TRB,TNTET,TNPSC online coching

Search This Blog

NEWS

https://trb-tntet-tnpsc.blogspot.in/வழங்கும் இலவச இணையதள பயிற்சிக்கு உங்களை வரவேற்கிறோம்.தன்னம்பிக்கை, விடா முயற்சி , கடின உழைப்பு. எந்த சோதனைகள் வந்தாலும் உங்கள் இலட்சியத்தை விட்டு விடாதீர்கள். "சரியான முயற்சியும் பயிற்சியும் இருந்தால் உங்களால் முடியாத ஒன்றுமே இல்லை" என்ற நம்பிக்கை உங்கள் ஒவ்வொருவரின் மனதிலும் நிறைந்திருக்க வேண்டும். அதற்காக எங்கள் இணைய தளத்தின் மூலம் எங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வோம்.பயிற்சி நிறுவனங்களுக்கு சென்று பயிற்சி பெற இயலாத வேலைதேடும் இளைஞர்கள், பணிபுரிபவர்கள், இல்லத்தரசிகள் தங்களது அரசு வேலை கனவுகளை நனவாக்குவதற்காகவே இந்த இணையதளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. TET ன் புதிய பாடத்திட்டத்திற்கேற்ப ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட பாடப்பகுதிகளில் வாரத்தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த வாரத்தேர்வின் முடிவுகள் உங்கள் பெயருடன் இந்த இணையதளத்தில் வெளியிடவும் முடிவு செய்துள்ளோம்.

Wednesday, December 31, 2014

"சாதனைக்கு, வறுமையோ, சூழ்நிலையோ தடையல்ல"!!!

         சாதனைக்கு, வறுமையோ, சூழ்நிலையோ தடையல்ல; ஆர்வம், முயற்சி, கடின உழைப்புகளே தேவை என, கனடா நாட்டின் குயின்ஸ் பல்கலையின் கணித ஆய்வாளர் ராமமூர்த்தி பேசினார்.

           சென்னை, பை கணித மன்றத்தின் சார்பில், கணித மேதை ராமானுஜத்தின் 127வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. கணித போட்டிகளில் வெற்றிபெற்ற, மாநகராட்சி பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு பரிசளித்து, ராமானுஜத்தின் வாழ்க்கை வரலாற்றை விளக்கி, கணித ஆய்வாளர் ராமமூர்த்தி பேசியதாவது: பார்ட்டீசியன், சர்க்கிள் மெத்தடு உள்ளிட்ட முக்கியமான மூன்று தீர்வுகளை, இந்த உலகத்துக்கு தந்தவர் ராமானுஜம். 
அவர் வாழ்வில், வறுமையில் வாடியவர்; படிப்பதற்கு உகந்த சூழலை பெறாதவர். ஆனாலும், தன் விடாமுயற்சியாலும், கடின உழைப்பாலும்தான் சாதனைகளை புரிந்தார். மாணவர்களின் சாதனைகளுக்கும் அது பொருந்தும். மாணவர்களுக்கு, கணிதத்தின் ஆர்வத்தை ஏற்படுத்த, கணித ஆசிரியர்களும், கணித மன்றங்களும், செயல்முறை கணிதத்தை பயிற்றுவிக்க வேண்டும். 
பல்வேறு போட்டிகளை நடத்த வேண்டும். நானும் கனடாவில், பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்ட போதுதான், எனக்குள் தன்னம்பிக்கையும் ஆர்வமும் பிறந்தன. இவ்வாறு, அவர் பேசினார்.

பை கணித மன்றத்தின் சிவராமன் பேசுகையில், "ஏழை மாணவர்கள் படிக்கும் மாநகராட்சி பள்ளிகளில், நாங்கள் பயிற்சிகளையும், போட்டிகளையும் நடத்தியபோது, அவர்களிடம், இயல்பாகவே நிறைய திறமைகள் இருப்பதை கண்டு வியந்தோம்" என்றார்.

Sunday, December 14, 2014

வெள்ளரி. (CUCUMBER)

மூலிககையின் பெயர் –: வெள்ளரி. (CUCUMBER)


தாவரப்பெயர் -: CUCUMIS SATIVS. 

தாவரக் குடும்பம் –:CUCURBITACEAE.

வெள்ளரி வகைகள் -: CITRULLUS LANATUSVAR LANATUS.

CUCMIS MELO.

CUCURBITA MAZIMA.

CUCURBITA MOSCHATA.

LAGENARIA SPP.

SICYOS ANGULATUS….. ஆகியவை.


பயன்தரும் பாகங்கள் -: கொழுந்து, பிஞ்சு, காய், பழம் மற்றும் வேர்.

வளரியல்பு -: வெள்ளரி படரும் கொடி வகையைச் செர்ந்த ஒரு காய் கறி வகை நல்ல மூலிகையும் கூட. இதன் முக்கிய மூன்று வகைகள்  SLICING, PICKLING & BURPLESS ஆகும். இதன் வேர் பூமிக்கடியில் இருக்கும்..இலைகள் அகலமாக இருக்கும் இலையின் அடி பாகத்தில் பூ விட்டு பிஞ்சுகள் உற்பத்தியாகும்.கொடிகள் படர்வதற்கு பக்க வாட்டில் சுருள் கம்பி போன்ற வேர்கள் இருக்கும் அதன் உதவியால் நிலத்திலோ மேல் நோக்கியோ பிடித்துப் படரும்.வெள்ளரியை சம வெளியிலும் குளங்களிலும், பசமை கூடாரங்களிலும் வளர்க்கலாம். இது வளர்வதற்கு நல்ல வளமான மண் வேண்டும். வடிகால் வசதி இருக்க வேண்டும். விதைகளை மண்ணில் ஒரு அங்குலத்திற்குக் கீழ் நடவேண்டும். இடைவெளி இரண்டடி இருக்க வேண்டும். ஈரப்பதம் இருந்து கொண்டே இருக்க வேண்டும். காயின் நீளம் 60 செ.மீ.வரையும் அகலம் 10 செ.மீ. விட்டமும்  இருக்கும். இது வகைக்கு வகை வேறு படும். காயிக்குள் இரு அடுக்காக விதைகள் இருக்கும்.வெள்ளரியில் 90 சதம் தண்ணீர் இருக்கும்.காய் கறி போல்  சாப்பிடப் பயன் படுத்துவார்கள். பிஞ்சாக இருக்கும் போது அப்படியே யாவரும் விரும்பிச் சாப்பிடுவார்கள். நட்ட 30 வது நாளில் பூக்க ஆரப்பிக்கும்.50 நாளிலிருந்து பறிக்க ஆரம்பிக்கலாம். பிஞ்சை 3 ரகமாகப் பிரிக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 600 குழிகள் தோண்ட வேண்டும்.2 அடி இடைவெளி விட வேண்டும். ஒரு குழிக்கு மூன்று விதைகள் போடவேண்டும். ஒரு வாரத்திற்கு ஒரு முறை தண்ணீர் பாச்சினால் போதும்.ஒரு ஏக்கருக்கு 150 கிராம் விதை தேவைப்படும்.பூக்கள் ஆண், பெண் இரு சம மாகப் பூக்கும்.மஞ்சள் நிறத்தில் இருக்கும்.தேனீக்கள் அதிகம் வருவதால் மகரந்தச் சேர்க்கை அதிகமாக ஏற்படும்.வெள்ளரியின் தாயகம் இந்தியா தான்.3000 வருடங்களுக்கு முற்பட்டது .பின் உலக நாடான ஐரோப்பா, கிரேக்கர்கள், ரோமானியர்கள், பயிரிட்டனர். 9 ம் நூற்றாண்டில் பிரான்சுக்குப் பரவிற்று. 14 ம் நூற்றாண்டில் இங்கிலாந்திலும்,  வட அமரிக்கா 16 ம் நூற்றாண்டிலும் பரவிற்று. பின் ஆப்பிரிக்காவிலும் தற்போது செர்பியாவிற்கும்.பரவிற்று. வெள்ளரி பயிரிடுவதில் உலக அளவில் சைனா 60 சதமும், அடுத்து துருக்கி, இரான், ரஸ்யா, அமரிக்கா, உக்ரைன், ஸ்பெயின், எகிப்து, ஜப்பான், இந்தோநேசியா என எப்.ஏ. ஓ. ன் அமரிக்க ஆய்வு கூறுகிறது. இந்த மாதத்தில் வெள்ளரி அதிகம் விளைவிக்கப்படுகிறது. மார்க்கட்டில் எல்லா இடங்களிலும் பழமுதிர் நிலையங்களிலும் கிடைக்கின்றது. கோவையில் பசுமை கூடாரத்தில் உற்பத்தி செய்த வெள்ளரி கிடைக்கின்றது. வெள்ளரி விதை மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.

