TRB,TNTET,TNPSC online coching

Search This Blog

NEWS

https://trb-tntet-tnpsc.blogspot.in/வழங்கும் இலவச இணையதள பயிற்சிக்கு உங்களை வரவேற்கிறோம்.தன்னம்பிக்கை, விடா முயற்சி , கடின உழைப்பு. எந்த சோதனைகள் வந்தாலும் உங்கள் இலட்சியத்தை விட்டு விடாதீர்கள். "சரியான முயற்சியும் பயிற்சியும் இருந்தால் உங்களால் முடியாத ஒன்றுமே இல்லை" என்ற நம்பிக்கை உங்கள் ஒவ்வொருவரின் மனதிலும் நிறைந்திருக்க வேண்டும். அதற்காக எங்கள் இணைய தளத்தின் மூலம் எங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வோம்.பயிற்சி நிறுவனங்களுக்கு சென்று பயிற்சி பெற இயலாத வேலைதேடும் இளைஞர்கள், பணிபுரிபவர்கள், இல்லத்தரசிகள் தங்களது அரசு வேலை கனவுகளை நனவாக்குவதற்காகவே இந்த இணையதளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. TET ன் புதிய பாடத்திட்டத்திற்கேற்ப ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட பாடப்பகுதிகளில் வாரத்தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த வாரத்தேர்வின் முடிவுகள் உங்கள் பெயருடன் இந்த இணையதளத்தில் வெளியிடவும் முடிவு செய்துள்ளோம்.

Sunday, June 21, 2015

பத்து மாதங்கள் தாய் நம்மை சுமந்தாலும், ஆயுள் வரை நெஞ்சில் சுமப்பவர் தந்தை. முள்ளுக்குள் ரோஜாவாய், பலாப்பழத்தில் பலாச்சுளையாய்  இருந்து சந்தோஷமும், பெருமையும் தருபவர் தந்தை. வாழ்க்கைச் சக்கரத்தில் வசதியாய் நாம் வாழ்வதற்காக, ஓயாமல் சுழலும் அன்புச் சக்கரம்  தந்தை. ‘நான் பட்ட கஷ்டம்’, என் பிள்ளையும் படக்கூடாது என்று அனுதினமும் உழைப்பவர் தந்தை. இத்தகைய சிறப்பு மிக்க தந்தையை வாழ்த்த  இன்று உலக தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. இத்தினம் கொண்டாடப்படும் தேதி நாட்டுக்கு நாடு வேறுபட்டாலும், இந்தியா உள்ளிட்ட  பெரும்பாலான நாடுகளில் ஜூன் 3வது ஞாயிறு கொண்டாடப்படுகிறது. சிறு வயதிலேயே குழந்தைகள் தந்தையை மதிக்க கற்றுத் தருவதே  இத்தினத்தின் நோக்கம்.

அமெரிக்காவில் 1909ல் சொனாரா லூயிஸ் ஸ்மார்ட் டாட் என்ற இளம் பெண் தந்தையர் தினம் கொண்டாடும் யோசனையை முன் வைத்தார்.  அன்னையர் தினம் கொண்டாடும் போது, தந்தையர் தினம் ஏன் கொண்டாடக்கூடாது என வலியுறுத்தினார். தனது தாயாரின் மறைவுக்கு பிறகு தந்தை  வில்லியம், ஆறு குழந்தைகள் கொண்ட தனது குடும்பத்தை கடும் சிரமங்களுக்கிடையே பராமரிப்பதை கண்டார். இதுதான், தந்தையர் தினம்  கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தை இவருக்கு தூண்டியது. இதன்படி 1910ம் ஆண்டு முதன் முதலில் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது.  1972ல் அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சனால், அந்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது.

 தாயின் அன்புக்கு எவ்வகையிலும் குறைந்து விடுவதில்லை தந்தையின் அன்பு. சிறு வயது முதல் பிள்ளைகள் விரும்பியவற்றை செய்து தருகிறார்.  பிள்ளைகளின் கல்வி முதல் திருமணம் வரை அனைத்திலும் தந்தையின் பணி அளவிட முடியாதது. எத்தனையோ இன்னல்கள் பட்டாலும் அதை  வெளிக் காட்டாமல் துன்பத்தின் சாயல் தனது பிள்ளைகள் மீது படிந்து விடாமல் அனைத்தையும் தம் தோளில் சுமந்தே தன் குழந்தைகளுக்காக  ராத்தூக்கம், பகல் தூக்கம் இன்றி பல தியாகங்கள் புரிந்த, புரியும் தந்தையர்களை நாம் போற்ற வேண்டும்.

இன்றைய அவசர உலகில் நாம், நம் தந்தையருக்கு தள்ளாத வயதில் அவர்களுக்குரிய கடமைகளைச் செய்கின்றோமா என்ற கேள்வியை நம்முள்  நாமே கேட்டுப் பார்த்து நமது தவறுகளை சரிசெய்வதே இன்றைய நாளின் முதற்பணியாகும். இன்றைய தினத்தில் மட்டுமல்ல... என்றுமே  தந்தையருக்கு நாம் செய்யவேண்டிய கடமைகளை மனதில் இருத்திக் கொள்வோம். இந்நாளில் நம் தந்தையரை நாமும் இதய சுத்தியோடு  வாழ்த்துவோம்! வணங்குவோம்!

Sunday, June 14, 2015

TET MATERIALS

ஆய்வக உதவியாளர் தேர்வு 'ரிசல்ட்' தாமதமாக வாய்ப்பு

ஆய்வக உதவியாளர் பதவிக்கான தேர்வில், கணினி வழி விடைத்தாள் திருத்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வழக்கு நிலுவையில் உள்ளதால், தேர்வு முடிவுகள் வெளியாவது தாமதமாகும் என, தகவல் வெளியாகி உள்ளது.தமிழக அரசு மேல்நிலைப் பள்ளிகளின் ஆய்வகங்களில் காலியாக உள்ள, 4,362 உதவியாளர் பணி இடங்களுக்கு, நியமன நடவடிக்கை துவங்கி உள்ளது. எழுத்துத் தேர்வு, மே, 31ம் தேதி நடந்தது; 8.84 லட்சம் பேர், தேர்வு எழுதினர்.


         ஆனால், 'இந்த மதிப்பெண் இறுதிப் பட்டியலுக்கு கணக்கிடப்படாது; நேர்முகத் தேர்வு மதிப்பெண்ணே கணக்கிடப்படும்' என, தேர்வு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், எழுத்துத் தேர்வு எதற்கு என்ற கேள்வி எழுந்துள்ளது.தேர்வர்கள் சிலர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு முடியும் வரை, தேர்வு முடிவை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டுஉள்ளது.

இதற்கிடையில், எழுத்து தேர்வுக்கான விடைத்தாள் திருத்தம் துவங்கி, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 'ஓ.எம்.ஆர்., ஷீட்' என்ற கணினிக் குறியீடு விடைத்தாள், தானியங்கி கணினி விடை திருத்த முறையில் திருத்தப்பட்டுள்ளன. ஆனால், மதிப்பெண் பட்டியலிடும் பணி துவங்கவில்லை. வழக்கின் முடிவுக்கு ஏற்ப, மதிப்பெண் பட்டியலிடும் பணி துவங்கும் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தோல்வியை கொண்டாடுங்கள்

