்ற சுவைகளுக்கு இடம் தராமல் மூடி விடுகிறோம்.
அது போல, மகிழ்ச்சி மட்டும் தான் நல்ல உணர்ச்சி; மற்றது எல்லாம் வெறுக்கத்தக்க உணர்ச்சிகள் என்று எண்ணி நாம், அனேக உணர்ச்சிகளுக்கு கதவை திறப்பது இல்லை; பயத்துடனேயே அதை எதிர்நோக்காமல் விட்டு விடுகிறோம்.
பிரச்னைகளை விட்டு ஓடவோ, விலகி ஒதுங்கவோ கூடாது. அப்படியே துன்பம் ஏற்பட்டுவிட்டால், கத்தி கூப்பாடு போட்டு அதகளம் பண்ணுவதில் அர்த்தம் இல்லை. ‘இது எனக்கான துன்பம் இல்லை… யாருக்கோ உள்ளது. அவர்களுக்கு வெளியில் ஒரு மூன்றாவது மனிதராய் நான் என்ன தீர்வு சொல்ல இயலும், முடியும்’ என்கிற மாதிரி தள்ளி நின்று யோசித்தாலே அந்த துன்பத்தின் வீரியம் குறைந்து, சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிடும்.
ஒவ்வொரு நொடியும் நாம் என்ன செய்கிறோம் என்பதற்கான விளைவு தான், நாம் வாழ்க்கையில் சந்திக்கும் இன்பங்களும், துன்பங்களும். வேதனையான சூழ்நிலையில் எதிர்பாராத பாதிப்புகள் வாழ்க்கையை கேள்விக் குறியாக்குகின்றன. ஆனால், எந்த சூழ்நிலையிலும், வாழ்க்கையில் ஓர் அர்த்தம் உள்ளது என்பதை, நாம் கண்டுகொள்ள வேண்டும்.
இருண்ட பக்கங்கள்?
துன்பம் நம்மை சூழ்ந்துக் கொள்ளும் போது : வாழ்க்கையின் இருண்ட பக்கங்கள் முழுமையாக ஆட்கொண்டது போல தோன்றுகிறது.
துன்பத்தை ஒரு எல்லையில் வைத்து பார்ப்பது கடினம் தான். பழகினால், பழக்கிக் கொண்டால், இதெல்லாம் நமக்கு ஒரு விஷயமா என்று நீங்கள் சொல்ல ஆரம்பித்து விடுவீர்கள். இப்படி எந்தச் சிறையிலும் அடைபடாமல், தள்ளி நின்று சிந்தனையைக் கவனிக்கும் போது மனம் தானாகவே அமைதி அடையும். திரைகள் விலகும்; உண்மைகள் புரியும். வாழ்க்கை அழகாக,
அற்புதமானதாக, ஒரு மலரைப் போல மவுனமாக மென்மையாக விரியும். முயற்சித்து தான் பார்ப்போமே, கொஞ்சம்
நகர்ந்து நின்று!

Monday, August 10, 2015

‘உணவே நஞ்சு; நஞ்சே உணவு’

ணவே மருந்து; மருந்தே உணவு’ என்பது, நமது நீண்ட நெடிய உணவுக் கலாசாரத்தின் சாரம். ஆனால் இன்று, ‘உணவே நஞ்சு; நஞ்சே உணவு’ என்ற கொடும் காலத்துக்குள் வந்துசேர்ந்திருக்கிறோம். காய்கறிகள், தானியங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் என ஒவ்வொன்றிலும் உள்ள நச்சுப்பொருட்களைப் பட்டியலிட்டால், ஒருவேளை உணவைக்கூட நாம் நிம்மதியாக உண்ண முடியாது. இவை எல்லாம் நம் கண்ணுக்குத் தெரியாத கேடுகள் என்றால், நாம் தெரிந்தே உணவில் செய்யும் தவறுகளும் அநேகம். அவற்றில் முக்கியமானது, உப்பும் சர்க்கரையும். சுவை நரம்புகளைச் சுண்டி இழுத்து மயக்கிடும் இந்த இரண்டும், உடலுக்கு அவசியமானவைதான். ஆனால், அது ஓர் அளவுக்குள் இருக்க வேண்டும்.
நம் உடலில் உள்ள செல்கள் திறனுடன் செயல்பட, சர்க்கரைச் சத்தும் உப்பில் உள்ள சோடியம் சத்தும் அவசியமானவை. ரத்தத்தில் தேவையான அளவு சோடியம் இருக்க வேண்டும். ரத்தத்தில் கலந்துள்ள நுண்தாதுக்களை செல்களுக்குள் எடுத்துச்செல்ல சோடியம் உதவுகிறது. இது காய்கறி, பழங்கள், கீரை, அரிசி, பருப்பு என அனைத்து உணவுகளிலும் இருக்கிறது; உப்பில் அதிகமாகவே இருக்கிறது.

அதேசமயம் ரத்தத்தில் சோடியத்தின் அளவு அதிகமானால், செல்களில் உள்ள நீர்ப்பொருளை வெளியே தள்ளி, நீரை ரத்தத்தில் கலக்கச்செய்கிறது. இதனால் ரத்தத்தின் அடர்த்தி அதிகமாகிறது. இது இதயத்துக்கு அலர்ச்சியை உருவாக்கி, மாரடைப்பை ஏற்படுத்துகிறது. இன்னொரு பக்கம், இதயத்தில் இருந்து தொலைவில் உள்ள கால்களுக்கு, ரத்தம் செல்லும் நேரம் அதிகமாகிறது. இதனால் பிராணவாயு பற்றாக்குறை ஏற்பட்டு, கால் மரத்துப்போகிறது. சிறுநீரகப் பாதிப்புகள், தசையின் நீண்டு சுருங்கும் தன்மை குறைந்து தசைப்பிடிப்பு ஏற்படுவது, தோல் வியாதிகள், நரம்புச் செயல்பாடுகள் பாதிப்பு போன்ற பல பிரச்னைகள் வரக்கூடும்.
உணவில், உப்பின் அவசியம் குறைவானதுதான். ஆனாலும் சுவைக்காக நாம் சிறுகச் சிறுகச் சேர்க்கும் உப்பு அதிகமாகி, ஒருகட்டத்தில் அது நோய்களைக் கொண்டுவருகிறது. அதேபோல ‘அயோடின் உப்பு’ என தனியே விளம்பரப்படுத்தி விற்கிறார்கள். உண்மையில் நாம் அன்றாடம் உண்ணும் உணவுப் பொருட்களிலேயே அயோடின் கலந்து இருக்கிறது. அதை உப்புடன் சேர்த்துதான் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. தைராய்டு பிரச்னைக்கு, அயோடின் சத்து குறைபாடு என்பதும் ஒரு காரணம். இதற்கு, உப்பு மட்டுமே காரணம் அல்ல; மன அழுத்தம், இரவுத் தூக்கம் இல்லாதது, சீரற்ற உணவுப்பழக்கம், சிறுநீரகக் கோளாறு, முறையற்ற மாதவிலக்கு போன்றவையும் முக்கியக் காரணங்கள்.
பொதுவாக நாம் உணவில் சேர்க்கும் கடல் உப்பு, கடல் நீரை ஆவியாக்கி அதில் இருந்து எடுக்கப்படுகிறது. இதில் சோடியம் குளோரைடு மற்றும் இயற்கையான நுண்ணூட்டச் சத்துக்கள் நிறைந்தே இருக்கின்றன. இன்னொன்று, பாறை உப்பு. இது உப்புப் பாறையை வெட்டி எடுப்பதன் மூலம் கிடைக்கிறது. இது மஞ்சள், ரோஸ், வெள்ளை ஆகிய நிறங்களில் கிடைக்கும். பொதுவாக, உப்பை தண்ணீரில் கரைத்து, மேற்பகுதியில் தெளிவாக உள்ள நீரை மட்டும் சமையலுக்குப் பயன்படுத்துவது நல்லது. குழந்தைப் பருவத்தில் இருந்தே உணவுப் பொருட்களில் குறைந்த அளவு உப்புக்குப் பழக்கலாம். வளர்ந்த சிறுவர்களாக இருந்தால், உப்பின் அளவைச் சிறுகச்சிறுகக் குறைக்கலாம். கிழங்குகளைச் சுட்டு உண்ணும்போது உப்பு தேவை இல்லை. காரணம், அவற்றில் இயற்கையாகவே உப்பு உள்ளது.
சர்க்கரையின் கதையும் இதேபோன்றுதான். சர்க்கரை நோயாளிகள் வீட்டுக்கு வீடு நிறைந்திருக்கும் காலம் இது. இவர்களைக் குறிவைத்தே வெவ்வேறு பொருட்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. இனிப்புச் சுவைக்காகச் சேர்க்கப்படும் சர்க்கரை, வெல்லம், கருப்பட்டி ஆகியவற்றில் மட்டும்தான் சர்க்கரை இருக்கிறது என்று இல்லை. பழங்கள், உலர் பழங்கள், காய்கறிகள், கிழங்கு வகைகள், தேன், பன்னீர் போன்றவற்றிலும் இனிப்பு கலந்திருக்கிறது. இவை அனைத்தும், இயற்கையாக உள்ள சர்க்கரைப் பொருளை நம் உடலுக்குத் தந்து ஆற்றலை அளிக்கக்கூடியவை. இந்த வகை இனிப்பு, மூளையின் செயல்பாட்டைச் சீராக்குகிறது; பிராணவாயு கிடைக்கச் செய்கிறது; மன இறுக்கத்தையும் உடல் சோர்வையும் போக்குகிறது.