மருத்துவப் பயன்கள் –; வெள்ளரியில் உள்ள நீர் சத்து நா வரட்சியைப் போக்குவதுடன் பசியை உண்டாக்கும். உடம்புக்குக் குளிர்ச்சியை உண்டு பண்ணும்.வெள்ளரியில் தாதுப் பொருட்களான சோடியம், கால்சியம், மக்னேசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், மற்றும் குளோரின் இதில் உண்டு .இரத்ததில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்யும் பொட்டாசியம் அதிகம் உண்டு. ஈரல், கல்லீரல் சூட்டைத் தணிப்பதால் நோய் குணமாகும். செரித்தல் அதிகம் ஏற்படுவதால் பசி அதிகமாகும். வெள்ளிரியை உண்பதால் 'பசிரசம்' எனும் ஜீரண நீர் சுரக்கிறது என்பது  விஞ்ஞானிகளின் கண்டு பிடிப்பு. இது மலத்தைக் கட்டுப்படுத்தும், பித்தத்தைக் குறைக்கும், உள்ளரிப்பு, கரப்பான் போன்ற சரும நோய்களைப் போக்கும் ஆற்றல் வெள்ளிரிக்கு உண்டு. வெள்ளிரிப் பிஞ்சை உட்கொண்டால் மூன்று தோசமும் போகும் என்று பழைய வைத்திய நூல்கள் கூறுகின்றன. புகை பிடிப்போரின் குடலை நிகோடின் நஞ்சு சீரளிக்கின்றது .அதையும் போக்க வல்லது. மூளைக்குக் கபால சூட்டைத் தணித்து குளிர்ச்சியூட்டி புத்துணர்ச்சி தரும்.கபம், இருமல் நுரையீரல் தொல்லையுள்ளவர்கள் வெள்ளரி சாப்பிடுவது நல்லதல்ல. 100 கிராம் வெள்ளரியில் 18 கிராம் கலோரிதான் இருக்கிறது. குறைந்த கலோரி உள்ள காய்கறியாகும். இது சிறுநீர் பிரிவைத் தூண்டக் கூடியது. இரைப் பையில் ஏற்படும் புண்ணைக் குணப்படுத்தும்.