தோல்வி என்றால் என்ன; போட்டியில் தோற்பது தான்
தோல்வி என, நினைக்கின்றனர். உண்மை அதுவல்ல.
ஏதாவது ஒரு காரியத்தை எடுத்து அதை முழுமையாக முடிக்காமல் விடுவதும் தோல்விதான். இலக்கும், திறமையும் ஒத்துப் போகாத போது, செயலை முடிக்க முடியாது. தோல்வி ஏற்படும்.
ஒன்றை பற்றி விவரமாக புரிந்துகொண்டு பாராட்டுவதை தான் கொண்டாடுவது என்கிறோம். எனவே, தோல்வியை அலசி, ஆராய்ந்து, இலக்கை நம் திறமைக்கு உட்பட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் லட்சியத்திற்கு ஏற்ப, திறமையை வளர்த்துக் கொண்டால் வெற்றி உறுதி. அந்த அளவிற்கு தயாராக இருந்தால், தோல்விக்கு வாய்ப்பே இல்லை.
எனவே தோல்வியை கொண்டாட தெரிய வேண்டும். தோல்விகளை அல்ல.
வாழ்க்கையில் உயர்வும், தாழ்வும் மாறிமாறி வருவது இயல்பு. முன்னேற வேண்டும் என்பது, எல்லாருக்கும் இருக்கும் ஆசை; அதுவும் இயல்பு. உயர்வு வந்தால், தோல்வியும் வரும் என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
உயர்வும், தாழ்வும் நாணயத்தின் இரு பக்கங்கள். தோல்வியை கண்டு துவளக் கூடாது. வாழ்வில், ஒருமுறையேனும் தோல்வி ஏற்பட்டால் தான் வெற்றியின் அருமை புரியும். சாதாரணமாக ஒருவன் வெற்றியடைந்தால், அவனுக்கு அது பெரிய விஷயமாக தெரியாது. பலமுறை தோல்வி கண்டு, வெற்றியை தழுவும் ஒருவனால் தான், அதை உண்மையில் உணர முடியும்.
தோல்வியை தெரிந்து, அதற்கு தயாரானால், தோல்விகளுக்கு வாய்ப்பில்லை. ஆகவே, தோல்வியை கொண்டாடுங்கள்.

வாழையடி வாழை

வாழையடி வாழையாக நம் குலம் தலைத்து வாழவேண்டும் என்றால் நோய் நொடி இல்லாமல் வாழ்ந்தால் தான் முடியும். அதற்கு, நம் முன்னோர் சாப்பிட்டு வந்த இயற்கையான உணவு முறைகளை பின்பற்றுவதை தவிர, சிறந்த வழி வேறு இல்லை. நம் உணவு பொருட்களில், வாழையில் இருந்து கிடைக்கும் அனைத்து உணவுப் பொருட்களும் நல்ல மருத்துவ குணம் கொண்டவை. வாழைப் பூ முதல் தண்டு வரை உணவுக்கு சிறந்ததாகும். அதில், பல நோய்களை போக்கும் மருத்துவ குணங்கள் உள்ளன.
வாழை இலையில் சாப்பிடுவதால், இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும். தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும், அப்பொழுது தான் சூட்டின் தாக்கம் குறையும். காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவி, வாழை இலையை மேலே கட்டு மாதிரி கட்டி வந்தால், புண் குணமாகும். சின்னம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும்.
சோரியாசிஸ், தோல் அலர்ஜி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில், வாழை இலையை கட்டி வைக்க வேண்டும். தலைவாழை இலை என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது விருந்து தான். அது, சைவ உணவாக இருந்தாலும், அசைவ உணவாக இருந்தாலும், இலையில் தான் நிச்சயம் சாப்பாடு இருக்கும். இன்றைய வேகமான முன்னேற்றத்தில் வாழையின் மகத்துவம் புரியாமல் போய் விட்டது. நகர் புறங்களில், தட்டு அல்லது பாலீதின் பேப்பரில் தான் சாப்பாடு சுற்றி தரப்படுகிறது. இது நோய் மாற்றத்துக்கான அறிகுறியாக இருக்கிறது.
நவீனத்தால் ஏற்பட்ட மாற்றத்தால், நகர்புறத்தில் இருப்பவர்கள் சாப்பிட்டுத் தான் கொண்டிருக்கின்றனர். ஆனால், நம்மில் பலர் தனது சொந்த கிராமத்திற்கு விடுமுறை நாட்களில் செல்லும் போது தட்டிலேயே வாடிக்கையாக உணவு அருந்துகின்றனர்; அதை மாற்ற முயற்சிக்கலாம். இலையில் சாப்பிடும் போது ஏற்படும் நன்மைகளை அறியும் போது, நம் முன்னோர்கள் ஏன் இலையில் சாப்பிட்டார்கள் என நமக்கு தெரியவரும்.
வாழைப்பூ, வாழைத் தண்டு மருத்துவத்துக்கு பயன்படுகிறது என்பது, எல்லோரும் அறிந்ததே. வாழையின் வேர் கூட, சித்த மருத்துவத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையில் எத்தனை சிறப்பு அம்சங்கள், அவர்கள் வகுத்துள்ள முறைப்படி, நாம் உணவு உண்டு வேலை செய்தாலே, நிச்சயம் நோயின்றி வாழலாம்; அதற்கு வாழை இலையில் சாப்பிடுவதும் ஓர் உதாரணம்.
திருமணத்தின் போது கூட, வாழையடி வாழையாக குடும்பம் தழைக்க வேண்டும் என்பதன் மகத்துவம், இது தான். இப்போது வாழை இலை போன்று பிளாஸ்டிக் இலை வந்து விட்டது. ஒரு பொருள் கொண்ட தோற்றத்தில் செயற்கை பொருள் இருந்து விட்டால், இயற்கையை ஒரு போதும் மிஞ்ச முடியாது என்பதற்கு சாட்சி, வாழை மரங்கள்.

Sunday, June 7, 2015

நல்வாழ்வு தரும் கேழ்வரகு!

கேழ்வரகு தொன்றுதொட்டே நமது நாட்டில் உட்கொள்ளப்படும் உணவுகளில் ஒன்று. நமது முன்னோர்கள் உடலுறுதியுடன், அதிக காலம் உயிர் வாழ்ந்ததற்கு முக்கிய காரணம், அவர்களது உணவு பழக்கம் தான். அந்த வகையில், அவர்களது உணவில் பெரும் பங்கு வகித்தது கேழ்வரகு. களி, அடை மற்றும் கூழ் என, இன்றும் நமது கிராமங்களில் மணம் வீசிக்கொண்டு தான் இருக்கிறது கேழ்வரகு.
சிறிய தானியமானாலும், இதில் எண்ணற்ற நற்குணங்கள் அடங்கியுள்ளன. இந்தியாவில், அதிகமாக உட்கொள்ளப்படும் தானியங்களில் கோதுமை, அரிசி தான். கோதுமை மற்றும் அரிசியுடன் ஒப்பிடுகையில், கேழ்வரகில் குறைந்த கொழுப்பு மற்றும் அதிக அளவில், அத்தியாவசிய தாதுக்கள் காணப்படுகின்றன. கேழ்வரகில், அரிசி மற்றும் கோதுமையுடன் ஒப்பிடுகையில், குறைந்த அளவு கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு உள்ளது.
இதுவே, சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த உணவு. ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை, குறைக்க வல்லது எனவும், அறிவியலாளர்கள் கூறுகின்றனர். அதோடு இதில் உள்ள, டிரைப்டோபன் என்ற அமினோ அமிலம், உடலிலுள்ள கொழுப்பை கட்டுப்படுத்துவதில் சிறந்து செயலாற்றுகிறது. மேலும் இதில் காணப்படும், அதிகப்படியான நார்ச்சத்து, உணவை எளிதில் செரிக்க உதவுகிறது. இது வளரும் குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் உகந்த உணவாகும்.
சைவ உணவுகளில், கேழ்வரகில் தான் அதிகபடியான கால்சியம் உள்ளது. கால்சியம் நமது பல் மற்றும் எலும்புகளுக்கு, மிகவும் அவசியமான தாது. இதனால் எலும்புகளில் ஏற்படும் பாதிப்புகளை, விரைவில் குணமாக்க வல்லது இந்த கேழ்வரகு. கேழ்வரகில் லெசித்தின் மற்றும் மெதியோனைன் போன்ற அமினோ அமிலங்கள், உள்ளன. இவை நுரையீரலில் ஏற்படும், அதிகப்படியான கொழுப்பை குறைக்கின்றன. மேலும் இதிலுள்ள தெரோனைன் கொழுப்பு ஏற்படுவதை தவிற்கிறது.
கேழ்வரகில் எந்த சைவ உணவிலும் இல்லாத அளவில் இரும்புச்சத்து காணப்படுகிறது. இரத்த சோகை போக்க இது மிகவும் ஏற்றது. மேலும் இதிலுள்ள வைட்டமின் சி, இரும்புச்சத்தை உடல் உறுஞ்சுவதற்கு உதவுகிறது. கேழ்வரகின் மிகவும் முக்கியமான ஒரு சிறப்பு பண்பு, பொதுவாகவே உடலை ரிலாக்ஸ் செய்கிறது. இதனால், டென்ஷன், மைக்ரேன் என்ற ஒற்றை தலைவலி, இன்சோம்னியா போன்றவற்றை தவிர்க்க இது உதவுகிறது. கேழ்வரகில் மனித உடலிற்கு நன்மை செய்யும், பல அமினோ அமிலங்கள் உள்ளன.
இதிலுள்ள ஐசோலியூசின் உடலில் சிதைவடைந்த திசுக்களை குணப்படுத்தவும், ரத்தம் உருவாகவும், எலும்புகள் உருவாகவும், சரும ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. மெதியோனைன் வேறு எந்த தானியத்திலும் காணப்படாத ஒரு இன்றியமையாத அமினோ அமிலமாகும். இது கொழுப்பை கட்டுப்படுத்துவதிலும், சல்பர் சத்தை கொடுக்கவும் வல்லது. இவ்வாறாக பல நோய்களை குணப்படுத்தும், ஈடுஇணையற்ற கேழ்வரகு நமக்கு எளிதில் கிடைக்கிறது.

