இணையதளம் மூலம் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பதற்கான செயல்முறைகளை இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம்.http://passportindia.gov.in எனும் பாஸ்போர்ட் இணையத்தளத்தின் மூலமாக பாஸ்போர்ட் விண்ணப்பத்தை பதிவு செய்துக்கொள்ளலாம். உங்கள் பாஸ்போர்ட்டை ஆன்லைனிலேயே நீங்கள் அப்ளை செய்யும் செயல்முறையையும், பதிவு முறை, பாஸ்போர்ட் நியமனம் (Manage Appointment for Passport), போலீஸ் சரிபார்ப்பு (Police Verification), அப்பாய்ன்மெண்ட் வாங்குவது எப்படி, அப்ளை செய்த பாஸ்போர்ட் என்ன ஸ்டேட்டஸில் இருக்கு என்பதையும் வழிமுறை அனைத்தையும் தெரிந்து கொள்ள போகிறோம். 1) பதிவு முறை: • இதற்கு மின்னஞ்சல் ஐடி (Email Id) கட்டாயமாக தேவைப்படும். • ஆன்லைன் விண்ணப்பம் தாக்கல்” என்ற தலைப்பில் கீழ் ஒரு புதிய பயனர்New Register என “பதிவு” மிகையிணைப்பை கிளிக் செய்க.கீழே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது போல். • பிறகு உங்கள் தனிப்பட்ட விவரங்களை நிரப்ப வேண்டும். • வெற்றிகரமாக உங்களை பதிவு செய்த பிறகு, ஒரு “நன்றி” செய்தி பாஸ்போர்ட் சேவா போர்ட்டல் மூலம் ஒரு இணைப்பை பதிவு உங்கள் மின்னஞ்சல் ஐடிக்கு (Email Id) அனுப்பப்படுகிறது. (உங்கள் கணக்கை செயல்படுத்துவதற்கு) • உங்கள் மின்னஞ்சல் ஐடி அனுப்பப்படும் என்று இணைப்பை கிளிக் செய்து உறுதி படுத்த வேண்டும். (இணைப்பு 7நாட்களுக்கு பிறகு காலாவதியாகிவிடும்.) • உங்கள் கணக்கு செயல்படுத்தப்பட்டது என்று உறுதி அளிக்கும். 2) பாஸ்போர்ட் Account Login: • நான் இப்போது “உள்நுழைவு” மிகையிணைப்பை கிளிக் செய்வதன் மூலம் ஏற்கனவே நீங்கள் கொடுத்த பயனர்பெயர் கொடுத்து உள்நுழையும். • உங்கள் கடவுச்சொல் கொடுங்கள். • உங்கள் திரையில் காட்டப்படும் தட்டச்சு எழுத்துகளை கொடுத்து கிளிக் செய்யவும். 3) பாஸ்போர்ட் விண்ணப்பம் (Passport Application): உடனே புதிய பக்கம் வரும். அதில் நாம் முன்பு சமர்பித்துள்ள படிவத்தின் நிலமையைக் காண (Application Status) ஒரு லிங்க்கும், மற்றொன்று புதிதாக பாஸ்போர்ட் அப்ளை செய்வதற்கும் இருக்கும். இரண்டாவதை “Apply for Fresh Passport / Reissue of Passport” கிளிக் செய்யவும் அதன்பின் இரண்டு ஆப்ஷன்கள் வரும். விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்து –Print செய்து – பூர்த்தி செய்து ஆன்லைனில் அப்லோடு செய்யலாம். அல்லது அப்படியே ஆன்லைனில் அப்ளை செய்யலாம். அடுத்து வரும் புதிய பகுதியில் முதன்முதலாக எடுப்பதா அல்லது புதிப்பதா என்றும் சாதாரணமான முறையில் வேண்டுமா தட்கல் முறையில் வேண்டுமா என்றும் சாதாரணமாக 36 பக்கங்கள் அல்லது கூடுதல் கண்டத்துடன் 60 பக்கங்கள் உள்ள பாஸ்போர்ட் வேண்டுமா என்று கேள்விகளுக்கு சரியான தேவையைக் கிளிக் செய்யவும்.அதன்பின் மற்றொரு பகுதி வரும். அதில் உள்ள உங்களது அனைத்து விசயங்களையும் நிதானமாகப் படித்து எழுத்து பிழை இல்லாமல் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஒவ்வொரு பக்கம் முடித்த பின்னர் “அடுத்து” என்பதை கிளிக் செய்யவும். நீங்கள் உங்கள் விண்ணப்பத்தை முடிவடையாத விட்டு & அடுத்த நாள் அதை பூர்த்தி தொடர விரும்பினால் “என் விவரங்கள் சேமி“ கிளிக் செய்து, நீங்கள் கடைசியாக பூர்த்தி செய்த பக்கத்தை “சமர்ப்பி” என்பதை கிளிக் செய்தால் அது வரை நீங்கள் அடுத்த / முந்தைய பக்கம் இடையே செல்லவும் & உங்கள் விவரங்கள் திருத்த முடியும். கடைசியில் ஒருமுறை நீங்கள் உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பித்தால் நீங்கள் எதையும் மாற்ற முடியாது. • Given Name : உங்களது பெயர் • Surname: உங்களது இன்சியல் (பொதுவா அப்பாவோட பேரு கல்யாணாம் ஆன பெண் கணவனின் பெயர்) • உங்களது பெயரை இதற்கு முன்பு மாற்றி இருந்தால் “if you have ever changed your name click the box and indicate Previous Name(s) in full” என்பதை கிளிக் செய்து • Previous Name : உங்களது முன்பு இருந்த பெயரை எழுதவும் • Sex: ஆணா, பெண்ணா என்று குறிப்பிடவும் • Date of Birth: பிறந்த தேதி நாள் மாதம் வருடம் (DD MM YYYY) • Place of Birth: பிறந்த ஊர் • District or Country: நீங்கள் இந்தியாவில் பிறந்திருந்தால் பிறந்த மாவட்டதையும் வேறு நாட்டில் பிறந்திருந்தால் அந்நாட்டையிம் குறிப்பிடவும் • Qualification: உங்களது படிப்பு (SSLC pass என்றால் NOC அப்ளை செய்யலாம்) • Profession: தொழில் • Present Address: தற்போதைய முகவரி • Permanent