ஆனால், நாம் பெரும்பாலும் வீடுகளில் பயன்படுத்தும் வெள்ளைச் சர்க்கரை, கரும்பில் இருந்து சாறு பிழிந்து, குளோரின் மூலம் பிளீச் செய்யப்பட்டு, 60-70 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சூடாக்கி பாஸ்பாரிக் அமிலம் சேர்த்து அழுக்கு நீக்கப்படுகிறது. மீண்டும் 102 டிகிரி செல்சியஸுக்கு வெப்பம் உயர்த்தப்பட்டு, பாலி எலெக்ட்ரோரைட் கலந்து சுத்தப்படுத்தப்படுகிறது. அதுபோக சல்பர் டை ஆக்ஸைடு, சோடியம் பை சல்பேட் போன்ற வேதி உப்புகள் சேர்க்கப்பட்டு வெள்ளை ஆக்கப்படுகிறது. இந்த ரசாயனங்கள் அனைத்தும் உடலுக்குக் கேடு விளைவிப்பவை. குறிப்பாக ஜீரணக் கோளாறு, பசி எடுக்காமை, சத்து குறைபாடு போன்ற பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன. இன்சுலின் வீரியம் குறைகிறது. நுரையீரல் கோளாறு, முடக்குவாதம் போன்றவற்றை ஏற்படுத்துகின்றன. இதற்கு மாற்றாக வேதிப்பொருட்கள் கலக்காத நாட்டுச் சர்க்கரை, வெல்லம், அச்சு வெல்லம், கருப்பட்டி, பனங்கற்கண்டு போன்றவற்றைப் பயன்படுத்தலாம். சுத்தமான தேனைப் பயன்படுத்துவதும் நல்லதே. தேனில் கலப்படத்தைக் கண்டறிய பல வழிகள் இருந்தாலும், நாவால் சுவைக்கும்போது அடிநாக்கில் தென்படும் சிறு துவர்ப்புச் சுவை, நல்ல தேனுக்கான அடையாளம்.
புளியைச் சுட்டும், உப்பை வறுத்தும், இனிப்பை ஒதுக்கியும் வாழ்வதுதான் ஆரோக்கியம் என, சித்தர் பாடல்கள் சொல்கின்றன. நாம் இனிப்புச் சாப்பிட வேண்டும் எனத் தோன்றுவது, நம் உடலில் நுண்ணூட்டப் பற்றாக்குறையை உணர்த்துகிறது. இனிப்பின் மூலம் அதை இலகுவாகப் பெற முடியும். இந்த இனிப்பு, இயற்கையானதாக அல்லாமல் வேதிப்பொருள் கலந்திருந்தால், அந்த இனிப்பை ஜீரணிக்க உடலில் உள்ள சத்துக்கள் வீணாகின்றன. சந்தையில் கிடைக்கும் கான்சிரப், லிக்விட் குளூக்கோஸ் போன்ற இனிப்பூட்டிகளில் அதிக அளவு மாவுச்சத்தும், வேதி உப்புகளும் கலந்திருக்கின்றன. ஸ்டிவியா (ஷிtமீஸ்வீணீ) எனப்படும் இனிப்புத் துளசி, வெள்ளைச் சர்க்கரையைக் காட்டிலும் 200 மடங்கு இனிப்புச் சுவை கெண்டது; பக்கவிளைவுகள் இல்லாதது. பொடியாக்கிப் பயன்படுத்தலாம். பராகுவே நாட்டை தாயகமாகக்கொண்ட இந்தச் செடி, தற்போது உலகின் பல நாடுகளில் பயிரிடப்படுக்கிறது. இதன் 50 கிராம் பொடி, 1 கிலோ சர்க்கரை இனிப்புக்குச் சமம்.
நம் வாழ்க்கைமுறை மாறிவிட்டது. யாருக்கும் நேரம் இல்லாமல் பரபரவென ஓடிக்கொண்டிருக்கிறோம். நல்ல உணவு, மகிழ்ச்சியான வாழ்க்கை இதற்காகத்தான் வேலை என்ற எண்ணமே நம் மனங்களில் இருந்து அகன்றுவிட்டது. உழைப்பு, வேலை, பணம், அதற்கான ஓட்டம் என மனம் நிறைய வேறு எண்ணங்கள் நிறைந்திருக்கும் நிலையில், உடல் எனும் உயிர் இயந்திரத்தை நாம் மறந்தேபோனோம். அதற்குக் கொடுக்கவேண்டிய முன்னுரிமையைத் தர நாம் தவறிவிட்டோம். அதனால்தான் இன்று இத்தனை வியாதிகள்.
இப்போதேனும் விழித்தெழுந்து, நம் உணவுப் பழக்கத்தை ஆரோக்கியமானதாக மாற்றிக்கொள்ள வேண்டும். நோய்நொடி இல்லாமல் வாழ்வது ஒன்றும் ராக்கெட் விடுவதைப்போல, விண்வெளிக்குச் செல்வதைப்போல கடினமான செயல் அல்ல. சில எளிய வாழ்க்கைமுறை மாற்றங்கள்தான் அதற்கான அடிப்படை. அந்த அடிப்படைக்கும் அடிப்படையாக இருப்பது உணவு. நாம் உண்ணும் ஒவ்வொரு கவளம் உணவையும் சத்துக்கள் நிறைந்ததாக, இயற்கைக்கு இசைவானதாக, நல்ல சோறாக உண்போம். நீண்ட நெடிய ஆரோக்கியத்துடன் வாழ்வோம்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா!

Sunday, August 9, 2015

விசாகப்பட்டிநம் கப்பல் கட்டும் தளத்தில் ஸ்டோர் கீப்பர் பணி

விசாகப்பட்டினம் கப்பல் கட்டும் தளத்தில் ஸ்டோர் கீப்பர் பணிக்கான காலியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Superintendent (store)
காலியிடங்கள்: 35
வயதுவரம்பு: 31.08.2015 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
தகுதி: இயற்பியல், வேதியியல், கணிதம் துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது அறிவியல்/ பொருளாதாரப் பாடப்பிரிவில் பிளஸ் 2 முடித்து அரசு அல்லது பொதுத்துறை ஸ்டோர்களில் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Store Keeper
மொத்த காலியிடங்கள்: 184
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் அரசு/பொதுத்துறை ஸ்டோரில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 31.08.2015 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதி மற்றும் பணி அனுபவத்தின் அடிப்படையில் எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுவர். நேர்முகத் தேர்விற்கு வருபவர்கள் அனைவரும் அசல் சான்றிதழ்களைாயும் கொண்டு வரவும்.
விண்ணப்பிக்கும் முறை: www.irfc-nausena.nic.in/ccpo_index.html என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கல் சென்று சேர கடைசி தேதி: 31.08.2015
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Material Superintendent (For Unit Recruitment Officer),
Material Organisation, Kancharapalem Post, 9, IRSD Area (NAU Shakti Nagar),
Visakhapatnam - 530008, Andharapradesh.

ரெடிமேட் ஆடைகள் தயாரிப்பு

முன்பெல்லாம் இரண்டு வேஷ்டி, இரண்டு சட்டை இருந்தாலே போதும், ஒரு வருட காலத்தை தாராளமாக ஓட்டி விடுவார்கள். ஆனால், இன்று? பீரோ நிறைந்தாலும்கூட மனது நிறைவதில்லை! பண்டிகை காலத்தில் மட்டுமே துணி எடுப்பது என்பதும் பழங்கதையாகி விட்டது. குடும்பத்தோடு வீட்டை விட்டு கீழே இறங்கினால் திரும்பும்போது இரண்டு டிரஸ்ஸாவது எடுத்துவிட்டுதான் வருவது என்ற நிலை இன்றைக்கு. மொத்தத்தில் இன்றைக்கு ரெடிமேட் தொழில் உச்சத்தில் இருக்கிறது. 
ல நூற்றாண்டுகளாக ஜவுளித் தொழிலில் கொடிகட்டி பறக்கிறோம் நாம். நம் நாட்டில் மட்டுமின்றி உலகம் முழுக்கவும் நமது ஆயத்த ஆடைகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அமெரிக்கா தொடங்கி ஆஸ்திரேலியா வரை நமது ஆயத்த ஆடைகளை வாங்காத நாடுகளே உலகில் இல்லை. ஆனால், அதிக வாய்ப்புகள் இருக்கும் அதேநேரத்தில் இந்தத் துறையில் அதிகளவில் ரிஸ்க்கும் இருக்கின்றன. அந்த ரிஸ்க்குகளைத் தாண்டி, சமாளித்து நின்றுவிட்டால் போதும், நீங்களும் ஒரு தொழிலதிபராகி விடுவீர்கள் என்பதில் சந்தேகமே இல்லை.
சந்தை வாய்ப்பு!

தமிழகத்தில் பல நகரங்களில் ஜவுளித் தொழிலுக்கு நல்ல வாய்ப்பு இருந்தாலும், சென்னை, ஈரோடு, சேலம், கோவை பகுதிகளில்தான் இதற்கான சந்தை வாய்ப்பு மிகப் பிரகாசமாக இருக்கிறது. ஆயத்த ஆடைகளை நாமே தயார் செய்து அதை நேரடியாக பெரிய கடைகளில் கொடுக்கலாம். அல்லது மொத்த வியாபாரிகளிடமிருந்து ஜாப் ஆர்டர் வாங்கி, அதை தயார் செய்தும் கொடுக்கலாம். இத்தொழிலுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு இருப்பதால், இங்கு தயாராகும் ஆயத்த ஆடைகளை வெளிநாடுகளில் விற்பதற்கும் நல்ல வாய்ப்பு இருக்கிறது. கோயம்புத்தூர், திருப்பூரைச் சுற்றியுள்ள ஊர்களில்தான் இந்த தொழிலை தொடங்க முடியும் என்கிற கருத்து பலரிடம் இருக்கிறது. ஆனால், உண்மை என்னவெனில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த தொழிலைத் தொடங்க நிறையவே வாய்ப்பு இருக்கிறது.
மூலப் பொருட்கள்!
டையிங், பிளீச்சிங், பிரின்டிங் செய்யப்பட்ட காட்டன், சிந்தெடிக் துணி வகை மற்றும் தைப்பதற்கு நூல் ஆகியவை இத்தொழிலுக்குத் தேவையான முக்கிய மூலப் பொருட்களாகும். டெக்ஸ்டைல்ஸ் துறையில் கொங்கு மண்டலம் சிறந்த மாவட்டம் என்பதால் அங்கிருந்து மூலப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். ஆனால், தற்போது திருப்பூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் சாயப்பட்டறை பிரச்னை காரணமாக மூலப் பொருட்களை பவானி மற்றும் அகமதாபாத் போன்ற பகுதிகளிலிருந்து வாங்கிக் கொள்ளலாம்.