நாட்டில் 2030ல் தண்ணீர், உணவு பற்றாக்குறை ஏற்படும்: சர்வதேச ஆய்வில் தகவல்

இந்தியாவில் 2030ம் ஆண்டில் தண்ணீர் மற்றும் உணவு பற்றாக்குறை ஏற்படும்’ என, சர்வதேச தண்ணீர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சர்வதேச தண்ணீர் மேலாண்மை நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், “உலக தட்பவெப்ப மாற்றம் மற்றும் உள்நாட்டு மக்கள் தொகை பெருக்கம் ஆகிய காரணங்களால் இந்தியா தண்ணீர் பற்றாக்குறையை சந்திக்கும். இது, அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய மற்றும் எதிர்பாராத அளவிற்கு உணவு பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலையை ஏற்படுத்தும்.இந்தியாவிற்கு 700 பில்லியன் கியூபிக் மீட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதில், 85 சதவீதம் உணவு உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இந்த தேவை 2030ம் ஆண்டில், மக்கள் தொகை அதிகரிப்பால், இரண்டு மடங்காக அதிகரிக்கும். 2030ம் ஆண்டில், இந்தியாவின் மக்கள் தொகை, 120 கோடியில் இருந்து 160 கோடி அல்லது 170 கோடியாக அதிகரிக்கும். அதேபோல், தண்ணீர் தேவையும், இருமடங்கு, அதாவது 1,498 பில்லியன் கியூபிக் மீட்டராக அதிகரிக்கும். ஆனால், தண்ணீர் அளிப்பு 744 மில்லியன் கியூபிக் லிட்டர்களாக இருக்கும். தேவையில் பாதியளவு பற்றாக்குறையாக இருக்கும்’ என்பது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து இந்நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரல் கோலின் சார்டிரஸ் கூறுகையில், “தற்போதைய நிலை நீடித்தால், மத்திய கிழக்கு நாடுகளை போல, தண்ணீர் நெருக்கடி நாடாக இந்தியா உருவெடுக்கும். பெரும்பாலான தண்ணீர் உணவு உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. தண்ணீர் பற்றாக்குறை, உணவு பற்றாக்குறையிலும் எதிரொலிக்கும். தண்ணீர் இறக்குமதிக்கு பதில், இந்தியா உணவு பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டியது ஏற்படும். உலகளவில் மக்கள் தொகை 250 கோடி அதிகரிக்கும் போது, உணவு இறக்குமதியும் எளிதானது அல்ல. தற்போது இருப்பதை விட, அதிக வெப்பம், குறைந்த தண்ணீர் என்ற நிலைமை உலகளவில் நிலவும்’ என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் நிலத்தடி நீர் ஏற்கனவே கீழே போய்விட்டது. இந்தியா அதிகளவில் விவசாயத்தை நம்பி உள்ளது. தண்ணீர் பற்றாக்குறை, பெரிய அளவில், விவசாய உற்பத்தியை பாதிக்கும். நாட்டின், வடக்கில் ஏற்கனவே விவசாயிகள் அதிகளவில் நிலத்தடி நீரை பயன்படுத்திவிட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.”இந்தியாவின் தண்ணீர் தேவை தற்போது 634 மில்லியன் கியூபிக் லிட்டராக உள்ளது. இது, 1,123 மில்லியன் கியூபிக் லிட்டராக அதிகரிக்கும்’ என்று மத்திய நீர்வள கமிஷன் கணித்துள்ளது.
“இந்தியாவின் தண்ணீர் தேவை 2025ல், 1,093 மில்லியன் கியூபிக் லிட்டராக இருக்கும்’ என்று நிர்வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இப்படி, மதிப்பீடுகள் வித்தியாசப்பட்டாலும், தண்ணீர் பற்றாக்குறை நாட்டை அச்சுறுத்தி வருகிறது என்பது தெளிவாகிறது.எனவே, நாட்டில் கிடைக்கும் தண்ணீர் வரத்து குறித்து ஆய்வு நடத்த, முன்னாள் திட்ட கமிஷன் உறுப்பினர் ஏ. வைத்தியநாதன் தலைமையில் ஒரு குழுவை மத்திய திட்ட கமிஷன் அமைக்க உள்ளது. இவர்கள் நாட்டின் தண்ணீர் ஆதாரத்திற்கான மூலம் மற்றும் குளம், குட்டை, ஏரி, அணை, ஆறு ஆகியவை குறித்து, மதிப்பீடு செய்து, அறிக்கை தயாரிப்பார்கள். “நாட்டின் விவசாயத்திற்கு 80 சதவீத தண்ணீர் தேவைப்படுகிறது. எனவே, கிராமங்களில் தண்ணீர் வீணாக்கப்படுவதை தடுக்கும் வகையில், ரேஷனில் மின்சாரம் மற்றும் தண்ணீர் வழங்குவது, இதற்கு கட்டணம் விதிப்பது என்று திட்ட குழு ஆலோசனை வழங்கி உள்ளது. திட்ட கமிஷன் உறுப்பினர் மிகிர் ஷா தண்ணீர் மேலாண்மை தொடர்பான அறிக்கை சமர்பித்தார். அதில், ஆந்திரபிரதேசம் உள்பட மிகவும் வறட்சியால் பாதிக்கப்பட்ட ஏழு மாநிலங்களில், தண்ணீர் மேலாண்மை ஆலோசனை எந்தளவிற்கு வெற்றி பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளார்.ஆந்திராவில், விவசாயிகள் குழு அமைத்து, கிடைக்கும் தண்ணீரை இவர்கள் அனைவரும் பகிர்ந்து கொள்ள ஆலோசனை வழங்கப்பட்டது. இத்திட்டம், அம்மாநிலத்தில் வெற்றி பெற்றுள்ளது. மாவட்ட அளவில் தண்ணீர் பயன்படுத்துவது குறைந்து, பற்றாக்குறையும் குறைந்துள்ளது. மாநிலத்தின் மற்ற பகுதிகளில், இதேபோன்ற திட்டத்தை கொண்டு வர, மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு திட்ட கமிஷன் ஆலோசனை வழங்கலாம்.
“இந்தியாவின் தட்பவெப்பம் ஒன்று முதல் இரண்டு டிகிரி அதிகரிக்கும்’ என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அதிகளவில் தண்ணீர் சேமிப்பு செய்ய வேண்டும். மழை நீர் சேமிப்பிற்கு, இந்தியா, அதிகளவில் முதலீடு செய்ய வேண்டும். குளம், ஏரி, அணை போன்வற்றை அதிகளவில் ஏற்படுத்தி நீர்வள ஆதாரத்தை பெருக்க வேண்டும். விவசாய நிலங்களை ஒட்டி குளம், ஏரி ஏற்படுத்துவது பயனளிப்பதாக இருக்கும் என்ற கருத்துக்கள் எழுந்துள்ளன.