Address: நிரந்தர முகவரி • Please give the Date since residing at the Present Address: எவ்வளவு நாட்களாக தற்போதைய முகவரியில் தங்கி உள்ளீர்கள் • Phone No: தொலைபேசி எண் • Email Address: இமெயில் முகவரி • Marital Status: திருமணமான தகவல் • Spouse’s Name: கணவர்/மனைவியின் பெயர் • Father’s Name: தந்தை பெயர் • Mother’s Name: தாயார் பெயர் • தற்போதைய முகவரியில் கடந்த ஒரு வருடமா வசிக்கவில்லை என்றால் “If you are not residing at the Present Address for the last one year, click on this box and furnish addresses of the other place(s) of residence in the last one year along with the duration(s) of living there.” என்பதை கிளிக் செய்து கீழ் இருக்கும் From: To: Address 1 : எனும் தகவலை குறிப்பிடவும் • Voter ID, Athaar Card No, PAN Card Number இருந்தால் அதனையும் நிரப்பி விடவும். • Is applicant eligible for Non-ECR category? SSLC Pass செய்திருந்தால், வெளிநாட்டில் 3 வருடத்திற்கு மேல் இருந்திருந்தால், 50 வயதைத் தாண்டியிருந்தால் மற்றும்…. NOC கிடைக்கும். அப்போது கிளிக் செய்யவும். அனைத்தையும் நிரப்பியவுடன், “Save” என்பதை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு Next Buttonஐ கிளிக் செய்து செல்லவும், கடைசியாக முக்கியமான ஓன்று அதில் உங்கள் வீட்டு அருகாமையில் உள்ள இருவரது முகவரியும், தொலைபேசி எண்ணும் கேட்கும். அதை தெளிவாக குறிப்பிடவும். ஏனென்றால் போலிஸ் வெரிபிகேஷன் அதான் முக்கியம். 5) பாஸ்போர்ட் நியமனம் (Manage Appointment for Passport): பாஸ்போர்ட் ஆபிசுக்கு எந்த தேதியில் செல்ல உங்களால் முடியுமோ அந்த தேதி அல்லது கிடைக்கும் தேதியையும் நேரத்தையம் தேர்ந்தெடுக்கவும். அதனையும் “Save” செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளவும் 1)நியமனம் பக்கம் 5minutes தான் திறந்திருக்கும் அதற்குள் முடித்துவிட வேண்டும். 2)அதே நாளில் இரண்டாவது முயற்சித்து கொண்டிருக்க முடியாது. அந்த வழக்கில் நீங்கள் 24 மணி நேரம் காத்திருந்து, அடுத்த நாள் தான் முயற்சிக்க வேண்டும். 3)அதேபோல் அந்த பக்கத்தில் இருக்கும் பொது Reload/Refresh பட்டனை அழுத்தாதிர்கள். உங்களுக்கு கொடுக்கப்பட்ட நேரத்தில் அந்த பிரிண்டையும் + பணத்தையம் +சான்றிதழ் ஒரிஜினலையும் காப்பியையும் எடுத்துச் செல்லவும். அந்த அலுவலகத்தில் உங்களது சான்றிதழ்கள் (ரேஷன்கார்டு, ஓட்டர் ஐடி, பிறந்த நான் சான்றிதழ் போன்றன) சரிகாணப்பட்டு காப்பியைப் பெற்றுக் கொண்டு பணத்தையும் பெற்றுக் கொள்வார்கள். அதன் பின் உங்களை படம் பிடித்து போட்டு எடுத்துக் கொள்வார்கள். (எனவே போட்டோ கொண்டு செல்ல தேவையில்லை). எல்லாவற்றையும் சரியாக சரிபார்த்த பின் உங்களுக்கு Receiptதருவார்கள். அவ்வளவு தான் உங்களது வேலை (குறிப்பு நீங்கள் கொடுக்கும் எல்லா ஆவணகளிலும் ஒரே முகவரியும், பிறந்த தேதியும் ஒரே மாதிரி இருக்க வேண்டும்) 6) பாஸ்போர்ட் விண்ணப்ப தகுதி ஆன்லைனில் பார்க்க (View Passport Application Status Online): நீங்கள் PSK-ல் உள்ள நடைமுறைகள் வெற்றிகரமாக முடிந்த பிறகு, ஒரு கோப்பு எண் பெறுவீர்கள், பிறந்த தேதி இரண்டையும் கொடுத்து “ட்ராக்” பொத்தானை கிளிக் செய்யவும். இப்போது உங்கள் பாஸ்போர்ட் எந்த நிலையில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். 7) போலீஸ் சரிபார்ப்பு (Police Verification): சில தினங்களில் போலிஸ் வெரிபிகேஷன் என்ற உங்களது இருப்பிடத்திற்கு சாட்சிக்காக உங்கள் பகுதியைச் சேர்ந்த காவல் துறை சரிபார்க்கும், அப்போது நீங்கள் உங்கள் VAO- Village Asministrative Officer -ரிடம் நீங்கள் இந்த ஊரில் தான் வசித்துவருகிரீர்கள் என்று விண்ணப்பத்தில் எழுதி வாங்க வேண்டும் மற்றும் உங்கள் வீட்டு அருகாமையில் உள்ள இருவரது முகவரி கொடுத்தீர்கள் அல்லவா அவர்களையும் விசாரிப்பார்கள். 8) Passport Dispatch: அந்த பணி முடிந்து சில நாட்களில் பாஸ்போர்ட் தயாராக உள்ளது என, உங்கள் மொபைல் இல் அறிவிப்பு எஸ்எம்எஸ் பெறுவீர்கள் மேலும் அனுப்பப்பட்டதும் உங்கள் பாஸ்போர்ட் எண் தேதி குறிப்பிட்டு உங்கள் மின்னஞ்சல் ஐடி ஒரு மின்னஞ்சல் வரும். எனவே, ஒரு சரியான மின்னஞ்சல் ஐடி & தொலைபேசி எண் கொடுப்பது மிகவும் முக்கியமானது. சில நாட்களில் உங்கள் பாஸ்போர்ட் பதிவுத் தபாலில் உங்களது வீட்டிற்கு வந்துவிடும். அவ்வளவுதான் முடிந்தது நண்பர்களே…இனி நீங்களும் அப்ளை செய்து பாஸ்போர்ட் பெற்றுக்கொள்ளலாம்..