இயந்திரங்கள்!
இத்தொழிலுக்குத் தேவையான இயந்திரங்களை (தையல் மெஷின்கள் மற்றும் கட்டிங் மெஷின்கள்) ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்து கொள்ளலாம். இதற்கான டீலர்கள் கோவை, சென்னை நகரங்களில் இருக்கிறார்கள். அவர்கள் மூலம் இயந்திரங்களை வாங்கிக் கொள்ளலாம். தனித் தனியாக வரும் இயந்திரத்தின் பாகங்களை டீலர்களே அசெம்பிள் செய்து கொடுத்து விடுகிறார்கள்.
முதலீடு!
இத் தொழிலைச் செய்வதற் கான நிலம் மற்றும் கட்டடத்தை சொந்தமாகவோ அல்லது குத்த கைக்கோ எடுத்துக் கொள்ளலாம். இயந்திரத்திற்கு மூன்று லட்சம் ரூபாயும், செயல்பாட்டு மூலதனத்திற்கு மூன்று லட்சம் ரூபாயும் என மொத்தம் ஆறு லட்சம் ரூபாய் தேவைப்படும்.
ஃபைனான்ஸ்!
இத்தொழிலைத் தொடங்க நினைக்கிறவர் தனது முதலீடாக 5%, அதாவது 30,000 ரூபாய் வரை போட வேண்டும். மீதியை கடன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
மானியம்!
இந்த தொழிலானது பிரதம மந்திரியின் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் வருவதால் 2.10 லட்சம் ரூபாய் வரை மானியம் கிடைக்கும். இந்த மானியத் தொகையானது தொழில் தொடங்க வாங்கிய கடனுக்காக மூன்று வருடத்திற்கு பிறகு வரவு வைக்கப்படும்.
வேலையாட்கள்!
நல்ல திறமையான வேலையாட் கள் 20 பேரும், நடுத்தரமாக வேலை செய்யக்கூடிய பெண்கள் நான்கு பேரும், நிர்வாகம் மற்றும் விற்பனையை கவனித்துக் கொள்ள ஒரு நபரும், சூப்பர்வைசர் மற்றும் மெக்கானிக் ஒரு நபரும் தேவைப்படுவார்கள். எனவே மொத்தம் 26 நபர்கள் வரை தேவைப்படுவார்கள்.

தயாரிக்கும் முன்...
டையிங், பிளீச்சிங், பிரின்டிங் செய்யப்பட்ட காட்டன், சிந்தெடிக் துணிகளை வாங்கிச் சேகரித்துக் கொள்ள வேண்டும். துணிகளின் தரம் சரியாக இருக்கிறதா? கலர் மங்கியிருக்கிறதா? அல்லது வேறு வகையில் சேதம் ஏதும் ஏற்பட்டிருக் கிறதா என்பதைப் பார்த்து ஆய்வு செய்த பின்பே தைப்பதற்கு அனுமதிக்க வேண்டும். காரணம், நமது தயாரிப்பில் டேமேஜ் இருக்கும் பட்சத்தில் அது மீண்டும் நம்மிடமே வந்து சேரும். இந்த இழப்பு வராமல் இருக்க வேண்டுமெனில், தரத்தில் கவனமாக இருப்பது அவசியத்திலும் அவசியம்!
பிளஸ்!
ஏற்றுமதிக்கு அதிகம் வாய்ப்புள்ள தொழில். பெண்கள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ சேர்ந்து செய்வதற்கு ஏதுவானத் தொழில் என்பதால், ஒளிமயமான எதிர்காலம் இத்தொழிலால் உண்டு.
மைனஸ்!
திருப்பூர் சாயப்பட்டறை தொழில் சார்ந்த பிரச்னைகளும், தேவையான ஆட்கள் கிடைக் காமல் இருப்பதும், பருத்தி நூல் விலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வு களும் இத்தொழிலில் இருக்கும் மிகப் பெரிய சவால்கள்.
ஆனால், இந்தப் பிரச்னைகளை மட்டும் சமாளித்து விட்டால் நிச்சயம் வெற்றி காணலாம்.
-பானுமதி அருணாசலம்
படங்கள் : வெ. பாலாஜி
வெங்கடேஷ், குளூம் ஓவர்சீஸ், கோவை.
''நான் அடிப்படையில் ஒரு மெக்கானிக்கல் என்ஜினீயர். இத்தொழிலை ஆரம்பித்தபோது அதில் எனக்கு நிறைய அனுபவமில்லை. பிற்பாடு அனுபவத்தில்தான் தெரிந்து கொண்டேன். அதனால், இப்போது இருக்கக்கூடிய போட்டியிலும் சூழ்நிலையிலும் இத்தொழிலைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டு அதற்குபிறகு களத்தில் இறங்குவது நல்லது.
இத்தொழிலைத் தொடங்க குறைந்தபட்சம் 2,500 சதுரடி இடம் தேவைப்படும். தொடக்க முதலீடாக ஐந்து லட்சம் ரூபாய் தேவை. புதிதாக தொழில் தொடங்குபவர்கள் ஐந்து தையல் இயந்திரங்கள் போட்டு பெரிய மற்றும் நடுத்தர கம்பெனிகளில் இருந்து ஜாப் ஆர்டர் வாங்கிச் செய்வதில் ஆரம்பித்து, பின்பு மெள்ள விரிவுபடுத்திக் கொள்ளலாம். எடுத்த எடுப்பிலேயே ஏற்றுமதி ஆர்டர் என்று இறங்கத் தேவையில்லை. காரணம் ஏற்றுமதி செய்வதில் ரிஸ்க் அதிகம்.
லோக்கல் மார்க்கெட்டில் ஆண்கள் ஆடைகளில் மட்டுமே பிராண்டுகளின் ஆதிக்கம் இருக்கிறது. தவிர, பெண்கள் அணியும் ஆடைகளிலும், ஆண்களின் இரவு நேர மற்றும் குழந்தைகள் ஆடைகளிலும் இதுவரை பிராண்டுகளின் ஆதிக்கம் பெரிதாக இல்லை. முடிந்தால் நீங்களேகூட ஒரு பிராண்டை புரமோட் செய்யலாம். இதுபோன்ற அறியப்படாத வாய்ப்புகள் இதில் மிக அதிகம்.
இந்த தொழிலில் நமக்கு இப்போது மிகப் பெரிய போட்டியாக இருப்பது சீனாதான். ஆனால், சில விஷயங்களில் நாம் கொடுக்கும் தரத்தை அவர்களால் தர முடிவதில்லை. எனவே, அந்த போட்டியை நினைத்து நாம் பயப்படாமல் தரத்தை இன்னும் உயர்த்தி, விலையைக் குறைத்து கொடுத்தால் நமக்கு எப்போதும் நல்ல எதிர்காலம்தான்!''.