நன்றி Face Book. முகநூல்.
  1. காய்கறிகளுள்ளே குறைவான கலோரி அளவைக் கொண்டிருப்பது வெள்ளரிக்காய்தான். 100 கிராம் வெள்ளரிக்காயில் கிடைக்கும்கலோரி 18தான்.
2.   விஞ்ஞானிகள் வெள்ளரிக்காயைப் பழவகையில் சேர்த்துள்ளனர்ஆனால்மக்கள் இதைக்காய்கறிப் பட்டியலில் சேர்த்துள்ளனர்;பச்சையாகவும்சமையலில் சேர்த்தும் சாப்பிடுகின்றனர். 
3. வெள்ளரிக்காய்குளிர்ச்சியானதுஅப்படியே உண்ணத்தூண்டும் அளவுக்குத் தனிச் சுவையுடையது.  நன்கு செரிமானம் ஆகக்கூடியதுசிறுநீர்ப் பிரிவைத் தூண்டச் செய்வதுஇரைப்பையில் ஏற்படும் புண்ணையும் மலச்சிக்கலையும் குணப்படுத்தக்கூடியது.
  1. இக்காய் பித்தநீர்சிறுநீரகம் ஆகியன சம்பந்தப்பட்ட அனைத்துக் கோளாறுகளையும் குணமாக்குவதில் தலைசிறந்து விளங்குகிறது.
  2. அண்மைக்கால ஆராய்ச்சி முடிவுகளை,வெள்ளரிக்காய் கீல்வாதம் சம்பந்தப்பட்ட கோளாறுகளையும் குணமாக்குவதில் வல்லமைமிக்க உணவாகத் திகழ்வதையும் நிரூபித்துள்ளன.
  3. ஆந்திர உணவில் எப்போதும் வெள்ளரிக்காயும் பாசிப்பருப்பும் கலந்து தயாரிக்கப்படும் பச்சடி உண்டுகாரணம்,ஆந்திரசமையலில் காரம் அதிகம். 100கிராம் வெள்ளரிக்காயில் 96 சதவிகிதம் ஈரப்பதம் உள்ளதுஅது உணவில் உள்ள காரத்தை மட்டுப்படுத்தி இடையில் அடிக்கடி தண்ணீர் அருந்தாமல் சாப்பிட வைக்கிறதுமீதி நான்கு சதவிகிதத்தில் உயர்தரமான புரதம்கொழுப்பு,மாவுச்சத்துதாது உப்புகள்கால்சியம்,பாஸ்பரஸ்இரும்புவைட்டமின் ‘பிஆகியவை அமைந்துள்ளனவைட்டமின்சியும் சிறிதளவுஉண்டு.
  4. சாதாரணமாக வெள்ளரிக்காயைப் பச்சையாகக்கடித்துச் சாப்பிடுவது வழக்கம்ஆனால்வெள்ளரிக்காய்களை மிக்ஸி மூலம் சாறாக்கியும் அருந்தலாம்.
  5. இளநீரைப் போன்றே ஆரோக்கிய ரசமாய் வெள்ளரிக்காய்ச் சாறு திகழ்கிறது.
  6. வெள்ளரியைச் சமைத்துச்சாப்பிடும் போது பொட்டாசியம்பாஸ்பரஸ் ஆகிய உப்புகள் அழிந்து விடுகின்றனஎனவே,வெள்ளரிச்சாறுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
  7. வயிற்றுப்புண் உள்ளவர்கள் இரண்டுமணி நேரத்திற்கு ஒரு தடவை ஆறு அவுன்ஸ் வீதம் வெள்ளரிச் சாறு அருந்தினால் குணம் தெரியும்.
  8. காலராநோயாளிகள் வெள்ளரிக்கொடியின் இளந்தளிர்களை ரசமாக்கிஅதனுடன் இளநீரையும் கலந்துஒருமணிக்கு இரண்டு அவுன்ஸ் வீதம் அருந்த வேண்டும்.
  9. வறண்ட தோல்காய்ந்து விட்ட முகம் உள்ளவர்கள்வெள்ளரிக்காய் சீசனில் தினமும் வெள்ளரிக்காய்ச் சாறு சாப்பிட்டு வறட்சித் தன்மையைப் போக்கலாம்.
  10. தினமும் மிகச்சிறந்த சத்துணவு போல் சாப்பிடத் தயிரில் வெள்ளரிக் காய்த்துண்டுகளை நறுக்கிப் போடவும்.அத்துடன் காரட்பீட்ரூட்தக்காளி,முள்ளங்கி ஆகியவற்றின் சிறிய துண்டுகளையும போட்டுவைத்து வெஜிடேபிள் சாலட் போல் பரிமாற வேண்டும்அது இல்லத்தில் உள்ள அனைவருக்கும் சத்துணவு கிடைக்கச் செய்கிறதுமேலும் இது நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் ஆற்றலையும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க ச்செய்யும்.
  11. இக்காயில் உள்ள சுண்ணாம்புச் சத்து இரத்தக் குழாய்களைத் தளர்த்தி உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க வல்லது.
  12. மலச்சிக்கலுக்காகச் சிலர் ஏதாவது ஒரு பழம் சாப்பிடுவார்கள்அதற்குப்பதிலாகத் தினசரி இரண்டு வெள்ளரிக்காய்களைச் சாப்பிட்டால் மலச்சிக்கலின்றி எப்போதும் குடல் சுத்தமாய் இருக்கும்.
  13. முகத்தில் உள்ள கரும் புள்ளிகள்,வறண்ட தோல்பருக்கள் முதலியவை குணமாக வெள்ளரிக்காயை அரைத்து
  14. முகத்தில்பூசவேண்டும்பதினைந்து 
  15. நிமிடங்கள் முகத்தில் இந்தப் பூச்சு இருக்கவேண்டும்தொடர்ந்து இந்த முறையில் பூசினால் முகம் அழகு பெறும்பெண்கள் இந்த முறையைத் தினசரி பின்பற்றலாம்.
  16. நீரிழிவு நோயாளிகள் எடை குறைய விதையுடன் சேர்த்தே வெள்ளரிக்காய் சாற்றை அருந்த வேண்டும்சிறிய வெள்ளரிக் காய் என்றாலும் பெரியவகை வெள்ளரிக்காய் என்றாலும்அதை விதையுடன் தான் அரைத்துச் சாறு அருந்தவேண்டும்இதனால் ஆண்மை பெருகும்.
  17. முடிவளர்ச்சிக்கு குறிப்பாகப் பெண்கள் வெள்ளரிச் சாற்றை அருந்த வேண்டும்.வெள்ளரியில் உள்ள உயர் தரமான சிலிகானும்சல்பரும் முடி வளர்ச்சிக்குப் பயன்படுகின்றனஇந்தச் சாற்றுடன் இரு தேக்கரண்டி காரட் சாறு,  இரு தேக்கரண்டி பசலைக் கீரைச்சாறுபச்சடிக் கீரைச் சாறு போன்ற வற்றையும் சேர்த்து அருந்தினால் முடி நன்கு வளரும்முடிகொட்டுவதும் நின்றுவிடும்.
  18. காரட்கிழங்கைப் போலவேவெள்ளரிக் காயில் தோல் பகுதி அருகில் தான் தாது உபபுகளும்வைட்டமின்களும் அதிக அளவில் உள்ளனஎனவேதோல் சீவாமலேயே வெள்ளரிக்காய்களை நன்கு கழுவிப் பயன்படுத் துங்கள்.
  19. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கூட இந்தியாவில் தோன்றிய வெள்ளரிக்காயின் தாவர விஞ்ஞானப் பெயர் குக்குமிஸ்ஸாடிவாஸ் என்பதாகும்இது மலைப்பகுதிகளில் நன்கு வளர்கிறதுஇமயமலைப் பகுதியிலிருந்து வரும் சிக்கிம் வெள்ளரி15 அங்குலம் நீளமும் 6 அங்குலம் கனமும் உள்ளது.
  20. ஜமைகாநாட்டு வெள்ளரிக்காய் எலுமிச்சம்பழ அளவிலும்நிறத்திலும் இருக்கிறதுகிழக்கத்திய நாடுகளில் வாசனைக்காக வெள்ளரி அதிகம் பயிராக்குகின்றனர்பிரிஸ்ஜில் இரு வாரங்கள் வரை வைத்து வெள்ளரிக்காய் களை பயன்படுத்தலாம்.

-----------------------------------------------------------------------------------------(

Saturday, December 13, 2014

பூண்டு

1.   மூலிகையின் பெயர் -: பூண்டு.
2.   வேறு பெயர்கள் -: வெள்ளைப்பூண்டு.
3.   தாவரப்பெயர் -: ALLIUM SATIVUM.
4.   தாவரக்குடும்பம் -: AMARYLLIDACEAE.
5.   பயன் தரும் பாகங்கள்- வெங்காயம் போன்று பூமிக்கடியில் இருக்கும் கிழங்கு மட்டும்.