Labels
TRB,TNTET,TNPSC online coching
Search This Blog
NEWS
https://trb-tntet-tnpsc.blogspot.in/வழங்கும் இலவச இணையதள பயிற்சிக்கு உங்களை வரவேற்கிறோம்.தன்னம்பிக்கை, விடா முயற்சி , கடின உழைப்பு. எந்த சோதனைகள் வந்தாலும் உங்கள் இலட்சியத்தை விட்டு விடாதீர்கள். "சரியான முயற்சியும் பயிற்சியும் இருந்தால் உங்களால் முடியாத ஒன்றுமே இல்லை" என்ற நம்பிக்கை உங்கள் ஒவ்வொருவரின் மனதிலும் நிறைந்திருக்க வேண்டும். அதற்காக எங்கள் இணைய தளத்தின் மூலம் எங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வோம்.பயிற்சி நிறுவனங்களுக்கு சென்று பயிற்சி பெற இயலாத வேலைதேடும் இளைஞர்கள், பணிபுரிபவர்கள், இல்லத்தரசிகள் தங்களது அரசு வேலை கனவுகளை நனவாக்குவதற்காகவே இந்த இணையதளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. TET ன் புதிய பாடத்திட்டத்திற்கேற்ப ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட பாடப்பகுதிகளில் வாரத்தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த வாரத்தேர்வின் முடிவுகள் உங்கள் பெயருடன் இந்த இணையதளத்தில் வெளியிடவும் முடிவு செய்துள்ளோம்.
Tuesday, January 20, 2015
இணையத்தின் மூலம் வில்லங்கச் சான்றிதழை இலவசமாகப் பெறும் வசதியை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது
பொதுவாக வீடு, நிலம் போன்ற சொத்துகளை வாங்குவோர் அந்த சொத்து குறித்தும், முந்தைய உரிமையாளர்களின் விவரங்களை அறிந்துகொள்ளவும், அதில் வில்லங்கங்கள் ஏதேனும் உள்ளதா எனத் தெரிந்துகொள்ளவும் வில்லங்கச் சான்று பெறுவர். அதற்காக சார்பதிவாளர் அலுவலகத்தில் முறையாக விண்ணப்பித்து, உரிய கட்டணமும் செலுத்தி, அதிகபட்சமாக 10 நாட்களுக்குள் வில்லங்கச் சான்றினைப் பெற்று வந்தனர். வில்லங்கச் சான்று பெற காலதாமதமாவதால் அதனை துரிதப்படுத்தும் விதமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இணையத்தின் மூலம் விண்ணப்பித்து, வில்லங்கச் சான்றை விரைவாகப் பெறும் சேவையை துவக்கியது பதிவுத் துறை. இணையத்தின் மூலம் வில்லங்கச் சான்று பெற விரும்புவோர் உரிய கட்டணத்தை இணையத்தில் செலுத்தி தபால் மூலமாகவோ அல்லது சார்பதிவாளர் அலுவலகத்திலிருந்தோ இரண்டு நாட்களுக்குள் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் இடைத்தரகர்களின் குறுக்கீடு அதிகளவில் இருந்தமையாலும், மக்களிடம் உரிய வரவேற்பு இல்லாததாலும் இச்சேவை வெற்றி பெறவில்லை. இவை அனைத்திற்கும் தீர்வு காணும் விதமாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர், வீட்டிலிருந்தபடியே இணையத்தின் மூலம் வில்லங்கச் சான்றிதழை இலவசமாகப் பெறும் வசதியை துவக்கியுள்ளது தமிழக அரசின் பதிவுத்துறை. இதனால் பொதுமக்கள் வில்லங்கச் சான்று பெறுவதற்காக பத்திரப் பதிவு அலுவலகத்திற்குச் செல்லத் தேவையில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இணையத்தின் மூலம் வில்லங்கச் சான்றிதழை இலவசமாகப் பெறுவது எப்படி? தமிழகப் பதிவுத்துறையின் www.tnreginet.net என்ற இணையதளத்தில் வில்லங்கச் சான்றைப் பார்ப்பதற்கும், பதிவிறக்கம் செய்வதற்கும் தனி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் To view Encumbrance Certificate என்ற லிங்க்கினை க்ளிக் செய்வதன் மூலம் வில்லங்கச் சான்றிதழை இலவசமாகப் பார்க்கும் அல்லது பெறும் வலைத்தளத்திற்குள் செல்லலாம். மேலும் http://ecview.tnreginet.net/ என்ற இணைய முகவரியின் மூலமாகவும் நேரடியாக வில்லங்கச் சான்றிதழைப் பெறும் வலைத்தளத்திற்குள் செல்லலாம்.
திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
இதுகுறித்து பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் பி.அசோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பல்கலைக்கழகக் கட்டுப்பாட்டில் உள்ள வேலூர்,திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் உள்ள பல்கலைக்கழக இணைவுப் பெற்ற கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கான தேர்வுகள் கடந்த நவம்பர் 5-இல் தொடங்கி டிசம்பர் 3 வரை நடைபெற்றன. விடைத்தாள் மதிப்பீடு 8 மையங்களில் நடைபெற்றது. தேர்வு முடிவுகள் பல்கலைக்கழக இணையதளத்தில் (www.thiruvalluvaruniversity.ac.in) திங்கள்கிழமை பிற்பகல் வெளியிடப்படும்.
இத்தேர்வுப் பணிகள் அனைத்தும் முழுமையாக கணினி மயமாக்கப்பட்டுள்ளன. இம்முறை தமிழகத்திலேயே முதன்முறையாக திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில்தான் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இத்தேர்வுகளை எழுத 1,08,393 இளநிலை மாணவ, மாணவியரும், 11,073 முதுநிலை மாணவ, மாணவியரும் இணையதள வழியாக பதிவு செய்திருந்தனர். இவர்களில் இளநிலை பட்ட வகுப்பில் 7,948 பேரும், முதுநிலை பட்ட வகுப்பில் 801 பேரும் தேர்வுக்கு வரவில்லை. தேர்வு எழுதிய மாணவ, மாணவியரில் இளநிலை பாடப் பிரிவில் 42,790 பேரும் (43 சதவீதம்), முதுநிலை பாடப் பிரிவில் 5,531 பேரும் (54 சதவீதம்) தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இவர்களில் 826 மாணவ, மாணவியர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். இளநிலைப் பிரிவில் பி.லிட்., தமிழ் பாடப் பிரிவில் அதிகபட்சமாக 98 சதவீதம் மாணவ, மாணவியரும், முதுநிலையில் வரலாறு பாடப் பிரிவில் 100 சதவீதம் மாணவ, மாணவியரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகள் அனைத்தும் அந்தந்தக் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மாணவ, மாணவியருக்கான மதிப்பெண் பட்டியல்கள் அனைத்தும் பிப்ரவரி 15-க்குள் அனுப்பி வைக்கப்படும்.