மீன் வளர்ப்பு - Meen Valarpu

தண்ணீர் வளம் இருக்கு, மண் சரியில்ல; மண் நல்லாருக்கு, தண்ணியும் இருக்கு, ஆனா... வேலைக்கு ஆளுங்க கிடைக்கல - விவசாய நிலத்தை சும்மாவே போட்டு வைத்திருப்பவர்கள் ஒவ்வொருவரிடமும் இப்படி ஒவ்வொரு காரணம் தயாரா இருப்பது இங்கே கண்கூடு!
இவர்களுக்கு நடுவே... ''தண்ணி வளமும், குறைஞ்ச ஆள் பலமும் இருந்தாலே போதும், மீன் வளர்ப்புல அருமையான லாபம் சம்பாதிக்க முடியும். இதுக்கு தினமும் அரை மணி நேரம் செலவழிச்சாலே போதும்'' என்று நம்பிக்கை ஊட்டுகிறார்கள், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகேயுள்ள திருஉடையான்பட்டி கணேசன்-சண்முகசுந்தரி தம்பதியர்.
ஒரு ஞாயிற்றுக்கிழமையின் காலைப்பொழுதில் இவர்களுடைய மீன் பண்ணையில் ஆஜரானோம். பரபரப்பாக மீன் விற்பனையிலிருந்தவர்களிடம் நாம், அறிமுகப்படுத்திக் கொள்ள... மகிழ்ச்சியுடன் பேசத் தொடங்கினர்.
''மொத்தம் எட்டரை ஏக்கர் நிலமிருக்கு. தென்னைதான் முக்கிய விவசாயம். வேளாண்மைப் பொறியியல் துறையைச் சேர்ந்தவங்க எங்க தோட்டத்துக்கு வந்து... 'தோட்டத்துல பண்ணைக்குட்டை வெட்டி, மீன் வளர்த்தா நல்ல வருமானம் கிடைக்கும். நிலத்தடி நீரும் அதிகரிக்கும். நாங்களே குட்டை எடுத்துத் தர்றோம்’னு சொன்னாங்க. நாங்க தலையாட்டினதும்... 40 மீட்டர் நீளம், 20 மீட்டர் அகலம், 5 அடி ஆழத்துல பண்ணைக்குட்டை வெட்டிக் கொடுத்தாங்க. அதுக்கப்பறம் குன்றக்குடி கே.வி.கே. மூலமா மீன் வளர்ப்புப் பயிற்சி எடுத்துக்கிட்டு, மீன் வளர்க்க ஆரம்பிச்சுட்டோம்.
ஆரம்பத்துல குட்டையில தண்ணியை நிரப்பினதும், தண்ணிய மண்ணு உறிஞ்சிக்கிட்டே இருந்துச்சு. குளத்துக்கரம்பை மண்ணைக் கொண்டு வந்து ஒரு அடி உயரத்துக்கு மெத்தினோம். அப்பறம்தான் தண்ணி நிலைச்சு நின்னுது. இப்ப ரெண்டு வருஷமா மீன் வளர்த்துக்கிட்டிருக்கோம். தீவனம் கொடுக்கறதைத் தவிர வேற எந்தப் பராமரிப்பும் தேவையில்லை. குளத்துல தண்ணி மட்டம் குறைஞ்சுடாமப் பாத்துக்கணும். மீனுங்க களவு போகாம பாத்துக்கணும், அவ்வளவுதான்'' என்று சண்முகசுந்தரி ஆரம்ப கதையைச் சொல்ல, அவரைத் தொடர்ந்தார், கணேசன்.
சராசரி 1,200 கிலோ!
'எந்தப் பிக்கல், பிடுங்கலும் இல்லாத அமைதியான, அதேநேரத்துல நல்ல வருமானமும் கொடுக்குற வேலை இது. போன ஆகஸ்ட் மாசம், 350 கெளுத்தி, 500 ரோகு, 500 கட்லா, 300 சில்வர் கெண்டை, 350 புல் கெண்டைனு மொத்தம் 2 ஆயிரம் மீன் குஞ்சுகளை விட்டிருந்தோம். மீன் தீவனத்தை கடைகள்ல வாங்கி போட்டோம். இப்போ ஒன்பது மாசம் ஆகுது. ஒவ்வொரு மீனும் கிட்டத்தட்ட முக்கால் கிலோ எடை வந்துருச்சு. 2 ஆயிரத்துல...
200 செத்திருந்தாலும் 1,800 மீன் வரைக்கும் தேறிடும். எப்படியும் எடை கணக்குல பார்த்தா... மொத்தமா 1,200 கிலோவுக்கு குறையாது. இப்போதான் பிடிச்சு விக்க ஆரம்பிச்சுருக்கோம்.
விற்பனைக்காக நாங்க எங்கயும் அலையறதில்ல. ஒவ்வொரு ஞாயித்துக்கிழமையும் பண்ணையிலயே நேரடி விற்பனை மூலமா எல்லாம் முடிஞ்சுடுது. அக்கம்பக்கத்துல இருக்குறவங்க தேடி வந்து வாங்கிக்குறாங்க. தேவையான அளவுக்கு அப்பப்போ பிடிச்சுக்குறோம். ஒரு கிலோ மீன் 80 ரூபாய்னு விக்குறோம். இதுவரை முன்னூறு கிலோ வித்துருக்கோம். மொத்தமா, 1,200 கிலோ மீன் கிடைக்கும்னு வெச்சுக்கிட்டா... 96 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல, செலவுகளுக்கு 30 ஆயிரம் ரூபாய் போனாலும்... மீதி 66 ஆயிரம் ரூபாய் லாபம். எங்களைப் பொறுத்தவரை ஏக்கர் கணக்குல விவசாயமெல்லாம் செய்யத் தேவையில்லை. இந்த மாதிரி ரெண்டு குளம் இருந்தாலே... எந்தப்பாடும் இல்லாம ஒரு குடும்பத்துக்குத் தேவையான அளவுக்கு நிறைவா சம்பாதிச்சுட முடியும்'' என்று முகத்தில் மகிழ்ச்சி ரேகைகள் படரச் சொன்னார்.  
விளையாத மண்ணுக்கு விரால்..! தொழில்
சிவகங்கை மாவட்டம், பாகனேரி பகுதியைச் சேர்ந்த பி.ஆர்.இ. வரதராஜன், தனது தோட்டத்தில் மண்வளம் சரியாக இல்லாததால்... மீன் வளர்த்து வருகிறார். தனது மீன் வளர்ப்பு அனுபவங்களை அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டபோது, ''மொத்தம் 10 ஏக்கர் நிலமிருக்கு. அந்தக் காலத்து வட்டக் கிணறு எப்பவும் தண்ணி குறையாது. நல்ல தண்ணி வசதியிருந்தும், மண்ணு சரியில்லை. கிட்டத்தட்ட எந்தப் பயிரும் வராத ஈழக்களிமண் பூமி. ஓரளவு மண்ணு சுமாரா இருக்கற 6 ஏக்கர் நிலத்துல தென்னையை நட்டு இயற்கை முறையில விவசாயம் செஞ்சிக்கிட்டு இருக்கேன். குன்றக்குடி கே.வி.கே. ஆலோசனைப்படி சும்மா இருந்த இடத்துல இப்பத்தான் மீன் வளக்க ஆரம்பிச்சிருக்கேன்.
90 அடி நீளம், 35 அடி அகலம்ங்கிற கணக்குல 6 குளங்களை வெட்டியிருக்கேன். ரெண்டு குளத்துல விரால் வளர்க்க முடிவு பண்ணினேன். அதுக்காக நாலு மாசத்துக்கு முன்ன ஒரு குளத்துக்கு
400 ஜிலேபி கெண்டைனு ரெண்டு குளத்துலயும் விட்டேன். அதுக ஓரளவு வளந்துடுச்சு. போன மாசம், குளத்துக்கு 400 விரால் குஞ்சுனு ரெண்டு குளத்துலயும் 800 குஞ்சுகளை விட்டுருக்கேன். ஜிலேபி கெண்டை மீன், தன்னோட முட்டைகளை வாயிலயே அடைகாத்து, 18 முதல் 21 நாள் இடைவெளியில குஞ்சுகளா துப்பிக்கிட்டே இருக்கும். இந்த ஜிலேபி குஞ்சுகளை சாப்பிட்டே விரால் வளர்ந்துடும். இன்னும் 8 மாசம் கழிச்சுதான் எவ்வளவு விரால் கிடைக்கும்னு தெரியும்.
அந்த ரெண்டு குளம் போக, மத்த நாலு குளத்துலயும் மிர்கால், கட்லா, ரோகு மீன்களை ஒவ்வொரு குளத்துக்கும் 400 குஞ்சுகள்ன்ற கணக்குல விட்டுருக்கேன். தினமும் ஒரு மணி நேரம் தீவனம் வெச்சு, குளங்களை ஒரு சுத்து சுற்றி வருவேன். அவ்வளவுதான், வேற எந்த ஜோலியும் இல்லை. ஒவ்வொரு குளத்துக்கும் தினமும் ஒரு கிலோ தவிடு, அரை கிலோ கடலைப் பிண்ணாக்கு, 10 கிலோ சாணம் போடுறேன். கே.வி.கே. யிலிருந்து குருணைத் தீவனம் கொடுத்திருக்காங்க. டேஸ்டுக்காக அப்பப்ப அதையும் கொஞ்சம் சேத்துக்குவேன்.
கிலோ 250 ரூபாய்!
இப்ப வரைக்கும் எந்தப் பிரச்னையும் இல்லாம நல்லா வளந்துட்டு வருது. விரால் மீனுக்கு நல்ல கிராக்கி இருக்கு. கிலோ 250 ரூபாய்க்கு வாங்குறாங்க. நான் குளத்துல விட்டிருக்குற 800 குஞ்சுகள்ல... இழப்பு போக, 300 கிலோ கிடைச்சாலும்... 75 ஆயிரம் ரூபாய்  வருமானம் கிடைக்கும். மத்த குளங்கள்ல கிடைக்குற வருமானம்... செலவு கணக்குல போனாலும்... விரால் மூலமா வர்ற வருமானம் மொத்தமும் லாபமா கிடைச்சுடும். எதுக்கும் உதவாத மண்ணை வெச்சுக்கிட்டு ஒண்ணும் பண்ண முடியலையேனு கஷ்டப்பட்ட எனக்கு... இப்படி வழி காட்டிய குன்றக்குடி கே.வி.கே.க்குத்தான் நன்றி சொல்லணும்'' என்று நெகிழ்கிறார் வரதராஜன்.
இப்படித்தான் அமைக்கணும் குளம்!
குன்றக்குடியில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கே.வி.கே. (வேளாண் அறிவியல் மையம்). மீன் வளர்ப்பு பற்றிய பயிற்சிகளோடு, தொடர் ஆலோசனைகளையும் கொடுத்து வருவது, இப்பகுதியில் மீன் வளர்ப்பவர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாகவே அமைந்துள்ளது. இங்கே, அனைவருக்கும் பயன்படும் வகையில், இம்மையத்தின் விஞ்ஞானி கணேசன், மீன் வளர்ப்பு முறைகளைப் பற்றி விளக்குகிறார்.
செவ்வக வடிவில் குளம்!
''ஆறு, குளம், ஏரி, ஓடை, கசிவுநீர்க் குட்டை மாதிரியான இடங்களுக்கு அருகில் உள்ள நிலங்கள் மீன் வளர்ப்புக்கு ஏற்றவை. அதிக தண்ணீர் வளம் இருந்து, விவசாயம் செய்ய முடியாத நிலங்களிலும் மீன் வளர்க்கலாம். களிமண், வண்டல் மண் சேர்ந்த நிலமாகவும், போக்குவரத்து வசதி உள்ள இடமாகவும் இருந்தால், நல்லது. களிமண் நிலமாக இருந்தால், தண்ணீர் கசிவு இருக்காது. மணல் அதிகமாக உள்ள மண்ணில் கசிவு இருக்கும். கசிவைத் தடுக்க, குளத்தின் தரைப்பகுதியில் ஒரு அடி உயரத்துக்கு களி மண்ணைப் பரப்பி மெத்தி விடவேண்டும். மீன்குளத்தை செவ்வக வடிவத்தில் அமைத்தால், கையாள்வது சுலபம். இருக்கும் இட வசதி, தண்ணீர் வசதி ஆகியவற்றைப் பொறுத்து, குளத்தின் அளவைத் தீர்மானித்துக் கொள்ளலாம். ஆனால், ஆழம் ஐந்தடிக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.  
கரை... கவனம்!
குளத்தின் கரைகளை நீர்க்கசிவு இல்லாத அளவுக்கு பலமாக அமைக்க வேண்டும். வண்டல் மற்றும் மணல் ஆகியவற்றோடு, களி மண்ணையும் கலந்து கரை அமைக்கலாம். கரையின் மேல்புறம் ஒரு மீட்டர் அகலம் அளவுக்கு சமதளமாகவும், இரு புறங்களும் சரிவாகவும் இருக்க வேண்டும். நீர்மட்டத்துக்கு மேல் கால் மீட்டர் அளவுக்கு கரையின் உயரம் இருக்க வேண்டும். கரையின் வெளிப்புறத்தில், தென்னை, பப்பாளி... போன்ற அதிகம் வேர் விடாத மரங்களை நிழலுக்காக நடவு செய்யலாம்.  
பச்சை நிறமே... பச்சை நிறமே!
அடுத்து, குளத்தில் தாவர மிதவைகள் வளர்வதற்கான விஷயங்களைச் செய்ய வேண்டும். குளத்தில் ஒரு அடி உயரத்துக்குத் தண்ணீர் நிரப்பி, நான்கு மூலைகளிலும் தலா ஒரு கூடை சாணத்தைப் போட வேண்டும். பச்சை சாணத்தை உடனடியாகப் போடாமல்... ஒரு நாள் வைத்திருந்துதான் போட வேண்டும். மழைநீரை நம்பி வெட்டப்படும் குளமாக இருந்தால்... தண்ணீர் நிரப்புவதற்கு முன்பே சாணத்தைப் போட்டு விடலாம். ஐந்து அல்லது ஆறு நாட்களில் சாணம் கரைக்கப்பட்ட தண்ணீர் பச்சை நிறத்துக்கு மாறியிருக்கும். அந்த சமயத்தில் தண்ணீர் மட்டத்தை நான்கடி அளவுக்கு உயர்த்தி, மீண்டும் நான்கு மூலைகளிலும் தலா ஒரு கூடை அளவுக்கு சாணம் போட வேண்டும். அடுத்த பத்து நாட்களில் தாவர மிதவைகள் உருவாகி விடும். தண்ணீர் பச்சை நிறமாக மாறுவதை வைத்து, இதைத் தெரிந்து கொள்ளலாம். ஒருவேளை மிதவைகள் உருவாகாவிட்டால், வேறு நீர் நிலைகளில் உள்ள பாசிகளை, எடுத்து வந்து போடலாம்.
தாவர மிதவைகள்... கவனம்!
தாவர மிதவைகள், குளத்தில் சரியான அளவுக்கு இருக்க வேண்டும். அதிகமாக இருந்தால், பிராண வாயுவின் அளவு குறைந்து மீன்கள் இறந்து விடும் வாய்ப்பும் உள்ளது. குறைவாக இருந்தால், இயற்கை உணவு பற்றாக்குறை ஏற்பட்டு மீன்களின் வளர்ச்சி குறைந்துவிடும். 'தாவர மிதவைகள் சரியான அளவுக்கு உருவாகியிருகின்றனவா?’ என்று பார்ப்பதற்கும் ஒரு வழி இருக்கிறது.
காலை பத்து மணி அளவில் குளத்தில் இறங்கி நின்று கொண்டு, முழங்கை வரை மடித்து, உள்ளங்கையை மேற்புறமாக திருப்பி வைத்துக் கொண்டு... கையைக் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீருக்குள் இறக்க வேண்டும். உள்ளங்கை கொஞ்சம் கொஞ்சமாக பார்வையிலிருந்து மறையத் தொடங்கும். முழங்கைக்கும், தோள்பட்டைக்கும் இடைப்பட்ட புஜப்பகுதி பகுதி மூழ்கும்போது உள்ளங்கை முழுவதுமாக மறைந்தால்... தாவர மிதவைகள் சரியான அளவில் உள்ளன என்று அர்த்தம். தோள்பட்டை பகுதி வரை மூழ்கிய பிறகும், உள்ளங்கை பார்வையில் இருந்து மறையவில்லை என்றால், மிதவைகள் குறைவாக உள்ளன என்று அர்த்தம். முழங்கை மூழ்குவதற்கு முன்பே உள்ளங்கை பார்வையிலிருந்து மறைந்தால், மிதவைகள் அதிகமாக உள்ளன என்று அர்த்தம். இதை வைத்து சரியான அளவைப் பராமரிக்க முடியும்.
மிதவைகளின் அளவு குறைந்திருந்தால்... கொஞ்சம் சாணத்தைக் கொட்டுவதன் மூலம் அதன் அளவை சமப்படுத்திவிடலாம். மிதவைகளின் அளவு அதிகமாக இருந்தால், குளத்தின் நீரை கொஞ்சம் வெளியேற்றி, புது நீரை விட வேண்டும்.
பகுதிக்கேற்ற மீன் ரகங்கள்!
சரியான அளவில் தாவர மிதவைகள் உற்பத்தியான பிறகுதான் மீன் குஞ்சுகளை குளத்தில் விட வேண்டும். ஒரு ஏக்கர் குளத்தில், அதிகபட்சமாக 4 ஆயிரம் மீன்குஞ்சுகள் வரை விட்டு வளர்க்கலாம். மீன்குஞ்சுகளை விடும் முன்பாக, நமது பகுதியில் விற்பனை வாய்ப்பு, குளத்தின் அளவு, தண்ணீர் வசதி போன்றவற்றை வைத்து, வளர்க்க இருக்கும் ரகங்களை முடிவு செய்ய வேண்டும்.
பொதுவாக நமது பகுதியில், கெண்டை வகைகள், விரால், கெளுத்தி என்ற தேளி ஆகிய ரகங்கள்தான் வணிகரீதியாக லாபகரமாக இருக்கின்றன. பத்து மாதங்கள் வரை தொடர்ந்து குளத்தில் நீர் நிறுத்தும் வசதி இருந்தால், கெண்டை மீன்களையும்; ஆறு மாதங்கள் வரை நீர் நிறுத்தும் வசதி இருந்தால் கெளுத்தி மீன்களையும்; நான்கு மாதங்கள் வரை மட்டுமே நீர் நிறுத்தும் வசதி இருக்கும்பட்சத்தில், ஜிலேபி கெண்டை மீன்களையும் வளர்க்கலாம்.  
குஞ்சுகளுக்கு 50 நாள் வயது!
குஞ்சுகளை முடிவு செய்த உடன், 35 முதல் 50 நாட்கள் வயதுள்ள தரமானக் குஞ்சுகளை வாங்கி குளத்தில் விட வேண்டும். இந்த வயதில் குஞ்சுகள் விரல் அளவுக்கு வளர்ந்திருக்கும். ஒரு குஞ்சு 1 ரூபாய் 50 காசு முதல் 3 ரூபாய் 50 காசு வரை ரகத்துக்கேற்ப விற்பனை செய்யப்படுகிறது. குளத்தின் அளவுக்கேற்ற எண்ணிக்கையில்தான் குஞ்சுகளை வளர்க்க வேண்டும்.
கெண்டை ரகங்களுக்கு ஒரு மீனுக்கு ஒரு சதுர அடி இடம் தேவை. ஒரு சதுர அடியில் 3 முதல் 4 கெளுத்தி மீன்களை வளர்க்கலாம். 25% கட்லா, 15% ரோகு, 20% மிர்கால்,
10% வெள்ளிக்கெண்டை, 10% புல் கெண்டை, சாதா கெண்டை 20% என்ற கணக்கில் கெண்டை மீன் ரகங்களைக் கலந்து வளர்க்கலாம்.
வழக்கத்தை மாற்றக்கூடாது!
மீன்களுக்கு குருணை வடிவிலான சரிவிகித உணவு, ஒரு கிலோ 22 ரூபாய் என்ற விலையில் கடைகளில் கிடைக்கிறது. தவிடு, பிண்ணாக்கைத் தீவனமாகக் கொடுப்பதைவிட இது செலவு குறைவாக இருக்கும். ஒரு மீனுக்கு அதன் உடல் எடையின் அளவில் 2 முதல் 5 சதவிகித அளவுக்கு தினமும் உணவு கொடுத்தால் போதும். மாதத்துக்கு ஒரு முறை கொஞ்சம் மீன்களை பிடித்து, அவற்றின் எடையைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு நாளுக்கான தீவனத்தை மொத்தமாகக் கொடுக்காமல், இரண்டாகப் பிரித்து காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் கொடுக்க வேண்டும்.
இடத்தையும் நேரத்தையும் மாற்றாமல் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் தினமும் தீவனத்தை இட வேண்டும். மீனின் மொத்த எடை எவ்வளவோ... கிட்டத்தட்ட அந்த அளவு தீவனத்தைத்தான் அது சாப்பிட்டிருக்கும் என்பது ஒரு கணக்கு. இதை வைத்து செலவுக் கணக்கைச் சரிபார்த்துக் கொள்ளலாம். உதாரணமாக ஒரு கிலோ எடையுள்ள மீன், அதன் வாழ்நாளில் ஒரு கிலோ முதல் ஒன்றே கால் கிலோ அளவுக்கு தீவனம் சாப்பிட்டிருக்கும். தேளி மீன்கள் ஆறு மாதத்தில் விற்பனைக்கேற்ற வளர்ச்சியை எட்டி விடும். கெண்டை மீன்கள் எட்டு மாதங்களில் வளர்ச்சியை அடைந்து விடும். மீன்கள், முக்கால் கிலோ அளவு எடைக்கு வந்தவுடன் விற்பனையைத் தொடங்கலாம்' என்ற கணேசன் நிறைவாக,
நோய்கள் தாக்காது!
கெண்டை மீன்களைப் பெரும்பாலும் நோய்கள் தாக்குவதில்லை. நீர் மேலாண்மை, தீவன மேலாண்மையைச் சரியாகப் பராமரித்தாலே போதும். விராலுக்கு மட்டும் குளிர் காலத்தில் பூஞ்சண நோய் வரும். இந்நோய் தாக்கிய மீனின் உடம்பில் சாம்பல் பூசியதைப் போல வெண்மையான படலம் படிந்திருக்கும். நாளாக, நாளாக அது புண்ணாகி விடும். பிறகு பாதிக்கப்பட்ட மீன் கீழே இருக்க முடியாமல் நீர்மட்டத்துக்கு மேலே வந்து விடும். சோர்வாக இருக்கும், அப்படி பாதிக்கப்பட்ட மீன்களைப் பிடித்து தனியாக கொண்டு போய் புதைத்தோ அல்லது எரித்தோ விட வேண்டும்.
மஞ்சள், வேப்பிலை ஆகிய இரண்டையும் சம அளவில் எடுத்து, அரைத்துப் பொடித்து அவ்வப்போது குளத்தில் தூவி விட்டால்... இந்நோய் எட்டியே பார்க்காது. அதையும் தாண்டி வந்து விட்டால், ஒரு லிட்டர் ஃபார்மாலின்  திரவத்தை 40 லிட்டர் நீரில் கலந்து குளத்தில் தெளித்தால், சரியாகி விடும்'' என்றார்.