6.   .வளரியல்பு -: வெள்ளை வெங்காயம் பூண்டு எனப்படும். வெள்ளைப் பூண்டு என்றே பலரும் கூறுவர். இதை நடுவதற்கு  நாற்று அல்லது பூண்டுப்பல் பார்களில் நட்டுத் தண்ணீர் விட்டு வளர்ப்பார்கள். இதை புரட்டாசி மாதத்தில் நட்டு வளர்த்து பார்களிலிருந்து வளர்ந்த பின் தை மாதத்தில் வெட்டியெடுப்பார்கள். இதன் தாயகம் ஆசியாக்கண்டமாகும். அதன் பின் தான் மேலை நாடுகளுக்குச் சென்றது. இது எரிப்பும் காரமும் உடையது. முகர்ந்தால் நெடியுடையது. பண்டை காலம் தொட்டே மருந்துகளில் பயன்படுத்தப் படுகிறது. பூண்டிலிருந்து அல்லி சாடின் என்ற மருந்தைத் தயாரிக்கிரார்கள். நாட்டுவைத்தியத்தில் பூண்டிலிருந்து மாத்திரைகள், லேகியங்கள், தைலம் ஆகியவை தயாரிக்கப்படுகிறது.

7.   மருத்துவப் பயன்கள் -: பூண்டு நோய் தடுப்பு மண்டலத்திற்கு உறு துணையாகிறது. புற்று நோயையும் மற்ற நோய் தொற்றுகளையும் எதிர்க்க உடவுகிறது. வெள்ளணுத்திறனின் செயல் பாடுகளை அதிகரிக்கச் செய்கிறது. ஊளைச் சதையைக் கரைக்கும். தண்டுவட உறையழற்சிக்கும் சிறந்த மருந்தாகிறது. இரத்த அழுத்தத்தைக்  குறைக்கிறது. நீரழிவைக் குணப்படுத்தவும் உதவுகிறது. மாதவிடாய்க் கோளாறுக்கும்  மருந்தாகும்.

பூண்டை பாலில் போட்டுக் காய்ச்சி அருந்தி வந்தால் இரத்த அழுத்தம், மாரடைப்பு வராது. இரத்தக் குழாயில் கொழுப்புப் படியாது.

பூண்டைப் பாலில் காய்ச்சியும், ஊறுகாயகவும், லேகியமாகவும் செய்து தொடர்ந்து சாப்பிட்டால் ஊளைச் சதை குறையும். உடல் எடையும் குறையும்.

பூண்டை நசுக்கிய சாற்றுடன் கற்பூரத்தை கரைத்துப் பூச மூட்டு வலி குணமாகும். பூண்டு 50 கிராம், மிளகு 50 கிராம், ஓமம் 20 கிராம், சுக்கு 20 கிராம், எருக்கிலை சாறு 100 மி.லி. ஆமணக்கு நெய் ஒரு லிட்டர் சேர்த்துக் காய்ச்சி வடிக்கவும். இதனை மூட்டு வலி, வீக்கம், வாதம், நரம்பு வலிக்கும் பூசலாம்.

கட்டிகள் கரைய பூண்டை அரைத்துப் பற்றிட வேணடும்.

பூண்டைப் பாலாவியில் வேக வைத்துக் கடைந்து கொள்ள வேண்டும். பனங்கருப்பட்டியும் தேனும், சுக்குத் தூளும் போட்டு இளகலாகச் செய்து வைத்துக் கொண்டு 10 கிராம் அளவு சாபிபிட வேண்டும். வயிற்று வலி, வாய்வுக் கோளாறு யாவும் குணமாகும்.

பூண்டை வதக்கி வற்றல் கழம்பு வைத்துச் சாப்பிட குளிர் தொல்லை நீங்கும்.

இதன் சாற்றை காதில் சில துளிகள் விட காது வலி குணமாகும்.

எந்த ரூபத்தில் பூண்டை உண்டாலும் கபத்தை வெளியேற்றும், மலத்தை இளக்கும்.

பூண்டுச் சாற்றில், சிறிது உப்பு கலந்து உடம்பில் எங்கேனும் சுளுக்கு எற்பட்ட இடத்தில் பூசினால் சுளுக்கு மறையும்.

பூண்டுரசம் கபத்தை நீக்கும்.

குப்பபைமேனி இலையுடன் பூண்டை வைத்து அரைத்துச் சாறு எடுத்து, இச்சாற்றை குழந்தைகளுக்கு கொடுக்க வயிற்றிலுள்ள பூச்சிகள் வெளியே வந்திடும்.

பூண்டு வசம்பு, ஓமம், இவைகளை சம அளவு எடுத்து இடித்து மூன்று நாட்கள் சாப்பிட மாந்த ஜன்னி குறையும்.

பூண்டை நசுக்கி, சாறெடுத்து சாறை உள் நாக்கில் தடவ உள் நாக்கு வளர்ச்சி குறையும்.

பூண்டோடு சிறிது எலுமிச்சை சாறு விட்டு அரைத்து இரு வேளை சாப்பிடக் கீல்வாதம் குணமாகும்.

பூண்டையும், சிறிது உப்பையும் சேர்த்துத் தின்றால்—தீடீரென ஏற்படும் வயிற்று வலி, நெஞ்சு எரிச்சல், நெஞ்சுக் கரிப்பு குறையும்.

வெள்ளைப் பூண்டு, வெற்றிலை இரண்டையும் அரைத்து தேமல் மீது பூசினால் மறைந்து விடும். அது போல் தொடை இடுக்கிலுள்ள கக்கூஸ் படை மீது தடவி வர அதுவும் குணமாகிவிடும்.

பூண்டை அரைத்துக்  கரைத்து வீட்டின் முன் பகுதி, பின் பகுதிகளில்  தெளித்திட்டால் நல்ல பாம்பு வராது.

பூண்டை வெல்லம் கலந்து சாப்பிட்டால் உடல் வலி மறையும்.

பூண்டுடன் சிறிது ஓமத்தை நசுக்கிப்போட்டு கசாயம் வைத்துக் குழந்தைகளுக்குக் கொடுக்க குழந்தைகளின் வாந்தி, கொட்டாவி குறையும்.

வெற்றிலைக் காம்பு, வசம்பு, திப்பிலி, பூண்டு இவைகளைச் சம அளவு எடுத்து வெந்நீரில் அரைத்து உள்ளுக்குக் கொடுக்க—குழந்தைகளின் மாந்தம் குறையும், சளித் தொல்லையும் குறையும்.

வெள்ளைப் பூண்டு, வசம்பு, ஊமத்தை வேர் இவைகளைச் சம அளவு எடுத்து, நன்கு அரைத்து, நல்லெண்ணையில் கலந்து, காய்ச்சி நன்கு சிவந்து வரும்போது இறக்கி விடவும். இந்த எண்ணெயை ஆறாத புண்கள் காயத்தின் மீது பூசினால் ஆறிவிடும்.

பூண்டுத் தைலத்தை உடலில் தேய்த்து வர சருமத்தில் ஏற்படும் நமச்சில், அரிப்பு மறையும்.