மறுமதிப்பீடு: இத்தேர்வில் மறுமதிப்பீடு செய்ய விரும்பும் மாணவ, மாணவியர் அதற்கான கட்டணத்தைச் செலுத்தி அந்தந்தக் கல்லூரி முதல்வர் வழியாக இணையதள மூலம் ஜனவரி 23-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
இந்த தமிழனை பாராட்டுவோமே தமிழ்நாட்டு மின்சார பிரச்சனைக்கு தீர்வு! இதுதான் தமிழன் கண்டுபுடிப்பு
கே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர்....
இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது.
" இவர் ஒரு தமிழர் "
என்பதே.
அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்? கே.ஆர். ஸ்ரீதர்....
திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு, அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர்.
மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது.
அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது.
செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா?
அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி? என்பது பற்றி ஆராய்ச்சி செய்வதே ஸ்ரீதரின் வேலை.
முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா என்கிற ஆராய்ச்சியை மேற்கொண்டார்.
இந்த ஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார்.
ஆனால் அமெரிக்க அரசாங்கமோ திடீரென அந்த ஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டது.
என்றாலும் தான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த விஷயத்தை ஸ்ரீதர் அப்படியே விட்டுவிடவில்லை.
அந்த ஆராய்ச்சியை அப்படியே ரிவர்ஸில் செய்து பார்த்தார் ஸ்ரீதர். அதாவது, ஏதோ ஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பி, அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார்.
அட, என்ன ஆச்சரியம்! மின்சாரம் தயாராகி வெளியே வந்தது.
இனி அவரவர்கள் அவரவருக்குத் தேவையான மின்சாரத்தை இந்த இயந்திரம் மூலம் தயார் செய்து கொள்ளலாம் என்கிற நிலையை ஸ்ரீதர் உருவாக்கி இருக்கிறார். தான் கண்டுபிடித்த இந்தத் தொழில் நுட்பத்தை அமெரிக்காவில் செய்து காட்டிய போது அத்தனை விஞ்ஞானிகளும் அதிசயித்துப் போனார்கள். ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தைபயன்படுத்தி, வர்த்தக ரீதியில் மின்சாரம் தயாரிக்க வேண்டுமெனில் அதற்கான இயந்திரங்களை உருவாக்க வேண்டும். இதற்கு பெரிய அளவில் பணம் வேண்டும்.
இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைப் உருவாக்கும் பிஸினஸ் பிளான்களுக்கு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள்தான் பணத்தை முதலீடு செய்யும்.
ஸ்ரீதருக்கும் அப்படி ஒருவர் கிடைத்தார்.
அவர் பெயர், ஜான் டூயர். சிலிக்கன் பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப் பெரிய வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனமான கிளீனர் பெர்க்கின்ஸை சேர்ந்தவர் இந்த ஜான் டூயர்.
அமெரிக்காவில் மிகப் பெரும் வெற்றி கண்ட நெட்ஸ்கேப், அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் இன்று பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கக் காரணம், ஜான் டூயர் ஆரம்பத்தில் போட்ட முதலீடுதான்.
கூகுள் நிறுவனத்தை ஆரம்பிக்க ஜான் டூயர் தொடக்கத்தில் போட்ட முதலீடு வெறும் 25 மில்லியன் டாலர்தான்.
ஆனால், ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தைவர்த்தக ரீதியில் செயல்படுத்த ஜான் டூயர் போட்ட முதலீடு 100 மில்லியன் டாலர்.
இது மிகப் பெரும் தொகை. என்றாலும் துணிந்து முதலீடு செய்தார் ஜான். காரணம், ஸ்ரீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது.
பொதுவாக மின் உற்பத்தி செய்யும்போது சுற்றுச்சூழல் பிரச்னைகள் நிறையவே எழும்.
அது நீர் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி, அனல் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி.
எனவே சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பங்கம் வராத மின் உற்பத்தித் தொழில்நுட்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தார் அவர்.
தவிர, ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தைக் கொண்டு குறைவான செலவில் மின்சாரம் தயார் செய்ய முடியும்.
இந்த பாக்ஸிலிருந்து உருவாகும் மின்சாரம் குறைந்த தூரத்திலேயே பயன்படுவதால் மின் இழப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை.
இது மாதிரி பல நல்ல விஷயங்கள் ஸ்ரீதரின் கண்டுபிடிப்பில் இருப்பதை உணர்ந்ததால் அவர் அவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்தார்.
நல்லவேளையாக, ஜான் டூயரின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை.
கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு பலரும் உழைத்ததன் விளைவு இன்று 'ப்ளூம் பாக்ஸ்' என்கிற மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸ் தயார் செய்துள்ளார்.
சுமார் 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புப் பெட்டிதான் ஸ்ரீதர் உருவாக்கியுள்ள இயந்திரம்.
இதற்கு உள்ளே ஆக்ஸிஜனையும் இயற்கை எரிவாயுவையும் செலுத்தினால் அடுத்த நிமிடம் உங்களுக்குத் தேவையான மின்சாரம் தயார்.
இயற்கை எரிவாயுவுக்குப் பதிலாக மாட்டுச்சாண வாயுவையும் செலுத்தலாம்.
அல்லது சூரிய ஒளியைக் கூட பயன்படுத்தலாமாம்.
இந்த பாக்ஸ்களை கட்டடத்துக்குள்ளும் வைத்துக் கொள்ளலாம்.
வெட்ட வெளியிலும் வைத்துக் கொள்ளலாம் என்பது சிறப்பான விஷயம்.
உலகம் முழுக்க 2.5 பில்லியன் மக்கள் மின் இணைப்புப் பெறாமல் இருக்கிறார்கள்ஆப்பிரிக்காவில் ஏதோ ஒரு காட்டில் இருக்கும் கிராம மக்களுக்கு மின்சாரம் கொடுத்தால், அதனால் அரசாங்கத்துக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் அவர்கள் மின் இணைப்புக் கொடுப்பதில்லை.
கிராமத்தை விட்டு வந்தால் மட்டுமே பொருளாதார ரீதியில் முன்னேற முடியும் என்கிற நிலை அந்த கிராம மக்களுக்கு.