 ஆறு ரகங்களும் இருக்க வேண்டும்!
கெண்டை மீன்களில் கட்லா, ரோகு, மிர்கால், வெள்ளி கெண்டை (சில்வர் கார்ப்), புல் கெண்டை, சாதா கெண்டை என ஆறு ரகங்கள் உள்ளன. இந்த ஆறு ரக மீன்களும் தண்ணீரில் ஒரே இடத்தில் வசிப்பதில்லை. கட்லா, வெள்ளிக் கெண்டை ஆகியவை குளத்தின் மேல்புறத்திலும், ரோகு, புல் கெண்டை ஆகியவை குளத்தின் நடுப்பகுதியிலும் சாதா கெண்டை, மிர்கால் ஆகியவை குளத்தின் அடிப்பகுதியிலும் வசிக்கும் பழக்கத்தைக் கொண்டவை. அனைத்துப் பகுதிகளிலும் மீன்கள் இருந்தால்தான் அதிக எண்ணிக்கையில் வளர்க்க முடியும்.  
தாவர மிதவைகளில் சில புழு, பூச்சிகளும் உருவாகும். இவற்றை விலங்கின மிதவைகள் என்று சொல்வார்கள். கட்லா மீன்கள் விலங்கின மிதவைகளையும், வெள்ளிக் கெண்டை மீன்கள் தாவர மிதவைகளையும் உணவாக எடுத்துக் கொள்கின்றன. ரோகு மீன்கள் இவை இரண்டையுமே உணவாக எடுத்துக் கொள்கின்றன. புல் கெண்டை மீன்கள் குளத்தில் உள்ள சிறு புற்களை அதிகமாக உண்டு, அவற்றில் செரிக்காதவற்றை வெளியே துப்பும் பழக்கம் கொண்டவை. இப்படி வெளியே துப்பப்படும் உணவை மிர்கால் மற்றும் சாதா கெண்டை மீன்கள் சாப்பிட்டு விடும். அதனால், இந்த ஆறு ரகங்களையும் கலந்து வளர்க்கும்போது தீவனம் வீணாகாமல் தடுக்கப்படும்.
 நாமளே தயாரிக்கலாம்...குருணைத் தீவனம்!
ஒரு கிலோ தீவனம் தயாரிக்கத் தேவையான பொருட்கள்: சோயாபீன்ஸ் மாவு-210 கிராம், கருவாட்டுத்தூள்-203 கிராம், இறால் கருவாட்டுத்தூள்-200 கிராம், சோளமாவு-173 கிராம், கோதுமை மாவு-200 கிராம், உப்பு-4 கிராம், வைட்டமின் பொடி-7 கிராம். இவை மொத்தம் 997 கிராம் எடை வரும். இவற்றை தண்ணீர் சேர்த்து தயாரிக்கும்போது ஒரு கிலோ எடைக்கு வந்து விடும்.
இந்தப் பொருட்கள் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் இட்டு... கலந்து வைத்துக் கொண்டு அதில், கொதிக்க வைத்து ஆறிய நீரை ஊற்றி 5 நிமிடம் கிளறி, குக்கரில்
5 நிமிடம் வேக வைக்க வேண்டும். பிறகு, வெந்தக் கலவையை உருண்டைகளாக்கி இடியாப்பம் பிழியும் குழாயில் இட்டு பிழிந்து காய வைத்தால், தீவனம் தயாராகி விடும். அதை கோணியில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
 தேளிக்குத் தடையில்லை! tholil
தேளி மீனுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை பற்றி பேசிய கணேசன், ''தேளியைத் தடை பண்ணிட்டதா பல பேரு தப்பா நினைச்சுகிட்டு இருக்காங்க. 'ஆஃப்ரிக்கன் கேட் ஃபிஷ்’னு ஒரு ரக தேளி மீன் இருக்கு. இதோட முள் அதிக விஷத்தன்மை கொண்டது. அதனால் இந்த ரகத்துக்கு மட்டும்தான் தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்றபடி கெளுத்தி வகையைச் சேர்ந்த தேளிகளுக்குத் தடையில்லை. இவற்றுக்கு அதிக இட வசதி தேவையில்லை என்பதால், தொட்டிகளில்கூட வளர்க்க முடியும். இது சுவை குறைந்து இருப்பதால், அதிக விலைக்கு விற்பனையாவதில்லை'' என்றார்.