மரம் வளர்ப்போம் வாருங்கள்

மரம் ஒரு வரம்:
பூமியில் மூன்றில் ஒரு பங்கு காடுகள் இருக்க வேண்டும் என்பது இயற்கையின் விதி. இவ்வாறு இருந்தால் நமக்கு கிடைக்கும் பயன் அதிகம். காடுகள் மழையைத் தருவதுடன நிலச்சரிவைக் கட்டுப்படுத்துகிறது. மண் அரிப்பை கட்டுப்படுத்துகிறது. கரியமில வாயுவை நிர்ணயம் செய்யும் தன்மை மரங்களுக்கு உள்ளது. புவியின் தட்பவெட்பத் தன்மையை நிர்ணயிக்கும் காரணிகளாக காடுகள் உள்ளன.
காடுகள் அழிக்கப்படுவதால் கடல் மட்டம் உயர்வு, புவி வெப்பம் ஏற்பட்டு சில பகுதிகளில் அதிக மழை, சில பகுதிகளில் வறட்சி உருவாகிறது. கடலோரப் பகுதிகளில் மரங்கள் வளர்க்கப்படும்போது அலைகளை கட்டுப்படுத்தும் சக்தி மரங்களுக்கு உண்டாகிறது. புவியைக் காத்தால் தான் உயிரினங்களைக் காக்க முடியும்.
இந்தியாவில் 33 சதவிகித அளவுக்கு இருந்த காடுகள் குறைந்து தற்போது 22 சதவிகித காடுகள் மட்டுமே உள்ளன. இந்த 11 சதவிகிதத்தை அடைய வேண்டும் என்றால் 54 கோடி மரங்களை நடவேண்டும். வனத்துறை மட்டுமே இந்தப் பணியை செய்ய முடியாது. எனவே நாமும் ஆளுக்கொரு மரம் நடவேண்டும்.
காடு வளர்ப்பு என்பதை ஒரு மக்கள் இயக்கமாகச் செயல்படுத்த வேண்டும். இந்தியாவில்  எந்தெந்தப் பகுதிகளில் என்னென்ன மரங்கள் வளரும் என்பதையும், மண்ணின் வகை, அமிலத் தன்மை, வளம் ஆகியவை, எந்த மரங்களை நட்டால் வேகமாக வளரும் என்பது குறித்த ஆய்வையும் நாம் மேற்கொள்ள வேண்டும்.
பருவநிலை மாற்றத்தை தடுக்க 700 கோடி மரங்கள்: ஐ.நா. திட்டம் :
புவி வெப்பமடைவதால் ஏற்பட்டு வரும் பருவநிலை மாற்றத்தை தடுக்கும் நடவடிக்கையின் முதற்கட்டமாக உலகம் முழுவதும் 300 கோடி மரங்களை ஐ.நா நடவு செய்துள்ளது. இந்நடவடிக்கையில் மொத்தம் 700 கோடி மரங்களை நடவு செய்ய முடிவு செய்துள்ளதாக ஐ.நா. செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
கரியமில வாயுவை உறிஞ்சும் தன்மை மரங்களுக்கும் காடுகளுக்கும் மட்டுமே உண்டு. மாறாக காடுகள் அழிக்கப்படுவதனால் மனிதனால் உருவாக்கப்படும் கரியமில வாயு மொத்த கரியமில வாயு உற்பத்தியில் 20% பங்களிப்பு செய்வதாக புள்ளிவிவரம் கூறுகிறது.
ஐக்கிய நாடுகள் (ஐ.நா) சுற்றுச்சூழல் திட்டம், உலக வேளாண் காடுகள் மையம் ஆகிய இரண்டு அமைப்புகள் சார்பில் கடந்த 2006இல் மரங்கள் நடவு செய்யும் நடவடிக்கை துவக்கப்பட்டது.
இந்த மரங்கள் நடும் திட்டத்தில் தற்போது எத்தியோப்பியா 72.5 கோடி மரங்களை நடவு செய்து முதலிடத்திலும், துருக்கி 70 கோடி மரங்களை நடவு செய்து 2வது இடத்திலும் முன்னிலை வகிக்கின்றன.
இப்பட்டியலில் மெக்சிகோ (47,24,04,266 மரங்கள்) 3வது இடத்திலும், கென்யா (13,98,93,668 மரங்கள்) 4வது இடத்திலும், 13,74,76,771 மரங்களை நட்டு கியூபா 5வது இடத்திலும் உள்ளன.
உலக நாடுகளின் சுற்றுச்சூழல் மையங்கள் மரம் நடும் நடவடிக்கைகளில் தங்களது கவனத்தை திருப்ப வேண்டும் என்று ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

2011 சர்வ தேச வன ஆண்டாக கொண்டாடப்படுகிறது.ஐரோப்பா கண்டத்தைத் தவிர மற்ற கண்டங்கள் அனைத்தும் தனது வன செல்வத்தை இழந்து வருகிறது. குறிப்பாக தென் அமெரிக்கா ஆப்பிரிக்கா கண்டங்களில் இதன் தாக்கம் அதிகம்.
உலக வனங்கள்
இந்தியாவைப் பொறுத்தவரையில் கனிம வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதில் பெருமளவு வன பகுதிகள் சர்ச்சைக்குரிய பகுதிளாக மாறி வனபாதுகாவலர்களான வனவாசிகளுக்கும், அரசுகளுக்கும் நடக்கும் நிகழ்வுகளை நாம் அனுதினமும் படிக்கிறோம். எல்லா உயிர்களுக்கும் வாழ்வாதாரமான வனத்தை பற்றி அக்கரை கொள்ளுகிறோமா? என்றால் சற்று கவலையளிப்பதாகத்தான் உள்ளது.
தமிழகத்தின் குறைந்த, அதிக வனமுள்ள மாவட்டங்கள்
தமிழகத்தைப் பொறுத்த வரையில் டெல்டா மாவட்டங்களில் வன அளவு மிகக் குறைவாக இருப்பதுடன் சுனாமி, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றத்தின் போது பெருமளவு நஷ்டத்தை மாநிலம் அடைய வேண்டியுள்ளது.
இந்த ஆண்டில்  நமது குழந்தைகளின் வாழ்க்கையில் உண்மையான அக்கரை கொண்டிருப்பவர்களாக இருந்தால் அவர்களின் நல்வாழ்விற்காக பொன்னையும் பொருளையும் சேர்ப்பதை சற்று குறைத்து வாழ்வாதாரமான சுத்தமான காற்று, மழை இவற்றுக்கு வனங்கள் தேவை என்பதை உணர்ந்து அதனை பாதுகாக்க நம்மாலான உதவிகளை செய்தாலே போதும் வனங்கள் விரிவடைந்துவிடும். நாம் ஒவ்வொருவரும் இதில் சிறப்பாக பங்களிக்க வேண்டும்.