பூண்டைப் பொன்னாங்கண்ணிக் கீரையுடன் சேர்த்துச் சாப்பிட மூலநோய் நீங்கும்.

ஒரு வெள்ளைப் பூண்டு, ஏழு மிளகு, ஒன்பது மிளகாய் இலை—இவைகளைச் சேர்த்து அரைத்து காலை, மாலை சாப்பிட்டால் குளிர் காச்சல் போய்விடும்.

பூண்டுச் சாற்றையும், இஞ்சிச் சாற்றையும் சம அளவு கலந்து காலை, மாலை மூன்று நாட்கள் சாப்பிட நெஞ்சுக் குத்து நீங்கும்.

பூண்டைப் பொடி செய்து தேனில் குழைத்து தலை, புருவத்தில்—பூச்சிவெட்டு முடிவளராமல் இருக்குமிடத்தில் தேய்த்து வர முடி வளரும்.

பூண்டைப் பச்சையாகச் சாப்பிட்டால் வாத நோய் குணமாகும்.

அரைக்கீரையோடு பூண்டு, சீரகம், பச்சை மிளகாய்ச் சேர்த்து புளி சேர்க்காமல் சமைத்துச் சாப்பிட வாயுத் தொல்லை நீங்கும்.

பச்சைப் பூண்டை உண்பதால் உடல் பலம் பெறும். உற்சாகம் ஏற்படும். அஜீரணத்தால் ஏற்படும் வயிற்று வலி மறையும், புளிப்பால் உண்டாகும் எரிச்சல் நீங்கும். இரத்த அழுத்தம் குறையும்.

பூண்டு, மிளகு, கரிசலாங்கண்ணிக் கீரை மூன்றையும் அரைத்துக் காலையில் மட்டும் மூன்று நாட்கள் நெல்லிக்காய் அளவு சாப்பிட சோகை நோய் குணமாகும்.

பூண்டை நசுக்கி சுண்ணாம்பு நீரில் நனைத்துக் கட்ட நகச்சுற்றி குறையும்.

பூண்டையும், துத்தி இலையையும் சேர்த்து லேசாக நசுக்கி நல்லெண்ணையில் போட்டுக் காய்ச்சி எண்ணெயை உடலில் தடவி வர உடல் வலி குறையும்.

காய்ச்சிய பாலில் இரண்டு அல்லது மூன்று பல் பூண்டைப் போட்டுப் பருக நன்கு தூக்கம் வரும். இரத்தக் கொதிப்பு அடங்கும்.

பூண்டு, மிளகு, துத்தி இலைகளை ஒவ்வொன்றும் 50 கிராம் வீதம் எடுத்து, இத்தோடு 15 கிராம்  வசம்பு சேர்த்து நன்றாக அரைத்துப் பெண்கள் சூதக காலத்தில் சாப்பிட சூதக வலி வராது.

பூண்டை நெய்யில் வறுத்து, உணவு உண்ணும் போது சாதத்தில் சேர்த்து 40 நாட்கள் சாப்பிட வாய்வுத் தொல்லை மறையும்.

பூண்டுச்சாற்றை டி.பி. நோயாளிகள் பருகி வந்தால் டி.பி. குறையும்.

முருங்கை

1. மூலிகையின் பெயர் :- முருங்கை.


2. தாவரப்பெயர் :- MORINGA OLEIFERA.

3. தாவரக்குடும்பம் :- MORINGACEAE.

4. பயன்தரும் பாகங்கள் :- இலை, ஈர்க்கு, பூ, பிசின், பட்டை ஆகியன.

5. வளரியல்பு :- முருங்கை மரவகையைச் சேர்ந்தது. இதை பிரம்மவிரிட்சம் என்பர். இதன் மரக்கட்டை மென்மையாக இருக்கும். இதன் பயன் கருதி வேலி ஓரங்களிலும் வீட்டுத் தோட்டங்களிலும் தமிழகமெங்கும் பயிரிடப்படுகிறது. இதன் மென்மையான ஈர்க்குகளில் கூட்டிலைகளையும் வெண்ணிற மலர்களையும் தக்கையான நீண்ட காய்களையும் சிறகுள்ள விதைகளையும் கொண்ட மரம். இந்த முருங்கையை ரோமானியர்களும், கிரேக்கர்களும், எகிப்தியர்களும் பயன் படுத்தியுள்ளார்கள். இதன் ஆரம்பம் இமையமலை அடிவாரம் பின் பாக்கீஸ்தான், பங்களாதேஸ் மற்றும் ஆப்கானீஸ்தான் ஆகும். பிலிப்பையின்ஸ்சிலும் ஆப்பிரிக்காவிலும் அதிகமாக இருந்துள்ளது. இது ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ் நாட்டில் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. இலங்கையிலும் காணப்படுகிறது. தாய்லண்ட், தாய்வானிலும் பயிராகிறது. இது 30 அடி உயரம் வரை வளரக்கூடியது. ஆனால் இதைவருடா வருடம் 3 அடி விட்டு கிழைகளை வெட்டி விடுவார்கள். இலை, பூ, காய் ஆகியவை சமையலுக்குப் பயன்படுவதால் தமிழகமெங்கும் காணப்படும். தற்போது 3 அடி நீளமான காய்கள் விடும் மரம் கூட உற்பத்தி செய்துள்ளார்கள். மலைகளிலும் காடுகளிலும் வளரும் முருங்கை கசப்பாக இருப்பதால் சமையலுக்கு உதவாது. தண்ணீர் அதிகம் தேவையில்லை, வெப்பத்தைத் தாங்கக் கூடியது. அதிக குளிரில் வளராது. தென் மாவட்டங்களில் ஒரு வருடத்தில் பலன் தரக்கூடிய மரவகைகளை வணிக ரீதியாகப்பயிர் செய்து லாபம் அடைகின்றனர். முற்றிய கொம்புகளை 3 அடி உயரத்தில் வெட்டி நட்டு அதன் நுனியில் பச்சைச் சாணம் வைத்து உயிர் பிழைக்கச் செய்வர். விதை மூலமும் இனவிருத்தி செய்யப்படுகிறது.

6. மருத்துவப்பயன்கள் :- இலைச்சாறு அதிக அளவில் வாந்தியுண்டாக்கும். சில வேலைகளில் மல மிளக்கும். இரும்புச்சத்து அதிகமுள்ள இலை. குருதியை தூய்மையாக்கும். ஈர்க்கு சிறுநீர் பெருக்கும். பூ காமம் பெருக்கும். பிஞ்சு தாது எரிச்சல் போக்கும் காமம் பெருக்கும். காய் கோழையகற்றிக் காமம் பெருக்கும். பிசின் சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும். மூக்கில் நீரைப்பெருக்கித் தும்மல் உண்டாக்கும். காமம் பெருக்கும். பட்டை கோழை, காச்சல் நஞ்சு ஆகியவற்றைப் போக்கும். வியர்வையைப் பெருக்கும்.குடல் வாயு அகற்றும், பட்ட இடத்தில் அரிப்பு உண்டாக்கிக் கொப்பளிக்கச் செய்து புண்ணுண்டாக்கும்.