தேனீ வளர்ப்பு - Theni valarpu

அட, இங்க பாருங்க இத்தாலிய தேனீ!
தேனீ வளர்ப்பு ஊரறிந்த விஷயம்... இத்தாலிய தேனீ வளர்ப்பு... ஒரு சிலருக்கு மட்டுமே கை வந்த கலை! அவர்களில் ஒருவராக சுறுசுறுப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் ஜெயக்குமார்.
‘நமக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராது... சாத்தியமும் இல்லை. இந்தியச் சூழல்ல வளரவே வளராது. அப்படியே வளர்ந்தாலும், சரிவர பராமரிக்க முடியாது. சீக்கிரத்துல வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகிடும். தேனீக்களைப் பத்தி ஆராய்ச்சி செய்துகிட்டிருக்கற விஞ்ஞானிகள் நாங்க. ஆனா, எங்களாலேயே அதை வளர்க்க முடியல. சின்னப் பையனான உன்னால முடியாது' என்று பலரும் கழித்துக்கட்ட, அதை ஒரு சவாலாகவே ஏற்றுச் சாதனை படைத்துக் கொண்டிருப்பவர்தான் இந்த ஜெயக்குமார்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகிலுள்ள தளவாய்புரம் கிராமத்தைச் சேர்ந்த இவர், உடல் முழுவதும் 60 ஆயிரம் இத்தாலிய தேனீக்களை 24 மணி நேரம் படரவிட்டு ‘லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருப் பவர். அடுத்தக் கட்டமாக 175 தேனீக்களை 3 நிமிடம் 7 வினாடிகள் வாய்க்குள் வைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்கவிருக்கிறார். இப்படி தேனீக்களை வைத்து வருமானத்தையும்... வெகுமானத்தையும் பார்த்துவரும் ஜெயக்குமார், தான் தேனீ வளர்க்க ஆரம்பித்த கதையைச் சொல்லத் தொடங்கினார்.
''அப்ப பதிமூணு வயசிருக்கும். எட்டாம் வகுப்பு படிச்சிக்கிட்டிருந்தேன். மேற்கு தொடர்ச்சி மலையில எங்க சித்தப்பா கண்ணனுக்கு எஸ்டேட் இருக்கு. அதுல தேன் எடுத்ததுதான் என்னோட முதல் அனுபவம். அங்க இருக்கற மலைச்சாதி மக்கள்கிட்ட பழகிப்பழகியே தேன் எடுக்கும் வித்தையை லாகவமா கத்துக்கிட்டேன். அதுக்குப்பிறகு, இளம் வயசுக்கே உரிய கிரிக்கெட், சினிமா இதெல்லாம் அறவே இல்லாம போயிடுச்சி. பள்ளிக்கூடம், அதை விட்டா தேனீக்களைக் கவனிக்கறதுனு காலம் போச்சு. வீட்டுல தினசரி செலவுக்காக கொடுக்கற ரெண்டு ரூபாயைச் சேர்த்து வெச்சிக்கிட்டே வந்தேன். ஒரு கட்டத்துல அந்தக் காசை வெச்சி, தேனீ வளர்க்கறதுக்காக பழைய தேன் பெட்டி ஒண்ணை வாங்கிக்கிட்டு வீட்டுக்குப் போனேன். 'படிக்கற புள்ளைக்கு இதெல்லாம் தேவையில்லாத வேலை'னு சத்தம் போட்டாங்க. எல்லாரையும் சமாதானப் படுத்திட்டு, தேனீ வளர்க்க ஆரம்பிச்சேன். அப்ப நான் பத்தாவது படிச்சிக்கிட்டிருந்தேன்.
ஒரு வாரம் கழிச்சிப் பார்த்தா பெட்டி முழுக்க தேன். அஞ்சரை கிலோ தேன் கிடைச்சுது. வீட்டுக்கு அரை கிலோ கொடுத்தது போக, மீதியை கிலோ 200 ரூபாய் வீதம் வித்தேன். ஆயிரம் ரூபாய் கையில வருமானம். இதைப் பார்த்து வீடே பெருமைப் பட்டுச்சி. அந்தக் காசைக் கையில வாங்கினதும் வானத்துல மிதக்கற மாதிரியான ஒரு பெருமிதம்'' என்று மகிழ்ச்சி பெருக்கெடுக்கச் சொன்னார் ஜெயக்குமார்.
அதன் பிறகு, சித்தப்பா கண்ணன் மூலமாக இத்தாலிய தேனீக்களைப் பற்றிய அறிமுகம் கிடைக் கவே, நறுமணப்பொருள் வாரியத்தின் (ஸ்பைஸ் போர்டு) மூலமாக கேரளா மாநிலம் கண்ணணூரி லிருந்து இத்தாலிய தேனீ பெட்டிகள் மூன்றை வாங்கிச் சேர்த்துள்ளார் ஜெயக்குமார். இந்தியத் தேனீ... இத்தாலிய தேனீ... இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் என்ன... குணநலன்கள் என்ன... என்பதை ஒரு பக்கம் கவனித்தவாறே, கலசலிங்கம் பாலிடெக்னிக்கில் கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் படித்து முடித்திருக்கிறார்.