ஆனால் இந்த 'ப்ளூம் பாக்ஸ்' மட்டும் இருந்தால் உலகத்தின் எந்த மூலையிலும் மின்சாரம் தயார் செய்யலாம்'' என்கிறார் ஸ்ரீதர்.
ஒரு 'ப்ளூம் பாக்ஸ்' உங்களிடம் இருந்தால் இரண்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும்.
இதே பாக்ஸ் இந்தியாவில் இருந்தால் நான்கு முதல் ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும்.
அமெரிக்க வீடுகளில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுவதே அங்கு வீடுகளின் எண்ணிக்கை குறையக் காரணம்.
இன்றைய தேதியில் அமெரிக்காவின் 20 பெரிய நிறுவனங்கள் ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன.
கூகுள் நிறுவனம்தான் முதன் முதலாக இந்தத் தொழில்நுட்பத்தைவாங்குவதற்கான கான்ட்ராக்ட்டில் கையெழுத்திட்டது.
'ப்ளூ பாக்ஸ்' மூலம் கூகுள் உற்பத்தி செய்யும் 400 கிலோ வாட் மின்சாரமும் அதன் ஒரு பிரிவுக்கே சரியாகப் போகிறது.
வால் மார்ட் நிறுவனமும் 400 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை வாங்கி இருக்கிறது.
இப்போது Fedex, E bay, கோக்கா கோலா, அடோப் சிஸ்டம், சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட் போன்ற பல நிறுவனங்களும் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன.
100 கிலோ வாட் மின்சாரம் தயார் செய்யும் ஒரு பாக்ஸின் விலை 7 முதல் 8 லட்சம் டாலர்! அட, அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமா? என நீங்கள் நினைக்கலாம்.
ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் E bay நிறுவனம் கடந்த ஆண்டு ஸ்ரீதரிடமிருந்து ஐந்து பாக்ஸ்களை வாங்கியது.
தனக்குத் தேவையான 500 கிலோ வாட் மின்சாரத்தை இந்த பாக்ஸின் மூலமே தயார் செய்துவிடுகிறது.
இந்த பாக்ஸ்களை வாங்கிய ஒன்பதே மாதத்துக்குள் 1 லட்சம் டாலர் வரை மின் கட்டணத்தை சேமித்திருக்கிறதாம் E bay.
இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பல வீடுகளில் இந்த 'ப்ளூம் பாக்ஸ்' இருக்கும்.
சாதாரண மனிதர்களும் இந்த பாக்ஸை வாங்கி பயன்படுத்துகிற அளவுக்கு அதன் விலை 3,000 டாலருக்குள் இருக்கும்'' என்கிறார் ஸ்ரீதர்.
அந்த அளவுக்கு விலை குறையுமா என்று கேட்டால், ஒரு காலத்தில் லட்சத்தில் விற்ற கம்ப்யூட்டர் இன்று ஆயிரங்களுக்குள் கிடைக்கிறதே என்கிறார்கள் ஸ்ரீதரின் ஆதரவாளர்கள்.
ஸ்ரீதரின் இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் நிஜமாகும் பட்சத்தில் உலகம் முழுக்க மக்கள் அந்தத் தமிழரின் பெயரை உச்சரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை...
நமது மத்திய மாநில அரசுகள் இவருடைய தொழில் நுட்ப அறிவியலை பயன் படுத்துமா என்பது .?
Saturday, January 10, 2015
தினசரி மோட்டார் வாகனம் ஓட்டும் அனைவரும் மோட்டர் வாகனச் சட்டத்தையும், அபராததையும் தெரிந்திருக்க வேண்டும் இதோ உங்களுக்காக
தினசரி மோட்டார் வாகனம் ஓட்டும் அனைவரும் மோட்டர் வாகனச் சட்டத்தையும், அபராததையும் தெரிந்திருக்க வேண்டும் இதோ உங்களுக்காக
by ஹன்ஸா
1.உரிமம் இல்லதவர்களை வண்டி ஓட்ட அனுமதிப்பது/section 180. Rs.50 fine
2. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் 18 வயதிற்க்கு கீழ் உள்ளவர் வண்டி ஓட்டுதல் section 181. Rs.500 fine
3.உரிமம் சார்ந்த குற்றங்கள் , ஓட்டுநர் தகுதி இழ்ந்தவர்கள் வண்டி ஓட்டுதல் section 182(1). Rs.500 fine
4.அதிவேகத்தில் வண்டி ஓட்டுதல் section 183(1) Rs.400 fine
5..மிகுதியான வேகத்தில் வண்டி ஓட்டுதல் .முதலானவை (ஓட்டுவதற்க்கான காரணம் வேகத்தின் அளவை தாண்டுதல் ) section 183(2).Rs.300 fine
Part 2;
தினசரி மோட்டார் வாகனம் ஓட்டும் அனைவரும் மோட்டர் வாகனச் சட்டத்தையும், அபராததையும் தெரிந்திருக்க வேண்டும் இதோ உங்களுக்காக
6..அபாயகரமாக ஓட்டுதல் section 184. Rs.1000 fine
மற்றும் சென்போன் பேசிக் கொண்டு ஓட்டுதல் CMV R21(25) section 177.RS.100 fine
7..குடிப் போதையில் வண்டி ஓட்டுதல் section 185 .Rs.court
8. மன நிலை ,உடல் நிலை சரியில்லாத் நிலையில் வண்டி ஓட்டுதல் .section 186. Rs.200 fine
9..போட்டி போட்டுக் கொண்டு வண்டி ஓட்டுதல்..வாகன சோதனை மேற்க் கொள்ளுதல் section 189. Rs 500 fine
10..அதிகமான அளவில் கரும்புகை வெளியிடுவது section 190(2) .Rs.50 fine
PART 3 :
மோட்டார் வாகனச் சட்டம்.
11..அனுமதியில்லாத மாற்றத்துடன் கூடிய சைலன்சர் section 190(2).Rs.50 fine .
12..காற்று ஓலிப்பான் .பல்லிசை ஓலிப்பான் section 190 (2) .Rs.50 fine
13..பதிவு செய்யப்படாத வாகனத்தை ஓட்டுதல் section 192. Rs.500 fine
14..அனுமதிக்கப்பட்ட எடைக்குக் கூடுதல் எடைய்யுடன் ஓட்டுதல் section 194.Rs.100 fine
15..காப்பீடு செய்யப்படாத வாகனத்தை ஓட்டுதல்( uninsured ) section 196 .Rs.1000 fine
16..வண்டியில் அனுமதியின்றி மாறுதல் செய்தல் section 198 .Rs.100 fine
17..போக்குவரத்திற்க்கு இடையூர் செய்தல் section 201 .Rs.50 fine
ஏழ்மையால் வரலாற்றில் மறைந்த உண்மை பல்பை கண்டுபிடித்தது யார் !