முருங்கைக் கீரையை 40 நாட்கள் நெய்விட்டு, வெங்காயம் போட்டு, பொறியல் செய்து நண்பகலில் உணவில் சாப்பிட ஆண்மை பெருகும். விந்து கெட்டிப் படும். உடலுறவில் மிக்க இன்பம் பெறுவார்கள். புளியைக் குறைக்க வேண்டும். தவிர்க்க வேண்டும்.

பெண்களுக்கு வரும் சூதகவலிக்கு இதன் இலைச்சாறு பிழிந்து 30 மில்லி இரு வேளை குடிக்க குணமாகும். அடிவயிற்றில் வலியும், விலக்கு தள்ளிப் போவதால் ஏற்படும் வலியும் குணமாகும்.

இலையை அடிக்கடி பொரியல் செய்து சாப்பிட பித்த மயக்கம், மலச்சிக்கல், கண்நோய், கபம், மந்தம் தீரும். கீரையில் சுவையான கீரையும் சத்தான கீரையும் இதுதான்.

இலையை ஆமணக்கெண்ணையில் வதக்கி ஒத்தடம் கொடுக்க வாத மூட்டு
வலி, இடுப்பு வலி, உஷ்ணத்தால் வரு வயிற்று வலி நீங்கும்.

முருங்கை இலை, தூதுவளை, பசலை அரைக்கீரை ஒன்று சேர்த்து வெங்காயம் போட்டு வதக்கி சாப்பிட்டு வர தாது பலப்படும். ஆண்மைக் குறைவு தீரும். புளியை உணவில் நீக்க வேண்டும். எலுமிச்சம்பழச்சாறு சாப்பிடுதல் கூடாது. விந்தை நீர்த்துப்போக வைக்கும்.

இதன் இலைச் சாற்றைப் பிழிந்து பத்து மி.லி. நாளும் இரு வேளை பாலில் கொடுக்க ஒரு வயது, இருவயது குழந்தை உடல் ஊட்டம் பெறும். சிறந்த ஊட்ட மருந்து இதுவே.

உடல் தளர்ச்சி அடைந்தாலோ, உடல் வலி இருந்தாலோ முருங்கை இலை ஈர்க்குகளை மட்டும் போட்டு மிளகு ரசம் வைத்துச்சாப்பிட்டால் உடல்வலி, தளர்ச்சி குணமாகும்.

பூவைப் பருப்புடன் சமைத்துச் சாப்பிட்டால் பித்த வெப்பம் அகலும். கண் எரிச்சல், நாகசப்பு, நீர் ஊறுதல் தீரும். பூவைப் பாலில் போட்டு இரவு காச்சிக் குடித்தால் ஆண்மை மிகும். போகம் நீடிக்கும். தாதுபுஷ்டி லேகியம் தேவையில்லை.

முருங்கைப்பிஞ்சை சமைத்துச் சாப்பிட்டால் தாது நட்டத்தால் ஏற்படும் சுரம் தீரும். எலும்புருக்கி, சயம், சளி ஆகிய நோய்வாய்ப்பட்டவர்க்களுக்கு இது
சிறந்த ஊட்டம் தரும்.

முருங்கைப்பட்டைத் தூள் 10 கிராம், சுக்கு, மிளகு, சீரகம் ஆகியவற்றின் பொடி 2 கிராம் போட்டு வெந்நீரில் காயாச்சி மூன்று வேளையும் 30 மி.லி. அளவு கொடுக்க குடற்புண், காய்ச்சலாகிய டைபாய்டு குணமாகும். இருமல், கபம் தீரும்.

முருங்கைப் பட்டையும் வெண் கடுகையும் அரைத்துப் பற்றுப் போட வாதவலி தீரும். வீக்கம் குறையும்.

இதன் பிசினையுலர்த்திப் பொடி செய்து அரை தேக்கரண்டி பாலில் காலை, மாலை குடிக்க தாது பலம் உண்டாகும். மிகுதியாகச் சிறுநீர் கழித்தல் தீரும். உடல் வனப்பு உண்டாகும்.

முள்ளங்கி.

1. மூலிகையின் பெயர் -: முள்ளங்கி.

2.    தாவரப் பெயர் -: RAPHANUS.

3.    தாவரக் குடும்பப் பெயர் -:BRASSICACEAE.

4.    பயன்தரும் பாகங்கள் -: கிழங்கு, இலை மற்றும் விதை.

5.    வேறு பெயர்கள் -: மூலகம், மற்றும் உள்ளங்கி.

6.    வகைகள் -: வெள்ளை முள்ளங்கி, சிவப்பு முள்ளங்கி, மற்றும் மஞ்சள் முள்ளங்கி.

7.    வளரியல்பு -: முள்ளங்கி சமைத்துண்ணக்கூடிய கிழங்கினம். மணற்பாங்கான இடத்திலும், வளமான மண்ணில் நன்கு வளரும். குளிர் காலத்தில் மலைப்பிரதேசங்களில் அதிக மகசூல் கொடுக்கும். இதன் கிழங்குகள் முட்டை வடிவத்திலும், சிலிண்டர் வடிவத்திலும், உருண்டை வடிவத்திலும் இருக்கும். கிழங்குகள் இழசாக இருக்கும் போதே பிடுங்கி உபயோகிக்க வேண்டும். முற்றினால் வெண்டாகிவிடும் சமையலுக்குப் பயன்படுத்த முடியாது. இழசாக இருக்கும் போது செடியைப் பிடுங்கி கிழங்கைக் கழுவி விட்டுப் பச்சாயாகவே உப்பு காரம் போட்டுச் சாப்பிடுவார்கள், கடித்துத் தின்ன நன்றாக இருக்கும். இங்கு வெள்ளை முள்ளங்கிப் பயன்கள் கூறப்படுகின்றன. இது விதை மூலம் இனவிருத்தி செய்யப்படுகின்றது. மேட்டுப்பாத்தி அமைத்து மண்ணைப் பக்குவப்படுத்தி விதைகளைத்தூவி பின் 2 அஙுகுல மணல்போட்டு பூவாழியில் தண்ணீர் தெளிக்க வேண்டும். ஈரம் அதிகம் காயாமல் இருந்து கொண்டே இருக்க வேண்டும். சில நாட்களில் நாற்றுகள் வளர்ந்த பின் எடுத்துப் பார்களில் நடவேண்டும். அல்லது பார்களின் உச்சியிலும் விதை ஊன்றி முழைக்க வைக்கலாம். சுமார் 45 நாட்கள் முதல் 60 நாட்களுக்குள் முள்ளங்கி பிடுங்கும் தருணம் வந்து விடும். தமிழகமெங்கும் இது பயிரிடப்படுகிறது. விதை எடுக்க மட்டும் முற்ற விடுவார்கள்.