 ''என்னதான் கம்ப்யூட்டர் இன்ஜினீயர்னாலும் என்னோட ஆர்வமெல்லாம் தேனீ மேலதான். அதனால தேனீ வளர்ப்பை தீவிரமா செய்ய ஆரம்பிச் சிட்டேன். இப்ப, இந்திய தேனீப் பெட்டி 800, இத்தாலி தேனீப் பெட்டி 55 வெச்சிருக்கேன். ஈரோடு, மேட்டுப்பாளையம் இங்கல்லாம் கிளை அலுவலகங் களைப் போட்டு, அந்தந்தப் பகுதியில தேன் பெட்டிகளை வெச்சி பராமரிக்கிறேன்.
ஆடு, மாடு, கோழியெல்லாம் வளர்த்தா அதுக்கு தீனி, தண்ணி, தங்குற இடம் எல்லாத்தையும் நாமதான் தேடிக் கொடுக் கணும். தேனீக்களுக்கு அப்படியில்லை. நமக்குச் சொந்தமா தோட்டம் இல்லைனா கூட, பிறரோட தோட்டத்துல, அவங்களோட அனுமதி வாங்கி தேனீப் பெட்டிகளை வெச்சி பராமரிக்கலாம். இதனால தோட்டக் காரருக்கு எந்த இடைஞ்சலும் இல்லை. சொல்லப்போனா லாபம்தான். அயல் மகரந்தச் சேர்க்கை ஏற்பட்டு மகசூல் அதிகரிக்கும். சொந்தமா விவசாயம் இல்லாததால உறவுக் காரங்க தோட்டத்துலதான் தேன் பெட்டிகளை வெச்சி பராமரிக்கிறேன். அவங்களும் ஆர்வத்தோட இடம் கொடுக்கறாங்க. தேன் எடுக்கறதுக்குக் கருவி, புகை போடுறதுக்குக் கருவினு தொழில்ல ஏக முன்னேற்றம் வந்தாச்சு'' என்று சந்தோஷப்பட்டார்
தமிழகம் மற்றும் கேரளாவில் எங்கெங்கு... எந்தெந்த மாதங்களில் அதிகமாக பூக்கள் பூக்கின்றன. குறிப்பாக சூரியகாந்தி, காஃபி, ரப்பர் போன்றவற்றை அட்டவணைப் படுத்திக்கொண்டுதான், குறிப்பிட்ட தோட்டங் களில் தேன் பெட்டிகளை வைத்து பலரும் தொழில் செய்கின்றனர். தேனீப் பெட்டிகள் வைக்கப்படும் தோட்டங்களில் மகசூல் கூடுவதால், தேன் பெட்டிக்களின் வரவை தோட்டக்காரர்கள் ஆவலுடன் எதிர்நோக்கு கின்றனர். இந்த வகையில், தான் எடுத்துவரும் தேனை, அக்மார்க் முத்திரை பெற்று 2002-ம் ஆண்டிலிருந்து விற்பனை செய்துவருகிறார் ஜெயக்குமார். 25, 50, 100, 250, 500 மில்லி அளவுகளிலும் 1, 25 கிலோ அளவுகளிலும் தேனைப் பக்குவப்படுத்தி விற்பனை செய்கிறார்.
''தேனீ வளர்க்க உள்ளார்ந்த ஆர்வமிருக்கணும். தேனீக்கள் கிட்ட பயம் இருக்கக்கூடாது. தேனீ கொட்டினா தாங்கிக்கற தைரியம் வேணும். எல்லாத்துக்கும் மேல தேனீக்கள் மேல பிரியம் இருக்கணும். ஆனா, அரசாங்கத்துல சம்பளம் வாங்கிக்கிட்டு வேலை பார்க்குற அதிகாரிங்ககிட்ட இதை எதிர்ப்பார்க்க முடியுமா... அதனாலதான் இத்தாலி தேனீங்கறது இன்னமும் இந்தியாவுல பெரிய அளவுல வளர்க்கற விஷயமா மாறல. ஆனா, மனசு வெச்சா சாதிக்கமுடியும்னு நான் ஜெயிச்சிக் காட்டியிருக்கேன். ஆர்வம் உள்ளவங்க மனசு வெச்சா ஜெயிக்கலாம்'' என்று கட்டை விரலை உயர்த்திச் சொன்னார்.
அதிக உடல் உழைப்பு தேவைப்படாத, சொந்த நிலம் தேவைப்படாத, வேலையாட்கள் தேவைப்படாத, குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்டக்கூடிய, மிகமுக்கியமாக விற்பனை வாய்ப்புப் பிரகாசமாக உள்ள தொழில் தேனீ வளர்ப்பு. இது குறித்தான பயிற்சிகளையும் ஆலோசனை களையும் வழங்க ஜெயக்குமார் தயாராகவே உள்ளார். ஏற்கெனவே மகளிர் சுய உதவிக்குழு மற்றும் மலைவாழ் மக்களுக்கு இத்தகைய பயிற்சிகளைக் கொடுத்த அனுபவம் உள்ளவர். நீங்களும்தான் பேசிப்பாருங்களேன்... தொடர்புக்கு அலைபேசி: (அலைபேசி: 94433-02674).
இந்தியத் தேவைக்கு ஏற்ப இங்கே தேன் உற்பத்தி இல்லை. எனவே, அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. எனவே, இங்கேயே உற்பத்தி செய்தால் நிச்சயம் சந்தைக்குப் பஞ்சமில்லை!
ரகளையான ராயல் ஜெல்லி!
தேன் பெட்டிகளிலிருந்து ‘தேன்’ மட்டும் கிடைப்பதில்லை. ராயல் ஜெல்லி, மகரந்த தூள், புரோபலிஸ் எனும் ஒருவகை பிசின், தேனீ விஷம், தேன் மெழுகு போன்றவையும் கிடைக்கின்றன. ராயல் ஜெல்லி என்பது ராணித் தேனீக்களுக்கான சிறப்பு உணவு. இந்த உணவை வேலைக்காரத் தேனீக்கள் தயார் செய்யும். மற்ற தேனீக்கள் மூன்றி லிருந்து நான்கு மாதம் மட்டுமே உயிர் வாழும். ராயல் ஜெல்லியை உண்பதால் ராணித் தேனீ மூன்று முதல் நான்கு ஆண்டுகள் உயிர் வாழும். இது மனிதர்களின் செக்ஸ் ஹார்மோன்களை தூண்டும் அரிய மருந்து என்பதால் உயரிய விலை கிடைக்கிறது. இந்தியாவில் ஒரு கிலோ ராயல் ஜெல்லியின் விலை ரூ.30,000.

தேனீ கொட்டினால் தேக ஆரோக்கியம்!
தேனீ நம்மை கொட்டினால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகின்றது என்கிறார்கள். நரம்பு தளர்ச்சி குறையும், மூட்டு வலிகுறையும். வாத நோய் வராது என்றெல்லாம் ஆராய்ச்சி முடிவுகள் சொல் கின்றன. இப்படி தேனீக்களைக் கொட்டவிடுவதன் மூலம், அபூர்வமாக சிலருக்கு அலர்ஜி வருமாம். இத்தாலிய தேனீயை உடலில் கொட்டவிட்டு செய்யப் படும் அக்குபஞ்சர் சிகிச்சைக்கு வீனோம் தெரபி (Venom Therapy) எனப்பெயர். சீனா மற்றும் அமெரிக்க நாடுகளில் இது ஏகப் பிரபலம். ஒரு தேனீயை வைத்து கொட்ட விடுவதற்கு ரூ.200 வரை வாங்குகின்றனர். ஆனால், தேனீ தான் பாவம். ஒரு முறை கொட்டியதும் அது இறந்துவிடும்.
எதிரிகள் ஜாக்கிரதை!
தேனீ வளர்க்க நினைப்பவர் கள் எறும்புகள், பல்லி, கரிச்சான் குருவி, மெழுகு பட்டுப்பூச்சி, குளவி, கதம்ப வண்டு போன்ற வற்றிடம் உஷாராக இருக்க வேண்டும். இவையெல்லாம் தேனீக்களின் எதிரிகள்.
தேனீக்களுக்கு கறுப்பு நிறம் பிடிக்காது. அதனால்தான் கண்ணில் அசைந்துகொண்டே இருக்கும் கருவிழியைப் பார்த்து கொட்ட வரும். அதற்கு பிடித்த நிறம் வெள்ளை. அதனால்தான் வெள்ளை நிறமான அடையில் தேனைச் சேகரிக்கின்றன.
நம்புங்கள்.. உண்மைதான்!
தேனீக்களால் அயல்மகரந்த சேர்க்கை அதிகரித்து பயிர்களில் கிடைக்கும் மகசூலின் உயர்வு அதிசயக்கத் தக்கதாக இருக்கிறது. கடுகு பயிரில் 43% அதிகரிக்கிறது. இதேபோல, எள் 32%, சூரியகாந்தி 38 முதல் 48%, பருத்தி 17 முதல் 19%, வெள்ளரி 66%, தர்பூசணி 52%, ஆப்பிள் 44%, திராட்சை 37%, ஏலக்காய் (கேரளா) 29-39%, என்று மகசூல் அதிகரிக்கும்!
சோம்பல் இல்லாத சுறுசுறுப் புமிக்க தேனீக்களிடமிருந்து நாம் தேனை மட்டும்தான் எடுக்கின்றோம். கடமை உணர்வு, பண்பு, ஒற்றுமை, ஒழுங்கு, கீழ்படிதல், கூட்டுறவு, தொலைநோக்கு பார்வை, பிறர் நலம் பேணுதல், சிக்கனம், சேமிப்பு ஆகிய நல்ல குணங்களையும் அவற் றிடமிருந்து எடுத்துக் கொண்டால்... உலகில் நம்மை அடித்துக்கொள்ள ஆளே இல்லை!

TET COURT NEWS : உச்ச நீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான வழக்குகள் வரும் 25.08.2015 அன்று விசாரணைக்கு வருகிறது!

 ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கு விசாரணைக்கு வரும் நாள் செய்தித்தாள்களில் 18.08.2015என்று தவறான செய்தி வெளியிட்டுள்ளது.b ஆனால் வழக்கு 25.08.2015 அன்று வருவதாக உச்சநீதிமன்ற வலைதளத்தில் வழக்கு குறித்த நிலையில் வெளியிடப்பட்டுள்ளது.

உங்கள் Android போனின் Pattern,Password,pin ஆகியவற்றை மறந்து விட்டிர்களா ?


    உங்கள் Android போனின் Pattern,Password,pin ஆகியவற்றை மறந்து விட்டிர்களா ?
...
Service Center அல்லது வேறு கடைகாரரிடம் எடுத்துச் 
சென்றால் 300லிருந்து 350 வரை கேட்பார்கள்,,
...
நாம் இப்போது நாமலே எப்படி Unlock செய்வது என்று பார்க்கலாம்,,
...
உங்கள் pattern,password,pinஐ எடுக்க இரண்டு வழிகள் உள்ளன,,
...
1.)Google Account
2.)Wipe data(format,factory reset)
...
<<<<<<<>>>>>>
(பலர் இதற்கு internet connection தேவை என்று 
நினைக்கின்றனர் ,,ஆனால் தேவை இல்லை !!)
* |STEP 1| *
உங்கள் pattern,password,pinஐ மூன்று முறை தவறாக போடுங்கள்...

* |STEP 2| *
கீழே "Forgot Pattern?" என்று வரும்,,அதை Select செய்யுங்கள் ,,
பின் உங்கள் Gmail Address ,Password ஆகியவற்றை type செய்து
Sign in கொடுங்கள் ...

* |STEP 3| *
இப்போது உங்கள் புது pattern,password,pinஐ Set செய்து 
கொள்ளுங்கள் ,,அவ்வளவுதான் !! 
...
<<<<<<<<>>>>>>

1.)உங்கள் போனை switch off செய்யுங்கள

2.)off ஆனவுடன் power button +home button + volume up button ஆகியவற்றை சேர்த்து அழுத்துங்கள் ...
((இது எல்லா போன்களில் வேலை செய்யாது,Googleலில் "how to go to recovery mode in "உங்கள் போன் மாடல்" என்று search செய்யுங்கள்))

3.)recovery modeல் touch screen வேலை செய்யாது,,volume button move செய்வதற்கு ,home button அல்லது power button select செய்வதற்கு ...

4.)recovery modeல் "wipe data" optionஐ select செய்யுங்கள்,பின் yes select செய்யுங்கள்...