மரம் வளர்ப்பின் சிந்தனைகள்:

மரம் வளர்ப்பு குறித்த சிந்தனைகள் பல… ஒவ்வொரு வருக்கும் அவரவர்
செயலுக்கு ஏற்ப சிந்தனைகள் மாறுபடும் வலுப்படும். ஆனால் அனைவரின் ஒருமித்த சிந்தனையின் நோக்கம் மரம் வளர்ர்ப்பு. மரம் வளர்ப்பின் அவசியத்தினைஅரசு அமைப்புகளும்,அரசு சார அமைப்புகளும் சொல்லிக்கொண்டுதான்இருக்கின்றன. ஆனால்…. இந்த வார்த்தைகள் மதிக்கப் பட்டு செயல் வடிவம்பெறுகிறதா? இல்லை… ஏன்? ஆம் அரசு அமைப்புகள் மற்றும் அரசு சாரஅமைப்புகள் பெரும்பாலும் ஏட்டளவில் தங்கள் பெயர் இடம் பெறவே இது போன்றசெயல்களை முன்னெடுத்துச் செல்கின்றன, ஏன் இந்த நிலை… ?
அமைச்சர் நட்டிய மரக்கன்று 1000 வருடங்கள் ஆனாலும் ஆழியாது மரக்கன்று அல்ல…. அமைச்சர் நட்டிய மரக்கன்றுஎனும் செய்தி மட்டும்… அரசின் செய்தி ஏட்டில் இருந்து மறையாது. இப்படிதான் இன்று அரசின் செயல் திட்டங்கள்… நாம் இங்கே அரசினை சாடுவது நம் நோக்கம அல்ல… நாம் அரசிடம் எப்படி எல்லாம் ஏமாறுகிறோம்… மர வளப்பிற்கு அரசு கவனம் செலுத்தினால் பசுமை தமிழகம் காணமுடியாதா?
வேண்டாம்… நாம் இனி எந்த அரசிடமும் ஏமற வேண்டாம்… நாம் தான் அரசு என்பதனை உணர்த்துவோம் அரசாளும் நபர்களுக்கு… நாமும் மானிடன் தான் என்பதை அவர்கள் உணரும் காலம் வரும்.. விவசாயம் ஒரு தொழில்… எங்கள் தொழிலுக்கு என் ஒரு குறைந்த பட்ச இலாப விகிதத்தினை நாங்கள் நிர்ணியித்துக்கொள்கிறோம். எனும் நிலை கொண்டு வருவோம்.இருப்பவர்கள் இல்லை என்று சொல்லாமல் இருக்கும் வரை இல்லாதவர்கள் இங்கு யாரும் இல்லை… எனும் நிலை கோண்டு வருவோம்… வாருங்கள் நம் செயலினை முழு வடிவம் கொண்டு வருவோம்.
நீங்கள் மரம் வளர்க்க விரும்புகிறீர்களா.. சில நல் உணர்வு ஒப்பந்த அடிப்படையில் நாம் பிற இயற்கை ஆர்வலர்களிடம் இருந்து உங்களுக்கு தேவையான அளவு நல் மரக்கன்றுகளை இலவசமாக அளிக்க தயாராக இருக்கிறோம்… உங்கள் மரம் வளர்ப்பு சிந்தனைகளை சொல்லுங்கள். எப்படி நாம் இந்த சுயநல விரும்பிகளிடம் இருந்து நாம் வளர்க்கும் மரங்களை பாதுகாக்க முடியும், உங்கள் சிந்தனைகள் ஆலோசனைகள் மற்றவர்களுக்கும் உதவட்டும். வாருங்கள் இங்கே நம் எண்ணக்கரங்களுக்கு வலு சேர்ப்போம்… இது  நாம் வாழும் இந்த உலக நலனுக்காக எனும் சிந்தையில் ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்…

ஒரு நிமிடம் கண்ணை மூடி நம் ஊரின் மழை கால இயற்கை நினைத்து பாருங்கள்
ஊரின் ஆறு ஓடை நீர் நிரம்பி அழகான அந்த காலம் இன்று இல்லை என்ன காரணம் ?
சரியான நேர மழை இல்லாதது ஒரு காரணம் இதற்க்கு முக்கிய காரணம் மரம் இல்லாமல் நம் ஊர் போட்டால் காடாக மாறி வருவது ஒரு காரணம்!
நாம் படித்து இன்று அமெரிக்கா லண்டன் துபாய் சிங்கப்பூர் என்று நம் வாழ்க்கை நிலை மாறி விட்டது, ஏன் நம் நம் ஊரை பற்றி நினைக்க வேண்டும் என்று பலரும் நினைப்பதால் தான் நம் ஊருக்கு நம்மால் முடிந்த உதவி செய்ய முடியாமல் இருக்கிறோம்.
அதிகம் வேண்டம் நம் ஊரில் நம் படித்த பள்ளிகள்உள்ளன அதை சுற்றி மற்றும் பள்ளிகூட உள்பகுதிகளில் மரம் நட்டு நம்மால் முடிந்தசெய்யலாம். அரசியல்வாதி போல் ஒரு நாள் மரம் நட்டு மறு நாள் ஆட்டுக்கு இரையாகமல் அந்த மரம் ஒரு நல்ல பருவம் வரும் வரை அதை பாதுகாக்க , ஒரு வேலை நீர் ஊற்றினால் நிச்சயமாக ஒரு வருடத்தில் மரம் பெரியதாக வளரும்.
நிச்சயமக இது ஒரு ஆள் செய்ய இயலாது. நம் பள்ளி நண்பர்கள் ஊர் நண்பர்கள் சேர்ந்து செய்ய இயலும்.
நல்ல வசதி உள்ள  உள்ளூர் நண்பர்கள் சேர்ந்து ஆண்டின் ஏதும் ஒரு நாள் பிளான் செய்தால் நிச்சயமாக செய்யலாம் . இது மட்டும் நிச்சயமாக வெற்றி அடைந்தால் மீண்டும் கண்ணை மூடி நாம்  நம் ஊரின் அழகை மீண்டும் நேரில் பார்க்கலாம்.
நாம் அன்னதானம் செய்வது போல் ஏன் இதை செய்ய இயலாது.
நம் ஊரை, நம் இயற்க்கை நாம் காப்பற்ற நம்மால் முடிந்த ஒரு சின்ன முயற்சியாக இது அமையும்.
உங்கள் ஊரின் படித்த நண்பர்கள் நீங்கள் இன்டர்நெட் மூலம் தொலை பேசி ,சிறு குழுக்கள் மூலம் வசூல் செய்து ஒரு நாள் குறிப்பிட்டு அந்த நாளில் மரம் நடலாம் . மிக முக்கியமான ஒரு விஷயம் மரம் நடுவது மட்டும்  குறிக்கோள் அல்ல,
அந்த செடி மரம் ஆகும் வரை நாம் காப்பற்ற வேண்டும். மனம் இருந்தால் நிச்சயம் செய்யலாம்.
மரம் வளர்ப்போம்
வாருங்கள்…
மரம் செழித்து, மழை கொழித்து, பூமி மகிழ கை கோர்ப்போம் வாருங்கள்…!