8.    மருத்துவப்பயன்கள் -: முள்ளங்கிக் கிழங்கு சிறுநீர் பெருக்கும், குளிர்ச்சியுண்டாக்கும். இலை பசியைத் தூண்டிச் சிறுநீர் பெருக்கித் தாது பலங்கொடுக்கும், விதை காமம் பெருக்கும்.

சமைத்துண்ண அதிமூத்திரம், நீர்தடை, வயிற்று எரிச்சல், ஊதின உடம்பு, குடைச்சல், வாதம், வீக்கம், சுவாசக் காசம், கபநோய், இருமல் ஆகியவை தீரும்.

முள்ளங்கிச்சாறு 30 மி.லி. காலை, மாலை கொடுக்கச் சிறுநீரக் கோளாறு, நீர்தாரைக் குற்றங்கள் நீங்கும்.

இலைச்சாற்றை 5 மி.லி. ஆக நாள்தோறும் 3 வேளை சாப்பிட்டு வர மலக்கட்டு, சிறுநீர்க் கட்டு, சூதகக்கட்டு எளிய வாத நோய்கள் தீரும்.

‘வாதங்கரப்பான் வயிற்றெரிவு சூலை குடல்
வாதங்காசம் ஐயம் வன்தலைநோய்-மோதுநீர்க்
கோவை பன்னோய் பல் கிரந்தி குன்மம் இரைப்புக்கடுப்பு
சாவும் முள்ளங்கிக் கந்தத்தால்.’

என இதன் மருத்துவ குணத்தைக் கூறுகிறார் கும்பமுனி. இந்த முள்ளங்கியால் வாத நோய், நீர்வடியும் படையான கரப்பான், வயிற்றெரிச்சல், நரம்பு சூலை எனப்படும் உடல் நரம்பு வலி, காசநோய், தலைவலி, மயக்கம், ஆஸ்துமா என்ற இரைப்பு, கடுப்பு என்ற சீதபேதி ஆகியன குணமாகும் என்பது பாடல் கருத்தாகும். சிறுநீரகத்தை நன்கு இயக்கும் குணமுடையது. அதனால் சிறுநீரைப் பெருக்கி நீர்கொர்வை என்ற உடல் வீக்கத்தைக் குறைக்கும். வாரம் இருமுறை இதனை உணவில் செர்க்க வேண்டும். பொரியல், சாம்பார் எதுவும் செய்து சாப்பிடலாம். வெள்ளை முள்ளங்கி மிக்க குணமுடையது.

இதனை இடித்து சாறு பிழிந்து 30-50 மி.லி. அளவு காலை, மாலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இது சாப்பிடும்போது உணவில் புளி தவிர்க்கவும். மேலே கூறப்பட்ட அனைத்து நோய்களும் குணமாகும். பிற மருந்துகளோடு இது இந்த நோய்களுக்குத் துணை மருந்தாகும்.

கருவுற்ற தாய்மார்கள் இதனை வாரந்தோறும் சாப்பிட்டு வந்தால் பேறு எளிதாகும். சிறுநீர் மிகுதியும் கழியும். கை, கால் வீக்கம் வராது.

இதன் விதையைக் குடிநீராக - காசாயம் செய்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தி உண்டாகும்.

ரோஜா.

ரோஜா.
மூலிகையின் பெயர் :- ரோஜா.
தாவரப்பெயர் :- ROSA DAMESCENA.
தாவரக்குடும்பம் :- ROSACEAE.
வேறு பெயர்கள் :- சிறுதாமரை, குலாப்பூ, பன்னீர்பூ, ரோஜாப்பூ. எனபன.
வகைகள் :- வெள்ளை, இளஞ்சவப்பு, கருஞ்சிவப்பு,மஞ்சள் மற்றும் பச்சை.
பயன் தரும் பாகங்கள் :- பூ, மற்றும் மொட்டு.
வளரியல்பு :- இது இந்தியாவில் எல்லா இடங்களிலும் வளர்கிறது. ரோஜா வியாபாரமாக பல்கேரியா, இட்டலி, ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற நாடுகளில் அதிகமாகப் பயிரிடுகிறார்கள்  ரோஜா 5000 வருடங்களுக்கு முன்பே இந்தாயிவில் இருந்துள்ளது. அதன் பின் தான் மற்ற நாடுகளுக்குப் பரவிற்று.  ரோஸ் வொயின் பெரிசியா நாட்டில் பிரபலமானது. அதை அரசர்களும், இராணிகளும், பெரும் பிரமுகர்களும் தான் பயன் படுத்துவார்கள். வீடுகளிலும் தோட்டங்களிலும் அளகுக்காக வளர்கின்றனர். காடுகளில் தன்னிச்சையக வளரும். இது சிறு செடி வகையைச் சேர்ந்தது.  கூர்நுனிப் பற்களுள்ள கூட்டிலைகள்யுடையது. இதில் முட்கள் காணப்படும். நல்ல ஈரமும் உரமும் இருந்தால் நன்கு வளரும். இலைகளின் விளிம்புகள் அரும்புகள் இருக்கும். இளஞ்சிவப்பு நிறமுடைய ரோஜா நறுமணத்துடன் இருக்கும். காட்டு ரோஜா மணமிருக்காது. ரோஜா கட்டிங்மூலமும், பதியம் மூலமும் இனவிருத்தி செய்யப்படுகிறது.

மருத்துவப்பயன்கள் :- ரோஜாபூ லேசான துவர்ப்புச் சுவையுள்ளது. வயிற்றிலுள்ள வாயுக்களை அகற்றி குளிர்ச்சியைத் தரும். இதயத்திற்கு வலுவூட்டும். இதன் இதழ்கள் குளிர்ச்சியை உண்டாக்கும்.  பெண்களுக்கு
கர்பப்பையினுள் ஏற்படும் ரத்த ஒழுக்கை நிறுத்தும். மலமிளக்கும் குணமுடையது.

ரோஜா இதழ்களை ஆய்ந்து எடுத்து  ஒருகைப்பிடயளவு இதழை ஒரு சட்டியில் போட்டு  ஒரு டம்ளர்  தண்ணீர்விட்டுக் கொதிக்க வைத்து  இறக்கி வடிகட்டிஅதில் பாதிகசாயத்தை எடுத்துச் சர்கரை சேர்த்துக் காலையிலும்,மறுபாதியை மாலையிலும் குடித்து வந்தால் மலர்ச்சிக்கல் விலகும். நீர் கட்டு உடையும், மூலச்சூடு தணியும்.