1879அக்டோபர் மாதம் தாமஸ் ஆல்வா எடிசன் உலகிற்கு கொடுத்த மிக உன்னத பரிசு எலெக்ட்ரிக் பல்பு என நீங்கள் நம்பிக்கொண்டு இருக்கிறீர்களா ? எடிசன் மிகப்பெரிய விஞ்ஞானிதான் ஆனால் அவர் மிக மேசமான அறிவியல் வியாபாரி என்று உங்களுக்கு தெரியுமா ? ஏழை விஞ்ஞானி ஜோசப் ஸ்வான் முதலில் கண்டு பிடித்த பல்பை தனதாக்கி வரலாற்றில் மோசடி புகழ் பெற்றது உங்களுக்கு தெரியுமா ? வாருங்கள் நண்பர்களே வரலாற்றை புரட்டி பார்போம் .
1828ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் ஒரு எளிய குடும்பத்தில் ஜான் ஸ்வான் மற்றும் இசெபெல்லா தம்பதியினர்க்கு மகனாக பிறந்த ஜோசப் ஸ்வான் தனது குடும்ப வறுமையை நிலையிலும் இயற்பியல் , வேதியல் ஆகிய இரண்டு துறைகளிலும் மிகச்சிறந்த புலமை பெற்றார் தனது குடும்ப வறுமையை போக்க ஏதாவது கண்டுபிடிப்பு செய்து அதன் மூலம் வறுவாய் ஈட்டலாம் என நினைத்தார் .
தனது 22 ஆம் வயதிலே அதாவது 1850 ஆம் ஆண்டிலேயே பல்பினை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார் ஜோசப் ஸ்வான் கண்ணாடியிலான வெற்றிடக்குழாயில் மெல்லிய கம்பியிலான இழையை(Filament) சூடாக்குவதின் மூலம் ஒளியை பெற முடியும் கண்டறிந்தார் அதிக மின்சாரம் பாய்வதால் கம்பியிலான இழையை சூடு தாங்காமல் அறுந்து அறுந்து போனது தனது முயற்சியில் இருந்து சற்றும் மனம் தளராத ஸ்வான் வேறு வேறு உலோகங்களை மெல்லியகம்பி இழையாக பயன்படுத்த முடியுமா என்று சோதித்து பார்த்தார் இதே சமயம் தாமஸ் ஆல்வா எடிசன், ஹம்பிரிடேவி ,ஜேம்ஸ் பவ்மான் போன்ற பலரும் பல்பினை கண்டுபிடிக்க ஆராய்ந்து வந்தனர் .
1875 இல் ஜோசப் ஸ்வான் அதிக மின்தடையை தாங்கும் கார்பன் இழையை கொண்டு பல்பினை தயாரித்தார் அதை மேலும் மேலும் மெருகேற்றி 1878 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் நாள் விஞ்ஞானிகளுக்கு செயல்விளக்கம் செய்து காண்பித்தார் 1879 ஆம் ஆண்டு ஜனவரி 17 பொதுமக்களுக்கும் நேரடியாக செயல்விளக்கம் செய்து காண்பித்தார் அதை காப்புரிமைக்கு விண்ணப்பித்தார் ஆனால் அவரது காப்புரிமை விண்ணப்பம் சரியாக நிரப்பப்படவில்லை என்று அவரது காப்புரிமை நிராகரிக்கப்பட்டது அவருக்கு பின் சற்றேறக்குறைய அவரை போலவே பல்ப் தயாரித்து 1879அக்டோபர் மாதம் தாமஸ் ஆல்வா எடிசன் வெளியிட்டு தனது செல்வாக்கால் காப்புரிமை பெற்றுக்கொண்டார் ஆனால் ஜோசப்ஸ்வானால் ஏழ்மையாலும் ஆதரவின்மையாலும் எடிசனுடன் போட்டி போட முடியவில்லை . ஸ்வான் எங்கே தனியே வேறு முறையில் பல்ப் செய்து வரலாற்றில் இடம்பிடித்துவிடுவாரென்று பயந்து ஜோசப்ஸ்வானை தன்னுடன் கூட்டு சேருமாறு அழைத்தார் தன் குடும்ப வருமையை போக்க ஜோசப்ஸ்வான் எடிசனுடன் கூட்டு சேர்ந்தார் . பின்னர் பல முயற்சிக்களுக்கு பிறகு எடிசன் டங்ஸ்டனை மின் இழையாக கொண்டு தற்போது நாம் பயன்படுத்திவரும் எலெக்ட்ரிக்பல்பினை கண்டுபிடித்தது தனி வரலாறு எடிசனை பற்றிய ஒரு வரலாற்று பதிவிடல் செய்யும் போது இதை பற்றி மேலும் அறிந்துகொள்வோம் எப்படியோ பல்பினை கண்டுபிடித்தது யார் என்ற கேள்விக்கு நாம் ஜோசப்ஸ்வான் என்று பதில் கூறுவதில்லை எடிசன் என்றுதான் கூறுகிறோம் தனது செல்வாக்கால் ஜோசப்ஸ்வானுக்கு கிடைக்க வேண்டிய புகழை தட்டி பறித்துக்கொண்டார் தாமஸ் ஆல்வா எடிசன் .