“மரம் நடுதல்”

மரம் செடிகளை அதிக அளவில் வளர்க்க வேண்டும், ஒரு இயற்கையான சூழ்நிலையை நமது இடத்தில் வைத்து இருக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வம், அதனால் நம்மால் முடிந்த அளவு  நம் வீட்டை சுற்றி உள்ள இடங்களில் மரங்கள் வைக்கவும் , அதே போல மற்றவர்களையும் மரம் வளர்க்க கூறி வலியுறுத்தியும் வருவோம்.
தற்போது மரம் நடுவது என்பது அரசியல்வாதிகள் பொதுநலவாதிகள் ஆன்மீகவாதிகள் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவரும் செய்யும் காரியம் என்றாகி விட்டது.
முதலில் மரம் நடுகிறார்கள் ஐம்பதாயிரம், ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுகிறார்கள்  பின்னர் அவர்களது வேலை மரம் வைப்பதோடு முடிந்தது பராமரிப்பது கிடையாது. இதில் தனியார், அரசு, ஆன்மிகம் என்று எவரும் பாகுபாடு இல்லை. இவ்வாறு ஆயிரக்கணக்கில் செடிகளை வைத்து அவற்றை கருக செய்வதற்கு இவர்கள் எதற்கு நடனும்.
இதில் ஒரு சிறு ஆறுதல் அப்படியும் தப்பி தவறி ஒரு சில செடிகள் தப்பி பிழைத்து விடுகின்றன.பொதுவாக அரசாங்கம் செடிகளை வைத்தாலும், அதை ஒரு சில இடங்களிலேயே சரியாக பராமரிக்கிறார்கள், பெரும்பான்மையான இடங்களில் அங்கே செடி வைத்ததற்கான அடையாளமே இருக்காது (அந்த கூண்டு மட்டும் காணலாம்).
சரி நமது அரசாங்கங்கள் தான்  அப்படி  செய்ய பழகி விட்டது, இதில் கவலை பட என்ன இருக்கிறது! என்று நம்மை சமாதான படுத்திக்கொண்டாலும், மற்றவர்களும் இதை போல தான் நடந்து கொள்கிறார்கள் என்பதை தவிர்க்கவேண்டும்.
வருடாவருடம் பலர் மரம் நடுவதாக அறிவிப்பு செய்து விளம்பரப்படுத்தி பெரிய அளவில் செய்வார்கள். அதே போல் செடி நட்டாலும் பாதுகாப்பு இன்றி செடி பட்டுபோய் விடுகிறது. அதற்க்கு பாதுகாப்பாக வைத்த குச்சிகள் தளைத்து!! பின் தண்ணீர் விடாததால் பின் அதுவும் வறண்டு போய் விடுகிறது,. இதை போல மரம் நடுகிறேன் செடி வளர்க்கிறேன் என்று விளம்பரத்திற்காக வெட்டி வேலை செய்வதை தவிர்த்து,வைத்த செடியை பேணி பாதுகாத்து வளர்க்க வேண்டுகிறோம்  .
மரம் நடுவது என்பது மிகச்சிறந்த செயல் அதில் எந்த சந்தேகமுமில்லை, தற்போது பூமியில் வெப்பத்தின் அளவு அதிகரித்து வரும் வேளையில் இயற்கையின் அருமையை இன்னும் உணராமல் இருப்பது தான் தவறு.
ஆனால் இதை போல விளம்பரத்திற்காக லட்சம் செடிகளை நடுகிறேன் என்று உருப்படியாக 100 செடி கூட நல்ல முறையில் வளர்க்காமல் இருப்பதற்கு எதற்கு அத்தனை செடிகள் நடவேண்டும்? செடியை நட்டால் மட்டும் போதுமா! அதை பராமரிக்க வேண்டாமா! எத்தனை செடிகளை நடுகிறோம் என்பது முக்கியமல்ல அதில் எத்தனை செடியை நன்றாக வளர்த்தோம் என்பதே கேள்வி! . ஆசை இருந்தால் மட்டும் போதுமா! அதை அடைவதற்க்குண்டான சரியான முயற்சியில் இறங்க வேண்டாமா! இவர்களை போன்ற அமைப்புகள் 100 செடிகளை நட்டாலும் அதை சரியான முறையில் பாதுகாத்து வளர்த்தாலே மிகப்பெரிய சமுதாய தொண்டு.
இது வரை இதை போல லட்ச கணக்கில் நட்டதற்கு இந்நேரம் தமிழகம் அமேசான் காடு மாதிரி ஆகி இருக்க வேண்டும்!! இதில் அதிக அளவில் மரம் நட்டு கின்னஸ் சாதனைக்கு கூட முயற்சித்தார்கள் என்று நினைக்கிறேன், இதை போல விளம்பரங்களே இவர்களுக்கு முக்கிய நோக்கமாக உள்ளது மரம் வளர்ப்பதில் இல்லை. இவர்கள் செய்யும் இந்த செயலில் ஒரு சில செடிகள் எப்படியாவது தம் கட்டி உயிர் பிழைத்து விடுவது மனதிற்கு ஆறுதலும் சந்தோஷமும் அளிக்கும் செய்தி.
இயற்கையின் மகத்துவத்தை உணராதவரை நமது பகுதி முன்னேற வாய்ப்பில்லை. இதன் அருமை உணராமல் எப்படி தான் வறட்டு மனம் கொண்டவர்களாக சி(ப)லர் இருக்கிறார்களோ! மரம் வளர்ப்போம்மழைபெறுவோம்!!

தொந்தி பிரச்சனைக்கு ஓமத்தில் இருக்கு தீர்வு


அஜீரணத்தையும் வயிற்றுக் கோளாறுகளையும் போக்கும் அரிய இயற்கை மருந்தாக ஓமம் பயன்படுகிறது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறுக்கு ஓமம் சிறந்த மருந்தாகும். 100 கிராம் ஓமத்தை ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, அது பாதியாக வந்தவுடன் எடுத்து அருந்தினால் இப்பிரச்னை தீரும். உடல் பலம் பெறும்.
ஓமம், மிளகு வகைக்கு, 35 கிராம் எடுத்து நன்கு இடித்து பொடியாக்கி அதனுடன், 35 கிராம் பனைவெல்லம் சேர்த்து அரைத்து காலை, மாலை என இருவேளையும், 5 கிராம் அளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் பொருமல், கழிச்சல், வயிற்றுக் கடுப்பு நீங்கும்.
நல்ல தூக்கமும், நல்ல பசியும்தான் ஆரோக்கிய மனிதனுக்கு அடையாளம். இவை பறந்துபோனால் நோய்களின் கூடாரமாக உடல் மாறி, அதனால் மனமும் பாதிக்கப்படும். பசியைத் தூண்டி, உண்ட உணவு எளிதில் ஜீரணமாகவும், வயிறு தொடர்பான பிரச்னைகள் தீரவும், ஓமத்தை கஷாயமாக்கி குடிக்கலாம். குடலிரைச்சல், இரைப்பு, பல்நோய் இவற்றிற்கும் ஓமம் சிறந்த மருந்தாகும். ஓமத்திரவம் என்ற மாபெரும் மருந்து, ஆதிகாலம் தொட்டு இருந்து வருகிறது. குழந்தைகளின் சர்வரோக நிவாரணியே ஓமத் திரவம்தான். ஓமத்திரவம் வீட்டில் இருந்தால், சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை வயிறு உபாதையின்றி வாழலாம்.
ஓமத்தில் சூப் வைத்துக் குடித்தால் உடல் சோர்வு, நீங்கி சுறுசுறுப்பாகி விடுவோம். ஓம ரசம் செய்து, சூடான சாதத்தில் ஊற்றி, ஒரு சொட்டு நெய், ஊற்றி, உப்பில் ஊற வைத்த நார்த்தங்காயைத் தொட்டுக் கொண்டு சாப்பிட்டால் காய்ச்சல் ஓடி விடும். தினமும் ஓமத் தண்ணீர் குடித்தால், ஆஸ்துமா நோய் வரவே வராது. அரை டீஸ்பூன் ஓமத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்துக் குடித்தால் ஆஸ்துமா அண்டாது. வயிற்றில் செரிமானம் சீராகும்.
வயிற்று வலி ஏற்பட்டால், ஐந்து கிராம் ஓமத்துடன் சிறிது உப்பு, பெருங்காயம் சேர்த்துப் பொடித்து, தேனில் குழைத்துச் சாப்பிட்டால் சிறிது நேரத்தில் வயிறு லேசாகி விடும். நாட்டு மருந்து கடைகளில் ஓம எண்ணெய் கிடைக்கும். மூட்டு வலிக்கு இதைத் தடவினால் நாளடைவில் மூட்டு வலி குணமாகும். வயிற்றுக் கோளாறுகளுக்கு ஓமம் நல்லது.
ஓமப் பொடி சிறிது, உப்பு சிறிது ஆகியவற்றை மோரில் கலந்து குடித்தால், நெஞ்சில் பிடித்துள்ள சளி வெளியேறும். சுறுசுறுப்பின்றி சோம்பலாய் உட்கார்ந்திருப்பவர்கள் சிறிது ஓமத் தண்ணீர் குடித்தால், சோர்வு பயந்து ஓடி விடும்!. தினமும் இரவில் தூங்க போகும் போது அன்னாசிப்பழம் நான்கு துண்டுகள் மற்றும் ஓமப்பொடி இரண்டு ஸ்பூன், இவை இரண்டையும் தண்ணீரில் விட்டு கொதிக்க விட வேண்டும். நன்கு வெந்தவுடன் அப்படியே மூடிவைத்து விட வேண்டும். காலை 5:00 மணிக்கு அதனை நன்காக கரைத்து குடிக்க வேண்டும். இவ்வாறு, 15 நாட்கள் செய்து வந்தால் தொப்பை காணாமல் போய்விடும். ஒரு சிறந்த மருத்துவரின் ஆலோசனைகளுடன், இந்த வழிமுறைகளை பின்பற்றுவது நல்லது.

