ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வு முறையில் பெரிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. போட்டித்தேர்வு எழுதுவோரின் புகைப்படம், அவர் தேர்வு எழுதும் பதிவு எண், அவருடைய பெயர் ஆகியவை தேர்வு எழுதும்
முதல் தாளில் அச்சாகிறது. இந்த புதிய முறை வருகிற 10- ந்தேதி நடக்கும் முதுகலை பட்டதாரிகளுக்கான தேர்வில் அறிமுகப்படுத்தப்படுகிறது. புதிய முறை சென்னை டி.பி.ஐ.வளாகத்தில் ஆசிரியர் தேர்வு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் தலைவராக விபுநய்யர் என்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி உள்ளார். அரசின் வழி காட்டுதலின் படி ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் புதிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. அதன்படி தேர்வு எழுதுவோரின் ஓ.எம்.ஆர்.சீட்டில் ஒரு முறை ஒரு பதிலை எழுதிவிட்டு மறுபடி அதை அவரே நினைத்தாலும் திருத்தி எழுத முடியாது. மேலும் தேர்வு எழுதுவோரின் புகைப்படம், தேர்வு எழுதுவோரின் பெயர், பதிவு எண் ஆகியவை ஓ.எம்.ஆர்.சீட்டின் முதல் பக்கத்தில் அச்சாகி இருக்கும். தேர்வு எழுதுவோர் எந்த காரணத்தை கொண்டும் அவரது பெயரையோ, அவரது தேர்வு எண்ணையோ எழுதத் தேவை இல்லை.

No comments:
Post a Comment