Sunday, January 4, 2015
அதிகமாக டிவி பார்த்தால் ஆயுள் குறையும்: ஆய்வில் தகவல்
புதுடில்லி : அதிகமாக டி.வி., பார்ப்பவர்கள் சீக்கிரமாக இறந்து விடுவார்கள் என சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. டிவி பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்தும் இந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாழ்வில் உற்சாகம் தரும் ஒவ்வொரு பொருளும் நமது உடல் நிலையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு டிவி மட்டும் விதிவிலக்கல்ல. பொழுதுபோக்கு அம்சமாக நினைத்து அனைவரும் விரும்பிப் பார்க்கும் டிவி, உடல்நிலையை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. டிவி மனிதர்களின் வாழ்விலும், உடல்நிலையிலும் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து பல ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகளின் மூலம், அதிகம் டிவி பார்த்தால் ஆயுள் குறையும் என்ற அதிர்ச்சி தகவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வாழ்வில் உற்சாகம் தரும் ஒவ்வொரு பொருளும் நமது உடல் நிலையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு டிவி மட்டும் விதிவிலக்கல்ல. பொழுதுபோக்கு அம்சமாக நினைத்து அனைவரும் விரும்பிப் பார்க்கும் டிவி, உடல்நிலையை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. டிவி மனிதர்களின் வாழ்விலும், உடல்நிலையிலும் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து பல ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகளின் மூலம், அதிகம் டிவி பார்த்தால் ஆயுள் குறையும் என்ற அதிர்ச்சி தகவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வு முறையில் புதிய மாற்றம்.போட்டித்தேர்வு எழுதுவோரின் புகைப்படம், பதிவு எண், பெயர் அச்சாகிறது.
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வு முறையில் பெரிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. போட்டித்தேர்வு எழுதுவோரின் புகைப்படம், அவர் தேர்வு எழுதும் பதிவு எண், அவருடைய பெயர் ஆகியவை தேர்வு எழுதும்
முதல் தாளில் அச்சாகிறது. இந்த புதிய முறை வருகிற 10- ந்தேதி நடக்கும் முதுகலை பட்டதாரிகளுக்கான தேர்வில் அறிமுகப்படுத்தப்படுகிறது. புதிய முறை சென்னை டி.பி.ஐ.வளாகத்தில் ஆசிரியர் தேர்வு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் தலைவராக விபுநய்யர் என்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி உள்ளார். அரசின் வழி காட்டுதலின் படி ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் புதிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. அதன்படி தேர்வு எழுதுவோரின் ஓ.எம்.ஆர்.சீட்டில் ஒரு முறை ஒரு பதிலை எழுதிவிட்டு மறுபடி அதை அவரே நினைத்தாலும் திருத்தி எழுத முடியாது. மேலும் தேர்வு எழுதுவோரின் புகைப்படம், தேர்வு எழுதுவோரின் பெயர், பதிவு எண் ஆகியவை ஓ.எம்.ஆர்.சீட்டின் முதல் பக்கத்தில் அச்சாகி இருக்கும். தேர்வு எழுதுவோர் எந்த காரணத்தை கொண்டும் அவரது பெயரையோ, அவரது தேர்வு எண்ணையோ எழுதத் தேவை இல்லை.
முதல் தாளில் அச்சாகிறது. இந்த புதிய முறை வருகிற 10- ந்தேதி நடக்கும் முதுகலை பட்டதாரிகளுக்கான தேர்வில் அறிமுகப்படுத்தப்படுகிறது. புதிய முறை சென்னை டி.பி.ஐ.வளாகத்தில் ஆசிரியர் தேர்வு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் தலைவராக விபுநய்யர் என்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி உள்ளார். அரசின் வழி காட்டுதலின் படி ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் புதிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. அதன்படி தேர்வு எழுதுவோரின் ஓ.எம்.ஆர்.சீட்டில் ஒரு முறை ஒரு பதிலை எழுதிவிட்டு மறுபடி அதை அவரே நினைத்தாலும் திருத்தி எழுத முடியாது. மேலும் தேர்வு எழுதுவோரின் புகைப்படம், தேர்வு எழுதுவோரின் பெயர், பதிவு எண் ஆகியவை ஓ.எம்.ஆர்.சீட்டின் முதல் பக்கத்தில் அச்சாகி இருக்கும். தேர்வு எழுதுவோர் எந்த காரணத்தை கொண்டும் அவரது பெயரையோ, அவரது தேர்வு எண்ணையோ எழுதத் தேவை இல்லை.
ஓ.பி.சி., வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தை, பல்கலைக்கழக மானியக் குழுவான, யு.ஜி.சி., அறிமுகப்படுத்தி உள்ளது.
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தை, பல்கலைக்கழக மானியக் குழுவான, யு.ஜி.சி., அறிமுகப்படுத்தி உள்ளது. மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல்
துறையின் நிதி உதவியுடன் கூடிய இத்திட்டத்தை, 2014 - 15ம் கல்வியாண்டு முதல், யு.ஜி.சி., அறிமுகப்படுத்துகிறது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த வேலையில்லாத பட்டதாரி கள், குறிப்பாக, அறிவியல், சமூக அறிவியல், கலையியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவு களில் முழுநேர, பகுதி நேர, எம்.பில்., - பி.எச்டி., ஆய்வு படிப்பு களில் சேர்ந்தவர்களுக்கு, இந்த உதவித் தொகை வழங்கப்படும். இணையம் மூலம் விண்ணப்பிக்கும் மாணவர்களில், 300 பேருக்கு மட்டும், இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு, விரைவில் வெளியிடப்படும். இத்தகவல்களை, யு.ஜி.சி., செயலர், ஜஸ்பால் சாந்து தெரிவித்து உள்ளார்.
துறையின் நிதி உதவியுடன் கூடிய இத்திட்டத்தை, 2014 - 15ம் கல்வியாண்டு முதல், யு.ஜி.சி., அறிமுகப்படுத்துகிறது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த வேலையில்லாத பட்டதாரி கள், குறிப்பாக, அறிவியல், சமூக அறிவியல், கலையியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவு களில் முழுநேர, பகுதி நேர, எம்.பில்., - பி.எச்டி., ஆய்வு படிப்பு களில் சேர்ந்தவர்களுக்கு, இந்த உதவித் தொகை வழங்கப்படும். இணையம் மூலம் விண்ணப்பிக்கும் மாணவர்களில், 300 பேருக்கு மட்டும், இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு, விரைவில் வெளியிடப்படும். இத்தகவல்களை, யு.ஜி.சி., செயலர், ஜஸ்பால் சாந்து தெரிவித்து உள்ளார்.