சர்க்கரையை சுண்டக்காய் ஆக்கும் வெண்டைக்காய்

கொழ கொழ என்றிருந்தாலும், வெண்டைக்காயை அவ்வளவு சாதாரணமாக எடை போட்டு விடக் கூடாது. சர்க்கரை நோயையே, சுண்டக்காய் ஆக்கி விடுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். சர்க்கரை நோயை, நோய்களுக்கு எல்லாம் தாய் என்று சொல்வார்கள். இதன் அர்த்தம், சர்க்கரை நோய் வந்து விட்டால் மற்ற எல்லா நோய்களும் வந்து விடும் என்பதுதான்.
சர்க்கரை நோயை பொருத்தவரை, அதை முற்றிலும் குணப்படுத்த முடியாது. ஆனால், உணவு பழக்கத்தின் மூலம் கட்டுப்பாட்டில் வைக்க முடியும். காய்கறிகளில், சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதில், வெண்டைக்காய் சரியான காயாக விளங்குகிறது.
இரண்டு வெண்டைக்காய் பிஞ்சுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதன் இரு முனைகளையும் நீக்கிவிட வேண்டும். முனைகளை நறுக்கிய பின், அதிலிருந்து வெள்ளை நிறத்தில் ஒரு திரவம் வரும். அதனை கழுவி விடாமல் ஒரு டம்ளர் நீரில், அந்த துண்டுகளை போட்டு, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். பின் காலையில் எழுந்து அந்த துண்டுகளை நீக்கி விட்டு, நீரை குடிக்க வேண்டும். இதுபோல் தினமும் காலையில் குடித்து வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். வெண்டைக்காயை வேக வைத்து சாப்பிடுவதை விட, இவ்வாறு சாப்பிடுவது தான் சிறந்த பலனைத் தரும். சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்தும்.
எளிதில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ள உணவுகள், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இச்சத்து உடலில் உள்ள கார்போஹைட்ரேட்டின் செரிமான நேரத்தை குறைத்து, அவை ரத்தத்தில் கலக்காமல் தடுக்கும். இவ்வகை சத்து வெண்டைக்காயில் அதிகம் உள்ளது. எனவே, வெண்டைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.
உடலில் உள்ள கெட்டக் கொழுப்பை கரைக்கும், பெக்டின் என்னும் நார்ப்பொருள் வெண்டையில் உள்ளது; இதயத்துடிப்பைச் சீராக்கும் மக்னீசியமும் உள்ளது. 100 கிராம் வெண்டைக்காயில், 66 கலோரி உள்ளது. இத்தகைய காரணங்களால் வெண்டைக்காய் முக்கியமான காய்கறியாகத் திகழ்கிறது. வெண்டையின் காய், இலை, விதை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிரம்பியவை. இதில் உள்ள நார்ப்பொருள்களால் கொலஸ்டிரால் கரைந்து, மலச்சிக்கல் நீங்கும். இதனால் குடல் சுத்தமாவதோடு, வாய்நாற்றமும் அகலும்.
வெண்டைக்காய் அழகுக்கும், ஆண்மை விருத்திக்கும் ஏற்றது. இது தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வத்தைத் தூண்ட உதவும். இச்செடியின் வேரை காய வைத்து பொடியாக்கி, பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டால் தம்பதியருக்கு தாம்பத்திய உறவில் நாட்டம் ஏற்படும். ஆண்களின் ஆண்மையும் பெருகும். சிறுநீர் நன்கு பிரியவும், உடலுக்குக் குளிர்ச்சியைத் தரவும், தோல் வறட்சியை நீக்கவும், உடம்பை பளபளப்பாக மாற்றவும், அரிய மருந்தாக வெண்டைக்காய் திகழ்கிறது.