5.)இப்போது "reboot system now" optionஐ select செய்யுங்கள்....
(குறிப்பு : இந்த முறையில(2nd) போனில் சேமித்த தகவல்கள் அனைத்தும் அழிக்கப்படும். ஆகவே கவனத்துடன் செயல்படவும்)

கிராமப்புறங்களில் சமூகத் தளப் பயன்பாடு உயர்கிறது

இணையத்தினைப் பயன்படுத்துபவர்களில், சமூகத் தொடர்பினைத் தரும் இணைய தளங்களைப் பயன்படுத்துவதில், கிராமப் புறங்களில் உள்ளவர்கள் எண்ணிக்கை, நகர்ப்புறங்களில் புதிதாக இணைப்புக் கொள்பவர்களைக் காட்டிலும் சென்ற ஆண்டு அதிகமாக இருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்ற 2014 ஆம் ஆண்டில், இந்த எண்ணிக்கை 35% கிராமப் புறங்களில் உயர்ந்ததாகத் தெரிய வந்துள்ளது. IMRB International and Internet and industry body Mobile Association of India (IMAI) இதனை அறிவித்துள்ளது.
சமூக இணையத் தளங்களைப் பயன்படுத்தும் 14.3 கோடி (ஏப்ரல் 2015 வரை) பேர்களில், 11.8 கோடி பேர் நகரங்களில் வாழ்பவர்கள். 2.5 கோடி பேர் கிராமங்களிலிருந்து இயங்குபவர்கள். சென்ற ஜூன் 2014 வரை, கிராமப் புறங்களில் இருந்து சமூக தளங்களைப்
பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை 33% உயர்ந்துள்ளது. நகரங்களில் இந்த வளர்ச்சி 28% மட்டுமே. இந்தக் கணிப்பு ஏழு மாநிலங்களில், 35 இடங்களில் வாழ்பவர்களிடம் எடுக்கப்பட்டது. ஏப்ரல் 2015ன் படி, 25.7 கோடி இணையப் பயனாளர்கள் இந்தியாவில் உள்ளனர். இவர்களில் 18 கோடி பேர் நகரங்களிலும் 7.7 கோடி பேர் கிராமங்களிலும் வாழ்கின்றனர். கிராமப் புறங்களில் உள்ளவர்களின் சமூக தளப் பயன்பாடு உயர்வதற்கு, இத்தளங்களின் பல்வேறு வசதிகள் மற்றும் தொடர்புகளை ஏற்படுத்துவதில் உள்ள இணக்கமான தொழில் நுட்ப சூழ்நிலைகளே காரணமாகும்.
புது டில்லி, மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தா உட்பட இந்தியாவின் 35 நகரங்களில் உள்ள இணையப் பயனாளர்களில் 84% பேர் இணையத்தை, பெரும்பாலும் சமூக நட்பிற்கென இயங்கும் தளங்களைப் பார்ப்பதற்கே பயன்படுத்துகின்றனர். கிராமப்புறங்களில் இந்த எண்ணிக்கை 85% ஆக உள்ளது.
நகர்ப்புறங்களில் சமூக தளங்களைப் பயன்படுத்துவர்களில், ஏறத்தாழ பாதிக்கு மேலானவர்கள் நான்கு மாநகரங்களிலேயே உள்ளனர். இந்த நான்கு பெரும் நகரங்களுக்கு அடுத்தபடியான, 35 சிறிய நகரங்களில் உள்ளவர்களில் 5% பேர் சமூக இணைய தளங்களைப் பயன்படுத்துகின்றனர். இந்த ஆய்வில், சமூக இணைய தளங்களைப் பயன்படுத்துவதில் கல்லூரி மாணவர்களே அதிக இடம் (34%) பெற்றுள்ளனர். அடுத்தபடியாக, 21 வயதிலிருந்து 35 வயதுள்ள இளைஞர்கள் அடுத்த இடம் பெறுகின்றனர்.
இதில் கண்டறியப்பட்ட இன்னொரு முக்கிய ஆர்வமூட்டும் விஷய்ம், சமூக இணைய தளங்களைப் பயன்படுத்துபவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் மொபைல் போன்கள் வழியாகவே சமூக இணைய தளங்களைத் தொடர்பு கொள்கின்றனர். தற்போது ஸ்மார்ட் போன்களின் விலை படிப்படியாகக் குறைந்து, அதிகமாக விற்பனையாவதால், மொபைல் போன் வழி பயன்பாடு இன்னும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலே கண்டறியப்பட்ட தகவல்களால், சமூக இணைய தளங்களை இயக்கும் நிறுவனங்கள், அவற்றின் இயக்கத்தில், கூடுதலாக முதலீடு செய்து வருகின்றன. தொடக்கம் முதல் இன்று வரை, இந்த சமூக இணைய தளப் பயன்பாட்டில், பேஸ்புக் இணைய தளமே முதல் இடம்
பெறுகிறது.
மொத்தத்தில் 96% பேர் இதனைப் பயன்படுத்துகின்றனர். இதனை அடுத்து கூகுள் ப்ளஸ் பயன்படுத்துபவர்கள் 61% ஆக உள்ளனர். ட்விட்டர் தளத்தினை 43% பேரும், லிங்க்ட் இன் தளத்தினை 24% பேரும் பயன்படுத்தி வருகின்றனர். மொத்த சமூக தளப் பயன்பாட்டாளர்களில், 18% பேர் மட்டுமே இணையத்தினைத் தங்கள் அலுவலகத்திலிருந்து பயன்படுத்துகின்றனர். அடுத்த 18% பேர் தங்கள் ஸ்மார்ட்போன் அல்லது டேப்ளட் பி.சி. வழியாகப் பயன்படுத்துகின்றனர். ஏறத்தாழ 75% பேர், தங்கள் வீடுகளிலிருந்து தான், இந்த தளங்களை அணுகுகின்றனர். இந்த ஆய்வு 2013 டிசம்பர் மாதத்திற்குப் பிந்தைய காலத்தில் எடுக்கப்பட்டது.

Thursday, August 6, 2015

நெஞ்செரிச்சலுக்கு உணவில் இருக்கு தீர்வு

நெஞ்செரிச்சல் உணவுப் பழக்கவழக்கங்களால் ஏற்படுகிறது. ஏனெனில் சரியாக உண்ணாமல் இருப்பதால், இரைப்பையில் உணவை செரிக்க உதவும் அமிலமானது தேங்கி, வயிற்றில் எரிச்சலை உண்டாக்கும். மேலும் அவை நீடித்தால், அந்த அமிலமானது உணவுக்குழல் வழியாக மேலே ஏறி, நெஞ்சில் எரிச்சலை உண்டாக்குகின்றன.
இத்தகைய நெஞ்செரிச்சலை, ஒருசில உணவுகள் மூலமாக சரிசெய்ய முடியும். முக்கியமாக உணவுகளை சரியாக சாப்பிடுவதோடு, சரியான நேரத்தில் சாப்பிடுவது, குறைந்தது, 8 மணிநேரம் தூங்குவது மற்றும் தினமும் உடற்பயிற்சி போன்றவற்றை பின்பற்ற வேண்டும்.
ஒருவேளை ஏற்கனவே நெஞ்செரிச்சலால் பாதிக்கப்பட்டிருந்தால், நீண்ட நேரம் எதுவும் சாப்பிடாமல் உட்காரும் நேரத்தில், அவ்வப்போது ஏதேனும் ஒருசில உணவுகளையும் சாப்பிட வேண்டும். ஒருவேளை உணவுகளால் சரிசெய்ய முடியாவிட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். குறிப்பாக இந்த நெஞ்செரிச்சலுக்கு பழங்கள், காய்கறிகள் போன்றவை இருக்கின்றன. அவற்றை சரியாக சாப்பிட்டு வந்தால், அந்த பிரச்னையிலிருந்து உடனடியாக விடுபட முடியும். கால்சியம் அதிகம் உள்ள உணவுகள் கூட, நெஞ்செரிச்சலை சரிசெய்யும்.
ஆப்பிள்: ஆப்பிளில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது. எனவே வயிற்றில் அல்லது நெஞ்சில் எரிச்சல் ஏற்படும் போது, ஆப்பிளை சாப்பிட்டால், எரிச்சலைத் தடுக்கலாம்.
தண்ணீர்: தினமும் போதுமான அளவில் தண்ணீரைக் குடிக்க வேண்டும். இதனால் எரிச்சலை ஏற்படுத்தும் அமிலமானது கரைந்து வெளியேறிவிடும். அதுமட்டுமின்றி, தண்ணீர் குடித்தால், உடலில் உள்ள செயல்பாடுகள் அனைத்தும் சீராக இயங்கும்.
கற்றாழை: ஹிலிகோபாக்டர் பைலோரியா என்னும் பாக்டீரியம், எரிச்சலை ஏற்படுத்தும் அமிலத்தை அதிகம் சுரக்க வைக்கிறது. எனவே கற்றாழை ஜூஸை குடித்து வந்தால், அந்த பாக்டீரியா அழிக்கப்பட்டு, நெஞ்செரிச்சல் தடைபடும்.
கடல் உணவுகள்: கடல் உணவுகளில் டாரின் (taurine) சத்து அதிகமாக உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், எரிச்சலை உண்டாக்கும் அமிலத்தை டாரின் குறைக்கும். அதுமட்டுமல்லாமல், இது கண்களுக்கும் சிறந்தது.
ஆப்பிள் சீடர் வினிகர்: இரண்டு டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை, வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால், நெஞ்செரிச்சலை தடுக்கலாம்.
வாழைப்பழம்: வாழைப்பழத்தில் ஆன்டாசிட்கள் உள்ளன. எனவே தினமும் வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் நல்லது.
பால்: பாலில் கால்சியம் அதிகம் உள்ளது. கால்சியம் உடலில் அதிகம் இருந்தால், அது எரிச்சலை உண்டாக்கும் அமிலம் அதிகம் சுரப்பதை தடுக்கும்.
அதிமதுரம் (Licorice): இந்த உணவுப் பொருள் எரிச்சலை உண்டாக்கும் அமிலத்தின் உற்பத்தியை குறைப்பதில் சிறந்தது. அதுமட்டுமன்றி இதில் உள்ள நார்ச்சத்து, உடலில் கொலஸ்ட்ரால் தங்குவதைத் தடுக்கும்