எந்த பள்ளிகளிலும் ஏப்ரல் 4-ந்தேதிக்கு முன்பாக மாணவர் சேர்க்கை கூடாது என்றும் அவ்வாறு மாணவர்களை சேர்த்தால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு மெட்ரிகுலேசன் பள்ளிகள்இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
எந்த பள்ளிகளிலும் ஏப்ரல் 4-ந்தேதிக்கு முன்பாக மாணவர் சேர்க்கை கூடாது என்றும் அவ்வாறு மாணவர்களை சேர்த்தால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு மெட்ரிகுலேசன் பள்ளிகள்இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நர்சரி மெட்ரிகுலேசன் பள்ளிகள், மெட்ரிகுலேசன் உயர்நிலைப்பள்ளிகள், மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிகள் என்று ஏராளமான பள்ளிகள் உள்ளன. இவை அனைத்தும் சுயநிதி பள்ளிகள் ஆகும்.இவற்றில் நர்சரி பள்ளிகள் தவிர மற்ற பள்ளிகள் அனைத்தும் தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.மெட்ரிகுலேசன் பள்ளிகள் பல ஜனவரி மாதத்திலேயே அடுத்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை தொடங்கி விடுகிறது. குறிப்பாக எல்.கே.ஜி. மாணவர்சேர்க்கை இப்போதே தொடங்கி விடுகிறது.இது தொடர்பாக தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் அனைத்து மெட்ரிகுலேசன் பள்ளிகளின் ஆய்வர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள எந்த மெட்ரிகுலேசன் பள்ளிகளிலும் இப்போது மாணவர்சேர்க்கை நடைபெறக்கூடாது. ஏப்ரல் 4-ந்தேதிக்கு பின்னர் தான் மாணவர் சேர்க்கை நடைபெறவேண்டும்.அதற்கான விண்ணப்ப படிவங்களும் அதன் பின்னர்தான் வழங்கவேண்டும். முன்கூட்டியே எந்த பள்ளியும் மாணவர் சேர்க்கைக்கான எந்த முகாந்திரமும் தொடங்கக்கூடாது. அவ்வாறு எந்த பள்ளியாவது மாணவர் சேர்க்கை நடத்தினால் அந்தபள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Thursday, January 1, 2015
சித்தாசனம்-ஆசனம்
செய்முறை:
முதலில் விரிப்பில் கால்களை முன் நீட்டி உட்காரவும். இடது காலை மடித்து குதி காலை குதத்தை ஒட்டி வைக்கவும். இதேபோல் வலது குதிகால் குறியை ஒட்டி வைக்கவும்.அதே சமயத்தில் இடது கெண்டை கால் மேல் வலது கெண்டைக் கால் இருக்க வேண்டும்.
தொடை,முழங்கால் தரையிளிருக்க நிமிர்ந்த நிலையில் உட்கார வேண்டும். கைகள் இரண்டும் முழங்காலுக்கு மேலே உள்ளங்கை வெளியே தெரியும் படி வைக்க வேண்டும். இந்நிலையில் கண்களை மூடி தியானம் செய்து மனதை ஒருநிலைப் படுத்தவும். இந்த நிலையில் 30 நிமிடங்கள் வரை அமர வேண்டும். பிறகு ஆரம்ப நிலைக்கு வரவும்.
பலன்கள்:
1.மனம் அமைதி அடைகிறது.
2.முகம் பொலிவு அடைகிறது.
3.பாலுணர்வு சமன்பாடு அடைகிறது.
முதலில் விரிப்பில் கால்களை முன் நீட்டி உட்காரவும். இடது காலை மடித்து குதி காலை குதத்தை ஒட்டி வைக்கவும். இதேபோல் வலது குதிகால் குறியை ஒட்டி வைக்கவும்.அதே சமயத்தில் இடது கெண்டை கால் மேல் வலது கெண்டைக் கால் இருக்க வேண்டும்.
தொடை,முழங்கால் தரையிளிருக்க நிமிர்ந்த நிலையில் உட்கார வேண்டும். கைகள் இரண்டும் முழங்காலுக்கு மேலே உள்ளங்கை வெளியே தெரியும் படி வைக்க வேண்டும். இந்நிலையில் கண்களை மூடி தியானம் செய்து மனதை ஒருநிலைப் படுத்தவும். இந்த நிலையில் 30 நிமிடங்கள் வரை அமர வேண்டும். பிறகு ஆரம்ப நிலைக்கு வரவும்.
பலன்கள்:
1.மனம் அமைதி அடைகிறது.
2.முகம் பொலிவு அடைகிறது.
3.பாலுணர்வு சமன்பாடு அடைகிறது.
செய்முறை:
முதலில் விரிப்பில் கால்களை முன் நீட்டி உட்காரவும். இடது காலை மடித்து குதி காலை குதத்தை ஒட்டி வைக்கவும். இதேபோல் வலது குதிகால் குறியை ஒட்டி வைக்கவும்.அதே சமயத்தில் இடது கெண்டை கால் மேல் வலது கெண்டைக் கால் இருக்க வேண்டும்.
தொடை,முழங்கால் தரையிளிருக்க நிமிர்ந்த நிலையில் உட்கார வேண்டும். கைகள் இரண்டும் முழங்காலுக்கு மேலே உள்ளங்கை வெளியே தெரியும் படி வைக்க வேண்டும். இந்நிலையில் கண்களை மூடி தியானம் செய்து மனதை ஒருநிலைப் படுத்தவும். இந்த நிலையில் 30 நிமிடங்கள் வரை அமர வேண்டும். பிறகு ஆரம்ப நிலைக்கு வரவும்.
பலன்கள்:
1.மனம் அமைதி அடைகிறது.
2.முகம் பொலிவு அடைகிறது.
3.பாலுணர்வு சமன்பாடு அடைகிறது.
முதலில் விரிப்பில் கால்களை முன் நீட்டி உட்காரவும். இடது காலை மடித்து குதி காலை குதத்தை ஒட்டி வைக்கவும். இதேபோல் வலது குதிகால் குறியை ஒட்டி வைக்கவும்.அதே சமயத்தில் இடது கெண்டை கால் மேல் வலது கெண்டைக் கால் இருக்க வேண்டும்.
தொடை,முழங்கால் தரையிளிருக்க நிமிர்ந்த நிலையில் உட்கார வேண்டும். கைகள் இரண்டும் முழங்காலுக்கு மேலே உள்ளங்கை வெளியே தெரியும் படி வைக்க வேண்டும். இந்நிலையில் கண்களை மூடி தியானம் செய்து மனதை ஒருநிலைப் படுத்தவும். இந்த நிலையில் 30 நிமிடங்கள் வரை அமர வேண்டும். பிறகு ஆரம்ப நிலைக்கு வரவும்.
பலன்கள்:
1.மனம் அமைதி அடைகிறது.
2.முகம் பொலிவு அடைகிறது.
3.பாலுணர்வு சமன்பாடு அடைகிறது.
Subscribe to:
Posts (Atom)