ரோஜா மொக்குகளில் ஒரு கைப்பிடயளவு கொண்டு வந்துஆய்ந்துஅதை அம்மியில் வைத்து மைபோல அரைத்து,ஒரு டம்ளர் அளவு கெட்டியாக தயிரில் போட்டுக் கலக்கிக்காலை வேளையில் மட்டும் குடித்து விட வேண்டும்இந்தவிதமாக மூன்றே நாட்கள் சாப்பிட்டால் சீத பேதிகுணமாகும்தேவையானால் மேலும் மூன்று நாட்கள்கொடுக்க பூரண
மாகக் குணமாகும்.

பித்தம் காரணமாகக் கிறுகிறுப்பு, குமட்டல், வாந்தி நெஞ்செரிவு மற்றும் பித்தக் கொளாறினால்  பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு கைப்பிடியளவு ரோஜா இதழ்களை ஒரு சட்டியில் போட்டு, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைத்து இறுத்து, காலையில் ஒரு டம்ளர் அளவும், மாலையில் ஒரு டம்ளர் அளவும், ருசிக்காக தேவையான அளவு சர்கரை சேர்த்துக் கலக்கிக் குடித்து விட வேண்டும், இந்த விதமாக ஏழு நாட்கள் செய்து வந்தால் பித்தம் அறவே நீங்கி விடும். இந்தச் சமயம் பித்த்தை உற்பத்தி செய்யும் பதார்த்தங்களைச் 
சேர்க்க க்கூடாது.

ஆய்ந்து எடுத்த ரோஜா இதழ்கள், கால் கிலோ எடுத்து ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு, 150 கிராம் சுத்தமான தேனை அதில் விட்டு நன்றாகக் கிளறி வெய்யிலில் வைத்து விட வேண்டும். போட்டது முதல், காலையில் ஒரு தேக்கரண்டி, மாலையில் ஒரு தேக்கரண்டி வீதல் சாப்பிட வேண்டும். காலையில் வெய்யிலில் வைத்து மாலையில் எடுத்து வைத்து விட வேண்டும். இந்த விதமாக இரத்தபேதி நிற்கும் வரை சாப்பிட வேண்டும். இதைத் தயாரிக்கச் சிரமமாகத் தோன்றினால் தமிழ் மருந்துக் கடைகளில் குல்கந்து என்று கேட்டால் கொடுப்பார்கள். அதை வாங்கி இதே அளவு சாப்பிட்டு வர வேண்டும்.

ஒரு சிலருக்கு அடிக்கடி தும்மல் வரும். இதை நிறுத்த ஒரு கைப்பிடியளவு ரோஜா இதழ்களை சட்டியில் போட்டு அரை டம்ளர் அளவு தண்ணீர் விட்டுச் சுண்டக் காய்ச்சி அந்தத் தண்ணீரை இறுத்து, காட்டுச் சீரகத்தில் ஒரு தேக்கரண்டியளவு அம்மியில் வைத்து அரைத்து ஒரு சுத்தமான துணியில் நனைத்து முகர்ந்து கொண்டேயிருந்தால் தும்மல் நிற்கும்.

பூவைக் குடிநீராக்கிக் கொப்பளிக்க வாய்புண், ரசவீறு குறையும். குடிநீராக வைத்து ரணங்களைக் கழுவி வரச் சதை வளர்வது ஆறும்.

ரோஜா பூவிலிருந்து பன்னீர் தயாரிக்கப்படுகிறது. ரோஜாபூவிதழ் 1500 கிராம், அதனுடன்  நாலரை லிட்டர் தண்ணீர் சேர்த்து வாளியிலிட்டு நன்கு காய்ச்சி வடிக்கும் நீரே பன்னீராகும். இது மணத்திற்கும், களிம்பு, சந்தனம் முதலியவற்றில் சேர்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

பன்னீர் 238 கிராம், மீன் கொழுப்பு 51 கிராம், வாதுமை எண்ணெய் 306 கிராம் ரோஜாப்பூ எண்ணெய் 10 துளி இவைகளை நன்கு கலந்து உடம்பில் உள்ள புண்களுக்கு போட்டு வர துர்நாற்றம் விலகும்.

ரோஜாப்பூ பன்னீரை கண்கள் சிவந்து எரிச்சில் இருக்கும் நேரம் சில துளிகள் விட்டு வந்தால் எரிச்சல் மாறும். கண் நோய் சம்பந்தமான மருந்துகள் தயாரிக்க பன்னீர் பயன்படுகிறது. சிலருக்கு அதிக வியர்வையின் காரணமாக உடலில் துர்நாற்றும் ஏற்படும். இவர்கள் குளிக்கும் நீரிடன் பன்னீரைக் கலந்து குளிக்க துர்நாற்றம் நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும்.

ரோஜாப்பூக்ளிலிருந்து நறுமணமான எண்ணெய் எடுக்கிறார்கள். அதற்கு அத்தர் என்று பெயர்.

சித்தமருத்துவத்தில் இதனை பொதுவாக கழிச்சலுக்கு கொடுக்கும் மருந்துகளிலும் லேகியங்கள், மணப்பாகு முதலியவற்றுக்கு நறுமணம் ஊட்டுவதற்கும் பயன் படுத்துகிறார்கள்.

ரோஜா இதழ்களை சுத்தம் செய்து அப்படியே சாப்பிட்டு வர சுவையையும், மணத்தையும் தரும். வயிற்றுக் கடுப்பு, சீத பேதி இவைகளையும் போக்கும். உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தி தேக ஆரோக்கியத்தை வளர்க்கும்.

ரோஜாப்பூ மொக்கு மற்றும் சதகுப்பை  ஆகியவற்றைஉரலில் போட்டு இடித்து சுடு நீரில் போட்டு மூடி வைத்துவிட வேண்டும்மூன்று மணி நேரம் குறையாமல்வைத்திருந்து பிறகு வடிகட்டி கொள்ள வேண்டும்.குழந்தைகளாக இருந்தால் கால் டீஸ்பூனும்பெரியவர்களாக இருந்தால் ஒரு டீஸ்பூனும் மூன்று மணிநேரத்திற்கு ஒருமுறை கொடுத்துவர உஷ்ண வயிற்றுவலி போகும்குன்ம வயிற்று வலிக்கு இது சிறந்ததாகும்.

ரோஜாப்பூ இதழ்களை தேவையான அளவு சேகரம் செய்துசம அளவு பயத்தம்பயிரை அதனுடன் சேர்த்து 4,5பூலாங்கிழங்கை சேர்த்து அரைத்து விழுதாக எடுத்துக்கொண்டு தினமும் உடலில் இந்த விழுதை தேய்த்து அரைமணி பொறுத்து குளித்து வந்தால் சரும நோய்கள் ஒழிந்துஉடல் நல்ல நிறம் பெறும்.