கற்றாழை

ன்றைய ஒவ்வொரு வீட்டின் பட்ஜெட்டில், பாதித் தொகை மருத்துவ செலவுக்கே தீர்ந்துவிடுகிறது. எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க, நம் உடலினை உறுதி செய்துகொள்வதற்கான எளிய மருத்துவக் குறிப்புகளைக் கையில் எடுப்பதே சிறந்த வழி. அந்த வகையில் மருந்து மற்றும் மெடிக்ளைம் பாலிசியுடன் கூடுதலாக எடுக்க வேண்டியது மூலிகைகளையே. இதற்காக அமேசான் காடுகளுக்குப் பயணிக்கத் தேவை இல்லை. சில நூறுகளை மட்டும் செலவழித்தால் போதும். இதுகூட நம் உடல்நலத்துக்கான முதலீடுதான். வீட்டைச் சுற்றிலும் பால்கனியிலும் வளர்க்க சாத்தியமான எளிதல்
கிடைக்கக்கூடிய மூலிகைகள் பற்றிய மினி தொடர் இது.
பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுவது கர்ப்பப்பை தொடர்பான பிரச்னைகளால்தான். சீரற்ற மாதவிலக்கு, அடிவயிற்றில் வலி, கர்ப்பப்பையில் கட்டி, தொற்று, கர்ப்பப்பைப் புற்றுநோய் என அவர்களின் வாழ்க்கைத்தரத்தையே குறைக்கும் அளவுக்குக் கர்ப்பப்பைப் பிரச்னைகளும் அதிகரித்துள்ளன. இவற்றைச் சரிசெய்ய, மூலிகைகளிலேயே மிக முக்கியமானதாக இருக்கிறது சோற்றுக் கற்றாழை என்ற குமரி. இது உணவாகிய மருந்து, மருந்தாகிய உணவு என்ற சிறப்புகளைக்கொண்டது.
பூப்பெய்தும்போது, ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாகவும் புரோஜெஸ்ட்ரான் குறைவாகவும் இருக்கும். மெனோபாஸ் சமயத்தில் ஈஸ்ட்ரோஜன் குறைவாகவும், புரோஜெஸ்ட்ரான் அதிகமாகவும் சுரக்கும். இது இயற்கையின் நியதி. இந்த சமநிலை மாறாமல் இருந்தால், பிரச்னைகள் எதுவும் இல்லை. ஒருவேளை சமநிலை மாறிவிட்டால், சீரற்ற மாதவிலக்கு, கருவுறுதலில் பிரச்னை, கருக்கலைதல், கட்டி உருவாகுதல், மார்பகம் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் போன்ற பிரச்னைகள் தலை தூக்கும். இதற்காக, ஹார்மோன் மாத்திரைகளைக் கொடுத்து சமநிலை செய்ய முயற்சி செய்தாலும், பக்கவிளைவுகள் ஏற்படலாம். இதற்கு எல்லாம் விளைவுகள் இல்லாத எளிய தீர்வாக இருக்கிறது கற்றாழை. வாரம் மூன்று நாட்கள், கற்றாழையை சாப்பிட்டுவர, இயற்கையாகவே ஹார்மோன்களின் செயல்பாடுகள் சமநிலையாகும். மேலும், மூளை தொடர்பான ஹார்மோன்களும் சிறப்பாகச் செயல்படும் என்கிறது சமீபத்தியஆய்வுகள்.
கற்றாழையில் உள்ள சபோனின் (Saponin) என்ற கசப்புத்தன்மை, செல்கள் அதிகம் பெருகுவதைத் தடுக்கிறது. இதனால், புற்றுநோய் வராமல் பாதுகாக்கும். மக்னீசியம், செலினியம், பொட்டாசியம் போன்ற தாது உப்புக்கள் புற்றுநோய் செல் வளர்ச்சியைக்கூட கட்டுக்குள் வைத்திருக்கும்.
கர்ப்பப்பையில் கட்டியிருப்பவர்கள், 48 நாட்கள் கற்றாழை ஜூஸ் குடித்துவர, கட்டிகள் கரைந்திருப்பதை ஸ்கேன் ரிப்போர்ட்டில் பார்க்கலாம்.
சருமத்துக்கு…
கற்றாழை இலையின் சதைப்பகுதியில் வைட்டமின் சி மற்றும் இ அதிக அளவில் இருப்பதால், பாதித்த சருமத்தைப் 10 மடங்கு அதிவேகமாகச் சரிசெய்து சருமத்தைக் காக்கும். தொடர்ந்து பயன்படுத்தும்போது, சரும சுருக்கங்கள் தவிர்க்கப்படும். கற்றாழையின் இலைகளில் ஆலு-எமோடின் (Aloe-emodin) என்ற  ரசாயனம் இருப்பதால் பருக்கள், நாட்பட்ட தழும்புகள் குணமாகி, சருமம் சீராகும். குழந்தை பெற்ற தாய்மார்களின் ‘ஸ்ட்ரெச் மார்க்’ தழும்புகளையும் மறையவைக்கலாம். சருமத்தில் உள்ள கொலஜனை அதிகப்படுத்தி, மூப்படைதலைத்  தாமதப்படுத்த முடியும். ஆண்கள் முகச்சவரம் செய்த பிறகு ஏற்படும் எரிச்சலை போக்கவும், கற்றாழையின் சதைப்பகுதி உதவுகிறது.
சுத்தம் செய்யும் முறை
கற்றாழை மேல் தோல், முட்களை கத்தியால் நீக்கி, சதைப் பகுதியை ஏழு முறை ஓடும் நீரில் (குழாய் நீரில்) அலச வேண்டும். இதைச் சருமத்திலும் பூசிக்கொள்ளலாம். சாப்பிடுவதற்கும் பயன்படுத்தலாம்.
கற்றாழை ஜூஸ்
ஒரு கற்றாழை இலையின் சதைப்பகுதியை எடுத்து மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் விட்டு அரைக்கவும். இந்த ஜூஸில் ஒரு சாத்துக்குடிப் பழத்தின் சாற்றைக் கலந்து, தேன் அல்லது பனைவெல்லம் சேர்த்துக் குடிக்கலாம். கர்ப்பப்பைக்கு மிகவும் நல்லது.
சாத்துக்குடிப் பழச்சாற்றில் வைட்டமின் சி இருப்பதால், கற்றாழையில் உள்ள இரும்புச்சத்தை உறிஞ்சி, நம் உடலில் நேரடியாக சேர்க்கும். இந்த ஜூஸை 100 மி.லி குடித்துவர, கர்ப்பப்பை தொடர்பான அனைத்துப் பிரச்னைகளும் குணமாகும். என்றென்றும் இளமைத் தோற்றத்துடன் வலம்வர, ஆயுள் ஆரோக்கியம் காக்க இந்த கற்றாழை, சாத்துக்குடி ஜூஸ் கைகொடுக்கும்.            
ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய முக்கியமான தாவரம்,  கற்றாழை. ஏதேனும் வெட்டுக்காயமோ, தீக்காயமோ ஏற்பட்டால், உடனடி நிவாரணத்துக்குக் கற்றாழை உதவும்.
கற்றாழையை நன்றாகத் தோல் சீவி, ஆறேழு முறை குழாய் நீரில் நன்றாகக் கழுவிக்கொள்ளவும். அதனுடன் தேன் அல்லது பனைவெல்லம் சேர்த்து, மிக்ஸியில் அரைத்து ஜூஸாக சாப்பிட்டால், மாதவிடாய் வயிற்றுவலி குறையும்.
தோல் அரிப்புக்கு, கற்றாழை ஜெல்லை தடவிவர, அரிப்பு குணமாகும். வெயில் காலங்களில் அடிக்கடி கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்தி முகம், கை, கால்களைக் கழுவினால், சூரிய ஒளியில் இருந்து தோலைப் பாதுகாக்க உதவும். ஆன்டிஏஜிங்காகவும் கற்றாழை செயல்படும்.
கற்றாழை ஜெல்லோடு தேன் சேர்த்து வாரத்துக்கு ஒரு முறை முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்துக் கழுவினால், முகம் பொலிவடையும். கரும்புள்ளிகள், சுருக்கங்கள், முகப்பருவினால் ஏற்படும் அழற்சிகள் நீங்கும். கற்றாழையின் சதைப்பகுதியை (சோற்றை) தண்ணீரில் நன்றாகக் கழுவி, உதட்டில் தடவ உதடு வறண்டு போகாமல் இருக்கும்.
சிறுவர்கள் விளையாடும்போது அடிபட்டு, சிறிய புண்கள் ஏற்படும். அதன் மீது கற்றாழை ஜெல் தடவிவர, காயம் விரைவில் ஆறும்.
கற்றாழையை நன்றாகக் கழுவி, மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ளவும். இந்த பேஸ்ட்டை தொடர்ந்து தலைமுடியில் தேய்த்துக் குளித்துவந்தால், நன்றாக முடி வளரும். பொடுகு நீங்கும்.
காலை நடைப்பயிற்சி, உடற்பயிற்சி முடித்துவிட்டு, வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸ் குடிப்பது உடலுக்கு நல்லது. கற்றாழையில் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய  எட்டு அமினோ அமிலங்கள், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து போன்றவை நிறைந்து உள்ளன.
கற்றாழை ஜெல், கல் உப்பு, மோர் அல்லது தயிர் சேர்த்து, ஜூஸாகக் குடிப்பது, பெண்களுக்கு நல்லது. இனப்பெருக்க மண்டலங்கள் ஒழுங்காக வளர, கற்றாழை உதவும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
தினமும் கற்றாழை ஜூஸ் அருந்தக் கூடாது. வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.
சளிப் பிரச்சனை இருப்பவர்கள், சைனஸ் இருப்பவர்கள், குளிர்ச்சியான உடல் கொண்டவர்கள் அடிக்கடி கற்றாழை சாப்பிடக் கூடாது

Thursday, June 4, 2015

FLASH NEWS : TNPSC குருப் 4 கலந்தாய்வுக்கு அழைப்பு

TNPSC குருப்  4 கலந்தாய்வுக்கு அழைப்பு 

25.08.2013 அன்று நடைபெற்று குரூப் 4 தேர்வுகளுக்கு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது அதில் வெற்றி பெற்றவர்களுக்கு கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.


JUNIOR ASSISTANT (V PHASE)- CERTIFICATE VERFICATION 10.06.2015 (8.30 AM)
                                                            COUNSELLING- 11.06.2015(8.30 AM)

TYPIST (IVPHASE)-  CERTIFICATE VERFICATION 08.06.2015 (8.30 AM)
                                                            COUNSELLING- 09.06.2015(8.30 AM)

STENO-TYPIST GR.III (III PHASE)- CERTIFICATE VERFICATION 09.06.2015 (8.30 AM)
                                                            COUNSELLING- 10.06.2015(8.30 AM)